1.எப்போதாவது ஒரு முறை திருமணம் செய்து கொள்வது நல்லது.
2.புத்திசாலியான ஒருவன் பெண்ணிடம் அவளை புரிந்துகொண்டதாக மட்டுமே சொல்வான்.முட்டாள் அதை நிருபிக்க முயல்வான்.
3.திருமணம் மூன்று ’ம்’ களால் ஆனது.
முதல் ம் நிச்சியம்
இரண்டாவது ம் திருமணம்.
மூன்றாவது ம் துன்பம்
4.திருமணம் உலகத்தைச் சுழல வைப்பதாய் இருக்கலாம்.ஆனால் மூக்கின் மேல் விழும் குத்தும் அதைத் தரும்.
5.விவாகத்தை விவாகரத்திலிருந்து காப்பதற்கு ஒரே வழி திருமணத்தின் போதே தலை காட்டாமல் இருப்பதுதான்.
6.கடவுளின் முதல் தவறு ஆண்.இரண்டாம் தவறு பெண்.இரு தவறுகள் இணைந்து ஒரு சரியாக முடியாது.
7.பெண்ணிற்கு சுதந்திரமாக இருக்கவும்,வாழவும், ஆணை வேட்டையாடவும் உரிமை இருக்கிறது.நீ திருமணம் செய்ய விரும்பினால் நான் யார் தடுக்க?குதிக்கும் முன் யோசித்துக்கொள்.
ஓஷோ அவர்களின் பெண்ணின் பெருமை என்ற புத்தகத்தில் மேற்சொன்ன ஏழும் மர்பியின் சூத்திரங்களென குறிப்பிடப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளேன்.
ஒரு சின்ன கதை
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தோழியை பார்க்க சென்ற பெண்ணுக்கு ஒரே ஆச்சர்யம்.ஏனெனில் தன் தோழியின் முகம் மாறியிருந்தது.
விசாரித்ததில், முக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இயற்கையாகவே நல்ல நிறம்,முகம்,உடல் வாகு கொண்டிருந்த அந்த பெண் தன் அழகில் திருப்தி இல்லாமல் மேலும் தன்னை அழகுபடுத்த தன் உதடு,மூக்கு,தாடை பகுதிகளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறாளாம். முன்பைவிட இப்போது மிக அழகாகவே காட்சியளிக்கிறாள்.
இப்பவும் அவளுக்கு தன் அழகில் திருப்தி இல்லை என்றாளாம்.ஏன் ? இதற்கு மேல் எப்படியிருக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்ட தோழிக்கு பதில் என்ன சொன்னாளாம் தெரியுமா?
நான் இப்போது கூடுதல் அழகாகவே இருக்கிறேன்,ஆனால் என் புது முகம் என் பழைய உடலுக்கு பொருந்தவில்லையே என வருத்தப்படுகிறேன் என்றாளாம்.
கதையின் கரு என்னவென்று யூகித்திருப்பீர்களென நம்புகிறேன்.
(இதுவும் அதே புத்தகத்தில் படித்த கதை)