மனிதனாக பிறந்துவிட்டோம்.வாழும் மற்றும் வளரும் சூழ்நிலையில் பல வித மனிதர்களுடனும்,நட்புகளுடனும், உறவினர்களுடனும் வாழ்க்கைப் பயணம் செல்லுகிறது.புதிரான வாழ்க்கைப் படகில் துடுப்புகளாக நாமும் நம்மால் இயன்றதை செய்து வாழ்நாளெனும் நீர் நிலையை கடந்து வருகிறோம்.எண்ணங்களை எதிர்பார்ப்புகளை மீறி அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாரும் அறியா நியதி.
நாம் நல்ல எண்ணங்களுடன் பயணம் மேற்கொண்டாலும் முன்போ,பின்போ,அருகிலோ எப்படிப்பட்டவர் வருகிறார் என்பது நமக்குத் தெரியாது.பழகிப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.அங்கனம் மதிப்பும்,அன்பும் வழங்கப்படும்போது அதனையே கிடைக்கப்பெறுவோம்.மாறாக மிதிக்கப்பட்டால் அனுபவப் பாடமாக கற்றுக்கொள்வோம்.நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர நாம் காரணமாக இருக்க வேண்டாம்.
நமது தேவைகள் நிறைவேற நமது சக்திக்கு உட்பட்டு வாழ்ந்தாழும், முயற்சித்தாலும் கிடைக்கப்பெறுவோம்.முடியாதபட்சத்தில் கிடைப்பதை ஏற்கிறோம் அல்லது தவிற்க்கிறோம்.நம் வாழ்க்கை பயணத்தில் நாமே ஆசிரியர்,அனுபவங்களே பாடம்.வாழ்நாட்கள் என்ற நீர்நிலையில் நாம் மேற்கொள்ளும் வாழ்க்கை என்னும் படகு சவாரியில் சுழல் வருமா,சுனாமி வருமா என்பதை அறிய வாய்ப்பில்லை.
அனைத்து சூழ்நிலைகளிலும் அன்பாகவும்,விட்டுக்கொடுத்தும் வாழ்தலும் சாத்தியமில்லை. மனிதனுக்குரிய பண்புகளோடு வாழ்வோம். தீயவைகளை விடுத்து நல்லனவற்றை கற்போம்.வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது.