*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 13, 2011

இவரின் பார்வையில் காதல்

மதிப்பிற்குரிய ஆனால் அதிக பிரபலம் ஆகாமல் போய்விட்ட ஒருவரின் புத்தகத்திலிருந்து சேகரித்த காதலுக்கான  உண்மை வாசகங்கள்.

  • காதலின்  நோக்கம் பற்றி சிந்திக்க முடியும்.ஆனால்  காதலைப் பற்றி சிந்திக்க முடிவதில்லை.

  • உண்மையில் அன்பாகட்டும்,காதலாகட்டும் எண்ணங்களற்ற நிலையில்தான் அதை அனுபவிக்க முடியும்.

  •  மனம் எவ்வித எதிர்பார்ப்போ,தேடலோ,பொறாமையோ,அச்சமோ,கவலையோ இல்லாமல் அமைதியாய் இருக்கும்போதுதான் காதல் சாத்தியம்.  

  • .காதல் என்றால் அப்படி இருக்க வேண்டும்,இப்படி இருக்கக் கூடாதென்று தமக்குத் தாமே கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறவரிடம்  தெளிவான  காதல் எப்படி இருக்கும்.

  • போட்டி ,பேராசை,போலித்தனம் அற்றது எதுவோ அதுவே காதல் .

  • கற்பு என்பது காதலில் இருக்கிறது,மனதில் அல்ல.

  • பாலுறவு அசுத்தமானதல்ல,பரிசுத்தமானதல்ல.

  • காதல் வேதனைக்கும்,மகிழ்சிக்கும் நடுவே பிரத்தியோகமானதாய் இருக்கிறது.

  • அவளை/அவனை காதலிக்கிறேன் என்கிறபோது பொறாமையும்,சொந்தம் கொண்டாடுகின்ற விருப்பமும்,ஆதிக்கம் நிறைந்த போகும்,இழந்து விடுவோமோ என்கிற அச்சமும் மறை முகமாய் உணர்த்தப் படுகின்றன.இவைகள் முடிவுக்கு வரும்போதுதான் உண்மைக் காதலை உணர முடியும்.

  • புத்திசாலிகளும்,தந்திரக்காரர்களும் காதல் என்னவென்று  அறியமாட்டார்கள்.

  • காதலை ஒப்பிட்டு ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறபோது மனம் கலைப்படைகிறதே தவிர,தெளிவடைவதில்லை,விசாலமடைவதுமில்லை ,புதிதாய் ஒன்ரைச் சேர்த்துக் கொள்வதுமில்லை.ஒப்பிட்டுப் பார்க்கிறபோது அன்பு குறைகிறது அல்லது இல்லாமல் போகிறது.

  • காதலில் தன்னை மறக்கிறபோது சாந்தம் ஏற்படுகிறது.விடுபட்ட உணர்வு உள்ளே வியாபிக்கிறது.

  • காதலின் நோக்கம் பற்றி நம்மால் சிந்திக்க முடியும்,காதலைப் பற்றிச் சிந்திக்க முடிவதில்லை.

  • உண்மையில் அன்பாகட்டும்,காதலாகட்டும் எண்ணங்களற்ற நிலையில்தான் அதை அனுபவிக்க முடியும்.

  • காதல் என்பது விருப்பமல்ல,வெறும் ஞாபகமல்ல,இணைக்கின்ற செயலுமல்ல.
அவர் யார் என்பதை அடுத்த பதிவில் மற்றும் சில   காதலுக்கான  வாசகங்களுடன் தொடரும்.

6 comments:

வாகை பிரபு said...

கண்டுபிடித்த உங்களுக்கு நன்றிகள் ..

இதனை காலம் கடந்தும் சலிக்காத ஒன்று உண்டென்றால் அது காதல் மட்டும் தான்...
முடிந்தால் என் கவிதை கண்டு உங்கள்
கருத்துக்களை கூறுங்கள்...
http://vagaipraba.blogspot.com/2011/02/blog-post.html

raji said...

//காதல் என்றால் அப்படி இருக்க வேண்டும்,இப்படி இருக்கக் கூடாதென்று தமக்குத் தாமே கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறவரிடம் தெளிவான காதல் எப்படி இருக்கும்.//

//போட்டி ,பேராசை,போலித்தனம் அற்றது எதுவோ அதுவே காதல்//

எழுதியவரின் இந்த இரண்டு கருத்துக்களுமே
ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளனவே

எல் கே said...

தூய அன்பு ஒன்றே வெல்லும். காதலின் அடிப்படை இந்தியாவில் தற்பொழுது தவறாக புரிந்த கொள்ளப் பட்டுள்ளது.


" வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றி.."

இது பட்டினத்தார் தன் தாய் இறந்த பொழுது பாடிய பாடல். அடுத்தவர் மேல் செலுத்தும் அன்பு எல்லாம் காதல் தான்

எல் கே said...

/காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
> ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
> வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
> நாதன் நாமம் நமச்சி வாயவே. ""//

இது சம்பந்தர் பெருமான் ஈஸ்வரனை குறித்துப் பாடியது .....

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வாகை பிரபு
தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@ராஜி அவர்களுக்கு நன்றி
இது மட்டும் முரணல்ல,அவருடைய புத்தகத்தை படிப்பதற்கு நமக்கே பெரிய பொறுமை வேண்டும்.படித்து புரிந்து கொள்ள முடியாமல் பாதிலையே விட்டதுண்டு .

@எல்.கே அவர்களுக்கு
தங்களின் மேற்கோள்களுக்கு நன்றி.

@ஆதி அவர்களுக்கும் நன்றி