*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 5, 2011

சிறப்பு தேர்தல் அறிக்கை 2011:

நடைமுறை உண்மைகளை நகைச்சுவையாக ஏற்க மனமிருப்போர் மட்டும் இந்த பதிவை படிக்கவும்.நண்பர் ஒருவரிடமிருந்து வந்த மின்ன்ஞலை அவரின் அனுமதியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எங்கள் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்தியது..!!! இதையொட்டி இன்று மாலை 6 :30 க்கு தீவுத்திடலில் கலைஞருக்கு பாராட்டு விழா..!!! அனைவரும் வாரீர்...!!!


இந்திய வெற்றி பெற்றதை அடுத்து மக்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு Cricket Bat & Ballஇலவசமாக வழங்கபடும்..!!!!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் இருமுறை India விளையாடும் International Cricket போட்டியை சென்னையில் நடத்துவோம்..!!!!


நமது இளைஞர் அணி இந்திய அணியில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது..!!! இதற்கு ஒரே ஒரு காரணம் அது கலைஞர் தான்...!!!


கலைஞர் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியதை முன்னிட்டு கலைஞர் அரங்கில் நாளை மாலை 6 :30 க்கு மாபெரும் பாராட்டு விழா..!!! கலைஞருக்கு "மட்டைப்பந்துச் செம்மல்" என்று தமிழக திரை உலகம்  சார்பில் பட்டமளிக்க படும்..!!!..!!!திமுக காங்கிரஸ் கூட்டணியால் india அபார வெற்றி பெற்றது..!!!!!
               *************************************************************

Minority திமுக அரசு Sachin டெண்டுல்கரை சதம் அடிக்க விடாமல் out ஆக்கியது..!!!! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய அணியில் உள்ள அனைவரையும் சதம் அடிக்க வைப்போம்..!!!


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த கிரிக்கெட் போட்டிக்கு இலவசமாக டிக்கெட் வழங்குவோம்..!!!!


                        *************************************************
விஜயகாந்த :  நடந்த India vs Srilanka அரை இறுதி ஆட்டத்தில்...!!!

வேட்பாளர் :  தலைவரே அது India vs Pakistan.....!!!

விஜயகாந்த் :  பளார்.... பளார்..... பளார்....!!!!!!! மூடு மூடு வாய மூடு... வீட்ட்ல யார்னா பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா.. போ.. போ..!!!   *********************** * **********ஆள விடுங்கடா சாமி…!!!
                  *******************************************************
தேர்தல் பிரச்சாரம் செய்றாங்களா அல்லது சொந்த பகை தீர்க்க தேர்தல் பிரச்சாரம் செய்றாங்களானு தெரியல,வேட்பாளர்களின்  கைகள் வணக்கம் சொல்லும் வடிவத்தில் பசை போட்டு ஒட்டிவிட்டது போலவும்,பயந்த கண்கள்,சிரித்த வாயுடன் வலம் வருவதற்கு துணையாக ஆதரவு தெரிவிக்கிறேனென்ற பேரில் அரசியல்வாதிகளும்/திரைப்படத்துரையினரும் கண்டபடி பேசுவது எரிச்சலை வரவைக்கிறது.அதுக்கும் நாளு பேர் கைத்தட்றாங்க.   

குறிப்பு : நக்கல்,கோபமான கருத்துரையிலாம் சொல்லக் கூடாதுப்பா

10 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்மளை வச்சி அவங்க காமெடி செய்யுறதை வச்சி நீங்க காமெடி செய்யறதைப்படிச்சு நாங்க சிரிச்சு.. ப்ச் சரி .. சிரிச்சு வைக்கிறேன்..:))

எல் கே said...

ஆச்சி நடந்தாலும் நடக்கும் யார் கண்டது

வை.கோபாலகிருஷ்ணன் said...

பேசாமல் நீங்களே ஒரு கட்சி ஆரம்பித்து கட்சித்தலைவி ஆனால்தான் இந்த நிலைமைகள் மாறும் என்று தோன்றுகிறது. முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@முத்துலெஷ்மி

ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் போல,சிரிச்சு வச்சதற்கு நன்றி.

@எல்.கே நன்றி

ஆமாங்க

@வை.கோபலகிருஷ்ணன் சார்
நன்றி

என் குறிப்பை படிக்கலையா?

raji said...

தி மு க : எங்கள் ஆட்சியில் ஆரும் நக்கல் செய்யக் கூடாது ஆமாம்.நக்கல் பண்ணாம இருந்தீங்கன்னா
நாங்க எழுத்துரிமை குடுப்போம்

அ தி மு க : எங்களை வைத்து ப்ளாக் எழுதறவங்களுக்கு இன்டர்னெட் கட்டணம்
இலவசம்னு கூறிக் கொள்கிறோம்


விஜய்காந்த் : எங்களை ப்ளாக் (block)பண்றவங்களை ...!!!!!!!!

வேட்பாளர் : தலைவா! அது block இல்லை blog....!!!!

விஜய்காந்த் : பளார் பளார் வாயை மூடு, எனக்கு தெரியாதா அது blog னு. நான் சிலேடைல சொல்ல வந்தேன்...!

ஆச்சி ஸ்ரீதர் said...

@ராஜி

சூப்பர்,அரசியல்வாதிகள் உள்பட எனக்கும் சேர்த்து அடி,

அது ராஜி!!

இத முன்னடியே எனக்கு மெயில் அனுப்பியிருந்தீங்ன்னா பதிவா போட்டு நிறைய ஓட்டு வாங்கியிருந்துருப்பேனே

சிலேடை சூப்பர்,நன்றிங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட கஷ்டமில்லங்க ஆச்சி நல்லாவெ சிரிப்பு வந்தது ..ஆனா நம்மளை வச்சி இவங்க காமெடி செய்யரத நினைச்சா கடுப்பாவும் வருதே.. சரி கடுப்பை மறந்து சிரிச்சதையும் சொல்லனுமில்ல..

Unknown said...

ஆஹா வர வர விஜயகாந்த் செம காமெடியனா மாறிட்டாரு :-)

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி

ஓகேங்க.

@சுரேஷ்

ஆமாம்,வைகைப் புயல் புரட்சிக் கலைங்கரா மாற முயற்சி செய்யும் போது இதுலாமும் நடக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

கேட்க சிரிப்பாக இருந்தாலும் நிலைமை சிந்திக்க வைக்கிறது. அரசியலுக்காய் இவர்கள் சொல்லும், செய்யும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் நிலையில் நம்மை வைத்துவிட்டனர்.