*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 8, 2016

மகளிர் தின வருத்தங்கள்

எனென்னவோ தினங்கள்  கொண்டாடப்பட்டாலும் மகளிர் தினம் கொண்டாடும் அளவிற்கு  பெண்களின் நிலை இல்லை  என்றால் எதிர்ப்புகளும் வாக்கு வாதங்களும் உருவெடுக்கும்.எனக்கு தினம் தினம் மகளிர் தினம் வேண்டும்.இல்லாததை அல்லது இருப்பது போன்ற மாயத்தை வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடி வாழ்த்து சொல்கிற நிர்பந்தத்தை தவிர்க்க வேண்டும்.

இராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்தது தெரியாமல் ஒரு மாதமாக இணையத்தில் உளவியிருக்கின்றோமே ....இது ஒன்றே சாட்சி,இணையத்தில் பேர் பெற்ற பெண்மணியே  பாதுகாப்பு என்ற பெயரில் தனக்கென வைத்த வேலியினால் மற்ற பதிவர்கள் நெருக்கமின்றி தனது காலம் முடித்து சென்றுவிட்டார்.

அவர் follower இல்லாத வலைப்பூ இருக்காது என்று நினைக்கின்றேன்.தன் வயோதிக காலத்திலும் பல தகவல்களை பகிர்ந்த அவருக்கு பதிவுலகம் எதாவது செய்ய வேண்டும்.வேதனையை பகிர்வதைத் தவிர நான் ஒன்றும் செய்ய போவதில்லை.

5 comments:

Abi Raja said...

நிஜமான உண்மை அக்கா... ஒரு மாதம் வரை யாருக்கும் தெரியவில்லை.. இங்கே பெண்களின் நிலை அப்படி...

Angel said...

இராஜராஜேஸ்வரி அக்கா அவர்களுக்கு எனது அஞ்சலிகள் ..உண்மைதான் ஆச்சி ..எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் மகளிர் தினம் என்று கொண்டாடுவதிலும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதிலும் உடன்பாடில்லை ..அனைவருமே ஒரு வேலி போட்டுதான் பழகுகிறார்கள் அதன் காரணம் மெல்லிய பயம்தான் .உண்மை வயதை யார் சொல்லியிருப்பார்கள் ? அப்படி சொன்னாலும் அதையும் சந்தர்ப்பம் சாக்கில் கிண்டல் அடிக்கும் கூட்டம் சிலர் இருப்பதாலேயே இன்னும் பலர் பொதுவில் பழக தயக்கம் காட்டுகிறார்கள் இந்நிலை மாறுமா :(

வெங்கட் நாகராஜ் said...

எனது அஞ்சலிகளும்....

துரை செல்வராஜூ said...

ஒவ்வொரு நாளும் தனித்துவமான பதிவுகளைத் தந்தவர்..

அவரது நினைவு என்றென்றும் நெஞ்சினில் நிறைந்திருக்கும்..

அவர் தம் ஆன்மா இறைநிழலில் இன்புற்றிருக்கட்டும்..

ஆச்சி ஸ்ரீதர் said...

ஆம் அபி ராஜசேகர்

# ஏஞ்சலின்
மறைந்திருந்தே நமது திறமைகளை வெளிப்படுத்தினால் நலம் என்ற பயம் உள்ளது.எனது ஜனவரி மாத பதிவிற்கு இராஜராஜேஸ்வரி அவர்கள் பின்னூட்டமிட்டுள்ளார்.

#வெங்கட் நாகராஜ்,
#துரை செல்வராஜ்

அவர் மறைந்த செய்தி பொய்யாகிடக் கூடாதா என்றும் நினைக்கிறேன்.