*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 23, 2011

வாழ்வியல் கதைகள் (23/4/2011)

[1]
.கெளதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது ஒருவன் புத்தரிடம் சென்று “ மனிதன் அனைவரும் மோட்சத்தை அடைய முடியும் என்கிறீர்கள்,ஆனால் எவரும் மோட்சத்தை அடைவதில்லை,அடைவதாகத் தெரியவில்லையே ”என்று கேட்டான்.
புத்தர், நண்பரே ! ஒரு வேலை செய் ! கிராமத்தினுள் சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள்? என்பதைக் கேட்டு  பெயர் வாரியாக அவர்களின்  பதிலை பட்டியலிட்டு வா என்று அனுப்பிவைத்தார்.அவனும் கிராமத்தில் அனைவரிடமும் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைக்  கேட்டு பெயர் வாரியாக விருப்பங்களை எழுதினான்.இந்த பட்டியலை புத்தரிடம் சமர்ப்பித்தான்.
இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் பட்டியலைப் பார்த்து சொல் என்றார் புத்தர்.அவன் பதில் இல்லாமல் தவித்தான்.ஏனெனில் ஒருவரும் மோட்சத்தை அடைய விரும்புவதாகக் கூறவில்லை.
புரிந்துகொள் நண்பனே ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று கூறினனே தவிர ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள் என சொல்லவில்லை.விரும்புகிறவன் மட்டுமே விரும்பியதை அடைய முடியும் என்றார் புத்தர்.  
[2.]
ஒரு பெளர்ணமி இரவு.நதியோரம் சிலுசிலுவென காற்று ரம்மியமாக இருந்தது.நான்கு நண்பர்கள் இதை ரசித்த வண்ணம் மது அருந்தினார்கள்.நதியில் படகில் செல்ல முற்பட்டனர்.நல்ல போதையில் பெளர்ணமி இரவை ரசித்தபடி துடுப்பை நீருக்குள் வலித்து,வலித்து படகுப் பயணம் மேற்கொண்டனர்.
பொழுது விடிந்தது,சூரிய ஒளி ஒளிர போதையும் தூக்கமும் தெளிந்தது.இரவு முழுதும் பயணம் செய்தோமே எங்கு வந்துள்ளோம்,வழி என்ன ,எப்படி வீடு போய் சேருவது என ஒருவருக்கொருவர் கலந்துரையாடிய போது, ஒருவன் சொன்னான்  டேய் நாம் நம்ம ஊரில்தான் இருக்கிறோம்,இதோ பார் இது நம்ம ஊரு ஆற்றங்கரைதான் என்றான்.
பிறகுதான் கவனித்தனர் இரவு படகுப் பயணம் துவங்கும் முன் நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்த்துவிடாமலே  போதையில் துடுப்பை மாங்கு மாங்குனு வலித்து இருந்துருக்கின்றனர்.
தனது படகைக் கரையினின்று அவிழ்த்து விடாதவர்கள் முடிவற்ற பரம்பொருளின் சாகரத்தில் எத்தனை தவித்தாலும்,கூக்குரலிட்டாலும் அவர்களுக்கு கதி எதுவும் கிடையாது.

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, இரண்டு வாழ்வியல் கதைகளுமே மிகவும் அருமை.

கட்டப்பட்டிருந்த படகை இரவு முழுவதும் போதையில் துடுப்புப் போட்டுக் கொண்டிருந்தவர்கள், நல்ல நகைச்சுவை தான்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

.விரும்புகிறவன் மட்டுமே விரும்பியதை அடைய முடியும் என்றார் புத்தர். //
Very nice..

Unknown said...

குடிகாரப் பசங்க!!

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே நல்ல கதைகள்.. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

வர வர புத்தமதம் புத்தர் பேர கேட்டாலே அலர்ஜியா இருக்குது

சாகம்பரி said...

//தனது படகைக் கரையினின்று அவிழ்த்து விடாதவர்கள் முடிவற்ற பரம்பொருளின் சாகரத்தில் எத்தனை தவித்தாலும்,கூக்குரலிட்டாலும் அவர்களுக்கு கதி எதுவும் கிடையாது.// ரொம்ப சரி. அருமையான கதைகள். நன்றி

ADHI VENKAT said...

இரண்டுமே நல்ல கதைகள்.

ம.தி.சுதா said...

வாழ்வியலை தத்ரூபமாக விளக்கியுள்ளிர்கள் நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Angel said...

வாழ்வியல் கதைகள் எக்காலத்துக்கும்
பொருந்தும் .அருமை .
சம்மர் விடுமுறையா ?(புதிய பதிவுகள் இல்லையே )
எங்களுக்கு ஜூலை கடைசியில் இருந்து செப்டம்பர் தான் விடுமுறை .

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்

நன்றி.

உடல்நலக் குறைவால் இந்த இடைவேளை.இனி பதிவுகள் தொடரும்.

Anonymous said...

இரண்டு வாழ்வியல் கதைகளும் அருமை எனினும் - இதனை இந்து மத நோக்கில் சொல்வதாகவேப் படுகின்றன.

பௌத்த மோட்சத்துக்கும் இந்து மத மோட்சத்துக்கும் வேறுபாடு உண்டு, பௌத்தம் கடவுள் இருப்பைப் பற்றிக் கவலைப்பட்ட மதம் இல்லை.

பொதுவாக இக்கதை நன்றாகத் தோன்றினாலும், அடிப்படை பௌத்தக் கருத்துக்களைத் திரித்துக் கூறுவதாகப் படுகின்றது.

சரிதானே !!! சகோ.

ஆச்சி ஸ்ரீதர் said...

@இக்பால் செல்வன்

விளக்கமான கருத்துக்களுக்கு நன்றி.

கதையின் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோமே.