*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 15, 2016

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை தொடர் பதிவிட ,என்னை எழுதத் தூண்டும் அன்பில் அழைத்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றிகள்.தாமதத்திற்கு வருந்துகின்றேன்.

பயணங்கள் பல விதம்தான்.பதின்ம வயதின் பேருந்து பயண அனுபவம் பற்றி 5 பகுதிகள் எழுதியுள்ளேன்.பயணிக்க விரும்பாதோர் வெகு சிலராக இருக்கலாம்.எவ்வித பயணங்களாக இருந்தாலும் சுகமாகவோ அல்லது வேதனையாகவோ ஒரு அனுபவம் அமைந்துவிடும்.சூழ்நிலைகளைப் பொருத்தும் கால மாற்றத்திலும் அந்த அனுபவங்கள் மனதில் பதிந்து போகும் அல்லது மறந்துபோகும்.

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான்உங்கள் முதல் ரயில்பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

               சிறு வயதில் உள்ளூர் ரயில் நிலயத்திற்கு எனது அப்பாவுடன் ரயில் பார்க்கச் செல்வேன். சப்தமுடன்  கண்ணுக்கெட்டிய வரை தொடர் வண்டியாய் செல்லும் ரயிலை பார்த்து ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.ஆனால் ரயிலில் பயணிக்க விரும்பியும் வாய்ப்புகள் இல்லை.9 ஆம் வயதில் ஒரு சிறிய விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருவெரும்பூரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் எதோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன்.

குணமாகி வீடு திரும்பகையில் மற்ற வாகனங்களில் செல்ல பலர் ஆலோசனை சொன்னாலும் ,கேக்காமல் என் விருப்பத்திற்காகவே என் அப்பா ரயிலில் செல்ல ஏற்பாடு செய்தார்..அதுவே என் முதல் ரயில் பயணம். மறக்கவே முடியாதது.

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

               இதுவரை பல்வேறு சூழ்நிலைகளில் குடும்பத்தார் அல்லது நட்புகளுடன்  பயணித்திருந்தாலும் , கல்லூரிக்கு  முதன் முதலாக தனியாக பேருந்தில் சென்றதுதான் எனக்கு மறக்க முடியாத மகிழ்ச்சி.ஏனெனில் பெற்றோர் துணையின்றி பயணித்த அந்த முதல் நாள் எதோ பெரும் சாதனை புரிந்துவிட்டதாகவும், சாதனை செய்ய ரதத்தில் செல்வதாகவும் எண்ணினேன். ( என்ன சாதனை புரிந்தீர்கள் என்று கேக்கப்பிடாது )

3. எப்படிப்  பயணிக்கப் பிடிக்கும்?  

குடும்பத்தாரோ அல்லது நட்புடனோ பயணிக்க வேண்டும்.வேடிக்கைப் பார்த்துக்கொண்டேவும் ஏதேனும் பேசிக்கொண்டேவும் பயணிக்க வேண்டும்.நம்மை சகித்துக்கொண்டு நட்புடன்  அல்லது அமைதி காக்கும் சக பயணி வேண்டும்.பிடித்த ஸ்நாக்ஸ் அல்லது இனிப்புகள் அவ்வப்போது சாப்டுக்கொண்டே பயணித்தலும் பிடிக்கும்.


4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

4.மெல்லிசைப் பாடல்கள் கேட்க விருப்பம்.பயணிக்கும் போது கேட்ட சில பாடல்கள் பிறகு வரும் நாட்களில் விருப்பப் பாடல்களாகவும் அமைந்துவிடுகின்றது என்பதையும் சொல்லியாக வேண்டும்.


5. விருப்பமான பயண நேரம்?
அடை மழை இல்லாத மற்ற அனைத்து கால நேரத்திலும் பயணிக்க விருப்பம்தான்.


6. விருப்பமான பயணத்துணை?
.
என்னை சகித்துக்கொள்ளும் என் கணவர் மற்றும் என் பிள்ளைகள்தான் விருப்பத் துணை.

 7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

.பயணத்தில் படிக்க விரும்பமாட்டேன்.

.8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? 8
 அப்படி எதுவும் இல்லை.

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

.கேட்பதோடு சரி.

10. கனவுப் பயணம் ஏதாவது? 

அப்படிஎதுவும் இல்லை.தற்சமயம் செல்லும் பயணங்கள் நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே கனவாக உள்ளது..


                                                                                                                     *நன்றிகள்*.


11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான மிகவும் அழகான பயணப் பதிவு.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பயணங்கள் முடிவதில்லை தொடர் பதிவிட, என்னை எழுதத் தூண்டும் அன்பில் அழைத்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றிகள்.//

ஆஹா, பலம் வாய்ந்தவர் அசைத்தால் தான் அம்மியும் நகரும் என்பார்கள். :)

அதுபோல அழைத்தவர் அழைத்தால் தான் ஆச்சியும் பதிவிடுகிறார்.

தங்களைப் பதிவிட அழைத்த திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் நன்றிகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//9 ஆம் வயதில் ஒரு சிறிய விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருவெறும்பூரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் எதோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன்.//

அடடா, எனக்குத் தெரியாமல் போச்சே ! 1981 முதல் 2000 வரை நான் அங்குதானே திருவெறும்பூர் அருகில் BHEL Township இல் குடியிருந்தேன். கைவசம் சூப்பர் 100CC பைக் வைத்திருந்தேனே. தெரிந்திருந்தால் தினமும் வந்து குழந்தையைப் பார்த்திருப்பேனே.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்னை சகித்துக்கொள்ளும் என் கணவர் மற்றும் என் பிள்ளைகள்தான் விருப்பத் துணை.//

என்ன ஒரேயடியாக //சகித்துக்கொள்ளும்// இப்படிச் சொல்லிட்டீங்கோ !

அவர் மிகவும் நல்லவர் + அதிக சகிப்புத்தன்மை உடையவர் + உங்கள் மேல் உயிராக இருப்பவர் என்பதை நான் பார்த்த மாத்திரத்திலேயே எடைபோட்டுத் தெரிந்துகொண்டு விட்டேன்.

இங்கு வந்தபோது அவர் தானே பாவம் .... உங்களின் தூங்கிக்கொண்டிருந்த இரண்டாவது குழந்தையை முழுக்க முழுக்க தோளில் போட்டு தூக்கிக்கொண்டே இருந்தார் !! http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html

மிகவும் உத்தமமான தம்பதியினர் நீங்கள் இருவரும். இரு குழந்தைகளும் தங்கமோ தங்கம். வாழ்த்துகள். நீங்கள் எல்லோரும் இன்று போல என்றும் ஜாலியாக வாழ்க !

பதிவுக்கும் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள், ஆச்சி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ம்ம்.... ரைட்டு...

திண்டுக்கல் தனபாலன் said...

பதில்கள் அருமை...

ஆச்சி ஸ்ரீதர் said...

@ வை.கோபலகிருஷ்ணன்
சார் உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.எவ்வளவு கவனித்து இன்றும் நினைவில் வைத்துள்ளது வியப்பாக உள்ளது.மிக்க நன்றிகள்.

@ தமிழ்வாசி பிரகாஷ்

:/ O:)

@ திண்டுக்கல் தனபாலன்
நன்றிகள் சார்.

Unknown said...

தங்களின் பயணம் இனிதாகுக... Wish you Happy Journey... மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..

கீதமஞ்சரி said...

தாமத வருகைக்கு மன்னிக்கவும் ஆச்சி. என் வேண்டுகோளை ஏற்று தொடர்பதிவில் இணைந்தமைக்கு மிகவும் நன்றி. பயண அனுபவங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

ரயில் பார்ப்பது என்பது சிறு குழந்தையாயிருக்கும்போது மட்டுமா ரசிக்கிறது? இப்போதும் கூடத்தானே.. நான் இப்போதும் சரக்கு ரயில்களின் பெட்டிகளை எண்ணுவேன். என் பிள்ளைகள் கேலிசெய்தாலும் எனக்கு அது ஒரு இன்பம்.

கல்லூரிக்கு முதல்நாள் தனியாகப் பயணித்து ஒரு சாதனை புரிந்தாற்போன்ற உணர்வை நானும் அனுபவித்திருக்கிறேன்.

அப்புறம் அதென்ன சகித்துக்கொள்ளும் கணவர் என்று சொல்லிட்டீங்க.. பயணத்தில் அவ்வளவு அட்டகாசமா பண்ணுவீங்க...

இத்துடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து எழுதுங்க.. வாசிக்கக் காத்திருக்கிறோம்.

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள் @ subbu ramani

ஆச்சி ஸ்ரீதர் said...

@ கீதமஞ்சரி

பெரிய வார்த்தை வேண்டாம் சகோதரி.தங்கள் அழைப்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்.இங்கே உங்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்போதும் நீங்கள் பெட்டிகளை எண்ணுவதை ரசித்தேன்.

ஆமாம் சகோதரி என்னை சகித்துக்கொள்ளவே பிறந்தவர் என் கணவர் ஹி...ஹி..ஹி...

தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன் .நன்றிகள்