*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 21, 2011

திருநங்கைகளின் அட்டகாசம்

திருநங்கைகள் என்ற பிரிவினர் நம்முடன் வாழ்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தற்பொழுது இவர்களுக்கான சித்திரைத் திருவிழா விழுப்புரம் மாவட்டம் கூவாகம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

விழா நடைபெறட்டும்,கொண்டாடட்டும்.வாழ்த்துக்கள்.

இவர்களில் சிலர் கல்வித் தகுதி பெற்று சுய சம்பாத்யமுடன் இருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் சமுதாயப் பார்வையில் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இவர்கள் ஆசிர்வதித்தாலும்,சாபமிட்டாலும் பலிக்கும் என்பது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை.
திருநங்கைகளின் புழக்கம் வட மாநிலங்களில் அதிகம்.இவர்களில் பெரும்பாலானோர் தனது பிறப்பினையே காரணமாக வைத்து பல வேதனைக்குரிய செய்கையில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று பிச்சையெடுப்பது.

தமிழ்நாடு எக்ஸ்பிரசில் திருநங்கைகளின் அட்டகாசத்தையும் பயணிகள் சிலரது வம்புனித்தனத்தையும் பகிர்ந்தாக வேண்டும்.

சென்னையிலிருந்து தில்லிக்கும்,தில்லியிலிருந்து சென்னைக்கும் தமிழ்நாடு எக்ச்பிரசில் ஸ்லீப்பர் க்ளாசில் பயணிக்கும் போது
திருநங்கைகள் வருவது வழக்கம்.எந்த ஸ்டேசனில் ஏறுகிறார்கள்,இறங்குகிறார்கள் என்பது தெரியாது.பல ரயில்களிலும் இதே நிலைதான்.

ஏசி வகுப்பினுள் பயணிகளும்,ரயில் பணியாளர்களும்  தவிர வேறு யாரும் நுழைய முடியாது.ஸ்லீப்பர் கிளாசில் பல வியாபரங்கள்,பல வகை பிச்சைக்காரர்கள்  வருவார்கள்.திருநங்கைகளும் வருவதுதான் கிலுகிலுப்பு,ரயிலில் அமர்ந்திருப்பவர்களிடம் அவர்களது தொனியில் பேசி,நாணி,கோணி கைத்தட்டி காசு கேட்பார்கள்.கேட்டவுடன் கொடுத்துவிட்டால் தொல்லை பன்னாமல் நகர்ந்து அடுத்தவரிடம் சென்று விடுவார்கள்.5 ரூபாய்க்கு குறைவாய் வாங்க மாட்டார்கள்.பணத்தைப் பெற்றவுடன் சிலர், பணம் தந்தவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து நகர்வார்கள்.
 பார்ப்பதற்கு முரடுத்தனமாய், ரிச் லுக்காய்,சொங்கா மங்கியாய் இருப்பவர்களை ஒதுக்கிவிடுவார்கள்.புதிதாய் திருமணமானவர்கள்,குழந்தை வைத்திருப்பவர்கள்,முக்கியமாக இளைஞர்கள், ஏளனப் பேச்சு ,  ஏளனப் பார்வை பார்க்கிறவர்களை விட மாட்டார்கள்.பணம் கொடுத்தேயாக வேண்டும்.இல்லையெனில் சிலர் சபித்துவிட்டும் போவார்கள்.

இளைஞர்கள் பணம் தர மறுத்தால்,அவர்களை தாகதபடி தொடுவது,முத்தமிடுவது போன்ற சில்மிசங்கள் தாங்க முடியாமல் சில இளைஞர்கள் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

 நமது அக்மார்க் இந்திய  இளைஞர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?
 திருநங்கைகளிடம் சில்மிசங்கள் செய்வார்கள்.ஆட்டம் பாட்டமும் நடக்கும்.பக்கதில் மனைவி மக்களுடன் அமர்ந்திருப்பவர்ளும்,மற்றவர்களும் கண்டும் காணாதது போலவும்,முகம் சுளித்த வண்ணமும் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

ஒருமுறை அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவர்,  இவ்வாறு வந்த திருநங்கையை கேலி செய்தவுடன் ஒரிஜினலா என்னானு பாரேன்னு தனது சேலையை தூக்கி காமித்தவுடன் அவர்களுக்குள் கெக்கறிப்பு அதிகமாக,பகத்தில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் கண்டித்தார்.உனக்குமா சந்தேகம்னு,........,..........,அசிங்கசிங்கமாக திருநங்கை பேச ஆரமித்துவிட்டார்.அந்த பெரியவர் பதில் தர முடியாமல் முகம் சுண்டிப்போய்விட்டார்.தட்டிக் கேட்டால் வீண் வம்பு என அனைவரும்  பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த சம்பவத்தை பதிவில் பகிர்ந்தது தவறென்றால் மன்னிக்கவும்.

தில்லியில் பல சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் பிச்சையெடுப்பதில் திருநங்கைகளையும் அதிகம் காணலாம்.மற்ற பிச்சைக்காரர்களைவிட அதிகாரமாகவும்,கட்டாயப்படுத்தியும் பிச்சையெடுத்து செல்லுகின்றனர்.


ஜனவரி மாதம் நான் கிளிக்கியது.குளிரிலும் சிக்னலில் தொல்லை பன்னும் திருநங்கைகள்.இடம் பீராகடி 
.


மூன்றாம் பாலினத்தவராக பிறந்தவர்கள் சமுதாயத்தில் சக மனிதர்களாய் வாழ  போராட வேண்டியதாக உள்ளது.அதற்காக இப்படி மற்றவர்களை முகம் சுழிக்க வைத்து தங்கள் பிறப்பை கேவலப்படுத்த வேண்டாம். மற்ற மனிதர்களும் இவர்களை இழிவுபடுத்தாமல் இருத்தல் வேண்டும்.24 comments:

Unknown said...

இது போன்ற அனுபவம் எனக்கும் பெங்களூரில் ஏற்பட்டுள்ளது, இங்கு கோயம்புத்தூறிலும் பார்த்துள்ளேன், ஆனால் அவர்களை குறை சொல்லும் அதே நேரத்தில் சமுதாயத்த்ல் அவர்களை ஒதுக்கி வைத்த நம்மேலும் சமபங்கு தவறு உள்ளதை ஒத்துகொண்டுதான் ஆக வேண்டி உள்ளது :-(

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீங்கள் சொல்லுவதெல்லாம் ட்யூர் போகும் நண்பர்கள் மூலம் நானும் கேள்விப்பட்டிருகிறேன். ஒரே ஒரு முறை வட இந்திய ரயில் பயணத்தில் இவர்களை சந்தித்தும் இருக்கிறேன்.கை தட்டிக்கொண்டே வந்தார்கள். ரூபாய் நோட்டுக்கள் பலரும் கொடுத்தார்கள். அதனால் நானும் கொடுத்தேன். பிரச்சனை ஏதும் செய்யாமல் சென்று விட்டார்கள்.
வேறு எதுவும் இவர்களுடன் எனக்கு எந்த அனுபவமும் இல்லை.
தங்கள் பதிவு மூலம் பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். வருத்தமாகவே உள்ளது. என்ன செய்வது?
:(

ஞாஞளஙலாழன் said...

நீங்கள் சொல்வது உண்மை தான். சமூகம் தன்னை வேறுவிதமாய்ப் பார்க்கிறது என்கிற கோபம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

Vadivel said...

அவர்களால் வேறு தொழில் செய்யவும் முடியாது. பிட்சை எடுப்பதை விட்டால் வேரு வழி கிடையாது.கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நேற்று ஜன்பத்-இல் பேருந்தில் வந்து கொண்டு இருந்தபோது நடந்த இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி.

பக்கத்தில் வந்து கொண்டு இருந்த ஒரு ஆட்டோவில் ஒரு பெண்மணி பயணம் செய்து கொண்டு இருந்தார். சிக்னலில் ஆட்டோ நின்று கிளம்பும்போது இரு திருநங்கைகள், ட்ரைவர் பக்கம் ஒருவரும் பெண்மணியின் பக்கத்தில் ஒருவரும் ஓடும் ஆட்டோவில் திடீரென தாவி ஏற தடுமாறி ஓட்டினார் ஓட்டுனர். பின்னால் அமர்ந்திருந்த பெண்மணியின் முகத்தில் அப்படி ஒரு திகில். ஓட்டுனர் வண்டியைச் செலுத்திக்கொண்டே இருக்க, இரு திருநங்கைகளும் பலமாய்ச் சிரித்தபடி அந்த பெண்மணியின் தவிப்பினை ரசித்தனர். பின்னர் வாகன நெரிசலில் வண்டி நிற்க, இருவரும் இறங்கி சென்று விட்டனர். அதன் பின்னர் கூட பின்னால் அமர்ந்திருந்த பெண்மணியின் திகில் குறையவில்லை – நெஞ்சில் கை வைத்தபடி விம்மிக் கொண்டு இருந்தார்….

சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகளால் அவர்களைப் பார்த்துக் கோபம்தான் வருகிறது – பரிதாபம் வருவதில்லை….

Rathnavel Natarajan said...

வேதனையாக இருக்கிறது.

Rathnavel Natarajan said...

வேதனையாக இருக்கிறது.

bandhu said...

பல வருடங்களுக்கு முன் எங்களுக்கு கல்கத்தாவில் ஏற்பட்ட அனுபவம்.. என் மனைவி ஆறு மாதமே ஆனா எங்கள் குழந்தையுடன் தனியாக இருந்தாள். நான் வழக்கம் போல் ஆபீசில். மதிய நேரம் திருநங்கைகள் சிலர் வந்து பணம் கேட்டார்கள். என் மனைவி பயத்துடன் பத்தோ இருவதோ கொடுக்க, நாங்கள் என்ன பிச்சையா கேக்கறோம்னு கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களில் ஒருவர் சேலையை தூக்கி காட்டப்போக என் மனைவி நடுங்கி விட்டாள். இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவளுக்கு திருநங்கைகள் மேல் உள்ள பயம் போகவே இல்லை!

அ.முத்து பிரகாஷ் said...

நம் பார்வை மாற அவர்களின் செயல்களும் மாறாமல் போகாது ... மனம் திறந்த பகிர்வு உங்களுடையது ..

நிரூபன் said...

வணக்கம் சகோ, இப் பதிவில் திருநங்கைகளின் அட்டகாசத்தினை மட்டும் அலசியிருக்கிறீர்கள். உங்களது வெளிப்படையான எண்ணக்கருக்களிற்கு முதலில் வாழ்த்துக்கள். எங்களது சமூகங்கள் விடுகின்ற தவறுகள் தானே இவர்களின் இழிவான, தொல்லை பண்ணும், பொது இடங்களில் சில்மிஷங்கள் செய்து பிச்சை எடுக்கும் செயற்பாடுகளிற்கு காரணமாய் ஆகிவிடுகின்றன,

இவர்களின் தவறுகளை, இவர்கள் செய்யும் அங்க சேட்டைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் அரசாங்கத்திற்கு இல்லையா?
இவர்களையும் மனிதர்களாக மதித்து தொழில் வாய்ப்புக்களை வழங்கி, இத் திருநங்கைகளை ஊக்குவித்தால், அவர்கள் ஏன் இவ்வாறான முகம் சுழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போகிறார்கள்?

நிரூபன் said...

என் அடுத்த கேள்வி, திருநங்கைகளின் பொது இடங்களில் இடம் பெறும் சேஷ்டைகள் பற்றிப் பேசும் நாங்கள், அவர்கள் தொடர்பாக விழிப்புணர்வை வலை மூலம் ஏற்படுத்தி, அவர்களது தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகளில் எம் அரசாங்கத்தை ஏன் ஈடுபடுத்த முடியாது?

நிரூபன் said...

இத் திருநங்கைகள் பொது இடங்களில் செய்யும், தூக்கிக் காட்டும் செயல்கள் கண்டிக்கத்தக்கவையே, அதே போல இவர்களை நல்ல முறையில் வழி நடத்த தவறும் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை தான் சகோ.

ஆச்சி ஸ்ரீதர் said...

@எல்.கே
நன்றி

@சுரேஷ்
ஆமாம்.எனினும் நல்லொழுக்கமும்,விடா முயற்சியும் கொண்டவர்களை மற்ற மனிதர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.

@வை.கோபலகிருஷ்ணன் சார்
நன்றி

வருந்த வேண்டிய விசியம்தான்

ஆச்சி ஸ்ரீதர் said...

ஞாஞளஙலாளன்

நன்றி

தாழ்வு மனப்பான்மைதான் காரணம்

@வடிவேல்
நன்றி
.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்னு பிச்சை எடுக்கிறார்கள் அதிகாரத்துடன்.நல்வாழ்க்கைக்கு முயற்சி செய்வதில்லை.


@வெங்கட் நாகராஜ்

நன்றி

இந்த மாதிரி வேலைகளெல்லாம் நால்லாவே செய்வார்கள்.யாரை எங்கிருந்து எப்படி திருத்துவது.அவ்ர்களே திருந்திக் கொண்டால்தான் விமோட்சம்

ஆச்சி ஸ்ரீதர் said...

ஞாஞளஙலாளன்

நன்றி

தாழ்வு மனப்பான்மைதான் காரணம்

@வடிவேல்
நன்றி
.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்னு பிச்சை எடுக்கிறார்கள் அதிகாரத்துடன்.நல்வாழ்க்கைக்கு முயற்சி செய்வதில்லை.


@வெங்கட் நாகராஜ்

நன்றி

இந்த மாதிரி வேலைகளெல்லாம் நால்லாவே செய்வார்கள்.யாரை எங்கிருந்து எப்படி திருத்துவது.அவ்ர்களே திருந்திக் கொண்டால்தான் விமோட்சம்

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஷர்புதீன்

நன்றி

@ரத்னவேல்

சார்,தமிழகத்தில் சில இடங்களில் பார்த்தவரை அமைதியானவர்களாகவே பார்த்திருக்கேன்.ஆனால் இங்கு அதிகம் காணப்படும் இவர்கள் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது நாட்ல இருக்கிற கொடுமைலாம் போதாதுனு இந்த கொடுமைகளையும் சகித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@bandhu
நன்றி.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் வேதனையானதுதான்.

@நிருபன்

சமூகத்தில் மற்ற மனிதர்கள் இவர்களை ஒதுக்குவது தவறுதான்.பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்தான்.ஆனால் சமூகம் இவர்களை நிராகரிக்கவில்லை,இவர்களின் சாமான்ய வாழ்விற்கு கை கொடுக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் “திருநங்கை” என்ற மதிப்பான பெயர்.

இந்த பெயர் சமீபத்தில் இந்த ஆட்சியில் வைத்ததென நினைக்கிறேன்.இவர்களுக்காக வேலை வாய்ப்பு வழங்குவதில் கூட சலுகைகள்,திருநங்கை என்ற பிரிவிலே பாஸ்போர்ட் எடுக்கலாம்,இப்படி சில உள்ளதாக கேள்விப்பட்டேன்.

இவர்களில் பெரும்பாலானோர் சமூதாயத்தில் எங்களை அவமதிக்கிறார்கள் என்று தப்பிக்கவே முயலுகிறார்கள்.முன்னேற வழி செய்து கொடுத்தால் கூட , ஏற்க அனைத்து திருநங்கைகளும் முன்வருவதில்லை.

கல்கி என்ற திருநங்கை தேர்தலில் போட்டியிட மனு சமர்ப்பித்தார்.கிடைத்ததா என்ற விபரம் தெரியவில்லை.நர்த்தகி நடராஜன் என்ற திருநங்கை பரத நாட்டிய நடனக் கலைஞர்.பல தடைக் கற்களைத் தாண்டிதான் சக மனிதமாகியிருக்கிறார்.இப்போது அவரது திறமையும்,முயற்சியும்தான் அனைவரது கண்களுக்கும் தெரிகின்றது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@நியோ -முத்து பிரகஷ்
நன்றி

என்ன பன்றது ஆற்றாமைதான்.
மற்ற மனிதர்களும் திருநங்கைகளை ஆதரிக்க வேண்டும்.அவ்ர்களும் ஏற்க வேண்டும்.

Anonymous said...

மேல்த் தட்டுப் பொதுப் புத்தியின் இழிவான குணாதிசயங்களில் ஒன்று எல்லாவற்றையும் தன்னுடைய சௌகரியத்தை அளவுகோலாகக் கொண்டு அளப்பது, அதே நோக்கத்திற்காகக் குழு சேர்ப்பது. அதே கேவலமான அணுகுமுறை தான் உங்களுடைய இந்தப் பதிவிலும் தெரிகிறது. முடிந்தால் 20.4.2011 தேதியிட்ட விகடன் வாங்கிப் பாருங்க. திருநங்கையர் பற்றிய லிவிங் ஸ்மைல் வித்யாவின் கட்டுரை உங்கள் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@anonymous

மேல்தட்டு,கீழ்தட்டு,குழு சேர்த்தல் இப்படி எதுவுமில்லை.நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளதுதான்.

எனது பதிவையும்,பின்னூட்டங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.ஒரு இனம் சமான நிலை அடைய பல தடைகளை சமாளித்துதான் வெற்றி பெற முடியும்.சில அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுவதும்,சில விஷமர்கள் திருநங்கைகளை சீண்டுவதும் தவிர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த பதிவு.பதிவின் கடைசி பத்தியில் குறிப்பிட்டுருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

சாகம்பரி said...

நான் மும்பையில் பல வருடங்கள் வசித்தவள். எந்த விசேசமானாலும் அவர்களை அழைத்து மரியாதை செய்து ஆசிர்வாதம் வாங்குவார்கள். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். நம்முடைய பார்வை மாற்றம் இல்லாமல் புன்னகையுடன் இருந்தால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். வேறு மாதிரி சீண்டும்போது செய்கைகள் மாறுகின்றன.

Anonymous said...

அதே பழைய அனானி:

விமர்சனத்தைக் குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ளாமல் நீங்கள் கோபப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்து பேப்பர் லெட்டர் டு எடிட்டர் பகுதிக்கு எழுதுன மாதிரி இருக்கு உங்க பதிவு. நீங்க குடுத்திருக்குற தலைப்ப வச்சே ஒரு முடிவோடதான் எழுத வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க முடியுது.

மூண்றாம் பாலினத்தவர்களிடம் குறைந்த பட்ச நாகரிகத்தை எதிர்பார்க்கிற உங்களைப் போன்றவர்களை உள்ளடக்கிய சமூகம் அதே குறைந்தபட்ச நாகரிகத்துடன் அவர்களிடம் நடந்து கொண்டுள்ளதா?

திருமணம், வேலை, சொத்து, இது மூண்றும் இல்லாத காரணத்துக்காக லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களுக்கு ஃப்ரான்ஸ் செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட சுட்டியில் அது தொடர்புடைய அவரது பதிவைப் படித்துப் பாருங்கள். http://livingsmile.blogspot.com/2011/02/fuck-off-india.html

ஒரு வேலை, ஒரு வாழ்க்கைத் துணை, முதுமையில் பயன்பட கொஞ்சம் முதலீடு, மூண்றாம் பாலினருக்கு இது எதுவுமே சாத்தியமில்லாத இந்தியாவில் அவர்கள் அடிப்படை நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது மிகப் பெரிய வன்முறை மாத்திரமல்ல, மிகப் பெரிய அயோக்கியத் தனமும் கூட.

குறிப்பு: வித்யா அவர்கள் பிச்சை எடுக்காத, பாலியல் தொழில் செய்யாத ஒரு மூண்றாம் பாலினத்தவர். நூலாசிரியர், சமூக ஆர்வலர், இயக்குனர் மிஸ்கினின் நந்தலாலா படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். தொடர்ந்தும் அவருடிய படங்களில் பணிபுரிய இருப்பவர்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@சாகம்பரி

நன்றி

//நம்முடைய பார்வை மாற்றம் இல்லாமல் புன்னகையுடன் இருந்தால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். வேறு மாதிரி சீண்டும்போது செய்கைகள் மாறுகின்றன.//

இதைத்தான் நானும் சொல்ல முற்படுகிறேன்.எனினும் எந்தப் புன்னகையும் சீண்டலும் இல்லாமல் ஒதுங்கிப் போகும் போது வம்புக்கு இழுக்காமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது என் கருத்து.

ஆச்சி ஸ்ரீதர் said...

@அதே அனானி

இதில் கோபப்படுவதற்கு எதுவுமில்லை.விவாதத்திற்கு உரியதை பதிந்தால் விமர்சனங்களை ஏற்கவும் பண்பு வேண்டும்.உங்களை நினைத்து பெருமிதம் கொள்வதிலும் தவறு இல்லை.

மற்ற மனிதர்களிலும் முழுமையான நல்லவரும்,முழுமையான கெட்டவரும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் சொல்வது புரியும்.அதற்கான தலைப்புதான் இது.

அநாகரீகமாக ஒரு மனிதன் நடந்து கொள்ளும்போது அதை அந்தக் கணமே நியாமாக எதிர்த்தால் அதற்கு முடிவு உண்டு.அந்த அநாகரீக செயலுக்கு ஒத்துழைத்தோ இன்னொரு மடங்கு அநாகரீகமாக இரு தரப்பினரும் நடந்து கொள்வதுதான் வேதனை என்று குறிப்பிட்டுள்ளேன்.

இரு தரப்பிலும் அயோக்கியத்தனம் உள்ளவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.இப்படி இல்லாமல் போக வேண்டுமெனவும் விரும்புகிறேன்.