*வணக்கம் வருகைக்கு நன்றி*

Dec 21, 2012

நல்லாருக்கு, ஆனா செக்சியா இல்ல

கடந்த ஞாயிற்று கிழமை இரவு தில்லியில் நடந்த பலாத்கார நிகழ்வையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையையும் பலரும் அறிந்திருப்பீர்கள்.இதற்கு வட மாநிலங்களில் ஆங்காங்கே எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டங்கள் நடந்தது.பார்லிமென்டிலும் எதிரொலித்தது.ஒரே நிகழ்விற்கு அனைத்து தரப்பு கோணங்களையும் செய்தியாக தரும் 24 மணி நேர செய்தி மீடியாக்கலும் அடுத்த செய்திக்கு சென்று விடும்.இதற்கு யார் காரணம் என்ன காரணம் எது எப்படி இருந்தாலும் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும் பெண்களை மதிப்பவர்களுக்கும் வேதனை தந்திருக்கும்.அனைத்து பெண்களுக்கும் மெல்லிய பயம் வந்திருக்கலாம்.ஃபேஸ் புக்கில் படித்ததை இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

The bus driver ram singh went out with his 6 friends ( 2 rkp sabzee wale ) the girl and the guy was called by the driver and were given proper tickets ( the bus was a school bus with black curtains .. Not permitted for transport use )

the girl was 23 a very good student and wanted to reach dwarka mor.After they got in , the guys hit a rod on the guys's head and threw him out , then raped the girl one by one which was moving continuously in the posh areas of delhi and ncr.

The girl's vagina + small and large intestine is totally damaged and she cannot live a married or normal life.

After raping her badly , one of them inserted a very long rod in her vagina which almost killed her and threw her out and ran away.She was lying in the middle of the road hurt and nude..Not even single person helped her or covered her for an hour.When police came in no one helped them pick her up. They were just not interested at all.Doctor said " main bayan nahi kar sakta ki ussne kya kya zheela hai ... Bolte hue muzhe dard hota hai ".She has gone in coma 5 times from 16th dec. She is unconscious , critical and is not stop crying. The ribs are damaged as well.That's the whole story And that's what delhi people are. And her only fault was that she took a wrong bus..

இனி சில நிகழ்வுகளையும்,கேள்விப்பட்டவைகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த     பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்கு  நன்றியோ,பதிலோ தெரிவிக்க விருப்பமில்லை.பதிவை படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை நாகரீகமாக பகிர்தலே நன்றியாக இருக்கும்.இந்த பலாத்கார சம்பவம் பார்லிமெண்ட் வரை பேசப்பட்டாலும் எங்கள் குடியிருப்பு பகுதியில் பேசிக்கொள்வது ” இந்த மாதிரி சம்பவங்கள் தினமும் எங்கேயாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது.பாதிக்கப்பட்டது மருத்துவ மாணவி என்பதாலும் பேருந்தில் கொடூரமாக நிகழ்ந்ததாலும் பார்லிமெண்ட் வரை போய்விட்டது,பார்லிமெண்ட் கூடும் நாட்களைவிட,நாட்டில் நடைபெறும் கொலை கொள்ளைகளைவிட  கற்பை இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.அன்பு,காதல் என்ற  பேரில் ஏமாற்றப்படும் பெண்களும் இங்கு அதிகம்” என்கிறார்கள்.தில்லியில் சில நிகழ்வுகளை பகிர்ன்றேன்.ஆண் பெண் நட்பு,காதல் அவர்களுக்குள் எந்தளவிற்கு உள்ளதோ,எப்படிப்பட்டதோ நமக்குத் தெரியாது. பொது இடங்களில் சிலர் நடந்துகொள்வதை பார்க்கும்போது நாம்தான் தூரப்போக வேண்டியுள்ளது.இது எங்கும் பொருந்தும் என்றாலும் பல பெண்களின் ஆடை நாகரீகம் பெண்களையே ஆச்சரியத்தில் பார்க்க வைக்கிறது.

தில்லியில் சரோஜினி நகர் மார்க்கெட்டில்,ஒரு கடையில் குர்தாக்களை பார்த்து செலெக்ட் செய்துகொண்டிருந்தோம். என் அருகே இளம் பெண்கள் சிலரும் மினி  டாப்ஸ்களை செலக்ட் செய்துகொண்டிருந்தனர்.அவர்கள் செலக்ட் செய்ததை நான் பார்க்கவில்லை,ஆனால் அதில் ஒரு பெண் சொன்னது : ஹே! யே தோ சுந்தர் ஹே(இது அழகாக இருக்கிறது) . மற்றொரு பெண்: சுந்தர் தோ ஹே! லேகின் பெஹனே தோ செக்ஸி நஹி ஹோத்தி ஹே,(அழகாதான் இருக்கு ஆனால் அணிந்தால் செக்சியாக இருக்காது)

இந்த தேர்வை என்னவென்று சொல்லலாம்.தைத்து விற்பவனின் தவறா ?, அணிந்து கொள்பவர்களின் தவறா?இப்படியான உடைகளை நிச்சியம் வீட்டிற்குள் அணிந்து கொள்ளவா வாங்குகின்றனர். இவர்களின்  வீட்டு நபர்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றார்கள்.இந்த கேள்விகளை அந்த பெண்ணிடம் கேக்க முடியாமல் இங்கு பதிகின்றேன்.மாடர்னாக காமிக்க  உடை உடுத்துவது இப்போ செக்சியாக காமித்துக்கொள்ளும் அளவிற்கு வந்துள்ளதே,இம்மாதிரியான பெண்களினால் ஏக்கத்தில் பாதிக்கப்பட்டவன்தான் கிடைக்கும் பெண்ணை சீரழிக்கின்றான்.

அதே சரோஜினி நகர் மார்க்கெட்டில் ஒரு முறை பர்சேசுக்கு வந்த பெண்ணிடம் ஒருவன் தவறாக அழைக்க, அந்த பெண் கூச்சலிட வந்த போலிசும் பெண்ணை சமாதனப்படுத்தியதே தவிர அவனை கண்டித்து கூட அனுப்பவில்லை.  ஒரு நாள் மெட்ரோவில்  ஸ்டேசனில் இறங்கி லிஃப்ட்க்கு காத்திருந்தோம்.சில நிமிடங்களில் லிஃப்ட் வந்தது.உள்ளிருந்து வந்தவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக காட்சி தந்தனர். அவர்களின் (காமம்)நெருக்கம் சுற்றி நிற்பவர்களை பொருட்படுத்தவில்லை.பார்ப்பவர்களும் பொருட்படுத்தவில்லை. என் மகள் அவர்களை கவனிப்பதைக் கண்டு மகளை அதட்டினேன்.அந்த ஆண் எங்களை முறைக்க பார்க்கிறான், என் மகள் அந்த ஆண்ட்டி ட்ரசில் போட்டிருக்கும் பர்பிடால் பொம்மைய பாரும்மா என்றாள். என்னத்த சொல்றதுன்னு தலையில் அடித்துக்காத குறைதான்.லிஃப்ட் தளத்திற்கு வந்தவுடன் அந்த ஜோடி குழைய,குழைய சென்றதுன்னுதான் சொல்ல முடியும்.


அரை குறை ஆடையில் பல பேருக்கு முன் நடிக்க வரும் நடிகைகள் கூட பட பிடிப்பு தளத்தில் கேமிறாவிற்கு முன்னால் வருவதற்கு முன் மேலே போர்த்தி வருகிறார்கள்,பிறகு பலருக்கு முன் நடிக்கிறார்கள்.அதற்கு பின் அவர்களின் நடிப்பை உலகத்தில் யார் வேணும்னாலும் பார்க்கிறார்கள்.ஆனால் இங்கு தெருக்களிலும்,பொது இடங்களிலும் நேரடி காட்சியாக அரை குறை ஆடை அணிந்த பல நங்கைகளும்,கவர் செய்திருந்தாலும் மேலே சொன்னது போல செக்சியான தோற்றத்தில் நகர் வலம் வருவதை பார்க்க முடிகிறது.இதே பெண்கள் தங்கள் உறவினர்களில் பெரியவர்களை வழியிலோ வீட்டிலோ பார்த்த மாத்திரத்தில் காலைத் தொட்டு வணங்குவதையும் பார்க்கலாம்.ஆனால் அவர்களது அம்மாக்கள் தங்களது சில உறவுகள் வந்துவிட்டால் தலையில் முந்தானை தலைப்பை முக்காடாக மூடிக்கொண்டு பணிகள் செய்வதையும் பார்க்க முடியும்.குளிர் காலங்களில் மட்டும்தான் பெரும்பாலான பெண்கள் முழு ஆடைகளில் காட்சி தருகின்றனர்.


உன் மனைவி அழகாக இருக்கிறாள் என்று பிறர் சொல்ல கேட்கும் எந்த ஒரு ஆணும் காம்ப்ளிமெண்ட் சொல்பவரைப் பொறுத்து சந்தோசப்படுவார்கள்.ஆனால் உன் மனைவி செக்சியாக இருக்கிறாள்னு சொன்னால் சொன்னவன் யாரா இருந்தாலும் செருப்பால அடிக்கத் தோணுமா இல்லையா?ஆனால் யுவர் ஒய்ஃப் ஈஸ் சோ செக்சின்னு பிறர் சொல்வதில் பெருமை அடையும் ஆண்களும் இங்கு உண்டு.அப்படிபட்ட குடும்பத்தில் பிறந்த,3 ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளை விளையாடும்போது சக தோழியின் மேலாடையை தொப்பிள் தெரிய உசத்தி நடந்து வர சொல்லுதாம்,டான்ஸ் ஆட சொல்லுதாம்.பெத்தவங்ககிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்தால் பிள்ளையின் அறிவாற்றல் பெருமையில் சிரித்துகொள்கிறாங்களாம்.இந்த கொடுமைய எங்க போய் சொல்றது……..


சில பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளில் பெண்களின் ஆபாச படம் போட்டு கால் மீ என்று நம்பர் எதாவது  போடப்பட்டுள்ளது.செல்போன்களுக்கு ஆபாச படம்,புகைப்படங்களுக்கான லின்க்குகள் மெஸேஜ் ஆக வருகிறது.எதாவது நம்பரில் மிஸ்டு கால் வருகிறது.ஆர்வத்தில் அதே நம்பருக்கு அழைத்தால் ஆணும் பெண்ணும் டேட்&டைம் பற்றி பேசும் ரெக்காடட் வாய்ஸ் கேக்கிறது.ஐஎஸ்டி ரேட்டில் பேலன்ஸ் கட்டாகிறது.ஆபாச படங்களை ஆண் பெண் நட்புகள் இணைந்து பார்க்கின்றார்கள்.உப்பு,பருப்பு கடன் வாங்குவது போல ஆணுறை கடன் கேட்கப்படும் கன்றாவிகளும் நடக்கிறது.


தில்லி ரயில்வே ஸ்டேசனில் (பல பெண்களின் குடியை கெடுக்க )சிவப்பு விளக்கு பகுதி பெண்கள் தேசியக்கொடியை கையில் வைத்துக்கொண்டு ஆள் பிடிக்கிறார்கள்.கூவி,கூவி கூப்பிடாத குறைதான்.அந்த தேசியக்கொடியை வேணாம்னு சொல்வதற்கு கூட இது வரை எந்த ஆண்கள் சங்கம்,பெண்கள் சங்கம் போராட்டம் செய்ததாக தெரியவில்லை.பதிவு நீள்வதால் இத்துடன் நிறைவு செய்கின்றேன்.தலைநகரில் பல நல்லவைகள் நடந்தாலும் இதுபோன்று பலவைகளும் நிகழ்கின்றது.பெண்களே எவ்வளவு திறமையுடன் புரட்சிகரமாக இருந்தாலும்,பெண்மை கற்பு விசியத்தில் பாதிப்பு பெண்களுக்கு மட்டும்தான் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.கீழே விழுந்தாலும் மீசையில் மண்  ஒட்டலைன்னு சொல்வதை விட நாகரீகப் போர்வையை அவசியத்திற்கு தகுந்தவாறு தீர்மானிப்பது நலமாயிருக்கும்.
மீண்டும் சந்திப்போம்.....

Dec 8, 2012

முப்பருவங்களும் உன் பிறப்பினிலே

உன்  முகத்தைப்  பார்க்கும் 
ஆவலில் மாதங்கள் மட்டுமல்ல 
நொடிகளும் பஞ்சுகளாய் 
பறந்தது.சுமந்த உணர்வுகளை 
உரு பெற்ற உந்தன் அசைவுகளை 
என் வயிற்றிலிருந்து மடிக்கு 
வந்தவுடன் அனைத்தையும்
எழுத்தாக்கிட நினைத்த நான் 
மணற் கேணியானேன்.

விழித்திருக்கும் வினாடிகளை 
வீணடிக்காத  உந்தன் செல்ல 
முயற்சிகளின் அழகை சேகரிப்பதில் 
தோற்றுப்போகிறேன்.
உனக்கு நிகரான உதாரணங்களை 
வார்த்தைகளை எங்கே தேடுவேன்,
பார்ப்பதும் ,சிரிப்பதும்,சினுங்குவதும்
உறங்குவதும்,நெளிவதும்,துள்ளுவதும்  
நான் பெற்ற கவிதையே நீதானே!

எனது குழந்தைப்  பருவமும்
எனது தாயிடத்தில் இப்படித்தான் 
இருந்திருக்குமென்று எண்ணுகையில் 
திளைப்பினிலே குழந்தைக்கு
இணையாகின்றேன். .


Friends18.com Orkut Scraps

Oct 19, 2012

மரண வாக்குமூலம்

போலிசார் :   உனக்கு எப்படி ஏரோப்லேனில் அனுமதி கொடுத்தாங்க?

அவர்:                என் எஜமானின் முயற்சிங்க

போலிசார் :   ஏரோப்லேனில் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றினாயா?

அவர்:                       எல்லோரையும் போலவே பெல்ட் போட்டுகிட்டேன்,
       
                                   காதில்  பஞ்சும்    வைத்துக்கிட்டேன்.முதல் முறையா 

                            போறேனுல, எனக்கும் ஆசையும் ஜாக்கிரதை உணர்ச்சியும்  

                               அதிகாமாவே இருந்துச்சு.

போலிசார் :       யாராவது சந்தேகிக்கும்படி இருந்தார்களா?

அவர்:                    இல்லங்க,சிலர் படிச்சிட்ருந்தாங்க,சிலர்

                            தூங்கினாங்க,பயணிகளுக்கு வேண்டியதை பணிப்பெண்கள்

                               நல்லபடியா கவனிச்சிக்கிட்டாங்க ஆனா...
...

போலிசார் :         என்ன ஆனா?

  அவர் :                 சிலர் ஏர்ஹோஸ்டசை சைட்டடிச்சாங்க

போலிசார் :         ச்சே,....

அவர்:               சும்மா இருக்கும் நேரத்தில் அந்த பொண்ணுங்க மேக்கப்    
                               போட்டதையும் என் கண்ணால பாத்தேன்.

போலிசார் :      அட,,,அதை விடு , இந்த பைலட்.....

அவர்:                அவர நினைச்சுதான் எனக்கு ரொம்ப வருத்தம்

                            எல்லோரும் ஜாலியா வந்தாங்க,அவருதான் ரொம்ப சின்சியரா    

                              ஏரோப்லேனை ஆப்ரேட் பண்ணிட்டிருந்தாரு.

போலிசார் : நீ எப்படி பார்த்த ?அங்க போனியா?

அவர்:               என்னால ஒரு இடத்துல எப்படி சும்மா உக்காந்திருக்க முடியும்?

                            அதான் அங்க ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தேன்.

போலிசார் : சரி,இந்த விமான விபத்து எப்படி நடந்துச்சு?விபத்துக்கு முன்

                             என்னதான்  நடந்துச்சு?

அவர்:                   நாந்தான் பைலட் மேல பரிதாபபட்டு இந்த டிரைவிங்கை என்னால செய்ய முடியாதா,நீங்க பயணிகள் போல என்ஜாய் பன்னுங்கனு சொல்லிப்பார்த்தேன்,அவர் நகரவேயில்ல.எங்களுக்குள் நடந்த வாக்கு வாதத்திலும் கைகலப்பினாலும் இந்த விபத்து ஏற்பட்டது.

குதிப்பதும் தாவுவதும் எனக்கு பழக்கம்,மனிதர்களைப் போல டபக்குனு விழுந்து சாகாமா எதோ இந்தளவுக்காவது தப்பிச்சேன்.

                                           வாக்குமூலம் கொடுத்தவர் இவர்தான்.
                                                   படம்  கூகுளில் எடுத்தேன்குறிப்பு:எனக்கு மெயிலில் வந்த நகைச்சுவை கதையில் பைலட் ஏர்ஹொஸ்ட்டசை சைட் அடிச்ச நேரத்தில் குரங்கு விமானத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்பதை இப்படி மாத்திபுட்டேன்.
பரவாயில்லையா ,நல்லாருக்கா??????????. 

Oct 8, 2012

கொன்று குவித்திடுவோம்எவ்வழி வந்தீர்கள் அந்நியர்களே!
தரை வழியா,வான் வழியா?
காற்றா,நீரா? எவ்வழி?
எங்கள் உலகத்தில்
உங்கெளுக்கென ஒரு உலகமா?
மனித வாழ்வை
வேடிக்கைப்  பார்க்க
அவன் தலை மீதே
அமரலாமா?அல்லது
தலைகளை கொய்ய முடியாமல்
தலை மீது ஊர்ந்து குடித்தனமாக
கூத்தடிக்கின்றீர்களா?
சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை
பாகுபாடற்று சொறியவைத்து
சாதனையா படைக்கின்றீர்கள்?
கூந்தலை பேணாமல் போனதால்
உள் நுழைந்த உங்களுக்கு
பேண் ”((பேன்))
என்ற பெயர் வந்ததோ?
பாவ,புன்யம்,பார்க்காமல்
கொல்லி ஸாம்ப்பு ஸ்நானமும்
தங்களுக்கான சீப்பால் இழுத்தும்
தங்களை கொன்று குவிக்காமல்
விடமாட்டோம்.................!!!
சட்ட மறுப்போ தண்டனையோ
கொலையாளிக்கு இல்லை,
வந்ததும் வாழ்ந்ததும்
ஓசையற்றதில்
உங்கள் ஆயுள் ஓசையுடன்
நிறைவடைகின்றது.
ஆத்மா சாந்தி அடையட்டும்.
                                     (முற்று)


Sep 23, 2012

உன்னைப் போல் ஒருவன்

அன்புடன் வந்தாய்
ஆவலுடன் அரவணைத்தேன்
இடித்தாலும்
ஈ என்று இலித்தாலும்
உரசினாலும் தேய்த்தாலும்
ஊ என்று அலரினாலும்
எத்தனை விதவிதமாக
என்னென்ன செய்தாலும்,
’ஏய்’ என்றுகூட குரலிட மாட்டாய்
”ஐ” பிரமாதம்
”ஒ” என்றாலும்
”ஓ”என்றாலும்
மெளனமாய் இருப்பாய்!
கற்றலின் தொடக்கத்தில்
மற்றவரின் வாயும் வயிறும்
எரிந்த போதும்,கோபத்தில்
போட்டு உடைத்த போதும்
உன்னை விட்டு எங்கு போவேன்
என்று கவிழ்ந்திருப்பாயே!
என் முனகல்களையும்
பொறுத்திருப்பாயே!
என் அன்பு
”கடாயே”
உழைத்து உழைத்து
தேய்ந்து போனதில்
உன்னைப் போல் ஒருவன்
வந்தாலும்,உன்னைப்
பிரிய மனமில்லை.


(ஹி...ஹி...எப்புடி)Aug 31, 2012

கனவு பலித்துவிட்டது

வணக்கம் ,
அனைவரும் அனைத்து நலன்களுடன் வாழ வாழ்த்துகள்.

அவ்வப்பொழுது சில பதிவுகளை படிச்சேன்,நம்ம VGK சார் தனக்கு கிடைத்த விருதுகளில் இரண்டு விருதுகளை எனக்கும் பகிர்ந்தளித்துள்ளார்,குட் பை சொன்ன பதிவர்கள் லிஸ்ட்டில் என்னையும் குறிப்பிட்டுள்ளார் எனக்கு அறிமுகமில்லாத ஒரு பதிவர்.(அட அந்தளவுக்கு மதிக்கப்படுறனேனு ஒரு ஓஹோ போட்டுகிட்டேன்).சென்னையில் பதிவர்கள் சந்திப்பு நடந்துள்ளது,அதில் பங்குபெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ள பதிவுகள்,என்னால் முடிந்ததை நேரத்தை மிச்சப்படுத்தி,நேரத்தை இழுத்துப் பிடித்து பதிவிட வேண்டுமென்ற ஆர்வமும் அதிக இடைவெளி வேண்டாம்,முடிந்தால் அவ்வப்போது பதிவிடுங்கள் என சிலர் ஊக்கமளித்தது,இவைகளெல்லாம் இன்றைய என் பதிவிற்கு காரணங்கள்.(கோபமோ,உருட்டுக்கட்டையோ வந்தால் எனக்கு ஊக்கமளித்தவர்களின் முகவரி தந்துவிடுகிறேன் முதலில் அங்க போயிட்டு வாங்க)

சரி மேட்டருக்கு வருவோம்.

கடந்த மே மாதம் தமிழகத்திற்கு எங்க  சொந்த ஊருக்கு  சென்றிருந்தோம்.அங்கு பெரிய பிரச்சனையாக அல்ல பெரும் அவதியாக பவர் கட்  உபச்சாரம் இருந்தது.கிராமங்களில் பவர் கட்டானாலும் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வசதியுடன் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிடலாம்.அதிலும் சிலர் ஏசி இல்லாமல் இருக்க முடியலப்பான்னு சொல்லும்போது யாரை நொந்துக்கிறது.அல்லது இப்படியானவர்கள் மின்சாரத்தை மிச்சம் செய்தால் குறைந்தது ஒரு ஊருக்காவது முழு நேர மின்சாரம் கிடைத்திடுமா?.மின்சாரத்  தடையினால் அவதிப்பட்டவர்களுக்கே  அந்த அருமை அல்ல கொடுமையை உணரமுடியும்.குழந்தைகளுக்கும்,படிக்கும் மாணவர்களுக்கும்,நோயாளிகளுக்கும்,வயதானவர்களுக்கும்   அதுவும் வெயில் காலங்களில் அவர்களின் வேதனைக்கு அல்ல பொறுமைக்கு மிகப்பெரும் சோதனை இந்த பவர் கட்.வீட்டின் பக்கத்தில் மரங்களோ குளம் குட்டையோ இருக்கிறவர்களுக்கு சற்று பரவாயில்லை.பல இடங்களில் மரங்கள் மரமாகவே சற்றும் அசையாமல் நிற்கின்றது.

முழு நேரமும் மின்சாரம் இல்லாமல் நம் தாத்தா பாட்டி,அவர்களுக்கு  தாத்தா பாட்டி  காலங்கள் கழிக்கவில்லையா?,அதே போல நாமும் வாழ கத்துக்கனும். சும்மா பூச்சாண்டி காட்டுவது போல நமக்கு அவ்வப்பொழுது புண்ணியத்திற்கு தரும் மின்சார விநியோகத்தையும் நிறுத்திவிட்டு எல்லா மின்சாரத்தையும் தொழில் நிறுவனங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் தொடர் மின்சாரமாக தந்தாலாவது தொழில்கள் நல்லபடியா நடந்து நடுத்தர மக்களின் வேலை வாய்ப்பு,வருமானம் பாதிக்காமல் இருக்கும்.ஏனெனில் மின்சாரத் தடை காரணமாக தொழிலாளர் குறைப்பு,குறுந் தொழில் பாதிப்புகள் அதிகமாவது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மின்சாரத் தடையினால் வேதனையான பாதிப்பாக நான் பார்த்து வேதனைப்பட்ட மற்றொன்று தண்ணீர் பற்றாக்குறை.இப்போதும் மின்சாரமே இல்லாமல் குக்கிராமங்கள் இருக்கின்றதாம்.எங்கிருக்கோ தெரியாது.ஆனால் குடி தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் ஊர்களை என்னால் குறிப்பிட்டு  சொல்ல முடியும். காலை கரண்ட்,மதியான கரண்ட் என்கிறார்கள்.அந்த வேலைகளில் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றினால்தான் தெருக்குழாய்களில் தண்ணீர் வரும்.கரண்ட் எப்ப வரும் போகும்னு சப்ளே ஆன்,ஆஃப் பன்றவருக்கே தெரியுமோ தெரியாதோ தெரியல.


உதாரணமாக நான் வாக்கப்பட்ட ஊரில் நல்ல நாளிலே தண்ணீர் பஞ்சம்தான்.குழாயடி கேள்விப்பட்டிருப்போம்.என் மாமியார் ஊரில் உண்மையிலே குழாய் பூமிக்கு அடியில் குறைந்தது 3 அடிக்கு கீழ்தான் இருக்கும்.குழிக்குள் குழாய் இருக்கும்.குழிக்குள் இறங்கிதான் நீர் பிடிக்க வேண்டும். சாதரணமாக மோட்டார் போட்டாலும் தண்ணீர் வராது.அதிகம் செலவு செய்து மிகவும் பவர்ஃபுல் மோட்டாரில்தான் தண்ணீர் பெற முடியும்.ஆனால் இப்போ பவர்?...........

தாசில்தார் அலுவலகத்தில் க்ளர்க்காக வேலை செய்யும் பெண் இந்த குழாயில் தண்ணீர் வருதா,அந்த குழாயில் தண்ணீர் வருதான்னு தெருத்தெருவா அலைந்து குடிநீரை பிடிச்சு வச்சுட்டு நாலு வயது மகளுக்கு  கடையில் இட்லி வாங்கிக்கொடுத்து கடை சாப்பாடே லன்ச் பாக்சிலும் வைத்து  பள்ளிக்கு அனுப்பிவிட்டு,தானும் கிளம்பி ஒரு மீட்டர் தூரம் நடந்து போய்  பஸ் பிடிக்கனும்.பிறகு இறங்கின இடத்திலிருந்து வெகுதூரம் நடந்து போய்தான் அலுவலக நாற்காலியைப் பிடிக்கனும்.வேலை விட்டு வந்தால் குழாயில் தண்ணீர் வருதுன்னு தெரிந்தால்,நாளைக்கு தண்ணீர் வருமோ வராதோ இப்பவே ரெண்டு குடம் பிடித்து வைத்தால் உதவும்னு மீண்டும் குடத்துடன் ஓடும் பெண்ணைப் பார்த்து மனம் ஆரவில்லை.அம்மாவைப் பார்க்க அந்த குழந்தை தெருவில் சுற்றுவதையும்,வீட்டை விட்டு ஏன் வெளியில் வந்தன்னு அந்த தாய் எல்லா மன அழுத்தத்தின் சாரலாய் திட்டுவதும் அடிப்பதையும் பார்த்தபோது,உன் குத்தமா,என் குத்தமா காலம் செய்த கோலமடின்னுதானே சொல்லத் தோனும்.இது ஒரு துளி உதாரணந்தாங்க.


கரண்ட் போயிடும் சீக்கிரம் கிரைண்டரில் மாவரைக்கனும்,கரண்ட் போய்டும் சீக்கிரம் சட்னி ரெடி பன்னனும்,சட்னியோ,மாவோ அரைத்துக்கொண்டிருக்கையில் சப்ளே போச்சுன்னா நிலவரம்  என்னான்னு புரிந்திருக்கும்.இரவு நேரங்களில் கரண்ட் போய்டும் சீக்கிரம் சாப்படு ரெடி செய்து சாப்பாடு போடனும்....,வேலை விட்டு சீக்கிரம் வீட்டுக்கு போகனும்,வழியில் கரண்ட் இல்லைன்னா ரொம்ப கஷ்டமாகிடும்,...இப்படி பல.நடுத்தர குடும்பத்திற்கு டைம் டேபிளே அதாவது குடும்ப வேலைகளை,பொறுப்புகளை இப்போ நிர்ணயிப்பதே இந்த கரண்ட் நிற்பதும்,வருவதும்தான்.அதுவும் இரவில் காற்றாடி சுத்தாமல் வியர்வையில் தூங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளைப் பார்ப்பது பெரும் கொடுமை.மின்சாரத் தடை பற்றின இந்த பதிவு மிகவும் தாமதம்தான்.

ஆனால் சார்ஜபிள் லைட் இருப்பது போல சார்ஜபிள் ஃபேன் அதாவது ஜார்ஜபிள் டேபிள் ஃபேன் (காற்றாடி) வந்திருக்குன்னு நிறைய பேருக்கு தெரியல.சப்ளே இருக்கும்போது சார்ஜில் போட்டு வைத்தால் சப்ளே நிக்கும்போது ஃபேன் போட்டுக்கலாம்.அதிலே அட்டாச்சுடு லேம்புகளும் இருக்கிறது. இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கும் உதவுமே.சார்ஜபிள் ஃபேனின் தரத்தைப் பொறுத்து விலையும்,சார்ஜிங் நேரமும் இருக்கிறது.ரூபாய் 2300 முதல் 3500 ரூபாய் வரையும் சப்ளே இல்லாத போது இரண்டு முதல் மூன்று  மணி நேரம் வரை காற்றினால் சற்று இளைப்பாறலாம்.குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு அவசியமான ஒன்று இந்த சார்ஜபிள் ஃபேன்.

 சந்தோசங்களும், துக்கங்களும்,ஏமாற்றங்களும்,அழிவுகளும் பல வழிகளில் உண்டு.மின்சாரத் தடையாக இருக்கட்டும் அல்லது நாட்டில் நடக்கும் பல கோடி ஊழல் பற்றியோ அல்லது மனித உரிமைகளை அல்ல வாழ்வை சீண்டிப்பார்ப்பவர்களின் சுய ரூபம் தெரியவந்தாலும் ஏன், எப்படி, எதற்கு,தீர்வென்ன என்று தெரிந்துகொண்டு போராடினால் தன் குடுபத்தின் பட்டினையை  யார் போகுவார்,எனவே  தீர்வு எங்கிருந்தோ வரட்டும் பார்த்துக்கொள்வோமென இவைகளை கட்டாயமாக சகித்துக்கொண்டு வாழும் மக்கள் செய்த பாவம் என்ன?

வல்லரசாகிட்டோம்,வல்லரசாகிக் கொண்டிருக்கிறோம் அல்லது ஆகிடுவோம், கனவு பலித்துவிட்டது என்று  அனைவரும் மனதார  சொல்லும் நாள் வர வேண்டும்.

Mar 14, 2012

அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்

தமிழ் எழுதப் படிக்கத் தெரியும்னு நினைத்திருந்த எனக்கு,எழுத்துக்களை அடையாளமும், எழுதவும் தெரிகிறது,மற்றவர்கள் எழுதியிருப்பதை படிக்கத்  தெரிகிறது என்பதை பதிவுலகம் இப்போதும் உணர்த்துகிறது.எழுத்துத் திறமையும்,எழுதும் ஆர்வமும்,இணைய வசதியும் இருப்பவர்கள்  பதிவுலகில் வலம் வர முடிகின்றது.எழுதுவதில் ஆர்வமுள்ள, இணைய வசதி இல்லாத எத்தனையோ பேர் தங்களின் படைப்புகளை காகிதங்களிலும் அல்லது எதாவது பத்திரிக்கைகள்,வார இதழ்களுக்கு அனுப்பி பிரசுரம் ஆகுமா?ஆகாதா என்று காத்திருந்தும் எதிர்பார்த்தும் வருகின்றனர்.இணைய வசதி இருக்கும் பலருக்கு சொந்தமாக எழுதும் ஆர்வம் இருப்பதில்லை.


எழுதாவிட்டாலும் சக மனிதர்கள் எழுதியிருப்பதை படிப்பதில் மட்டும் ஆர்வம் பலருக்கு.தமிழ் எழுதறவங்களெல்லாம் குடும்பத்த அநாதைய விட்ட மாதிரியும் அல்லது கேப்பாரின்றி எழுதுறேன்ற பேரில் குடும்பத்திற்காக எதுவும் செய்யாமல் போன மாதிரியும் அல்லது தண்ணி தெளிச்சு விட்ட ஆளாகாவும் கருதி இதில் கவனம் செலுத்தும் மணித்துளிகளையும் என் குடும்பத்திற்காக செலவிடுவதுதான் சந்தோசம்,இந்த வெட்டி வேலையெல்லாம் எனக்கெதற்கு என்ற கேள்வி சிலருக்கு.சிறப்பாக எழுதும் பதிவர்களும் குடும்பப் பொறுப்புகள்,பிள்ளைகளின் கல்வியில் மேலும் கவனம் செலுத்த வேண்டி எழுதுவதை நிறுத்திவிடுவதுண்டு.


எல்லோருக்கும் பதிவுலகம் வர ஒரு காரணம் இருந்திருக்கும்.அத்துடன் எழுதும் ஆர்வத்திற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்.இது என் 100வது பதிவு.நான் பதிவுலகம் வந்ததின் காரணம் என் அம்மாவின் மறைவு.ஆனால் எண்ணங்களையும்,நிகழ்வுகளையும் எழுத்துக்களில் பதிப்பதின் ஆர்வம் என் அப்பாவிடமிருந்து வந்தது என்றே சொல்வேன்.என் அப்பாவிற்கும் எழுத்துத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.என் அப்பா மிகவும் சாதாரண மனிதர்.அவர் டைரி மற்றும் கடிதம் மட்டுமே எழுதுவார்.


இளமையில் வறுமையில் வாடி, தன் 17 வயதில் தந்தையையும் இழந்து(என் தாத்தா) கிடைக்கும் சிறு சிறு வேலைகள் செய்து வரும் வருமானத்தை குடும்பத்திற்கும் படிப்பிற்கும் ஈடுகட்டி அந்த காலத்து பத்தாம் வகுப்பு படித்து தொழிற்கல்வியும் படித்திருக்கிறார்.தன்னுடன் படித்த ரவி என்பவர் தன் படிப்பிற்காக உதவிகள் செய்ததாகவும் இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்பார்.லேபிற்கான கோட்டு,ஷீ கூட வாங்க வசதியில்லாமல் கடன் வாங்கி அணிந்து சென்றதாக சொல்லியிருக்கிறார்.


என் தாத்தா மின்வாரியத் துறையில் ஹெல்ப்பராக பணியில் இருந்தபோது இறந்திருக்கிறார்.என் அப்பாவும் பாட்டியும் வாரிசு வேலை கிடைப்பதற்காக பலரின் உதவிகளை நாடி,சிலரின் வீட்டு வாசல் ஏறி,இறங்கி,காத்திருந்து மின்வாரியத் துறையில் ஹெல்ப்பராக சேர்ந்திருக்கிறார்.அரசாங்க உத்யோகமானாலும் கடின உழைப்பும்,உயிரை பணயம் வைத்தும்,உழைத்து பதவி உயர்வுகள் பெற்று தான் பட்ட கஷ்டங்களை எங்களை அனுபவிக்கவிடாமல் வாழவைத்தவர்.


வேலையிலிருந்து வீட்டுக்கு வரும் அப்பா எங்களை அழைத்து பேசுவதும்,தின்பண்டங்கள் வாங்கிவந்து நாங்கள் சாப்பிடும் அழகை ரசிக்கும் அப்பா,சிறு வயதில் நான் பள்ளிக்கு சென்ற சில நாட்களில், வழியில் எதாவது மின்கம்பங்களில் ஏறி வேலை செய்வதைப் பார்க்க நேரிட்டால் கண்ணீர் வரும்.வீட்டிலும் வந்து எதுவும் கேக்க மாட்டேன்.செய்தித்தாள்களைத் தவிர வேறு எந்த புத்தகங்களும் படித்திராத என் அப்பா வாழ்வின் நெறிமுறைகளுக்காக பல உதாரணங்களும்,கதைகளும் சொல்லுவார்.டைமிங் காமெடியும் அடிப்பார்.


என் அப்பா
என் மகளுடன்
பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர்,எளியவர்களிடம் தான் செய்து தந்த வேலைக்கு கூட ஊதியம் பெறமாட்டார்.எளிதில் மற்றவர்களிடம் ஒன்றிவிட மாட்டார்,ஆனால் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்,மன்னிக்கும் குணம் உடையவர்.வசதி இல்லாதவனிடம்தான் உண்மையான அன்பிருக்கும்,இப்படியானவர்கள் வற்புறுத்தி கொடுக்கும் உணவுகளை அவமதிக்கக் கூடாது என்பார்.அவர்கள் முன்னே சாப்பிடு,அப்போது அவர்களின் முகத்தில் எழும் சந்தோசத்தைப் பார் என்பார்.


சில நேரங்களில் சில மனிதர்கள் அப்படித்தான் என அடிக்கடி சொல்லிக்கொள்வார்.முருகா என்னை மட்டும் காப்பாத்து என்பார்,ஏன் இப்படி சொல்றீங்க என்று கேட்டால் அப்பதான நான் உங்கள காப்பாத்த முடியும் என்பார்.பணத்தை சம்பாரிக்கலாம்,நல்ல மனுசனையும்,குணங்களையும் எளிதில் பெற்றுவிட முடியாது என்பார்.பதவி உயர்வுகள் வந்தபோதும் சலவை செய்து சட்டை போட மாட்டார்.சில முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் சலவை செய்த சட்டை அணிவார்.


தேவையான வசதிகள் இருந்தும் என் அப்பா இன்னமும் சைக்கள்தான் வைத்திருக்கிறார்.அந்த சைக்கிள் தன் அப்பாவுடையது என்பார்.அந்த சைக்கிளுக்கு ஆயிரம் முறை புது பார்ட்ஸ்கள் போட்டாலும் ஹேண்ட்பாரிலிருந்து சீட்டு வரை உள்ள கம்பிகள் மட்டும் மாற்ற அவசியமில்லாமல் பழுதாகாமல் என் தாத்தாவின் நினைவாக உள்ளது.என் அப்பாவின் திருமணத்தில் தன் மாமனார் (அம்மாவின் அப்பா )பரிசாக அளித்த அந்த காலத்து கை கடிகாரத்தைதான் இன்னமும் அணிந்துள்ளார்.


என்ன செய்தாலும்,வாங்கினாலும் தரமானதாகவும்,அதிக நாட்கள் இருக்கும்படியும்,அனைவரையும் கவரும்படியாகவே பொருட்கள்,துணிகள் வாங்குவார்.வாங்கும் பொருட்களை விற்கவும் அழிக்கவும் கூடாது என்பார்,அதற்கான பில்லையும் பல ஆண்டு காலம் சேமித்து வைத்திருப்பார்.எல்லா நிகழ்வுகளையும் எண்ணங்களையும் டைரியில் எழுதிவைத்திருப்பார்.அடுத்தவர்கள் டைரியை படிக்கக் கூடாதுன்னு எனக்குத் தெரியாது.வேலைக்கு போயிட்டு வந்து இரவில் எழுதுவார்,அவர் வேலைக்கு போனவுடன் நான் டைரியை எடுத்து படிப்பேன். என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை வந்ததில் அம்மா கோவிச்சிகிட்டு மதுரைக்கு போய்ட்டாங்க.டைரியில் அப்பா சண்டையை குறிப்பிடாமல் மணி (அம்மா பெயர்)மதுரைக்கு போய்விட்டாள்னு மட்டும் எழுதியிருந்தார்.நான் பேனாவை எடுத்து இன்ன சண்டையால் கோவிச்சிகிட்டு ஊருக்கு போய்ட்டாங்கன்னு எழுதிவிட்டேன்.மறுநாள் டைரி எழுதவந்த அப்பா படித்துவிட்டு என்னைய கண்டுபிடிச்சிட்டார்.ஆமாம் நாந்தான் எழுதினேன் என்றேன்.அவருக்கு செம கோபம் வந்தது.அப்பாவாக இருந்தாலும் அடுத்தவர் டைரியை படிப்பது தப்பு இனி என்கிட்ட பேசாதன்னு ஒரு வாரம்மா என்னுடன் பேசவே இல்லை.அப்றம் ஏன் எழுதுறார்ன்னு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன்.ஆனால் அப்பா பேசாமல் இருந்ததில் மிகவும் மனம் பாதிக்கப்பட்டேன்.வகுப்பறையிலும் அழுததும்,தோழிகள் சமாதானப்படுத்தியதும் நினைவிருக்கிறது.பிறகு அப்பாவே என்னிடம் பேசிவிட்டார்.அதற்கு பின் அந்த கருமத்தை (டைரியை) தொடுவதில்லை.


ஆனால் எனக்கும் எழுத அப்பதான் ஆசை வந்தது,அப்பாவிடம் சொன்னால் திட்டுவாரோன்னு நினைத்து பள்ளிக்காக வச்சிருக்கும் ஒரு குயர் நோட்டு ஒன்றை என் டைரியாக வைத்துக்கொள்வேன்.நானும் அன்றாட நிகழ்வுகளையும் மனதில் பட்டதையும் எழுத ஆரம்பித்தேன்.பள்ளி படிக்கும்போதே ஒரே ஊரில் 3வது,4வது தெருவில் இருக்கும் தோழிகளுக்கு பள்ளி விடுமுறையில் 15 பைசா கார்டில் கடிதமாக எழுதுவேன்.அவர்களும் பதில் போடுவார்கள்.பிறகு வெளியூர் தோழிகளுக்கும் கடிதம் எழுதுவது,பதிலுக்காக போஸ்ட்மேனை எதிர்பார்த்து காத்திருந்ததையும் மறக்க முடியாது.


நான் ஒன்றும் பெரிய எளுத்தாலி அல்ல.இருந்தாலும் என் எழுத்தின் ஆரம்பகால கதை இதுதான்.


இடைபட்ட காலங்களில் எனக்கு என் அப்பாவின் மீது வெறுப்பும்,அவருக்கு என் மீது வெறுப்பும் வந்த சூழ்நிலைகளும் உண்டு.ஆனால் என் அப்பா செய்தது எல்லாம் எங்கள் நலனை விரும்பித்தான் என்றாலும் வெளிப்படுத்திய உணர்வின் விதம் மனசங்கடங்களை ஏற்படுத்தியது.ஆனாலும் எனக்கு விலை மதிப்பில்லா ஆசான் என் அப்பாதான்.சென்ற ஆண்டு அக்டோபரில் ஓய்வுபெற்று வயல் மற்றும் புதிய வீட்டின் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.தினமும் எங்களுடன் ஃபோனில் பேசுவார்.பதிவுகள் எழுதுவதை ஒரு நாள் சொன்னபோது இணையத் தொடர்பால் பிரச்சனைகள் வரும்னு கேள்விப்படுகின்றேன்.யோசித்துகொள்ளம்மா என்று மட்டும் சொன்னார். 


சொந்த காரணங்களால் இந்த நூறாவது பதிவோடு சில காலங்களுக்கு பதிவுலகிலிருந்து விடைபெறுகின்றேன்.அனைவருக்கும் வணக்கமும் நன்றியும் .இப்படி சொல்ல எனக்கே பயமாதான் இருக்கு.ஏனெனில் என் மண்டைக்கு எட்டிய வரை எதாவது எழுத வேண்டும்,மீண்டும் வர வேண்டுமென்ற எண்ணம் உள்ளது.


சொறி பிடித்தவன் கையும் செல்போன் வைத்திருப்பவன் கையும் சும்மா இருக்காது என்பது போல பதிவுகள் எழுதின கையும் சும்மா இருக்கவிடாது.பார்ப்போம் கால மாற்றம் எப்படியுள்ளது என்பதனை.இந்த கூகிளார் சொல்லாமல் கொள்ளாமல் எதாவது மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.எல்லோரும் தங்கள் html கோடிங்ஸ்களை சேமித்து  வையுங்கள்.


இதுவரை எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், நிறை குறைகளை எடுத்துச் சொல்லிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்,என் அனைத்து பதிவுகளுக்கும் அன்பினால் பின்னூட்டமளித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


பள்ளி,கல்லூரி கடைசி நாள் பிரிவின் வலி போலவும்,திருமணத்திற்கு பின் அம்மா வீட்டிலிருந்து புறப்படும் வலி போலவும் இந்த பிரிவினை உணர்கின்றேன்.மீண்டும் சந்திப்போம்.நன்றி.

Mar 13, 2012

வாழ்வியல் கதைகள்&படங்களும்@13/3/2012

தென்காசி சுவாமிநாதன் அவர்கள் சொன்னதாக Zதமிழ் அலைவரிசையில் ஒருத்தர் சொன்ன கதை:


*காந்தியடிகளின் மகன் தங்களது காரை (அந்த காலத்து நான்கு சக்கர வண்டி) சர்வீசுக்கு அனுப்பியிருந்தாராம்.இன்று கார் தயாராகியிருக்கும்,நானும் முக்கிய நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியுள்ளது காரை எடுத்து வா என்று மகனிடம் சொன்னாராம் காந்தியடிகள்.காரை எடுக்க சென்றவருக்கு மாலை வாருங்கள் என்று பதில் கிடைத்ததாம்.

மாலை வரை நேரத்தை போக்க காந்தியடிகளின் மகன் சினிமாவிற்கு போய்விட்டாராம்.வெகு நேரமாகியும் மகன் வராததால் கார் சர்வீசை தொடர்பு கொண்ட காந்தியடிகளுக்கு “தங்கள் மகனை மாலை வந்து எடுத்துச் செல்ல சொல்லியிருந்தேன்.காரும் தயாராகிவிட்டது,மாலைப் பொழுதும் போய்விட்டது.தங்கள் மகன் இன்னும் வரவில்லை” என்று பதில் வந்ததாம்.

வெகு நேரம் கழித்து காருடன் காந்தியடிகளின் மகன் வந்து சேர்ந்தாராம்.ஏன் இத்தனை தாமதம்,எங்கே சென்றிருந்தாயென கேட்ட காந்தியடிகளிடம் “தான் சினிமாவிற்கு சென்றதை மறைத்து, இப்போதுதான் வண்டி ரெடியானது,காத்திருந்து எடுத்து வர நேரமாகிவிட்டது அப்பா " என்றாராம்.


மகன் பொய் சொல்வதைக் கேட்ட காந்தியடிகள்,நான் வளர்த்த மகன்,என் கொள்கைகள் அறிந்த மகன்,தன்னிடமே உண்மை சொல்ல தைரியமில்லாமல் பொய் சொல்கிறான்,மறைக்கிறான்,தவறு உன் மீது இல்லை,வளர்த்த என் மீதுதான் தவறு,என் வளர்ப்பு  சரியில்லாமல்  போனதில்  வெட்கமடைகிறேன்,இதற்கான தண்டனையை நான்தான்  அனுபவிக்க வேண்டுமென தான்   செல்லவிருந்த  இடத்திற்கு  நடந்தே  சென்றாராம்.


அந்த சம்பவத்திலிருந்து காந்தியடிகளின் மகனும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டாராம்.
*பிரம்ம  குமாரிகள் குழுவில் ஒருவர் சொன்ன கதை.


திரைப்படம் என்றால்  பலருக்கும் தெரிந்திருப்பது, ஹீரோ,ஹீரோயின்,வில்லன் இருப்பார்கள்.வில்லனால் வரும் பிரச்சனைகளை ஹீரோ எதிர்த்து சமாளித்து வெற்றி பெறுவார் என்பதாக இருக்கலாம்.ஹீரோவால் பெறப்படும் வெற்றியும் கடைசியாக காண்பிக்கப்படலாம்.அத்தோடு திரைப்படமும் நிறைவுபெறலாம்.


ஒரு திரைப்படம் நிறைவுறும் சமயத்தில் கடைசிக் காட்சியில் வில்லனை ஹீரோ வெலுத்து எடுக்கிறார், திரைப்படத்தில் பார்ப்பவர்களும்,திரைப்படத்தை பார்ப்பவர்களும் ஆர்வமுடன் பார்க்கின்றனர்,குதூகலிக்கின்றனர்.ஹீரோ வெற்றி பெறுகிறான்.அடி வாங்கி துவண்டு விழுந்த வில்லனை போலீசும் இழுத்துச் செல்கிறது .படத்தில் மக்கள் ஹீரோவை தூக்கி   வைத்து  கொண்டாடுகின்றனர் ,திரைப்படம் நிறைவுற்றது. படத்தை பார்த்தவர்களும்   நெகிழ்வுடன் செல்கின்றனர்.


திரைப்படம் பற்றின எந்த ஒரு கருத்தும் தெரியாத ஒருவன் முதல் காட்சிகளை பார்க்காமல்  இந்த கடைசிக் காட்சியை பார்க்க நேரிடுகிறது.அவன் கருத்து எப்படிப்பட்டதாக இருக்கும்..." இவன் அடிக்கிறான்,அவன் அடி வாங்குறான்,மக்களில் தடுப்பார் யாருமில்லை.மாறாக மக்களும் மகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.திரைப்படத்தை பார்ப்பவர்களும் மகிழ்ச்சியாக  பார்க்கின்றனர்.அடிப்பவன் வில்லனாகவும்,அடி வாங்குபவன் அப்பாவியாகவும் இந்த அப்பாவி புரிந்துகொள்கின்றான்.கடைசியில் வந்த போலீசும் அடித்தவனை விட்டுவிட்டு அடி வாங்கியவனை இழுத்துச்செல்கிறதே" என்றும்  பிரம்மிக்கிறான்    .


இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது,மாய உலகில் என்ன நிகழ வேண்டுமோ அதுதான் நிகழ்கின்றது.நாம்   பார்த்து புரிந்துகொள்வதும், வாழ்வதும்,நமது அறியாமையையும் சிந்தனையையும் பொறுத்துள்ளது.


* குட்டி ஒட்டகம் தன் அம்மா ஒட்டகத்திடம் கேட்கிறது,


அம்மா நமக்கு ஏன் இந்த திமில்?


பாலைவனத்தில் உணவு, தண்ணீர் கிடைப்பது அரிது, கிடைக்கும் நீரை பல நாட்களுக்கு சேமித்து  வைக்கவே இந்த திமில் இயற்கையிலே நமக்கு வரமாக அமைந்துள்ளது.


கண் இமைகள் ஏன் இவ்வளவு நீளமாக உள்ளது?
மணற் புயல்களிலிருந்து காத்துக்கொள்ளவே!


நமது பாதம் ஏன் வீங்கி உப்பலாக உள்ளது?
பாலைவனங்களில் வேகமாக நடப்பதற்கு!


இத்தனையும் இருந்தும் நம்மை ஏன் இந்த மிருகக்காட்சி சாலையிலே வைத்துள்ளார்கள்?


இதற்கு என்ன பதில் சொல்லும் தாய் ஒட்டகம்?


இப்படித்தான் மனிதனிடம் இல்லாதது ஒன்றுமில்லை,முடியாதது ஒன்றுமில்லை,தேவையானவைகள் கிடைத்தாலும் பல சமயம் பயனற்றதாகிறது.நம் திறமைகளும்,வாழ்வும் எப்படியோ,எங்கோ,யாராலோ முடக்கப்படலாம்.


படங்களையும் பார்ப்போம் :
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு ஆடுச்சாம்.

ஐயோ !பாவம்னு இரக்கப்பட்டா ஆறு மாச பாவம் நம்மள பிடிச்சுக்கும்மா!!

இடம்,பொருள் தெரிந்து சரியான நேரத்தில் சரியான வகையில் உதவனும்.

இதையும் மீறி,மனக் கஷ்டமோ,அசம்பாவிதமோ ஏற்பட்டால் "உன் குத்தமா?,என் குத்தமா?" ன்னு பாட வேண்டியதுதான். 


Mar 12, 2012

எல்லாம் சகஜமப்பா !!!

அடப்பாவமே ! வீட்ல எல்லோரும் எங்க போனாங்களோ தெரியலேயே,

இதான் பெரியவங்களுக்கும் குழந்தைக்கும் உள்ள வித்யாசம்.
இவரப் பாருங்க,வரும் போதே தலையனையோட வந்திருக்காரு.....

இதுக்கு காரணம் என்னவாயிருக்கும்னு யோசிங்க,
                                       

                                          
அதுங்களுக்கு பிடிச்ச வாழைப்பழம் இப்படி ஆகிட்டேன்னுதான் அப்படியொரு போசு......

ஒரு விழா கூட்டத்திற்கே மலர் கொத்து கொடுக்கிறாங்க போல  மாடல் அழகி பொம்மைகள்ன்னா நினைக்கிறிங்க,.........
எல்லாம் மவுசுப்பா மவுசு.
அதாங்க கணினிக்கு உபயோகிப்போமே அந்த மவுஸ்.உங்களால முடிஞ்சா இந்த குழந்தையின் அழுகையை நிறுத்துங்க.
உங்களால முடியாதுன்னு நான் சொல்றேன்.
ஏன்னா இது பொம்மை.....  பொம்மை.......
வேணும்னா நல்லா பாருங்க.

குழந்தைன்னு ஏமாந்தவங்கள பாத்து சிரிக்காத! வாய மூடுங்றேன்  
கேக்க மாட்டிங்கிதே,

இருந்தாலும் இருக்கலாம்.


அலாக்கா மேலோடு துக்கிட்டாங்கன்னா என்ன பண்றது?
யாராவது அந்த கம்பியையும் தட்டி சேத்து எடுத்துகிட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.

கலிகாலம்......போனா போவுது பசி தீர்ந்தால் சரி.

இதுதான் நவீன சமையலா? 


மத்த செல்லப் பிராணிகள் போல வாக்கிங் போகனும்னு ஆசைப்பட்ட மீனின்
ஆசையை நிறைவேற்றிய இவர் வாழ்க.மீனும் வெளி உலகம்னா என்னான்னு இப்பதான் பாக்குது.


என்னன்னு புரியுதா?பில்டிங்கை ஒட்டியவாறு வெளிப்புறத்தில் குளம்.( நீச்சல் தொட்டி).உள்ள இருப்பது மீன் இல்ல.மனுஷன்தான்.வேற என்னென்ன இப்படி அந்தரத்தில் வரப்போகுதோ....


ரொம்ப அவசியம்.

மோசமான ஆண்டிங்களா இருக்கிறாங்களே!எல்லாம் பொறாமைதான்.
காதலர் தினத்தை எதிர்க்கிறாங்களாம்!!!  

Mar 11, 2012

இதுதான் காதலா?

அம்மா! உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
அப்பா !உங்களை பிடிக்கும்னு சொன்னதே இல்லை,
உடன் பிறந்தோரை பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
பிடித்த ஆசிரியர்களிடமும் உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லை,
நட்புகளிடமும் உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதே இல்லை,
பிடித்த சுற்றத்தாரிடமும் உங்களை ரொம்ப பிடிக்கும்னு சொன்னதே இல்லை,
இவர்களில் யாரும் என்னை பிடிச்சிருக்குன்னும் சொன்னதே இல்லை!
இவர்களுக்கு என்னை மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்ற 
எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. 

முழுமையான என் நேசத்தை 
உன்னிடம் வெளிப்படுத்தாமலே !
சொல்லாமலே!

என்னை விரும்புவதாக சொல்ல வேண்டும்
உனக்கு என்னை மட்டுமே பிடிக்க வேண்டும்,
எதிர்பார்த்து தவிக்கின்றேன்!
இதுதான் காதலா?
Mar 7, 2012

நிரந்திரமில்லா வாழ்க்கை

வாழ்க்கை என்னும் நிரந்திரமில்லா பயணத்தில் நாம் சந்திப்பது பலவகை.நினைவும் உணர்வும் இல்லையெனில் மனிதனும் இல்லை வாழ்வு என்ற வார்த்தைக்கு அர்த்தமும் இல்லை என்றே கருதுகிறேன்.கடந்த சில நாட்களில் நடந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

உடல் நிலை குணமின்றி இருந்த பதிவர் ஏஞ்சலின் அவர்களின் அம்மா இறந்துவிட்டதாக மெயில் அனுப்பியிருந்தார்கள்.துக்கத்தை பகிர்ந்துகொள்ள ஏஞ்சலின் அனுமதிப்பார்கள் என்றெண்ணி தெரிவிக்கிறேன்.முகம் தெரியாமல் பழகினாலும் ஒரு உயிரின் இழப்பு அதுவும் அன்னையின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.அன்னையின் ஆத்மா சாந்தி அடையவும்,ஏஞ்சலின் அவர்கள் மன தைர்யமும் ஆறுதலும் அடைய பிராத்திப்போம்.


என் மகள் எல்.கே.ஜி படிக்கிறாள்.குளிர் கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து காய்ச்சல்,ஜலதோசம்,கால் வலி இப்படி ஒன்று மாற்றி ஒன்று எதாவது தொந்தரவு இருந்துகொண்டே இருந்தது.பள்ளி டைரியில் எழுதி அனுப்பி ஆசிரியைக்கும் தெரிவித்துக்கொண்டிருந்தோம்.ஆசிரியையும் பார்த்துக்கொள்வதாக எழுதி அனுப்புவார்.சில நாட்கள் நன்றாக இருந்தாள்.பிப்ரவரி 29 லிருந்து முழு ஆண்டுத் தேர்வு துவங்கியது.மார்ச் 1 ஆம் தேதி என் மகளுக்கு பிறந்த நாள்.


சிறு வயதில் எனக்கு பிறந்தநாளென்றால் புது உடை,சாக்லேட் அல்லது வேறு எதாவது இனிப்பு வாங்கித் தருவார்.தெருவில் பழகியவர் வீட்டுக்கு மட்டும் கொடுப்போம்.வீட்டில் சாமி படம் முன் உள்ள திருநீரு,குங்குமம் இட்டுவிடுவார்கள்.கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்வோம் அவ்ளவுதான்.பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது கல்லூரி சென்றபின்தான்.கணவருக்கும் இப்படித்தான் பிறந்த நாள் கொண்டாடி பழக்கமில்லை.பெற்றெடுக்கும் சிரமம்,குழந்தை வளர்ப்பை அனுபவித்த பின் என் அம்மாவிற்கு என் பிறந்த நாளன்று “அம்மா ஹேப்பி பெத்த டே” என்பேன்.”போம்மா போ” என்று என் அம்மா லேசான சிரிப்புடன் சொன்னதை போனில் கேட்டிருக்கிறேன்.ஊருக்கு போகும்போது எதற்காகவாது என் அம்மா சற்று மனம் வருந்தியிருக்கும் நேரத்தில் “அம்மா ஹேப்பி பெத்த டே” என்று சொன்னால் பளிச்சுன்னு சிரிச்சுடுவாங்க.அப்போதைய வருத்தமும் விலகி ரிலாக்சா பேச ஆரமிப்பாங்க.என்ன செய்ய என் மகள் பிறந்தபோது என்னை தன் கண்களில் வைத்து கவனிச்சாங்க,என் மகளின் 3 பிறந்த நாட்களன்றும் எங்களுடன் இருக்க முடியவில்லை.நான்கவது பிறந்த நாளில் என் அம்மா உலகத்திலே இல்லை.இப்போ என் மகளின் 5 வது பிறந்த நாள்.


எங்கள் குடியிருப்பு பகுதியில் தற்போழுது ஆறு வருடங்களாக பார்க்கிறேன்,வீட்டில் வேறு என்ன விசேசங்களுக்கு அழைக்கிறார்களோ இல்லையோ பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு அழைத்துவிடுகிறார்கள்.பெரியவர்களை அழைக்கிறார்களோ இல்லையோ உங்கள் குழந்தையை அனுப்பிவையுங்கள் என்பார்கள்.இங்கு வந்து இன்னமும் நான் பார்க்காத கேள்விப்படாதது, ஒரு வீட்டில் உள்ள இளம் வயது பெண் எப்போது பருவம் அடைந்தாள்,பருவம் வந்தால் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது.நம்மூரில் பருவம் வந்தால் ஊரைக் கூட்டாவிட்டாலும் உறவுகளைக் கூட்டி சடங்கு செய்வார்களே!.இங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடப்பதும்,ஆண்ட்டி நாளைக்கு எனக்கு பர்த்டே உங்க பெண்ணை அனுப்பிவைங்க என்று அந்த பெண்ணே அழைப்பதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.


இப்படி பலரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட பிள்ளைகள் விளையாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவதும்,வேறு விளையாட்டில் இருக்கும்போதோ,பள்ளியிலோ சண்டை வந்தாலும் (என்றோ வரப்போகும் பிறந்த நாளுக்கு) “ஏய் நீ என் பர்த்டேக்கு வரக்கூடாது,நான் உன்னை அழைக்கமாட்டேன் ”என் பர்த்டேக்கு உன்னை கூப்பிடமாட்டேன்,ஆனா இவளை /இவனை கூப்பிடுவேன்னு வெறுப்பேற்றுவதும் நடக்கிறது.இப்படிபட்ட மனநிலை உருவானதற்கு யாரை என்ன சொல்றதுன்னு  தெரியவில்லை.


பலரின் பிறந்த நாளுக்கு சென்றுவந்த என் மகளுக்கும் தனக்கும் இது போல எல்லோரும் வரனும்னு ஆசை வந்து தனது நட்பு வட்டத்தாரை அழைக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தாள்.கடந்த வருடங்களில் வீட்டில் மட்டும்,நன்கு பழகியவர்களை மட்டும் அழைத்ததுண்டு. எங்களுக்கு இதில் விருப்பமில்லை,பழக்கமும்  இல்லை என்றாலும் அவளின் ஆசைக்காக சிலரை மட்டும் அழைத்து சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தோம்.இனிதே முடிந்தது.மறுநாள் மார்ச் 2 அன்று  விடியற்காலையிலிருந்து மகளுக்கு உடல் நிலை சரியில்லை.அன்று இங்கிலிஸ் ஓரல் எக்சாம் இருந்தது,லீவ் போட முடியாதே என்று அரை க்ளாஸ் பாலை குடிக்கவச்சு பள்ளிக்கு அனுப்பிவிட்டேன்.உடல் நிலை சரியில்லாததை டைரியிலும் எழுதி அனுப்பியிருந்தேன்.எப்படி திரும்பி வருகிறாளோ என்ற நினைப்புத்தான் இருந்தது.பத்தரை மணிக்கெல்லாம் பள்ளியிலிருந்து போன் வந்துவிட்டது “உங்கள் மகளுக்கு காய்ச்சல் வந்துள்ளது,வாமிட் செய்துவிட்டாள்,உடனே வந்து அழைத்துச் செல்லுங்கள் ”என்று.நான் வருவதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகிவிடும்.இன்றைய தேர்வை முடித்துவிடுங்கள் நான் வந்ததும் அனுப்பிவிடுங்கள் என்றேன்.கணவருக்கும் தெரிவித்துவிட்டு அப்படியே ஆட்டோவில் சென்றேன்.


பள்ளிக்கு போய் பார்த்தால் என் மகள் மிகவும் பலகீனமாக இருந்தாள்,இவளின் நிலையில் அடுத்த நாளுக்கான கணித ஓரலையும் முடித்துவிட்டதாக ஆசிரியை சொன்னார்.அதற்கு அடுத்த நாள் ரைம்ஸ்தான்,இரண்டு ரைம்ஸ் காம்படீசன்களிலும் கலந்துகொண்டிருக்கிறாள்,A+ கிரேடில் இருப்பதால் நம்பிக்கை உள்ளது,எனவே உடல் நிலை சரியானால் அனுப்புங்கள் இல்லையெனில் 9ஆம் தேதி நடைபெற உள்ள ரிட்டன் எக்சாமிற்கு அனுப்பினால் போதும் என்றார்கள்.அப்பா இது போதும்னு நினைத்து நன்றி சொல்லி பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பட்டலுக்கு  குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.அட்மிட் செய்யுங்கள் ஒரு பாட்டில் சலைன் ஏற்றனும்னு சொல்லிவிட்டார்.கையில் நரம்பு கண்டுபிடித்து ஊசி ஏற்றுவதற்குள் பட்ட பாடு !!!பார்க்கவே கொடுமையாக இருந்தது.கணவரும் வந்து சேர்ந்தார்.தொண்டையும் வலிப்பதாக அழுதாள்,இன்ஃபெக்சந்தான்னு டாக்டர் சொன்னார். 


அன்றைய தினம் ஹாஸ்பிட்டலிலே சென்றது.அன்று இரவு டிஸ்சார்ஜ் ஆனாலும் கையில் இருந்த ஊசிப்பட்டையை கழற்றிவிடவில்லை.3 நாட்களுக்கு தொடர்ந்து காலை மாலை ஊசி மருந்து ஏற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.இனி பிறந்த நாள் கொண்டாடுவியான்னு ஆயிரம் முறை மனசாட்சி கேட்டது.வீட்டிற்கு வந்ததும் விசயம் தெரிந்த பலரில் சிலர் கேட்டது “என்னை நீ பர்த்டேக்கு கூப்பிடலைல்ல,இப்ப உன்ன பாக்க வச்சுட்ட பாத்தியா”.இந்த மனிதர்களை என்ன சொல்றது,இதான் காலக்கொடுமை.ட்ரீட்மெண்ட்டில் குணமாகிவிட்டாள் மகள்.


பூமாதேவியின் ஆட்டம்


மார்ச் 5 ஆம் தேதி மதியம் லேட்டாகத்தான் சமையல் செய்யத் துவங்கினேன்,தரையில் அமர்ந்து காய் வெட்டிக்கொண்டிருந்தேன்,என் மகளும் பக்கத்து வீட்டு பையனும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு தலை சுற்றி மயக்கம் வருவதாகவே உணர்ந்தேன்,பஸ்ஸில் போவது போலவே இருந்தது,சிலிண்டர்,பிரிட்ஜ்லாம் கட,கடன்னு ஆடுவதை உணர்ந்துதான் பூகம்பம் வந்துள்ளதை உணரமுடிந்தது.அடுப்படியிலிருந்து எழுந்து நடந்து வர முடியவில்லை,விளையாடும் பிள்ளைகளை வெளியில் போங்கன்னு சொல்லிக்கொண்டே ஓடி வருகிறேன்,தண்ணிருக்குள் நடப்பது போலவே இருக்கிறது,பிள்ளைகள் நாற்காலி,டீ.வீ ஆடுவதையும்,நான் உலருவதையும் வேடிக்கை பார்க்கிறார்கள்,தாழிட்ட கதவை திறந்தும்,வெளியில் காற்றில் கதவு இழுப்பது போல இருந்தது,ஸ்ட்ரெயின் பண்ணிதான் கதவை திறக்க முடிந்தது.அப்போது வந்த நிலநடுக்கமும் நின்று போனது.


ஒரே பதட்டம்,வெளியில் மக்களின் பதட்டமான பேச்சுக்கள்,காய் வெட்டின கத்தியுடன் பிள்ளைகளை பிடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.தேர்வுக்கு போன பிள்ளை என்னாச்சோன்னு ஒரு தாயின் அலறல்,என் மகளுடன் விளையாடிய சிறுவனின் தாய் தனது கைக் குழந்தையுடன் ஓடி வந்து என்னிடமிருந்த அவனை இழுத்து அனைத்துப் பதறியது,இதோடு எத்தனை முறை நிலநடுக்கம் வந்துவிட்டது,என்றாவது ஒரு நாள் ஒரு நொடியில் இடிந்து விழுந்தால் என்ன செய்ய முடியும்னு ஒருவருக்கொருவர் பேசியது இன்னமும் நடுங்க வைக்கிறது.


10 வினாடிகள் நிலநடுக்கம் இருந்ததாகவும் எங்கள் ஊரை மையமாகக் கொண்டுதான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,வேறு எங்குவரை இந்த அதிர்வு உணரப்பட்டது என்பதையும் டீவியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம். 


இது நிரந்திரமில்லா வாழ்க்கைதானே....


நடப்பது நடக்கட்டும் என்று இன்று ஹோலி பூஜைக்கு ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள்.நாளை கலர் தூவி விளையாடும் ஹோலி விளையாட்டு.நம்மூர் தீபாவளி பரபரப்பு போல இங்கு ஹோலி,ஹோலி என்று  மக்கள் மகிழ்ச்சியாகவும்,ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமும் இருந்தாலும் பூமாதேவியின் அதிர்வும் மனதில் ஒலித்த வண்ணமாகவே உள்ளது. 

Feb 25, 2012

கரடி பொம்மை செய்வோமா?...


நாம் உபயோகிக்கும் சாக்ஸில் அழகான கரடி பொம்மை செய்யலாம்.எனக்கு மெயிலில் வந்த இந்த செய்முறை படங்களை பகிர்கின்றேன்.இறுதியில் அட்டகாசமான ரசிக்கும்படியான வீடியோ கிளிப்பிங் ஒன்றும் உள்ளது.அது என்னவென்று கட்டாயம் பாருங்கள்.


.

.
குழந்தைகள், பெரியவர்கள் அணியும் சாக்சில் செய்யலாம்.படங்களை பார்த்தால் செய்முறைகள் புரியும் என்று நினைக்கிறேன். 


                                                                    அவ்ளவுதான்.
                                              நானும் இன்னும் செய்து பார்க்கவில்லை.

மெகா டீ.வீ  அலைவரிசையில் தினமும் காலை 11 டு 12 மணிக்கு பெண்கள்.காம் என்ற நிகழ்ச்சியில் 11.45 டு 12 மணிக்கு கைத்தொழில் பகுதியில் வீட்டிலிருந்து எளிமையான கைத்தொழில்,கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுத்தருவார்கள்.அதில் இந்த கரடி பொம்மை செய்ய கற்றுக் கொடுத்தனர்.இரண்டு வருடங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியிலிருந்து பார்த்து நான் செய்த கரடி பொம்மை.உல்லன் நூலினால் செய்யப்பட்டது,எல்லாம் கட்டிங்,ஒட்டிங்தான்.லேமினேட் செய்து ஃப்ரேமில் செமிக்கிகளை ஒட்டியுள்ளேன்.
                                                                

இந்த வீடியோ கிளிப்பிங்கையும் ரசிக்கலாமே>....


Feb 23, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-5(முற்றும்)

பேருந்து,ரயில் பயணங்களில் காலம் காலமாக இடம்பெறும் பலவகை திருட்டு,உணவுப் பொருட்களில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கொள்ளையடித்தலும் நிகழ்ந்து வருகிறது.உழைக்காமல் பொருள் சேர்க்க எத்தனை விதங்களாக யோசித்து தைர்யமாக அத்தனை பேரையும் முட்டாளாக்கி கார்யம் சாதிப்பது கள்வர்களின் கலை.செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சியிலும்,அக்கம் பக்கத்திலும் திருட்டுகள் நடப்பதை கேள்விப்பட்டாலும்,பயணங்களில் ஜாக்கரதையாக பயணித்தாலும் திருட பகவான் பார்வை நம்மீது பதிந்துவிட்டால் நம்மளால் தப்பமுடிவதில்லை.


பயணங்களில் யாராவது உணவுப் பொருட்களை கொடுத்தால் தவிர்ப்பது நல்லது.ஆனால் குழந்தைகளுடன் பயணிக்கும்போது இதில் சிரமம் ஏற்படும்.நாம் எதாவது சாப்பிடும்போது எதிரே அல்லது பக்கத்தில் குழந்தைகள் இருந்தால் பார்க்க வைத்து சாப்பிட முடியாது.அப்படி நாம் எதாவது கொடுக்கும்போது நம்மை சந்தேகித்து வேண்டாமென்று மறுத்தால் நம் மனது சங்கடப்படும்.அதே சங்கடத்துடன்தான் நமக்கோ நம் குழந்தைக்கோ எதிரில் உள்ளவர்கள் உணவுப் பொருள் கொடுத்தால் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மறுத்தாக வேண்டும்.பயணங்களில் நட்பும் கிடைக்கும்,ஏமாற்றங்களும் கிடைக்கும்.

செல்ஃபோன் இல்லாத காலத்திலே நீண்ட தூர பயணமெனில் என் அப்பா எப்போதும் எதில் பயணித்தாலும் நமது முகவரி,நாம் சென்றடைய வேண்டிய முகவரியையும் எழுதி நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பார்.யார் எங்கு பயணித்தாலும் தேவையானவைகளை எடுத்து வச்சுட்டியா என்ற கேள்விக்கு அடுத்து அட்ரஸ் எழுதி வச்சிருக்கியா என்றுதான் கேப்பார்.வழியில் என்ன வேணும்னாலும் நடக்கலாம்.எதாவது ஒரு நல்லவன் கண்ல இந்த அடர்ஸ் பட்டு நம்மை உரியவங்க இடத்தில் சேக்க மாட்டானா,தகவல் தெரிவிக்கமாட்டானா... என்பார்.

என் தாத்தா அம்மாச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள்.பயணத்தில் பக்கத்திலிருப்பவர் கொஞ்சம் பேச்சு கொடுத்தால் போதும் தனது பூர்வீகம் வரை ஒப்பித்துவிடுவார்கள்.பக்கத்தில் கிடைப்பவரும் இவர்களது பேச்சை கேட்டு சலிக்கிற மாதிரி தெரியாது,அப்படிப்பட்டவர்தான் அமைந்துவிடுவார்.சில நேரம் இப்படி எல்லா கதையும் ஏன் சொல்றீங்கன்னு திட்டுவோம், சில நேரம் அருகில் போய் நிறுத்துங்கன்னு சொல்ல முடியாது.

எங்க வீட்டில் லேண்ட் லைன் ஃபோன் இருந்த காலத்தில் ஒருமுறை என் தாத்தா மதுரையிலிருந்து நாகைக்கு தனியே இரவு நேர பஸ்ஸில் வந்திருக்கிறார்.விடிய காலையில் ஃபோன் வந்தது,நான்தான் பேசினேன்,அதில் “நான் ஆட்டோ டிரைவர்,மதுரை பஸ்சிலிருந்து ஒரு பெரியவரை நாகை பஸ்டாண்டின் நடுவே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.அவர் போதையில் கிடக்கிறார்.அவரது சட்டைப் பையில் இந்த நம்பரும் அட்ரசும் இருக்கிறது,இன்ன பேர் உடைய இவரை உங்களுக்குத் தெரியுமா? ”என்றார்.

மற்ற அடையாளங்களும் சொன்னதில் அவர் என் தாத்தாதான். தான் வருவதாக எங்களுக்கு தகவலும் சொல்லவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனே தவிர என்ன பேசனும்னு தெரியவில்லை,என் அப்பாவும் அப்போது வீட்டில் இல்லை.என் அம்மாவிற்கும் நம்புவதா வேணாமான்னு புரியாமல் இந்த முகவரிக்கு அழைத்து வாருங்கள்,உடல் நிலை சரியில்லையென்றால் வழியில் ஹாஸ்பிடலில் சேர்த்துவிடுங்கள் ஆகும் செலவை நாங்கள் ஏற்கிறோம்,அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
 அவர் போதையில் இருக்கிறார் என்பதைதான் எங்களால் நம்ப முடியவில்லை என்று அம்மா சொல்லிவிட்டு என் அப்பாவிற்கும் தகவல் தெரிவித்தார்.

பத்து நிமிடங்களில் ஆட்டோ என் வீட்டிற்கு வந்தது.சுய நினைவின்றி சட்டை ட்ராயருடன் உள்ளிருந்தது என் தாத்தாவேதான். அந்த கோலத்தில் பார்த்தால் என் அம்மாவிற்கு எப்படியிருக்கும்,என்னாச்சுப்பா,என்னாச்சுப்பான்னு கதறினார். ஹாஸ்பிடலில்  சேர்த்தோம், அந்த ஆட்டோ ட்ரைவருக்கும் நன்றி தெரிவித்து பணம் கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.ஹாஸ்பிடலில் தாத்தாவிற்கு முற்றிலும் நினைவு இழந்துவிட்டது,கோமா ஸ்டேஜ் என்கிறார்கள்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.தாத்தா ஏன் புறப்பட்டு வந்தார்,எதற்கு எங்கே கிளம்பினார் ஒன்றும் தெரியவில்லை.மதுரையில் இருக்கும் என் அம்மாச்சிக்கு தகவல் தெரிவித்ததும் விபரம் புரிந்தது,தாத்தா எங்களை பார்க்க உசிலம்பட்டி பஸ்ஸில் வந்திருக்கிறார்.அம்மாச்சி மற்ற உறவினர்களுடன் கதிகலங்கி வந்து  சேர்ந்தார்.

ஊருக்குள்ளும் ஒரே பரபரப்பு,தாத்தாவை பார்க்க பலரும் வந்தவன்னம் இருந்தனர்.சீடி ஸ்கேன் எடுத்தார்கள்,எல்லா டெஸ்ட்டுகளும் நார்மலா இருக்கு,அவர் கடைசியாக உண்ட உணவினால் இந்த பிரச்சனையிருக்கலாம்,வேற ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிடுங்கனு டாக்டர் சொல்லிட்டார்.அன்று முழுவதும் அதே நிலையிலிருந்த தாத்தா மறுநாள் காலை கண் விழித்தார்.அவருக்கும் சற்று நேரம் தான் எங்கிருக்கிறோம்,தனக்கு என்னாச்சுன்னு புரியவில்லை,பேச்சும் வரவில்லை.சற்று நேரம் கழித்து பேச்சு வந்தது.நாங்களும் விபரங்கள் சொல்ல என் அம்மாச்சி அப்போதுதான் கேட்கிறார் ” தாத்தா கொண்டுவந்த பைகள்,கையில் போட்ருந்த மோதிரம்,வைத்திருந்த பணம் “ இல்லையா?ஆட்டோவில் தாத்தா மட்டும்தான் வந்தாரா என்கிறார்.சூழ்நிலையின் கட்டாயம் அப்போது லேசான சந்தேகம் அந்த ஆட்டோ டிரைவர் மீது வந்தாலும்  முதலில் இன்றும் அதே நேரத்திற்கு வரும் உசிலம்பட்டி பஸ் டிரைவரை விசாரிப்போம் என்று என் அப்பா சொன்னார்.

அதற்கிடையில் என் தாத்தாவும் பேச ஆரம்பித்தார்.பஸ்ஸில் தன்னுடன் வந்தவருடன் பேசிக்கொண்டு வந்ததாகவும்,கோவில் பிரசாதமென்று பொங்கல் கொடுத்ததாகவும்,அதை சாப்பிட்ட பின் என்ன நடந்ததுன்னு தெரியவில்லை என்றும் சொன்னதில் விபரம் புரிந்தது.தான் கொண்டு வந்த பொருட்கள் களவாடப்பட்டதை விட தன்னால் எல்லோரும் இவ்வளவு சிரமத்திற்குள்ளானதிலும்,பொங்கல் சாப்பிட்டு ஏமாந்ததிலும் என் தாத்தாவிற்கு பெரும் வருத்தம்,அவமானமாகவும் நினைத்தார்.என் அப்பாவும் பஸ் டிரைவர் ஓட்டுனரை விசாரித்ததில் என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது,எல்லோரும் இறங்கியும் இவர் மட்டும் இறங்காமல் மயக்கத்திலே இருந்தார்,நாகைதான் கடைசி நிறுத்தம்,டிக்கெட்டும் நாகைக்குதான் எடுத்திருந்தார் எனவே எங்களுக்கு வம்பெதற்கு,அடுத்த ட்ரிப் போகனும்னு அவரை இறக்கி கீழே போட்டுவிட்டோம்.வேட்டி அவிழ்ந்த நிலையில்தான் இருந்தார்,என்றும் தெரிவித்திருந்திருக்கின்றனர். இந்த நிகழ்வு தெரிந்த அனைவருக்கும் பாடமானது.அதற்கு பிறகு என் தாத்தா அம்மாச்சி பயணத்தில் சக பயணிகளுடன் வெகு ஜாக்கிரதையாக பயணிப்பார்கள்.


பயணங்களில் எவ்வளவோ பொன் பொருட்களை பரிகொடுத்தவர்களின் நிலை  எப்படிப்பட்டதாக இருக்கும்!


பேருந்து மட்டுமல்ல அனைத்து பயணங்களும் நாம் வாழும் உலகின் மறுபக்கங்களில் ஒன்றை உணர்த்துவதாகவே அமைகிறது.
கள்வர்களே!


வீரமும்,மானமும் உள்ள கள்வர்களாயின் ஸ்விஸ் பேங்கிற்கு போய் இந்தியப் பணத்தை களவாடிட்டு வாங்க பாப்போம்!இந்தியா பாராட்டும்.(இந்தியா டு ஸ்விஸ் ரயில், பஸ் இன்னும் விடலையோ).இந்தியாவின் பேங்குகளில் அப்பாவி மக்கள் அதுவும் அப்பாவி பேங்குகளில் சேர்த்து வைத்திருப்பதில்   கை வைத்தால் என்கவுண்டர்தான்.


பீ கேர்ஃபுல்...........................................


மக்களை சொன்னேன்,,,,

Feb 21, 2012

என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-4

இந்த பதிவில் பஸ் காதல்களை,வயதுக்கோளாறுகளை,சில சில்மிஷங்களை பகிர்கின்றேன்.
காதல் எங்கும் நிகழ்கிறது.படிக்கும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளாகட்டும் பயணிக்கும் சக பயணியாகட்டும் பயணம் செய்ய மட்டுமே அதுவும் நடுத்தர வர்க்கத்தினர்களின் போக்குவரத்து பகவான் பல வித குணங்களுடைய பயணிகளை சுமந்து செல்வதோடு  காதலையும்,சில்மிசங்களையும் சுமக்கத் தவறுவதில்லை.எங்கிருந்தோ புறப்பட்டு,எங்கெங்கோ நிறுத்தப்படுவது போல பல காதல்களும் நிறுத்தப்படுகிறது.காணாமல் போகிறது.இதற்கு பெயர் காதலா என்று பார்ப்பவர்களால் பேசப்பட்டு,தோல்வியோ ஏமாற்றமோ ஏற்படும்போது மட்டுமே அந்த காதலர்களுக்கும் காதல் மீது சந்தேகம் வருகிறது.காலம் கடந்து உணர்வது மட்டுமே மிச்சப்படுகிறது.

தினமும் பார்க்க நேரிடும்போது எதோ ஒரு ஈர்ப்பில் பழகப்படுவதே பயணத்தின் நட்பு.பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆணுக்கும் பயண நட்பு அப்படியே இருக்கிறது.ஆண்,பெண் நட்புதான் 80% காதல் நாடகமாகிறது.இதில் திருமணம் ஆனவர்களா/ஆவாதர்களா என்ற கேள்வி வந்தால் அதுவும் 90% திருமணம் ஆகாதவர்கள்தான் இந்த பயணக் காற்று காதலில் சிக்குபவர்கள். நம்மை பார்க்கும் மனிதர்களின் குணங்கள் புரியாவிட்டாலும்   கண்களின் இரண்டு பார்வையிலே பார்வையின் அர்த்தங்கள் புரியக்கூடும்.எதார்த்தமாக இருக்கலாம்,மீண்டும் பார்த்து புரிந்துகொள்வதில் தவறில்லை,வேணுமென்றே பார்க்க வைக்கப்படுவதுதான் தவறு.

உடையாகட்டும்,பேச்சாகட்டும் எனக்குத் தெரிந்து நான் பார்த்தவரை அப்படி வேணுமென்றே பார்க்க வைப்பதில் பெண்கள்தான் முதலிடம் பிடிக்கின்றனர்.இதை எவரேனும் எதிர்ப்பார்களாயின் என் ஊர் மட்டுமில்லை,பல ஊர்களில் என்ன நடைமுறை நிகழ்கிறது என்பதை நேரில் காண்பிக்க என்னால் முடியும்..எனக்கு இப்படிபட்ட பெண்கள் விட்டில் பூச்சிகளாய் தெரிகின்றனர்.வழிகாட்டுதல் தேவையில்லை என்ற நினைப்பு,ஊடகங்களின் தாக்கம்,எதையும் சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை,தனக்கு கிடைத்த புது உறவினால் இது நாள்வரை வளர்த்தவர்களையும் சமாளித்துவிடலாம்,எதிர்க்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர,தாம் வயதென்ன,பக்குவமென்ன,இப்போது இது தேவைதானா,தனது நண்பன்/காதலன் எனப்படுபவன் எப்படிப்பட்டவன்,இந்த உறவு எதுவரை,எத்தனை நாட்களுக்கு  இதெல்லாம் யோசிப்பதும் கிடையாது,தனக்கே தெரியவந்தாலும் தனக்கு எந்த கெடுதலும் இருக்காது,வராது என்ற நம்பிக்கை.

படிப்பில்,உத்யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள்,தன்  குடும்ப மற்றும் சமூக சூழலை உணர்ந்தவர்கள் மட்டுமே யோசித்து செயல்படுகின்றனர்.இப்போதும் ஊர் பக்கம் மளிகைக் கடையிலும்,ஜவுளிக் கடைகளிலும் வேலை பார்க்கும் சில பெண்கள்,படிக்கும் சில பெண்கள்  பஸ்ஸில் தன் ஆண் நண்பர்களுடன் மறைந்து,மறைந்து,தயங்கி தயங்கி பேசி வருவதை பார்க்கும்போது “அடி பேதையே! என்ன மயக்கத்தில் இப்படி நடந்துகொள்கிறாய்,வெற்றியும்,ஏமாற்றமும் எதிலும் உண்டு,ஆடவனுக்கு ஆயிரம் வழி உண்டு,உன் கதி என்ன?, எப்படியும் இணைந்துவிடுவோம் என்ற உன் நினைப்பு,நம்பிக்கை வெற்றி பெற்றால் நீ அதிர்ஸ்டசாலி” என்றே சொல்லத் தோனுகிறது.

ஃபேசனுக்காகவும்,டைம் பாஸிற்காகவும் நட்பும்,காதலும் கொண்டுள்ளவர்கள் எந்த காலத்திலும் எதையும் எதிர்கொள்ளும் பிறவிகள்.
என் காலத்தில் பஸ்ஸில் தினமும் பயணி்த்த பெண் ஒருவர் வீட்டிற்கு தெரியாமல்  நடத்துனரை திருமணம் செய்துகொண்டார்.மற்றொரு பெண் ஏற்கனவே திருமணமான ஓட்டுனரை திருமணம் செய்துகொண்டார்.அவர்களின் வாழ்க்கை தற்பொழுது எப்படி உள்ளது என்பதெல்லாம் தெரியவில்லை.தினமும் பஸ்ஸில் பயணித்த மாணவன் மாணவிக்கும் காதல் வந்து பல அவமானங்களை சந்தித்தபோதும் தைரியமில்லாத ஆடவனால் கைவிடப்பட்ட பெண்களை பார்த்திருக்கிறேன். காதலிக்கும்போது வரும் தைர்யம் இரு குடும்பத்தார்களையும் எதிர்கொள்ளும்போது மனம் திடமற்று முடிவை மாற்றிக்கொள்ளும்  பெண்ணையும், ஆண்களையும் பார்த்திருக்கிறேன். ஒரு தலைக்காதலும் உண்டு. 

நான் கல்லூரி சென்ற காலத்தில் ஆட்டோ மொபைல் என்பதுதான் தெரியும்.மொபைல் ஃபோன் பற்றி யாருக்கும் தெரியாது.இப்போ எல்லோரிடமும் மூன்றாவது கை போல செல்பேசி உள்ளது.செல்பேசி இல்லாத அந்த கால பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது உடனடித் தொடர்பிற்கு சிரமங்கள் இருந்தாலும் அது ஒரு அமைதியான காலமாகவே இருந்தது.அப்போது வாகனங்களின் சப்தம்,நடத்துனரின் விசில் சப்தம் மட்டுமே இருக்கும்.இப்போது பயணிக்கையில் திடீர்,திடீரென்று ரிங்டோன்கள் ஒலிப்பதும்,பாட்டி முதல் பள்ளி மாணவர்களிடத்தும் இந்த செல்பேசி உபயோகம் தற்கால மாற்றமே!

தகவல் தொடர்பில் நவீனம் கண்டு உலகம் சுருங்கிவிட்டது போல,காதலை அனுபவிப்பதும் நவீனமாகிவிட்டது.தற்போழுது பேசவோ பார்க்கவோ தனியிடமும்,பொது இடமும் தேவைப்படுவதற்கு முன்னர் வேண்டியவர்களின் நம்பர் பரிமாற்றம் இருந்தால் போதும் .யாருக்கும் பயந்தோ,அருகே வந்தோ அன்பை,விருப்பத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.முக்கால்வாசி காதல் தொலைபேசியிலே முடிந்துவிடுகிறது.தனக்கு முன் நாலு பேருக்கு முன்னால் நிற்கும் பெண்ணிடம் மாலை சந்திப்போம்னு சொல்வதற்கு பட்ட பாடும்,அரை மணி நேரம் பயணித்தாலும் பார்வையிலே காதல் பரிமாற்றம் நடந்தாலும் மனதில்பட்டதை உடனே சொல்ல முடியாமல் தவித்ததும் இப்போ மலையேறிப்போச்சு.முன்பு தகவல் தொடர்பு சரியில்லாததால் சங்கடம்,பிரிவு,முறிவு வரும்.இப்போ தகவல் தொடர்பு அதிகமானதால் பிரிவு,முறிவு அதிகமாகிறது.

பிற்காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறியாத அப்போதைய பல பெண்களும், இப்போது சில பெண்களும் காதல் தோல்வி,ஏமாற்றம் அடைந்தாலும் இனி யாருக்கும் என் மனதில் இடமில்லை, யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்பார்கள்.
இவர்கள் மறுமணத்தை  ஆதரித்தாலும்  ஆதரிப்பார்களே  தவிர மறு காதலை ஆதரிக்கமாட்டார்கள்.

சமீபத்தில் விஜய் டீவி   நீயா நானா நிகழ்ச்சியில் காதல் தலைப்பில் பேசிய இளம் பெண்கள் பலர்  காதல் ஒரு முறை மட்டும்தான் வரும் என்பது பொய்.காதலில் தோல்வியுற்றால் காலப்போக்கில் சந்திக்கும் மற்றவரிடத்தும் காதல் வரும்,ஏற்பதில் தவறில்லை என்று பேசியதில் வியந்துபோனேன்.திருமணம் ஆகாத அந்த பெண்கள் அந்த சபையில் பேசியது வியப்பாக இருந்ததைவிட தற்கால பெண்களின் மன மாற்றத்தைக் கண்டு வியந்தேன்.எனினும் ஒரு முறை வந்த காதலி்ல் தோல்வியும் ஏமாற்றமும் இல்லாமல் இருக்கட்டும்.  

அடுத்து உரசல் மன்னர்கள்:

இவர்களால் பாதிக்கப்பட்ட,இம்சைகளை அனுபவித்த பெண்களுக்கு மட்டுமே இவர்களின் தரம் தெரியும்.வழக்கமான வசனம்தான் கேக்க  நினைக்கிறேன் ”உன் சகோதரி அல்லது உன் அம்மாவிடமும்” இப்படி நடந்துகொள்(வாயா?). 

எனக்கு கேல்(girl) ஃப்ரண்ட் இருக்குடா மச்சி,இன்னைக்கு என் ஆளிடம் இன்னது பேசினேன்,அல்லது இங்கே சென்றோம்,அல்லது இன்னைக்கு ஒரு சூப்பர் ஃபிகரை பார்த்தேன் என்று தன் நண்பர்களிடம் பெருமை பிதற்றும் சில ஆண்கள் இருப்பது போல இந்த உரசல் மன்னர்களில் சிலர் தன் நண்பர்களிடம் எதாவது பெண்களை உரசி தன் சாதனையை பெருமை பேசுவதும் நடக்கிறதாம்.

சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம்  பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.