*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 9, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 3

ஆர்த்தி பொதுத்தேர்வில் மதிப்பெண் பெற்ற விபரத்தையும்,கல்லூரியில் சேர்ந்துள்ள விபரத்தையும் அண்ணனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்குமாறு கணவனிடம் நச்சரிக்கத் துவங்கினாள் ஆர்த்தியின் அம்மா.ஆர்த்தி மொத மார்க் வாங்கி,கல்லூரியில் சேக்கும் படலத்தில், உடனே கடுதாசி  எழுத மறந்துடேன்,ஆனால் ஆறுமுக அண்ண,ரெங்கா சித்தப்பா எல்லோரும் ஆர்த்திக்கு வாழ்த்து சொல்லியும்,விசாரிச்சும் கடுதாசி போட்டாங்க,நான் இன்னும் பதில் கடுதாசி எழுதவேயில்ல,உங்க அண்ண மட்டும் ஏன் இதுவர ஒன்னும் விசரிக்கவேயில்ல,அவர் காதுக்கு சேதி போகலையா?சரி இன்னைக்கே வந்த கடுதாசிங்களுக்கு பதிலும்,மச்சானுக்கும் விபரம் தெரிவித்து எழுதிடுறேனு  ஆர்த்தியின் அப்பா தன் அம்மாவிடம் கலந்து உரையாடிதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.ஆர்த்திக்கு இத்தனை பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் கிடைத்தாலும் சந்தோஷ் மாமாவை பாக்க முடியாத ஏக்கத்திலும்,அவனிடமிருந்து எந்த தகவலும் பெறாத பட்சத்தில் மதிப்பெண்கள் வாங்கிய சந்தோஷம் முழுமை பெறாமலே இருந்தது.


மனதில் எதோ பயம்,படபடப்புடன் பத்து நிமிட பேருந்து பயணத்தில் முதல் நாள் கல்லூரி சென்ற ஆர்த்திக்கு அனைவருமே புது முகங்கள்,முதல் ஒரு மணி நேரம் அறிமுக வகுப்பு நடைபெற்றது,ஆர்த்திக்கு மாணவிகள் சிலர் தன்னை விட அழகாகவும்,மாடனாகவும் தெரிந்தனர்.மாணவர்களை இவள் பொருட்படுத்தவே இல்லை.வகுப்பிலும்,கல்லூரி வளாகத்திலும் மாணவர்கள் பலருக்கு வசீகரமாகவே தெரிந்தாள் ஆர்த்தி.


தனது இன்ஜினயரிங் படிப்பை நல்லபடியாக படிக்கனும்,கல்லூரியிலும் நல்ல பெயர் எடுக்கனும்,தன் எதிர்காலம் பிராகசிக்கனும்னு உறுதி கொண்ட ஆர்த்தி இரண்டாவது மணி நேரத்தில்  ஹெலன் மேடம் வகுப்பு எடுக்க குறிப்பு     எழுதிக் கொண்டிருந்த   ஆர்த்தி வகுப்பு வாசலிளிருந்து எஸ்க்யூஸ் மீ மேம் என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.என்னவோ தெரியவில்லை ஆர்த்திக்கு வந்து நிற்கும் பெண்ணை பார்த்த மாத்திரத்தில் பிடித்திருந்தது.பர்மிசன் கொடுத்த ஹெலன் மேம் வந்தவளை விசாரித்துவிட்டு முதல் நாளே லேட்டா என்று சொல்லி வகுப்பில் அவளை அறிமுகப் படுத்திக்க சொன்னார்.


எந்த தயக்கமும் இல்லாமல் ஃப்ரண்ட்ஸ் அயம்  ஸ்வாதி,ஊர்,முன் படித்த பள்ளி,மதிப்பெண் விபரம்  என்று தன்னை அறிமுகப்படுத்தி்  கடைசி இருக்கையில் அமர்ந்த ஸ்வாதியை தன்னை விட சகஜமாகப் பழகுவாள் போலிருக்கேனு மன கணக்கிட்டு மீண்டும் வகுப்பை கவனிக்கத் தொடங்கினாள் ஆர்த்தி.அன்று மாலை கல்லூரி முடிந்து,பேருந்து நிருத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த ஆர்த்தியின் அருகே ஸ்வாதியும் நிற்க இருவரும் சின்ன ஸ்மைல் செய்துவிட்டு வரும் பேருந்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.எத்தனை அழகான ஆண்களை,ஸ்டையிலான மாணவர்களைக் கடந்தாலும் ஆர்த்தியின் மனதில் தன் சந்தோஷ் மாமாவின் அழகுக்கும் ஸ்டையிலுக்கும் நிகராணவன் யாருமில்லை. டி -17   பஸ் வந்தவுடன் ஆர்த்தி,ஸ்வாதி மற்ற மாணவ மாண்வர்களும் உள்நுழைந்ததில் பஸ் கலை கட்டியது.எதோ ஒரு பாடல் டேப்பில் முனுமுனுக்க ஆர்த்தி கிடைத்த சீட்டில் உக்கார ஸ்வாதி தன்னருகே இடம் கிடைக்காமல் நின்றதைப் பார்த்து இங்க உக்காரு அட்ஜஸ்ட் பன்னிக்கலாம்னு ஆர்த்தி சொன்னதும் பரவாயில்ல,மூனாவது ஸ்டாப்பிங்கில் இறங்கிடுவேனென்றாள் ஸ்வாதி.
ஜாலியாகப் பேசி,அரட்டை அடித்த மாணவர்கள் என்ன பாடுதுனே கேக்கல வால்யும் வைங்க டிரைவர் அண்ணா என கூச்சலிட வாலயுமை ஒரு ரவுண்ட் அதிகப் படுத்தினார் டிரைவர். இளையராஜா இசையில் பாடல் ஒலிக்க இரண்டாவது ஸ்டாப்பிங்கில் ஆர்த்தியின் அருகில் அமர்ந்திருந்தவர் இறங்க, ஸ்வாதியும்  ஆர்த்தி அருகே அமர்ந்தாள். யெஸ் ஐ லவ்    திஸ் இடியட்,லவ் திஸ் லவெபில் இடியட்.........இது ஒரு காதல் கவிதைகள் படித்திடும் நேரம்,இதழோரம் என்ற பாடல் ஒலித்தவுடன் ஆர்த்தியால் கட்டுக்குள் இருக்கவே முடியவில்லை,வெடித்து அழத்தொடங்கியவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதைப் பார்த்த ஸ்வாதிக்கு ஒன்றும் புரியவில்லை,ஏம்ப்பா என்னாச்சுனு ஸ்வாதி கேட்டவுடன் கீழே குனிந்து குமறி அழுதாள்,அதற்குள் மூன்றாவது ஸ்டாப்பிங் வந்துவிட ஆர்த்தியை மனதில் பதித்தவளாய்,அழாதப்பா ,மத்தவங்க கவனிச்சாங்கன்னா என்ன நினைப்பாங்க,நாளைக்கு பார்ப்போம்னு சொல்லி இறங்கினாள் ஸ்வாதி.வயிற்று வலி எதாவது வந்திருக்குமோ,ஆர்த்தி எங்க இறங்குவானு கூட கேக்காம வந்துட்டோமேனு தெளிவாக இருந்த ஸ்வாதியும் ஆர்த்தியை நினைத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றாள்.
கஷ்டப்பட்டு கட்டுக்குள் வந்த ஆர்த்திக்கும் ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுகிறோம்,என்ன செய்யப்போறோம்னு ஒன்றும் புலப்படவில்லை.முதல் நாள் கல்லூரிக்குச் சென்ற மகளை வரவேற்க வாசலில் காத்திருந்த ஆர்த்தியின் அம்மாவிற்கு சிவந்த கண்களுடன் வந்த ஆர்த்தி கல்லூரி பற்றியும் வகுப்பு பற்றியும் சொல்லிக் கொண்டிருந்ததைக் ம்...ம்..னு கேட்டுக் கொண்டிருந்தாலும் எதையோ மறைத்து  எதோ சொல்கிறாள் மகள் என முதல் முறையாக சந்தேகித்தாள் ஆர்த்தியின் அம்மா.

மறுநாள் காலை ஆர்த்தியை பார்க்க ஆவலாக டி-17 பஸ்சில் ஏறி  இதே பஸ்சில் ஆர்த்தி வந்திருப்பாளோ எனத்  தேடியதில்  ஜன்னலோரமாக அம்ர்ந்திருந்த ஆர்த்தியைக் கண்டு வேகமாகப் போய் ஆர்த்தி அருகில் ஹாய் சொல்லி அமர்ந்தாள் ஸ்வாதி,உடம்பு ஏதும் பிரச்சனை இல்லயே,எப்போதும் இந்த பஸ்லதான் வருவியானு பேச்சைத் தொடங்கினாள் ஸ்வாதி,அதெல்லாம் ஒன்னுமில்ல,ஹா.. இந்த பஸ்சிலதான் வருவேன்,காலேஜ் டைமிற்கு இந்த பஸ்தான் சரியாவருமென்றாள் ஆர்த்தி .நேத்தி உனக்கு என்னாச்சுனு கேட்ட ஸ்வாதிக்கு  மெளனம் தான் ஆர்த்தியின் பதில்.கல்லூரியின் உணவு இடைவேளையில் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்த்தியை கவனித்த ஸ்வாதி ஆர்த்தியின் அருகே வந்து கம்பெனி கொடுத்தாள்.பஸ்சில் ஒன்றாக போவது,வருவது,ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது,படிப்பு சம்மந்தமாக கலந்துரையாடுவது, இப்படி இவர்களின் நட்பு வளர்ந்தது .ஆர்த்தியும் ஸ்வாதியும் தங்களுக்குள்  எதோ ஒரு லின்க்  இருப்பதாகவே உணர்ந்தனர், பள்ளி காலங்களில் தான் எதிர்பார்த்த தன்னலமற்ற நட்பு இப்போது  ஸ்வாதியின் மூலம் நிறைவேறுவதாகவே உணர்ந்தாள் ஆர்த்தி.   


                                                                                                               தொடரும்.....

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை ந்ன்றாகவே போனது. முடிந்து விட்டதா தொடருமா ? சந்தோஷ் என்ன ஆனார் ?

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்
நன்றி தொடரும் போட்டு விட்டேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொடரும் போட்டதற்கு நன்றி.
தொடர்ந்தால் தானே நாங்களும் ரசித்துப்படிக்க முடியும்.

ஆர்த்தி பாவம் நல்ல பொண்ணு.
மாமா மேல் எவ்வளவு ஆசைகளை தன் மனத்தினுள் பூட்டி வைத்திருக்கிறாள்.
சந்தோஷ் மாமா கொடுத்து வைத்தவர்.

அந்த மாமா என்ன செய்யப்போகிறாரோ பார்ப்போம்.

கதாசிரியராகிய நீங்கள் நினைத்தால் இருவரையும் சுஹமாக சீக்கிரமாக சேர்த்து வைத்து விட முடியும்.

தொடரட்டும் கதை. மறையட்டும் மர்மங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஆர்த்தி ஏன் எழுதாள்? – அடுத்த பகுதியில் தெரியப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன்.

ADHI VENKAT said...

சந்தோஷ் மாமாவை பார்த்தாளா ஆர்த்தி! தெரிந்து கொள்ள ஆவல்.

raji said...

காதல் வந்தால் கூடவே கஷ்டங்களும் வந்திடறது.
பாக்கலாம் என்ன ஆகுதுன்னு.