*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 6, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 1

சகஜமாக அனைவரிடமும் பழகும் ஆர்த்தி, பள்ளிக்கோ மற்ற இடங்களுக்கோ செல்லும்போது வழிப்போக்கில் பத்துபேர் சென்றால் அந்த பத்துபேரும் தன் அழகை சில வினாடி ரசித்துவிட்டுதான் போகிறார்கள் என்பது ஆர்த்தியின் கணிப்பு,அது உண்மைதான்,இது ஆர்த்தியை கடந்து செல்லும் மற்ற பெண்களுக்கும் பொருந்தும், ஆனால் ஆர்த்தியை அசால்ட்டாக பார்ப்பவர்கள் இருந்தால் அவர்கள் தன் அப்பா வயதினர் அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்கலாம்,அல்லது எதோ சிந்தனையில் ஆர்த்தியை கடந்து செல்பவர்களாக இருக்கலாம், அல்லது தன் அப்பா அம்மாவிற்கு நல்ல பரீட்சயமுள்ளவர்களாக இருக்கலாம் அல்லது இந்த பள்ளிப் பருவத்திலேயே வயதுக்கோளாரில் ஆர்த்தியிடம் லவ் லெட்டர் கொடுத்து ஆர்த்தியின் மனதை கரைக்க முடியாமல் பிரச்சனையாகிப் போனவனாக இருக்கலாம்.ஆர்த்திக்கு தன் அழகில் பெருமை உண்டு,பிதற்றல் கிடையாது,அகம்பாவம் கிடையாது.


அரசாங்கப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஆர்த்தி   வகுப்பின் உயரமான ஐந்து பேரில் ஆர்த்தியும் ஒருத்தி, கோதுமை நிறமுடையவளாய்,பருமனாகவோ,மெலிதாகவோ இல்லாத உடல் வாகு, குடும்பப் பாங்கான முகம் , மிரட்சியான கண்களுடன்,பளிச்சென்று சிரித்து பேசும் இயல்புடையவளான ஆர்த்தி நிமிர்ந்த நடை  நடந்து வருவதைப் பார்த்தால் பார்ப்பவருக்கு உடனே கண் இமைக்கத் தோன்றாது.


ஆர்த்தி;;.....,ஆர்த்தி.... இங்கே வாடா,என்று இதமாக அழைக்கும் அப்பாவின் குரல் கேட்டவுடன் எதோ சிந்தித்துக் கொண்டிருந்த ஆர்த்தி அந்த சிந்தனை கலைந்து என்ன யோசித்தோம் என்பதை மறந்து அன்பு நிறைந்த அப்பாவை நோக்கி இதோ வறேம்ப்பா என்று வேகமாக நடந்து வந்து என்னப்பா என்றாள்,

என்னடா  பொதுத்தேர்வு வரப்போகுதுனு பயந்துடாதடா,அதுவும் சாதரணத் தேர்வுதான்,நீ நல்ல மார்க் வாங்குவனு எனக்கு நம்பிக்கை இருக்கு,உன்னோட ஆசிரியர்களும் உம்மேல நிறைய நம்பிக்கை வச்சுருக்காங்க,நீ எப்போதும் போல படிச்சு  பரீச்சை எழுதனும்.பொதுத்தேர்வுனு பூதாகரமா நினைச்சு மனசுல பயம் வச்சுகாதடா என்றார் ஆர்த்தியின் அப்பா.

சரிப்பா,நான் நல்ல படியா பரீட்சை எழுதுவேன்,இன்ஜினியரிங் கல்லூரியில் ஃபிரி சீட்டிலே படிக்கிறளவுக்கு மார்க் வாஙிறேனா இல்லையானு பாருங்கப்பா என்றாள் ஆர்த்தி,அதுக்காக சொல்லடா  ஆர்த்தி  ,அடுத்து நீ என்ன பாடம் எடுத்து  படிக்கனும்,எது நல்லது,முக்கியமா படிச்சவுடன் வேலை  கிடைக்கனுன்டா அந்த மாதிரி நீ நாலு பேர விசாரிச்சு தெரிஞ்சுகிட்டு உனக்கு என்ன விருப்பமோ அத முடிவு செய்து சொல்லுடா,எனக்கோ உன் அம்மாவுக்கோ உனக்கு தெரிஞ்சளவுக்கு உலகம் தெரியாது,நானும் எனக்குத் தெரிந்தவரை விசாரிக்கிறேன்,உன்னோட வருங்கால வாழ்க்கை நீ எடுக்க போகும் மார்க்கிலும், தேர்வு செய்யப்போகும் பாடப்பிரிவிலும்,படிப்பிலுந்தான்டா இருக்கு் என்றார் ஆர்த்தியின் அப்பா.

அ..ப்.பா..என்று அழுத்து சினுங்கியவள் நான் ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கி உங்களைவிட்டு பிரியாம நம்ம மாவட்டத்துல உள்ள இன்ஜினியரிங் காலேஜ்லதாம்ப்பா படிப்பேன்,அங்கும் நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குவேம்ப்பா,நான் விவசாயி, என் ஒரே பொண்ணு இன்ஜினேயர்னு சொல்லி பெருமை படத்தான் போறீங்க   என்றவளுக்கு  உள்ளுக்குள்ளே நிச்சியம் ஆயிரத்துக்கு மேல மார்க் வாங்கிடுவோம் ஆனால் முதல் மதிப்பெண்தான் வாங்கனும்னு வைராக்கியம் வலுத்தது.

பாசமிகு பெற்றோரைப் பெற்ற ஆர்த்திக்கு  மறுபக்கம் ஒன்றுள்ளது .அது அவளின் பெற்றோருக்கும் தெரியாது.அந்த மறுபக்க ஆர்த்திக்கு வேண்டியது இதுவரை இத்தனை சகஜமாகப் பழகியும் தனெக்கென்று உண்மையான நட்புள்ளம் கொண்ட நட்பு கிடைக்கவில்லை.மற்றொன்று,ஆர்த்தி தன் மாமன் மகனுக்குதான் மனைவியாகப் போகிறாளென்று  உறவினர்களால்  கேளிக்கைக்குள்ளானவள் நாளடைவில்  ஒரு தலைபட்சமாய் மாமா மகன் சந்தோஷை மானசீகமாக விரும்பவும் ஆரம்பித்துவிட்டாள்.பொதுத்தேர்வும் நெருங்கிவிட்டது.



                                                                                                                         தொடரும்....

Apr 5, 2011

சிறப்பு தேர்தல் அறிக்கை 2011:

நடைமுறை உண்மைகளை நகைச்சுவையாக ஏற்க மனமிருப்போர் மட்டும் இந்த பதிவை படிக்கவும்.நண்பர் ஒருவரிடமிருந்து வந்த மின்ன்ஞலை அவரின் அனுமதியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்கள் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்தியது..!!! இதையொட்டி இன்று மாலை 6 :30 க்கு தீவுத்திடலில் கலைஞருக்கு பாராட்டு விழா..!!! அனைவரும் வாரீர்...!!!


இந்திய வெற்றி பெற்றதை அடுத்து மக்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு Cricket Bat & Ballஇலவசமாக வழங்கபடும்..!!!!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் இருமுறை India விளையாடும் International Cricket போட்டியை சென்னையில் நடத்துவோம்..!!!!


நமது இளைஞர் அணி இந்திய அணியில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது..!!! இதற்கு ஒரே ஒரு காரணம் அது கலைஞர் தான்...!!!










கலைஞர் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியதை முன்னிட்டு கலைஞர் அரங்கில் நாளை மாலை 6 :30 க்கு மாபெரும் பாராட்டு விழா..!!! கலைஞருக்கு "மட்டைப்பந்துச் செம்மல்" என்று தமிழக திரை உலகம்  சார்பில் பட்டமளிக்க படும்..!!!..!!!







திமுக காங்கிரஸ் கூட்டணியால் india அபார வெற்றி பெற்றது..!!!!!
               *************************************************************





Minority திமுக அரசு Sachin டெண்டுல்கரை சதம் அடிக்க விடாமல் out ஆக்கியது..!!!! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய அணியில் உள்ள அனைவரையும் சதம் அடிக்க வைப்போம்..!!!


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த கிரிக்கெட் போட்டிக்கு இலவசமாக டிக்கெட் வழங்குவோம்..!!!!


                        *************************************************




விஜயகாந்த :  நடந்த India vs Srilanka அரை இறுதி ஆட்டத்தில்...!!!

வேட்பாளர் :  தலைவரே அது India vs Pakistan.....!!!

விஜயகாந்த் :  பளார்.... பளார்..... பளார்....!!!!!!! மூடு மூடு வாய மூடு... வீட்ட்ல யார்னா பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா.. போ.. போ..!!!







   *********************** * **********



ஆள விடுங்கடா சாமி…!!!
                  *******************************************************
தேர்தல் பிரச்சாரம் செய்றாங்களா அல்லது சொந்த பகை தீர்க்க தேர்தல் பிரச்சாரம் செய்றாங்களானு தெரியல,வேட்பாளர்களின்  கைகள் வணக்கம் சொல்லும் வடிவத்தில் பசை போட்டு ஒட்டிவிட்டது போலவும்,பயந்த கண்கள்,சிரித்த வாயுடன் வலம் வருவதற்கு துணையாக ஆதரவு தெரிவிக்கிறேனென்ற பேரில் அரசியல்வாதிகளும்/திரைப்படத்துரையினரும் கண்டபடி பேசுவது எரிச்சலை வரவைக்கிறது.அதுக்கும் நாளு பேர் கைத்தட்றாங்க.   

குறிப்பு : நக்கல்,கோபமான கருத்துரையிலாம் சொல்லக் கூடாதுப்பா

Apr 4, 2011

அழகோவியங்கள்

 வேல்ட் கப்,
வேல்ட் கப்
என்று அந்த
களேபரம்
  முடிந்து
இந்தியா முழுவதும்
மகிழ்ச்சியில் திளைத்துவிட்டது.
மீண்டும் வாழ்த்துகளை
தெரிவிப்போம்.

சற்று பொறுமையாக

இந்த பதிவில்

இடம் பெற்றுள்ள

அழகோவியங்களை

ரசிக்கவும்.

எனக்கு சில
மாதங்களுக்கு
முன் மின்னஞ்சலில்
வந்த ஓவியங்களை
பதிவில் பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன்.

இந்த ஓவியங்கள்

யார் வரைந்தது

என்ற விபரங்கள்

தெரியாது.

எவரேனும்

முன்பே

பார்த்திருந்தால்

மீண்டும்

ஒரு முறை

ரசிக்கவும்.




.


















Apr 2, 2011

இந்தியா வென்றது கோப்பை

இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி வென்றது

வேல்டு கப்

வாழ்த்துகள்




ரிலாக்சா போய் மேச் பாருங்க

தலைப்பைப் பார்த்து என்னதுனு பார்க்கலாம்னு வந்தவர்களுக்கு நன்றி.ஆனால் மதியம் விளையாடப் போகும் கிரிக்கெட் சம்பந்தம்மா யாரு  வேல்ட் கப் வாங்க போறாங்கனு நான் எதுவும் சொல்ல விரும்பலங்க. டென்சனா இருக்கிறவங்க போய் மேச் பார்க்க கீழிருக்கும் படங்களைப் பார்த்து  சற்று மனதை  ரிலாக்சா வச்சுக்க சின்ன முயற்சி.இதை பார்த்து யாரும் டென்சன் ஆனால் நான் பொறுப்பில்லப்பா!!
































Apr 1, 2011

இந்த அதிசியத்தை பார்த்தீங்களா

கூகுளில் அவ்வப்போது எதாவது புது யூசர் ஃபரண்ட்லி அப்பிளிகேசன்ஸ் வரும்,பிடித்திருந்தால் உபயோகிப்போம்.இல்லையெனில் விட்டுவிடுவோம்.
என்னவென்றாவது பார்ப்போம்
ஜிமெயில் மோசன் என்று புதிதாக தென்பட அது என்னனு பார்ப்போம்னு பார்த்தால் இந்த விளக்கவுரை வீடியோ கிளிப்பிங் இருந்தது.பார்த்து தெரிந்துகொள்ளவும். 






இப்படி ஒரு எளியமுறை வந்துவிட்டால் எவ்வளவு நல்லாருக்கும்.இது எதிர்கால திட்டமாக இருக்கலாம்,ஆனால் இன்று ஏப்ரல் ஒன்று முட்டாள்கள்  தினத்திற்கான திட்டமாங்க.நான் வெற்றிகரமா ஏமாந்துட்டேன்.  நீங்க????



Mar 31, 2011

இந்திய ஒற்றுமை இதில்தான்

ஒற்றுமைக்கு போராட கட்சிகள் வேண்டாம்,
கொள்கைகள் கொண்ட தலைவன் வேண்டாம்,
சாதி,மத,மொழி பேதமில்லை,
இந்தியன் என்ற உணர்வு
         ஊற்றெடுக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை,
ஒற்றுமையில் வேற்றுமை இல்லை
வெற்றியில் சந்தோஷ்ப்படுவதில் ஆச்சர்யமில்லை
தோல்வியென்றாலும் சிறியவர் முதல்
பெரியவர் வரை  ஒரே துக்கம்
                      அது
                 கிரிக்கெட்

கிரிக்கெட் நடைபெறும் மைதானத்திற்கு சென்று பார்க்கனும்னு அவசியமில்லை,நாம்  விளையாட கூட  வேண்டாம்,க்ரிக்கெட் விளையாட்டு முறைகளை தெரிந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தாலே போதும்.மைதானத்தில் பார்ப்பதைவிட அருகேவும்,துல்லியமாகவும் பார்க்கலாம்.( யாருக்குமே தெரியாத ரொம்ப புது விசயம்னு சொல்ல வந்துட்டியானு கேட்கப்பிடாது).
தொலைக்காட்சியில் பார்த்துதான் நிறைய பேர் கத்துக்கிட்டாங்க.
சரி இதெல்லாம் தெரிந்த விசியம்தான்.

 சிலவற்றை கேளுங்க:

எனக்குத் தெரிந்த ஒருவர் தான் டீ.வியில் மேச் பார்த்தால் இந்தியா தோற்றுப் போய்டும்னு. வெற்றியோ தோல்வியோ மேச் முடிந்த பிறகு ரிசல்ட் தெரிந்து கொள்கிறேன் என்பார்.

சிலருக்கு சிலருடன் அமர்ந்து மேச் பார்த்தால் இந்தியா தோற்று போய்டும்னு பயம்,சந்தேகம்.

பலருக்கு இந்தியா ஜெயித்து விட்டால் இமாலய சந்தோஷம்,தோல்வியடைந்தால்  அதேயளவு துக்கம்.

சிறு வயதில் எங்க மாமா ஒருத்தர் இந்தியா விளையாடும்போது  வீட்டில் டீ,வீ யில் கிரிக்கெட் மேச் பார்ப்பார்.அவர் பார்த்தால் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க,என்கிட்ட காசு கொடுத்து பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று இந்தியா  ஜெயிக்கனும்னு சாமி பேருக்கு அர்ச்சனை செய்திட்டு  வர சொல்லுவார்.பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு  போய் விளக்கு போடச் சொல்வார்.இந்தியா தோல்வியடைந்தால் எனக்கு திட்டு வேற விழும்.கோவிலுக்கு போகும்போது அசகுணமா யாராவது தென்பட்டாங்களானும் கேப்பார். சில வருடங்களுக்குப் பின் எனக்கு பதில் கோவிலுக்கு போக வேற ஆள நியமிச்சிட்டாரு.(ராசி சரியில்லைனுதான்)

பார்த்த/பாக்கத மேச்சுகளை டிவிடி/சிடி யில் போட்டு பார்ப்பது சிலருக்கு பழக்கமாம்,  கேள்விப்பட்டேன்.

இந்தியாவின் வெற்றி / தோல்விக்கு நாட்டுப்பற்றுக் கொண்டு பெட்டுக் கட்டுவது, அதாவது பந்தையம் அதாவது வெற்றி என்றால்  நான் அத செய்வேன்,தோல்வி என்றால் நீ இத செய்.

இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும்,நேற்று நடந்த மேச்சில் இந்தியா ஜெயிச்சாதான் வாங்கி வச்சிருக்க பட்டாசை வெடிக்கனும்னு அப்பா,அம்மா சொல்லிவிட்டதால் கிரிக்கெட் என்றால் மட்டையால் பந்தை அடிக்கனும் என்பதை மட்டுமே தெரிந்த, மட்டை உயரம் கூட இல்லாத,பக்கத்து வீட்டு வாண்டு இந்தியா  ஜெயிக்கனும்,பட்டாசு வெடிக்கனும்னு தவம் கிடந்தது,அது ஆசை நிறைவேறிட்டுங்க.


இனி வர ரெண்டாம் தேதி பாத்திடுவோம்.

Mar 29, 2011

பொற்கோவில்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் என்னும் பகுதியில் சீக்கியர்களின் நான்காம் குரு   ராம் தாஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த பொற்கோவில். இந்து முஸ்லிம் இடையே ஏற்பட்ட ஒற்றுமை இன்மையினால் வெறுப்புணர்வு கொண்ட குருநானக் என்பவர்  சீக்கிய மதத்தை  தோற்றுவித்துள்ளார்.
                                                                                                                                                                                         


பொற்கோவில் சீக்கியர்களின்       பெருமை      வாய்ந்த பழமையான   கோவில் ஆகும்.குருத்வார்/ ஹரிமந்திர்  சாஹிப் /தர்பார் சாஹிப்   எனவும்  அழைக்கப்படுகிறது.


டிசம்பர்  1585 முதல்  1604 வரை    ஐந்தாம் குரு அர்ஜன் தேவ் என்பவரால் இந்த கோவில் கட்டிடக்கலை நுணுக்கங்களால் கட்டப்பட்டதாகவும் ஆறாம் குருவிலிருந்து பத்தாம் குரு வரையிலான கால கட்டங்களில் குறிப்பாக இஸ்லாமியினர் ஆப்கானியர்கள் பல முறை தகர்த்ததாகவும் தகர்க்க முயன்றதாகவும், இந்த கோவில் பலமுறை வடிவ மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இந்து முஸ்லிம் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் குறிப்பாக சீக்கிய வழிபாட்டுத் தலமாக  தங்க கோபுரம்,எங்கும் மார்பில் கொண்டும் தற்போதுள்ள பொற்கோவிலாக 1767 ஆண்டுக்குப் பிறகுதான் முழுமை பெற்றுள்ளது..பத்து குரு மார்களுக்கும்  குருபானி இசை    முறையில்  பாடல்கள்,பூஜைகள் செய்யப்படுவதாகவும்,பத்து குரு மார்களின் அருள் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் மேல் விமானம் தென்னிந்திய கோவில் கட்டிக் கலைப்படியும்,இஸ்லாமியர்களின் தர்கா அமைப்பின்படியும் கட்டப்பட்டுள்ளது..

கோவிலை சுற்றி வரும்போது முஸ்லிம்  மக்கள் போல கட்டாயமாக தலைப் பகுதி மூடியிருக்க வேண்டும்,முக்காடு இட்டிருக்க வேண்டும்.குழந்தைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.ஆயத்தமாக கைக்குட்டை ஏதேனும் துப்பட்டா எடுத்துச் செல்ல வில்லையெனில் வாசல் பகுதியில் இதற்கென அகண்ட கைக்குட்டைகள் ஸ்கார்ப் போல விற்கப்படுகின்றன.வீட்டில் சாமி கும்பிட்டால் கூட முக்காடிட்டு வணங்கும் வட இந்தியர்களுக்கு இதில் வித்தியாசம் தெரியாது.பஞ்சாபி,சிங் இனத்தவருக்கும் வித்தியாசம் தெரியாது,இந்த இன ஆண்கள் தலையிலும் எப்போதும் என்ன அணிந்திருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.முஸ்லிம்களுக்கும் இந்த முறை பழக்கப்பட்டதே.நம்மாளுங்களுக்குத்தான் இது பெரிய சங்கடமாக எனக்குப்பட்டது.அந்த பிரகாரங்களில் வளம் வரும் கண்காணிப்பார்கள்/ஊழியர்கள்  சற்று தலை தெரிந்தாலும் முக்காடு இட்டுக் கொள்ளும்படி ஆணை இடுகின்றனர்.நம்ம தலையில ஐந்து நிமிடத்திற்கு மேல துப்பட்டா நிக்க மாட்டிங்கிது.(வட மாநிலத்தவர்களுக்கு சால்வை,துப்பட்டா,முந்தானை(பள்ளு)எப்போதும் ஆணி அடித்த மாதிரி நிற்கும். )

பிரசாதம்,பூஜைப்  பொருள் ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டது.நம் கொண்டுவந்த பொருட்களை வைப்பதற்கான இடமும்  உள்ளது.பிரகாரத்தில் ஒரே மாதிரியான கிண்ணத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.நாம் கிண்ணத்தை கொடுத்தவுடன் உடனே கழுவி துணியால் துடைத்து கவிழ்த்து வைக்கின்றனர்.இந்த கோவில் தெப்பம் போல நீருக்குள் அமைந்திருப்பது சரோவர் நதியில் என நினைக்கிறேன்.





இங்கு  அன்றாடம் நமது கோவில்களில் அன்னதானம் நடைபெறுவது போல அன்னதானம் நடைபெறுகிறது .கோதுமையை உணவாகக் கொண்ட மாநிலத்தில் சாதம் ,வடை,பாயசம் எப்படி கிடைக்கும்,ரொட்டி,சப்ஜி,பருப்பு கூட்டு,பாலக்  எனப்படும் கீரை  வகை,(பேருக்கு) சாதம்,  சப்ஜி,கீர் எனப்படும் (பாயசம்)இனிப்பு,அப்பளம் (பப்பட்) வழங்கப்படுகிறது. அன்லிமிட்டட் சாப்பாடுதான்.மீதம் வைக்காமல்,வேஸ்ட் செய்யாமல் சாப்பிட வேண்டும்.சிலர் இங்கு சாப்பிடுவதை சிறந்ததாகக் கருதுகின்றனர்,பிரஸ்டீஜ் பார்த்து சாப்பிடாமல் போவோரும் உண்டு. மிக சுத்தமாக செய்யப்பட்டு பரிமாறப்படுகிறது.ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் தரிசிக்க வருவதும், ஆயிரக்கணக்கானோருக்கு அன்னாதானமிடுவதும் எந்த தள்ளு முள்ளு பிரச்சனைகள் இல்லாமல்,அமைதியாக நடைபெறுகிறது. சில்வர் தட்டில்தான் சாப்பாடு.சாப்பிடும்போதும் முக்காடு இட்டிருக்க வேண்டும்.கடைசி ஒரு நபர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட காத்திருந்து சாப்பிட்ட இடத்தை மெஷின் கொண்டு துடைத்துவிட்டு அடுத்து காத்திருக்கும் மக்களை அனுமதிக்கின்றனர்.

    பொதுவாக வட இந்தியர்கள் வாட்ட சாட்டமாகத் தெரிவார்கள்,பஞ்சாபியர்களும் அப்படித்தான்.பல சாஸ்த்திர சம்பிரதாயங்களை பின்பற்றுகின்றனர்.சர்தார்ஜி ஜோக்குகள் எப்படி தோன்ற ஆரம்பித்தன என்பது தெரியவில்லை.ஆனால் புத்தியிலும்,வீரத்திலும் மிகச் சிறந்தவர்கள் பஞ்சாபியர்கள்.அபியும் நானும் திரைப்படத்தில் தலைவாசல் விஜய் சொல்வாரேடெல்லி சுற்றுப் பயணத்தின் போது சர்தார்ஜிகளை  கேலிசெய்த தென்னிந்தியர்களிடம் ஒரு ரூபாயை கையில் கொடுத்த சர்தார்ஜி கார் டிரைவர், தங்கள் பயணத்தில் எங்காவது சர்தார்ஜி/சிங் இன பிச்சைக்காரர்களை பார்த்தால் இந்த ஒரு ரூபாயை போடு என்றார்.வட இந்தியா முழுதும் சுற்று பயணத்தின்போது  டிரைவர் கூறியது போல ஒருவரைக் கூட பார்க்கவில்லைஎன்பார்.அது முற்றிலும் உண்மை.தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில்தான் சாமியார்களும்,சந்நியாசிகளும்,பிச்சைக்காரர்களும் அதிகம்.ஆனால் சிங்குகளின் (வாழ்க்கைமுறை) வழி தனி சிறப்பான வழி. பஞ்சாபி மொழி இந்திய ஆரிய மொழிக் குடும்ப மொழிகளுள் ஒன்றாகும்.பஞ்சாப் ஹரியானாவில் அரசு அலுவல் மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.சில நிமிட வீடியோ கிளிப்பிங்குகளை கீழே பார்க்கவும்.