நோய்களை குணப்படுத்த மருத்துவங்கள் அதி நவீனமாக முன்னேறி வருகிறது.சமமாக புதுப்புது நோய்களும் வருகிறது.போகும் உயிரை நிறுத்தி வைக்க முடியாவிட்டாலும் விபரம் தெரிந்தவர்களும், காசு படைத்தவர்களும் தக்க நேரத்தில்,தகுந்த மருத்துவரை அனுகி நலம் பெறுகிறார்கள்.தலைவலி,காய்ச்சலென்று வந்துவிட்டால் பாமரனும் மெடிக்கல் கடைக்குச் சென்று கால்பால்,பரசிடமல்,சரிடான் போன்ற மாத்திரைகளை தாமே வாங்கி சாப்பிட்டுவிட்டு குணமடைவதுண்டு.குணமடையாமல் போவதும் உண்டு.
மேலை நாடுகள் சிலவற்றில் எந்த ஒரு மெடிக்கலிலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை பிரிஸ்கிரிப்சன்,மருவரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே மருந்துகள் வழங்கபடுகிறதாம்.
நம் நாட்டில் பாட்டி வைத்தியத்திற்கும்,பிற வைத்தியஙளுக்கும் நோய் கட்டுப்படாதபோது,ஒரு மருத்துவர் அவசியப்படும் போது மட்டுமே மருத்துவமனையயும்,மருத்துவரையும் நாடுகிறோம்.
மருத்துவர் எழுதுவது அவர்களுக்கும் மெடிக்கல்காரருக்கும் மட்டுமே புரிந்த ஒன்று.படித்தவனுக்குதான் இந்த குழப்பம்.படிக்கத் தெரியாதவனுக்கு ?
மருத்துவர் தரும் குறிப்பு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்குவதே சிறந்தது.பிற மருந்துக் கடைகளில் அதே மருந்து மாத்திரை பேரில் பிற கம்பெனி தயாரிப்புகள் இருக்கலாம்.அது சிலருக்கு மேலும் பின்விளைவுகளைத் தரலாம்.
நோய்கள் மட்டுமே கூலித் தொழிலாளி முதல் கோடீஸ்வரன் வரை பாரபட்சம் பாக்காமல் வருகிறது.முதுகு வலி,தலை வலி என்றால் காரணத்தை ஆராய்ந்து மருத்துவம் பாக்க, எம்.ஆர்.ஐ ஸ்கேன் வரை எடுக்க மருத்துவனும் தயார்,வசதி படைத்தவனும் தயார்.ஆனால் பாமரனின் நிலை?
தற்பொழுது அனைவரிடமும் தன் உடலை தம்மால் இயன்றவரை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு இருக்கிறது.வியாதி என்று மருத்துவமனை சென்றுவிட்டால் நம் உயிரை அந்த மருத்துவரிடம் ஒப்படைக்க செல்வதாகத்தானே அர்த்தம்.
எனவே நல்ல மருத்துவர்களிடம் சென்று நல்லபடியாக குணமடைய வேண்டும்.
போலி மருத்துவர்களும்,அலட்சியமான மருத்துவங்களும் ஒழிய வேண்டும்.
மருந்துகள் வாங்கும் போது பெயர்களை படிக்க, உச்சரிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை கடைக்காரரிடம் நம் சீட்டில் எழுதப்பட்டுள்ள மருந்துகள்தானா என்று ஒருமுறை ஊர்ஜிதப்படுத்திக்க வேண்டும்.
மருந்து எப்போழுது தயாரிக்கப்பட்டுள்ளது,எடுத்துக் கொள்ளும் அளவு,எக்ஸ்பெயரி காலம் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவக் காப்பீடு பற்றி பாமரனுக்கும் விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.மருத்துவக் காப்பீடு எடுக்கவும் உபயோகிக்கவும் கடைநிலை குடிமகனுக்கும் வசதி,வழி வகை வேண்டும்.
பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் எடுக்கிறோமோ இல்லையோ மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்.