எவ்வழி
வந்தீர்கள் அந்நியர்களே!
தரை வழியா,வான் வழியா?
காற்றா,நீரா? எவ்வழி?
எங்கள்
உலகத்தில்
உங்கெளுக்கென
ஒரு உலகமா?
மனித வாழ்வை
வேடிக்கைப்
பார்க்க
அவன் தலை
மீதே
அமரலாமா?அல்லது
தலைகளை
கொய்ய முடியாமல்
தலை மீது
ஊர்ந்து குடித்தனமாக
கூத்தடிக்கின்றீர்களா?
சிறியவர்கள்
முதல்
பெரியவர்கள்
வரை
பாகுபாடற்று
சொறியவைத்து
சாதனையா
படைக்கின்றீர்கள்?
கூந்தலை
பேணாமல் போனதால்
உள் நுழைந்த
உங்களுக்கு
“பேண் ”((பேன்))
என்ற பெயர் வந்ததோ?
என்ற பெயர் வந்ததோ?
பாவ,புன்யம்,பார்க்காமல்
கொல்லி
ஸாம்ப்பு ஸ்நானமும்
தங்களுக்கான
சீப்பால் இழுத்தும்
தங்களை
கொன்று குவிக்காமல்
விடமாட்டோம்.................!!!
சட்ட மறுப்போ தண்டனையோ
கொலையாளிக்கு இல்லை,
வந்ததும் வாழ்ந்ததும்
ஓசையற்றதில்
உங்கள்
ஆயுள் ஓசையுடன்
நிறைவடைகின்றது.
ஆத்மா
சாந்தி அடையட்டும்.
(முற்று)