விசயம் இருக்கு,ஆனால் இந்த பதிவு சுயதம்பட்டமாக இருக்கலாம் சற்று
பொறுத்துக்கொள்ளவும்.புத்தாண்டு,பொங்கல் எல்லோர்க்கும் நல்லபடியாக அமைந்திருக்கும்னு நினைக்கிறேன்
எங்களுக்கு உதரலும்,உலரலுமாய் புத்தாண்டு பொங்கல் அமைந்தது.(எங்கள் பகுதியில் அதிகமான குளிர்).இந்தியாவில் இருந்தாலும் நம்மூர் பொங்கல் தினங்களுக்கான ஒரு சதவீத ஒற்றுமையும் இல்லாமல் குக்கர் பொங்கல் செய்ததில் ஆற்றாமையில் வந்தது உலரல்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே வந்த கிராமத்து பொங்கல் காட்சிகள் மனதில் ஏக்கத்தை உண்டாக்கியது.

எங்கள் குடியிருப்பு பகுதியில் பல மாநிலத்தவரும் வசிக்கிறோம்.பேச்சுலர்களும் பல மாநிலத்தவர்களே.கிறிஸ்துமஸிலிருந்து புத்தாண்டு தினம் வரை குழந்தைகள்,பெரியோர்களுக்கான நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெறும்.டிசம்பர் 27 ஆம் தேதி பெண்களுக்கான சாலட்(காய்&கனி) அலங்கரித்தல் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.இரண்டு வருடமாக வேறு சில அலங்கரிக்கும் போட்டிகளில் ஆறுதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று நொந்துபோனதில் இந்த சாலட் அலங்காரத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. இங்குள்ளோரின் கலை & அலங்காரத்திறனிலும் என்னால் ஈடுசெய்ய முடியலப்பா.
120 குடும்பங்களில் 7 பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.போட்டிக்கு வந்திருந்த 7 பேரின் அலங்கார சாலட்டுகளை பார்த்தவுடன் “நல்லவேளை நான் கலந்துகொண்டு அசிங்கப்படலன்னு” பெருமூச்சு இழுத்துகிட்டேன்.கீழ்வரும் படங்களை பார்த்தால் உங்களுக்கும் புரியும்.
தக்காளியால் செய்யப்பட்ட ரோஜாக்கள்,ஆப்பிளால் செய்யப்பட்ட பறவை. பச்சை மிளகாய், கேரட், முல்லங்கி, மாதுளை, வெல்லரி, மிளகு, கருந்திராட்சையால் செய்யப்பட்ட படைப்பு.
குடைமிளகாய்,முல்லங்கி,கேரட் துருவல்,சிவப்பு முல்லங்கி ரோஜா,தக்காளியால் செய்யப்பட்டுள்ள சாலட் தோட்டம்.அடுத்த சாலட்டில் உருளைக்கிழங்கு பொம்மை குடைமிளகாய் தொப்பி போட்ருக்கு பாருங்க.
மற்ற சாலட்டுகளை நான் கிளிக்கியது தெளிவாக இல்லை.
பதிவை படிப்பவர்கள் மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.என்ன விசியம் என்றால் டிசம்பர் 29 ஆம் தேதி பெண்களுக்கான மாநில வாரியான உடை,அலங்கார போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.அன்று மாலை வரை எனக்கு பங்குகொள்ள ஆர்வமில்லை.மாலை சில பெண்கள் அவரவர் மாநிலத்து சிறப்பு உடைகளை அணிந்து சென்றனர்.(மேக்கப்பை பற்றி சொல்லவே வேண்டாம்).கேரளத்து பெண்ணும் சென்றார்.போட்டியில் திருமதிகள் மட்டுமே பங்கேற்கின்றனர் என்பதும்,ஆண்களுக்கு இந்த போட்டியைக்காண அனுமதி இல்லை என்றும் அறிந்துகொண்டேன்.ஒரு பெண் என்னிடம்
"உன் மாநிலத்திற்காக நீ கலந்து கொள்ளவில்லையா,உன் மாநிலத்தை விட்டுத்தரப் போறியான்னு"கேட்டு என்னை உசுப்பேத்திவிட்டார்.
ம்.ஹீம்,,விடக்கூடாது,ஜெயித்தாலும்,தோற்றாலும் பரவாயில்லன்னு நம்மூரு பட்டுப்புடவைய கட்டிகிட்டு,சின்னதா திருநீரு,குங்குமம் இட்டுகிட்டு புறப்பட்டுவிட்டேன்.மேக்கப் அவ்ளோதான். 4,5 மாநிலப் பெண்கள் வலம்வந்து முடித்துவிட்டனர். நான்தான் கடைசி ஆளா பேர் கொடுத்தேன்.அப்பதான் இன்னொன்றும் பார்த்தேன் அந்தந்த மாநிலத்தின் நடனமும் ஆடினார்கள்.இரண்டு நிமிடம் போதுமானது.இசை எல்லோருக்குமே ராஜஸ்தானி இசைதான்.கேட்வாக்கும்((பூனை நடை) தமிழாக்கம் சரியா )போகனும்.
கேட்வாக் இருக்கும்,அப்படியே நடந்து போயிட்டு நம்மூரு சிறப்புகள் சிலவற்றை சொல்லிட்டு வந்திடலாம்னுதான் தைரியமா பேர் கொடுத்தேன்.இப்ப என்ன பன்றதுனு வேடிக்கை பாத்துகிட்டே யோசிச்சிட்டிருந்தேன்.மொத்தமா 15 பெண்கள்,3 ராஜஸ்தானி,2 உத்திரபிரதேசம்,2 ஒரிஸ்ஸா மற்றும் சிலர்.கடைசியா ஒரு முடிவு பண்ணிட்டேன்.கடைசி ஆள் நான்தான்.என் இதயத்துடிப்பு எனக்கே கேக்க ஆரமிச்சிட்டு.
கடைசி ஆளா போன நான் தைரியமா எனக்குத் தெரிந்த பரதநாட்டிய அபிநயங்களை தப்புத்தப்பாதான் ஆடினேன்.பரதநாட்டியம் தமிழகத்தின் கலை நடனங்களில் சிறப்பானது.நான் அணிந்துள்ள பட்டுப்புடவை வண்ணத்துப்பூச்சி லார்வா நிலையில் தயாரிக்கப்படுவது,பட்டுப்புடவை தென்னகத்தின் சிறப்பான முக்கிய ஆடை,அனைத்து சுப நிகழ்விற்கும் வசதிக்கு தகுந்தாற்போல பெண்கள் பட்டுப்புடவை அணிவதையும் வாங்குவதையும்தான் விரும்புவோம்.(வட இந்தியாவில் பட்டுப்புடவை கிடைக்காது).நெற்றியில் வைக்கும் பொட்டிற்கு மேல் திருநீரும்,கீழ் குங்குமமும் வைப்பது சாஸ்திரம்,மருத்துவ குணமும் உண்டு.அனைத்து வீடுகளிலும்,கோவில்களிலும் திருநீரும்,குங்குமமும் கிடைக்கும்,இருக்கும்.உங்களுக்கு செந்தூரம் கோவில்களில் வழங்கப்படுவது போல எங்கள் கோவில்களில் விபூதி,குங்குமம் வழங்கப்படும் என சிறுகுறிப்பு சொல்லிட்டு வந்த போதும்,போகும்போதும் நம்மூர் வணக்கம் தமிழிலே சொல்லி கைகூப்பி வணங்கிட்டு வந்துட்டேன்.
தேர்வு செய்ய 3 பெண் ஜட்ஜ்கள் மதிப்பீட்டில் பிசியாக இருந்தனர்.ரிசல்ட் அறிவிக்கும் இடைவெளியில் பெண்களுக்கு இரண்டு சின்ன சின்ன விளையாட்டுகள் வைத்தனர்.அதில் நான் தோற்றுவிட்டேன்.பெண்கள் நகைச்சுவை துணுக்குகளும் சொன்னார்கள்.ஒரு குஜராத்தி பெண் சர்தார்ஜி ஜோக் சொன்னார்.வட மாநிலத்தவரான நீங்களே சர்தார்ஜிகளை கலாய்ப்பது போலருக்கே என்றேன்.இது எப்படியோ சில சிந்திக்க வைக்கும் ஜோக்குகளெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளாகிவிட்டது.சர்தார்ஜி கோவிச்சிக்க மாட்டார் என்றார்.
அவர் சொன்ன ஒரு ஜோக் மட்டும் நினைவில் உள்ளது.
சர்தார்ஜி ஃபோன் பன்றார்,
எதிர் முனையில் ஹலோன்னு ஒரு பெண்குரல் கேக்கிறது,
நீதான ஃபோன் பன்னின நீ முதல்ல சொல்லு நீ யாருன்னு,
நான் பஞ்சாப்லேர்ந்து சர்தார்ஜி பேசுறேன் ,
நான் சீதா பேசுறேன்,
ஹரே! நான் அயோத்திக்கு ஃபோன் செய்துட்டேனா,சாரி,ராங் நம்பர்னு சர்தார்ஜி அழைப்பை கட் செய்திட்டாராம்.
இப்போ ரிசல்ட் அறிவிக்கிறாங்க
மூன்றாம் இடம் முதலில் அறிவிக்கப்பட்டது,என் பேர் இல்லை
இரண்டாம் இடத்திலும் என் பேர் இல்லை,முதலிடத்தை கெஸ் பண்ண சில நொடி தந்தனர்.எனக்கு ஆறுதல் பரிசுதான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்,
முதல் இடம்,பரிசு.....என் பெயரை.....அறிவித்தனர்.
என்னால் நம்பவே முடியவில்லை,ஓவர் பீட்டர்னு நினைக்காதிங்கப்பா,நிஜமாதான்.முதல் பரிசு கிடைச்சுட்டுப்பா.
மறுநாள் காலை 30ஆம் தேதி தானே புயல் தமிழகத்தை தாக்கியது.என் தவறான பரதநாட்டியத்தால் தமிழ்நாட்டில் இயற்கை பொங்கி எழுந்துவிட்டதுன்னு வீட்டில் கலாய்ப்பு.
பொங்கல்:
வெண்பொங்கல் வெள்ளை நிறத்துடன் செய்திட்டேன்.கரும்பு ஜீஸ் விற்பனையாளரிடமிருந்து கரும்பு வாங்கியாச்சு.சர்க்கரைப் பொங்கல், நான் கலந்த வெல்லத்தின் கலர் மஞ்சளாக இருந்தாலும் இறுதியாக கரும்பொங்கலாகிவிட்டது.இதென்ன இப்படியாகிட்டுனு சுய சிந்தனையில் கொஞ்சம் மஞ்சள் தூளை கலந்தேன்.பச்சை வண்ண சர்க்கரை பொங்கலாகிவிட்டது. இன்றும் ஆராய்ச்சியா?சாப்பிட்டால் சக்கரை பொங்கல் போலதான் இருக்கிறது என்றார் கணவர்.தென்னகத்து பேச்சுலர் ஆசாமியும் இப்படியொரு பச்சை பொங்கல் இப்பதான் அக்கா சாப்பிடுறேன்னு சொல்லிட்டாரு.

நான் செய்த பொங்கலை பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் கொடுக்கப்போனால், தட்டில் வைத்திருப்பதை பார்த்து என்னை வித்தியாசமாக பார்த்த சகோதரியிடம் ஆஜ் தோ ஹம்கோ மகரசங்கராந்தி ஹே (இன்றுதான் எங்களுக்கு மகரசங்கராந்தி),யே மீட்டாய் சாவல் ஹே(இது சக்கரை பொங்கல்) என்று விளக்கமளித்து கொடுத்துட்டு வந்தேன்.சாப்டாங்களோ,குப்பையில் வீசினாங்களோ தெரியாது.இங்குள்ளவர்களுக்கு 14 ஆம் தேதியே மகரசங்கராந்தி.அவரவர் முறையில் காலையில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தார்கள்.குளிரினால் சூரிய பகவான் 8.30க்கு மேல்தான் சற்றே வந்தார்.
ஒய் திஸ் கொலவெறின்னு இந்த பதிவை படிப்பவர்கள் மனதில் தோன்றிற்கலாம் அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்
இந்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகிட்டு,சர்ச்சைகளும் ஆகிட்டு.வட இந்திய சேனல்களிலும் அடிக்கடி இந்த பாடல்தான் வருகிறது.எங்க பக்கத்து வீட்டு வாண்டு பாடுது,ரோட்டோர கடைகள்,செல்லும் வாகனங்களிலும் இந்த பாடலை கேட்கமுடிகிறது.இங்கு கல்யாணம் மற்றும் சில நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்களில் “அப்படிப் போடு(விஜய் பாடல்)” இடம்பெறும்,இப்போது இந்த கொலவெறி பாடலும் இடம்பெறுகிறது.
தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் தொலைபேசியில் தனுசுடன் பேசிய விவேக் அவர்கள் இது தமிழ்பாடல் இல்லை, இங்கிலிஸ் பாடல்ன்னு இங்கிலிஸ்காரன்தான அவங்க அனுமதி இல்லாம பாடலை வெளியிட்டதற்கு எதிர்க்கனும்,ஏன் மற்றவங்களெல்லாம் எதிர்க்கிறாங்கன்னு கேட்டார்.
சரி இந்த வம்பு வேணாம்.அடுத்த பதிவில் சந்திக்கலாம்