*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 13, 2011

விடலைப் பருவத்தினிலே - பகுதி 5

முன் பகுதி

என் சந்தோஷ் மாமாவைப் பார்த்து ஒரு வருடம் ஆகப்போகிறது,அவரும் என்னைப் பார்க்கவோ,என்கிட்ட பேசவோ முயற்சி செய்யல,அவரைப் பாக்க எனக்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கல,என்னைப் போலவே அவரும் என்னய விரும்புவார்,விரும்பனும்,நான் அவரப் பாக்கனும்னு அழத் தொடங்கினாள் ஆர்த்தி.

ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து விரும்பினாலே பல பிரச்சனைகள் இருக்கும்,உன் காதல் ஒரு தலைக் காதல்தான் ஆர்த்தி,உன் மாமாவும் விரும்பியிருந்தால்,அதுவும் சொந்தமாக இருக்கும் பட்சத்தில் இந்நேரம் எதாவது ஒரு விதத்திலாவது உன்னை சந்திக்க,பேச  முயற்சி செய்திருக்கலாம்,இன்று வரை எந்த முயற்சியும் இல்லாத பட்சத்தில் நீ மட்டும் உன் காதலில் புழுங்குவது பைத்தியக்காரத்தனம்தான்,சந்தோஷும் உன்னை விரும்புறார்னு எத வச்சு நீ இப்படிலாம் உன்னைய நீயே கஷ்டப்படுத்திட்டுருக்க  ,காதல் ஸ்லோ பாய்சன்னு நீயும் நிருபிச்சிட்ட என்றாள் ஸ்வாதி.  

நெகடிவா சொல்லாத ஸ்வாதி,சந்தோஷ் மாமா நிச்சயாமா என்னை விரும்புவார் என்று தேமி,தேமி மூச்சடைத்து  சொன்னாள்  ஆர்த்தி.
இங்கபார் ஆர்த்தி,உன் சந்தோஷ் மாமாவும் உன்னய விரும்பினால்தான் உன் காதலுக்கு அர்த்தமுண்டு.அவர் மனசுல நீ இருக்கியானு  தெரிஞ்கிறதுக்கான வழியப்பாரு,சரி டைமாயிடுச்சு,வீட்ல தேடுவாங்க,அப்றம் பஸ் கிடைக்காது,வா போகலாம்,உன் மாமாகிட்ட மனம் திறந்து பேசினால் எல்லாம் சரியாகிடும்,இத நினைச்சு படிப்ப விட்டுடாத என்றாள் ஸ்வாதி.பார்க்கிலிருந்து இருவரும் வீடு திரும்பினர்,ஸ்வாதியிடம் பகிர்ந்து கொண்டதில் ஆர்த்தியின் மனபாரம் சற்று குறைந்தது.

வீங்கிய முகம்,சிவந்த கண்கள்,கேட்பதற்கு பொருந்தாத பதில்,தடுமாற்றங்கள் கொண்ட ஆர்த்தியை  பெற்றோரும் கவனித்தும் கவனிக்காதது போலவே இருந்தனர்.இனம் புரியா ஏகத்திலும்,குழப்பத்திலும் செமஸ்டரை முடித்தாள் ஆர்த்தி.படிப்பின் இரண்டாமவது ஆண்டு துவங்கும் முன் சந்தோஷ் மாமாவின் மனதில் நீ இருக்கியானு தெரிந்துகொண்டு வா என விடைபெற்றாள் ஸ்வாதி.ஆர்த்திக்கு சரியான சாப்பாடு,தூக்கம் குறைந்து கொண்டிருக்க,  வீட்டை விட்டு எங்கும் பயணம் போவது பற்றி  பெற்றோரிடத்தில் எந்த பேச்சும் அடிபாடாதது கண்டு வெதும்பிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

ஒருநாள் அப்பாவிடம் சென்று அப்பா எனக்கு வீட்டுல இருக்க போரடிக்குது,அத்த மாமாவ பாத்தும் ஒரு வருசமாயிட்டு அத்த வீட்டுக்கு போலாமாப்பா என்றாள் ஆர்த்தி.என்னடா ஆர்த்தி நீ இன்னும் குழந்தையில்ல,அத்த வீட்டுக்கு போலாம், ஆட்டுக்குட்டி  வீட்டுக்கு போலான்றதுக்கு,அதோட அத்தயும் முன்ன மாதிரி இல்லடா,சந்தோசுக்கும் படிப்பு முடிஞ்சுட்டு,கல்யாணத்துக்கு பொண்ணு பாத்திட்ருக்காங்கனு வேற கேள்விப்பட்டேன்,இந்த நேரத்ல நாம அங்க போறது சரியில்லடா ஆர்த்தி,வேற எங்காவது கோயில் கொளத்துக்குனா ரெண்டு நாள் ட்ரிப்மாதிரி போவோமானு ஆர்த்தியின் அப்பா சொல்லிக் கொண்டிருக்க ஆர்த்தி உறைந்தே போனாள்,என்னடா ஆர்த்தி மூடவுட் ஆயிட்டியானு அப்பா கேட்க,இப்பவும் குளியல்றைக்குள் சென்று எனக்கு ஏன் இந்த உயிரென உருகிப்போனாள்,உருகியது உடல்தான் உயிரல்ல.   

படாரென்று குளியலறையின் கதவைத் திறந்து விட்டாள் ஆர்த்தியின் அம்மா,சற்றும் எதிர்பார்க்காத ஆர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்று,ஒன்னுல்லம்மா,ஒன்னுல்லமா என அம்மாவை நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லாமல் சமாளித்தாள் ஆர்த்தி.ஆர்த்தியின் கையைப் பிடித்து    இழுத்து குளியலறையிலிருந்து வெளியில் நிறுத்திய ஆர்த்தியின் அம்மா,    ,  ஆர்த்தி நீ நாங்க பெத்த பொண்ணுதானா,நாம் ஃபிரண்டு மாதிரிதான பழகினோம்,உனக்கு எந்த விதத்ல என்ன குறை வச்சோம்,எங்க உயிரே  நீதான் ஆர்த்தி,எங்க சக்திக்கு மீறி உன்னய படிக்க வச்சிட்டுருக்கோம்,இப்போ நீ படிச்சிட்டுருக்க,உன்கிட்டேருந்து எதுவும் எதிர்பாத்து உன்னய படிக்க வைக்கல,நீ நல்ல படியா படிச்சு உன் வாழ்க்கை நல்லபடியா  அமையனும்னுதான் நானும் உன் அப்பாவும் எதிர்பார்க்கிறோம்,இப்ப நீ என்ன கஷ்டத்த கண்ட , உலகத்த புரிஞ்சுக்க உனக்கு அனுபவம் பத்தாது,நீ தெரிஞ்சுக்க வேண்டியது எவ்ளவோ இருக்கு, போய் முகத்த அலம்பிட்டு விநாயகர் கோவிலுக்கு போ,முடிஞ்சா அங்கயும் உக்காந்து அழு,தெளிந்த மனசக் கொடுனு  விநாயகர்ட்ட வேண்டிக்க என்று ஆவேசமாய் வீட்டிற்குள் போனாள் ஆர்த்தியின் அம்மா.

தன் நிலைக்கு என்ன காரணம்னு கேள்வி கேக்காமலே அம்மா பேசிய உண்மை  ஈட்டிகள் ஆர்த்தியை துளைத்து எடுத்ததில் சந்தோஷ் மாமாவின் நினைவு பின் தள்ளப்பட்டுள்ளதையும் உணர்ந்தால் ஆர்த்தி.அம்மாவின் முகத்தை ஆர்த்தியால் நேருக்கு நேர் பார்க்க தைரியமில்லை.அன்று இரவு சாப்பிட பெற்றோருடன் அமர்ந்தாள் ஆர்த்தி.உணவு பரிமாறி சாப்பிட ஆரம்பிக்கும்போது, ஆர்த்திக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்க வாய்ப்பு கிடைக்கனும்,கிடச்சுட்டுனா சகல அபிஷேகமும் செய்து ஆராதிக்கிறேனு அண்ண வீட்டுக்கு போயிருந்த போது பக்கத்துல  உள்ள மாரியம்மன் கோவிலில் பிராத்தனை செஞ்சிருந்தேன்,ஆர்த்தி ரெண்டாவது வருஷமும் போகப்போறா, ,நாளைக்கு காலையில அண்ணன் வீட்டுக்கு போனா நாளான்னைக்கு வெள்ளிக்  கிழமை நேத்திக்கடன நிறவேத்திட்டு வந்துடலாம்னு இனிய குண்டைப் போட்டாள் ஆர்த்தியின் அம்மா.

பழைய ஆர்த்தியாக இருந்திருந்தாள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பாள் ,ஆனால்  தனக்கு வேப்பிலை அடித்த அம்மா இப்போ மயிலிறகாய் தொடர்வது எதற்கு என்று புரியாமல் தன்னையும் கூட்டிட்டு போவாங்களா என்ற கேள்வியில் நீர்க்குமிழியானாள் ஆர்த்தி. என்ன திடீர்னு சொல்ற,இத்தன நாளா இத பத்தி எதுவுமே பேசல,எனக்கு  கொஞ்சம் வேலயிருக்கு,அடுத்த வாரம் பாக்கலாமா,ஆர்த்தி கூட அத்த வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டுருந்தா,நாந்தான் அங்கலாம் இப்ப போனால் சரியிருக்காதுனு சொல்லிட்ட்ருந்தேன்  என்றார் ஆர்த்தியின் அப்பா.இல்லங்க சாமி நேத்திக்கடன்,நாளாயிட்டு வேற,உங்களுக்கு வேல இரு்க்குன்னா, நானும் ஆர்த்தியும் நாளைக்கு   காலையில போய்ட்டு வெள்ளிக்கிழமை இரவுக்குள் வீட்டுக்கு வந்துடுறோமே என்றாள் ஆர்த்தியின் அம்மா.

ஆர்த்தி எதுக்கு,நீ மட்டும் போய்ட்டு வாயேன் என்றார் ஆர்த்தியின் அப்பா.இல்லங்க ஆர்த்திக்காகத்தான் அந்த வேண்டுதலே,அவதான் முக்கியாமா வரனுங்க என்றாள் ஆர்த்தியின் அம்மா.சரி,நாளைக்கு புறப்பிடுங்க,பத்திரமா போய்ட்டு பத்திராமா வாங்க  என்று அனுமதி தந்தார் ஆர்த்தியின் அப்பா.

உள்குத்தாக தர்மடி வாங்கி பல நாள் பட்னி கிடந்தவனுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தது போலிருந்தது ஆர்த்தியின் நிலை.

                                                                                                 
                                                                                                     தொடரும்.........

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

திடீர் மாற்றத்தின் காரணம் அடுத்த பகுதியில் புரியும் என நினைக்கிறேன். தொடருங்கள்!!!

எல் கே said...

அடுத்த பகுதியை எதிர் பாக்க வைக்கரீர்கள். சீக்கிரம் போடுங்கள் அடுத்த பாகத்தை

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை அருமையாகச்செல்கிறது.
அடுத்து என்ன ஆகுமோ என [ஆர்த்தியின் மனம் போலவே]
ஏங்க வைக்கிறது.

தொடரட்டும் இந்தக்கதை.

வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ம் ம் ஓக்கே...

raji said...

பெற்ற தாயினும் உற்ற துணை ஏது?

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து இந்த கதையை படித்து ரசித்து பின்னூட்டமிட்டுள்ள அனைவருக்கும் நன்றி.

முதல் வருகை தந்துfollowers ல் இணைந்துள்ள சி.பி.செந்தில் குமார் அவர்களுக்கும் நன்றி.

அடுத்து பதிவு செய்யப்பட்டுள்ள (நீண்ட)இறுதிப் பகுதியையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...

நானெல்லாம் அக்கா பொண்ண கல்யாணம் பண்ணிட்டு படுற அவஸ்த்தை எனக்குதான் தெரியும்..

அந்த மாமனாவது ஆர்த்திகிட்ட இருந்து பொழைச்சுப் போனான்னு எழுதுங்க சந்தோசமா படிப்பேன்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@கே.ஆர்.பி செந்தில்

வருகைக்கு நன்றி.

இன்னும் இன்பம் பெற

உங்க பின்னூட்டத்தை உங்க மனைவிக்கு மெயில் அனுப்புறேன்.