*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 7, 2011

முதன் முதலில் எழுத்து சொல்லிக்கொடுத்தவரை ஞாபகமிருக்கா?

எழுதத் தெரிந்த அனைவருக்கும்
எழுத்துக்களைத் தெரியும்,
முதன் முதலில் எந்த எழுத்தை
யாரிடம் எழுதக் கற்றுக்கொண்டோம்?
அப்பவிடமா ?அம்மவிடமா?ஆசிரியரிடமா?
அப்பாவிடமிருக்கலாம்,
அம்மாவிடமிருக்கலாம்,  
ஏன் ஞாபகமில்லை ?
நினைவு வந்துவிட்டது ஆசிரியர்தான்.
எனில் எந்த ஆசிரியர் ?
ஞாபகமில்லை.
முதல் பள்ளி,
முதல் மதிப்பெண்,
முதல் பரிசு,
முதல் பயணம்,
முதல் சுற்றுலா ,
முதல் சமையல்,
முதல் நண்பன்,
முதல் எதிரி,
முதல் வேலை ,
முதல் ஊழியம்,
முதல் ஏமாற்றம்,
எல்லா முதலும்
ஞாபகமிருக்க
முதன் முதலில்
எழுத்தறிவித்தவர்
ஞாபகமில்லாமல்
போனது தவறுதான்,
இனி வரும் தலைமுறைகளுக்காவது
ஞாபகப்படுத்தாமல் போனால் தப்புதான்.
எழுத்தறிவித்து,படிப்பறிவித்தவர்
நம்மை முன்னேற்றி,நமக்கு பின்தான்
நிற்பார்,அவருக்கு  சொத்து எழுதித்
தர தேவையில்லை,ஞாபகத் தேவைதான்.
அதுவே நன்றியாம் அவருக்கு.

11 comments:

raji said...

எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது ஆச்சி.
எனக்கு முதலில் 'அ' போட சொல்லிக் கொடுத்தது
எனது அக்காதான்.
அதன் பின்பு ஸ்ரீவில்லிபுத்துரில் உள்ள
சிவகாமி ஆரம்ப பாடசாலையின் தமிழ் வாத்தியார்தான்.
எனது அடுத்த பதிவு 'ஸ்ரீவில்லிபுத்தூரும் சிவகாமி பாடசாலையும்'
என்ற தலைப்பில்தான்.ட்ராஃப்ட்டில் இருக்கிறது.கொஞ்சம் சரி செய்து பப்ளிஷ்
செய்ய வேண்டும்

ஆச்சி ஸ்ரீதர் said...

ராஜி அவர்களுக்கு தாங்கள் தொடர்ந்து முதல் கருத்திடுவதில் மகிழ்கிறேன்.
ஊக்கமும் பெறுகிறேன் நன்றி.தங்களின் ஞாபக நினைவிற்கு பாராட்டுக்கள்

மதுரை சரவணன் said...

aasiriyarkal muraippadi adimanathil pathiyum padi sollikkoduppaarkal.. vaalththukkal

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்கு எல்லாமே நன்றாக ஞாபகம் உள்ளது. என்னுடன் கூடவே பள்ளிக்கு வந்து என்னை ஒண்ணாம் வகுப்பில் சேர்த்தது என் பெரிய அக்கா திருமதி லக்ஷ்மி கங்காதரன் அவர்கள் தான். 1954 இல் நான் தற்சமயம் வசித்து வரும் திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில் அப்போது இருந்த பிரின்சிபால் சாரநாதன் ஹிந்து எலிமெண்டரி ஸ்கூலில் சேர்க்கப்பட்டேன். திருமதி பட்டம்மா டீச்சர் என்பவர் தான் எனக்குப் I Std.Class Teacher. அவ்ர்கள் ஒன்பது கெஜம் மடிசார் புடவை கட்டிக்கொண்டு, நல்ல சிவப்பாக இருப்பார்கள். இன்னும் அவர்கள் உருவம் என் மனதில் உள்ளது. அவர்கள் இப்போது இருப்பார்களா, அப்படியே இருந்தாலும் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் பள்ளிக்கூடம் செல்ல அடம் பிடித்த அந்த நாட்களில், என்னைத் தாஜா செய்து தினமும் என்னுடன் கூடவே வந்து தானும், அங்கேயே அந்தப் பள்ளியின் வாசல் திண்ணையில் இருப்பதாகச் சொல்லி. கொஞ்சநேரம் மட்டும் இருந்து விட்டு, பிறகு நான் பயந்து கொண்டே பாடங்களில் கவனம் செலுத்தும்போது வீட்டுக்குப் போய்விடும், என் அன்புள்ள பெரிய அக்கா, அவர்கள் நான் வசிக்கும் தெருவிலேயே வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு சதாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. என் பெரிய அக்காவுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இன்று வரை அவர்களை மடிசார் புடவையுடன் தான் பார்த்துள்ளேன். 6 பிள்ளைகள், 2 பெண்கள்,5 பேரன்கள், 9 பேத்திகள் என அவர்கள் பெரிய சம்சாரி. இருந்தும் இன்று வரை நானே அவர்களுக்கு முதல் குழந்தை போல - அவ்வளவு பாசம் என் மீது - எனக்கும் அப்படியே தான். வீட்டிலே ஒரு விசேஷம் என்றால் அனைத்துப் பிள்ளைகள், பெண்கள், மாப்பிள்ளைகள், மருமகள்கள், பேரன், பேத்திகள், 8 சம்பந்திகள் என ஜே ஜே என்று இருக்கும். இன்றும் எதிலும் ஒரு உற்சாகத்துடன், எல்லோரிடமும் பிரியமாகப் பேசி, நான் எழுதும் கதைகளை வெளியிடும் முன்பே வாங்கிப் படித்து, தன் கருத்துகள் சொல்லி வாழ்த்துவார்கள், எல்லோரிடமும், வெளிவந்த இதழ்களைக் காட்டி என் தம்பி எழுதியது என்று சொல்லி பெருமைப் படுவார்கள். கணக்கு வழக்குகள் எல்லாம் தெரிந்து பெரிய குடும்பத்தையே தன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அவர்கள் பள்ளி சென்று படித்தது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே. எனக்கு எங்கள் சொந்தத்திலேயே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவளையே திருமணம் செய்து கொள் என்று சொன்னதும் என் அந்தப் பெரிய அக்கா தான். எனக்கும் மூன்று மகன்கள் பிறந்து அவர்களுக்கும் திருமணம் ஆகி, இதுவரை ஆசைக்கு ஒரு பேத்தியும், ஒரு பேரனும் பிறந்து சென்ற ஆண்டு சஷ்டியப்தபூர்த்தியும் ஆகிவிட்டது. இவ்வாறு எல்லோருக்கும் எல்லாவிதமான ஆலோசனைகளும் சொல்லி, அன்புடன் எங்களை வழி நடத்திச்செல்லும், மகா புத்திசாலியான, அனைத்துத் திறமைகளும் வாய்ந்த என் பெரிய அக்கா, எங்களுக்கு இன்றும் ஒரு வழிகாட்டியாக இருந்து வருவது நாங்கள் செய்த ஒரு பெரும் பாக்கியமாக நினைத்து, இத்தகைய பெருமை வாய்ந்த அக்காவை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமை. உண்மையிலேயே இதைப் பற்றி ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியமே.
எனக்கு I Std. to XI Std.(SSLC)வரை எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் பெயர்களும், அவர்கள் உருவமும் என் நினைவில் உள்ளன. கூடப் படித்த ஒரு சில மாணவர்களையும் நான் ஞாபகம் வைத்துள்ளேன். பூபதி என்னும் ஒரு மாணவன் ஒண்ணாம் கிளாஸில் என்னுடன் படித்தவன், என்னுடனேயே பணியாற்றி, சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவன். என் பெரிய அக்காவுக்கும் அவனின் 5 வயதில் அவனைத் தெரியுமாதலால், அவனை சமீபத்தில் கூட்டி வந்து என் அக்காவுக்கு அறிமுகப் படுத்தினேன். அவர்களுக்கு ஒரே சந்தோஷம். நானும் அவ்னும் என் அக்கவுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம்.

இவற்றையெல்லாம் நினைவு படுத்தி இப்போது எழுத வைத்தது, தங்களின் பதிவு தான். மிக்க மகிழ்ச்சியும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமை. உண்மையிலேயே இதைப் பற்றி ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியமே.
எனக்கு I Std. to XI Std.(SSLC)வரை எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் பெயர்களும், அவர்கள் உருவமும் என் நினைவில் உள்ளன. கூடப் படித்த ஒரு சில மாணவர்களையும் நான் ஞாபகம் வைத்துள்ளேன். பூபதி என்னும் ஒரு மாணவன் ஒண்ணாம் கிளாஸில் என்னுடன் படித்தவன், என்னுடனேயே பணியாற்றி, சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவன். என் பெரிய அக்காவுக்கும் அவனின் 5 வயதில் அவனைத் தெரியுமாதலால், அவனை சமீபத்தில் கூட்டி வந்து என் அக்காவுக்கு அறிமுகப் படுத்தினேன். அவர்களுக்கு ஒரே சந்தோஷம். நானும் அவ்னும் என் அக்காவுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம்.

இவற்றையெல்லாம் நினைவு படுத்தி இப்போது எழுத வைத்தது, தங்களின் பதிவு தான். மிக்க மகிழ்ச்சியும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.

எல் கே said...

வீட்டில் அம்மா சொல்லித் தந்தார்கள். பிறகு முதல் வகுப்பு பர்வதம் டீச்சர். இரண்டாம் வகுப்பு சொர்ணா டீச்சர், மூன்றாவது சூரமங்கலம் வாத்தியார். நான்கு அனந்த பத்மநாபன் ஐந்து த்யாகராஜன், இது போதுமா??

ஆச்சி ஸ்ரீதர் said...

முதல் வருகை தந்த மதுரை சரவணன் அவர்களுக்கும் , தங்கள் கருத்திற்கும் நன்றி.

வை.கோபலகிர்ஷ்ணன் சார் அவர்களுக்கு

உண்மையில் தங்கள் பகிர்வில் மகிழ்கிறேன்.தங்களின் சகோதரிக்கு எனது விசாரிப்புகளையும் தெரிவியுங்கள்.இப்படியான உறவுகள் கிடைக்கும்போது நமக்கு வேறென்ன வேண்டும்.

எல்.கே அவர்களுக்கு போதும்,போதும்.

எனக்கும் எல்லா வகுப்புகளின் ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபகம் உள்ளது.முதல் எழுத்தை யாரிடம் கற்றுக்கொண்டேன்,அது ஒன்றா அல்லது ‘அ’ வா என ஞாபகமில்லை.தங்களின் கருத்திற்கு நன்றி.

என் அப்பா “ படிக்கும்போது பாடங்களை படித்து அதில் உள்ள கருத்துக்களை வீட்டிலோ நட்புகளிடமோ சாதாரண நடையில் பேசுவது போல புரிந்துகொண்டு மனதில் பதிய வைத்துக் கொள்,தேர்வு எழுதும்போது புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நடையில் எழுது ” என்று சொன்னது ஞாபகம் உள்ளது

படிக்க ஊக்கமும், பள்ளி விடுமுறைனு நான் சந்தோஷப்படுவதை விட அப்பாடா என் பொண்ணு இன்று முழுவதும் என்னுடனிருக்கும்னு சந்தோசப்பட்டவர் என் அம்மா.(கல்லூரி விடுமுறையிலும்)

Unknown said...

ஏகப்பட்ட குளறுபடிகளுடன் நகரும் வாழ்வில் இந்த "முதன்முதல்" அனுபவங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவைதாம்...

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. எனக்கு முதலில் ”அ” எழுத சொல்லிக் கொடுத்தது என் அப்பா தான். என்னுடைய LKG முதல் எல்லா ஆசிரியர்களும் ஞாபகத்தில் இருக்கிறார்கள். LKG ஆசிரியர் ”ஆங்கிலோ இந்தியன்” பெண்மணி புடவை கட்டிக் கொண்டு தலை முழுவதும் நரைத்திருக்கும். நான் ”பாட்டி மேம்” என்று சொல்லுவேன். நாங்கள் அழுதால் இடுப்பில், தலையில் என்று எங்களை உட்கார வைத்து டான்ஸ் ஆடுவார். நான் பெரியவளான பிறகும் என்னை எங்கு பார்த்தாலும் என் பெயரைச் சொல்லி ஓடி வந்து கட்டி பிடித்து கொள்வார். இப்போது எங்கு இருக்கிறாரோ!

ஆச்சி ஸ்ரீதர் said...

@ கே.ஆர.பி.செந்தில்
&

@ ஆதி

தங்களின் கருத்திற்கு நன்றி .