சமையல் டிப்ஸ் சொல்லும் அளவிற்கு சமையல் வராது. சமீபமாக நான் செய்துபார்த்த சில குறிப்புகளை - கலப்படங்களை, ஆராய்ச்சிகளை செய்முறைகளை பகிர்ந்துகொள்கின்றேன்.
குலாப் ஜாமூன் செய்ய ரெடிமேட் பவுடர் கிடைப்பது அனைவருக்கும் தெரியும்.தண்ணீர் விட்டு பிசையாமல் தண்ணீருக்கு பதிலாக நன்கு காய்ச்சிய பாலுடன் பிசைந்தால் ருசி கூடுமென ஒரு வட இந்தியப்பெண் சொன்னார்.அப்படி செய்துபார்த்ததில் ருசி கூடியது உண்மைதான்.
சில சமயம் கவனமின்றி கூடுதலாக பால் கலந்துவிட்டால் குலாப்ஜாமூன் உருண்டை பிடிக்கும் பதம் வரவில்லையெனில் வீட்டில் மைதா அல்லது நன்கு சலித்த கோதுமை மாவு கொஞ்சம் கலந்து உருண்டை பிடிக்கலாம்.ருசியில் வித்யாசம் இருக்காது.ரெடிமேட் மாவுடன் மைதா அல்லது கோதுமை மாவு அதிகம் கலந்து்விட்டால் மிருதுவாய் இருக்காது.

1கப் தேங்காய்த் துருவலையும், வெல்லத் துருவல் 2 கப்பும், 1 டேபிள் ஸ்பூன் நெய்யையும் எடுத்துக்கங்க. முதல்ல வெல்லத் துருவலை கால் தம்ளர் தண்ணி விட்டு அடுப்புல வெச்சுக் கரைய விடணும். அப்புறம் அந்த வெல்லக்கரைசலை இறக்கி வடிகட்டிக்கோங்க. அடுத்து, வடிகட்டிய வெல்லக் கரைசலை மறுபடி அடுப்புல வெச்சு லேசாக் கொதி வந்ததும் அதோட தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறுங்க.
ஆச்சா... இரண்டும் சேர்ந்து திரண்டு வர்ற சமயத்துல நெய் ஊத்தி நல்லாக் கிளறுங்க. நெய் சேர்ந்து கெட்டியான கலவையா ஆனவுடனே இறக்கிடுங்க. அது சூடு ஆறுவதற்கு முன்னாலயே சட்டுன்னு உருண்டைகளா உருட்டிப் போட்ருங்க. அவ்வளவுதான்!
குளிர்காலங்களில் இட்லி தோசைக்கு மாவு புளிக்க இரண்டு நாளாகலாம்.வட இந்தியா வந்த காலத்தில் அருகிலிருந்த ஒரு தமிழ்பெண் மாவு வைத்திருக்கும் குவளைக்கும் கம்பளி போர்த்தி வச்சிருப்பார்.திவான் எனப்படும் கட்டிலினுள் மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து மூடிவிடுவார்.ஏற்கனவே வைத்திருந்த புளித்த மாவை புதிதாக அரைக்கப்பட்ட மாவுடன் கலந்துவிடுவதாலும் விரைவில் புளிப்புத்தன்மை கிடைக்கும் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும்.
சில வாரங்களுக்கு முன் இட்லிக்கு அரைத்து வைத்திருந்த மாவு புளிக்காததால் சற்று கட்டியாக புளியைக் கரைத்து மாவில் கலந்தேன்.அரை டம்ளர் கரைசல் இருக்கும்.(கரும் புளியாக இருந்தால் கலர் மாறிவிடும்னு நினைக்கிறேன்.).மாவும் சற்று கெட்டிப்பதத்தில் இருந்ததால் இட்லி செய்வதில் பிரச்சனை இல்லை.விரைவில் மாவு புளித்தது.சுவையிலும்,மிருதுத் தன்மையிலும் வித்யாசம் தெரியவில்லை.விரும்பினால் ஒரு ட்ரையல் பாருங்கள்.சரி வல்லைன்னா கம்பெடுத்திட்டு வந்திடாதிங்க.
நெல்லை மாவட்டத்தில் உணவகங்களில் இட்லி மாவில் போரிக் பவுடர் கலந்திருப்பதை கண்டுபிடித்தாங்களாம்.என்னைவிட மோசமா யோசிக்கிறாங்கப்பா.
இட்லி தோசைக்கு மிளகாய்ப் பொடி பலரும் பல சுவைகளில் செய்வோம்.ஊரிலிருந்து வாங்கிவந்த மோர் மிளகாய் நிறைய இருந்தது.சிவப்பு மிளகாய்க்கு பதில் மோர் மிளகாயை வதக்கி உப்பு சேர்க்காமல் இட்லி பொடி தயார் செய்தேன்.அந்த சுவையும் நன்றாகவே இருந்தது.மோர் மிளகாயின் காரம் மற்றும் உப்புத்தன்மை அறிந்து தேவையான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.வெளிர் கலர்தான் கிடைக்கும்.

________________________________________________________________________

கண்ணைப் பறிக்காத ஒரு பச்சைக் கலர் சேலையில் பார்டர்,எளிய செமிக்கி வேலைப்பாடு,ரோஜாப்பூ எம்பராய்டரி வேலைப்பாடுடன் இருந்தது.வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் என் கைவண்ணத்தை காமிக்க முயற்சித்தேன்.ஒரு புத்தகத்திலிருந்து பூச்செடியை பட்டர் பேப்பரில் வரைந்து சேலையின் அடிப்பாகத்தில் வைத்து ட்ரேஸ் எடுத்துக்கொண்டேன்.3டி கலர்ஸ்,ஃபேப்ரிக் பெயிண்டிங் செய்துள்ளேன்.
சேலையின் முதல் முழம் விட்டு அடுத்தடுத்து 10 இடத்தில் வரைந்தேன். புகைப்படத்தில் சேலையின் வண்ணம் குறைவாகவே தெரிகிறது.

____________________________________________________________________
எங்கள் குடியிருப்பு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது பற்றி கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.அதில் மேலும் சில நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.வருடக் கடைசி நாள் அதாவது 31 டிசம்பர் இரவு கலைநிகழ்ச்சிகள்,பொது விருந்து,சிறிய ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் பாடல் நடனங்களும் நடைபெறும்.
ஒரு ராஜஸ்தானி தாய் விருந்திற்கு வரவில்லை.ஏன் என்று கேட்டதற்கு தன் பிள்ளைகள் இருவருக்கும் விடுமுறை இல்லை.அதனால் பிள்ளைகள் வரவில்லை.பிள்ளைகள் இல்லாமல் விருந்திற்கு வர மனதில்லை என்றார்.அந்த தாயின் பிள்ளைகள் இருவரும் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கின்றனர்.பிள்ளைகளின் கல்லூரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பணம் அனுப்பியதையும் கிறிஸ்துமஸின் போது தெரிவித்தார்.
குடியிருப்புவாசிகளின் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் நடனம் நடைபெறும்.குடியிருப்புவாசிகளின் நிகழ்ச்சிகளெல்லாம் அமைதியாக நடைபெறும்.வெளி நடனக்குழுவினர் (அதுவும் வட இந்திய நடனக் குழு)அதே குடியிருப்புவாசிகளிடம் ஆர்ப்பாட்டம்,அதிகக் கைத்தட்டல்,விசில் பறக்கும்.
ஆந்திர பெண்மணியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மகளும் 3 பாடல்களுக்கு அழகாக எளிமையாக நடனமாடினாள்.எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நடனம் ஆடும் சிறுமிகளில் இவளது நடனமும் இடம்பெறும்.ஆனால் அந்த சிறுமியின் அம்மா என்னிடம் பகிர்ந்துகொண்டது என்ன தெரியுமா?
அவர் ஆந்திராவிலிருந்து பத்து வருடங்களுக்கு முன் இங்கு குடித்தனம் வந்தாராம்.அப்போது 8,10 வயதிலிருந்த ஆண் பிள்ளைகள் இன்று இளைஞனாகி குடியிருப்புவாசிகளின் நிகழ்ச்சிகளுக்கு அமைதியாகவும்,வெளி நடனக் குழுவினரில் பெண்கள் ஆடும்போது இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர்.அந்த இளைஞர்களின் பெற்றோரும் இங்குதானே அமர்ந்துள்ளனர்.இவர்களுக்கு அச்சமும் இல்லை.பெற்றோர்கள் கண்டிக்கவும் இல்லையே.என் மகளும் நடனத்தில் ஆர்வமாக இருப்பவள் நாளை வெளியிடங்களுக்கு சென்று நடனமாடும்போது என் மகளையும் இப்படித்தானே வெளியாட்கள் எடைபோடுவார்கள்.
இதனால்தான் என் மகளை நடனங்களில் பங்குபெற வேண்டாம்.உன் திறமையை ஓவியம், பேச்சுப்போட்டி, பியனோ வாசித்தல் போன்ற போட்டிகளில் காண்பி என்கிறேன்,அல்லது கிளாசிக்கல் நடனத்திற்கு என்றுமே தனி மதிப்புண்டு அதில் மட்டும் கலந்துகொள் என்கிறேன்.என் மகள் நான் சொல்வதை கேட்பதில்லை,என் கணவரும் என் மகள் பக்கம்தான் என்கிறார் அந்த ஆந்திர பெண்மணி.
விளைவு குடியரசு தின நிகழ்ச்சியில் அந்த சிறுமி தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் அப்பாவின் துணையுடன் .ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தேசியநலன்,பெருமை சொல்லும் பாடல் ஒன்றிற்கு பரதநாட்டிய மற்றும் மேற்கிந்திய நடனக் கலவையாக சிறப்பாக அடினாள்.எப்ப ப்ராக்டிஸ் செய்தாள்னே எனக்குத் தெரியாது,எல்லாம் என் கணவரின் சப்போர்ட்டில் நடைபெறுகிறது என்கிறார் அந்த பெண்மணி.
பிள்ளைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாதுதான்.ஆனால் என்ன நடந்தாலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையேயும்,தாய் தந்தையருக்கிடையே பிள்ளைகள் வளர்ப்பிலும், ஒளிவு மறைவு இல்லாமல் இருத்தலும் அவசியம்தானே.