*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 1, 2011

பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்

ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு  சொல்வதை விட ஓர் ஆலயத்தை எரிப்பாது குறைந்த பாவம்
                                                                                             -செர்பியா
ஒரு நல்ல பெண்ணின் காலடியில் போலி பழி சொற்கள் மடிகின்றன.
தனி மனிதனுடைய அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் அவனுக்கு அமைந்த மனைவியே.
                                                                                               -ஸ்பெயின
பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம்.பணம் குறைந்த வட்டியில் வெளியில் கிடைக்கிறது.
                                                                                     -ஸ்காட்லாந்து
ஒரு நல்ல பெண் ஏழு குழந்தைகளுக்கு மேல் .
                                                                                        -அர்மேனியா
கோடரியின் ஒரே வெட்டு மரத்தைச் சாய்க்க முடியாது ஆனால் காதலியின் ஒரே பார்வையில் மனிதனை சாய்க்க முடியும்.
                                                                                           -மெக்ஸிக்கோ
ஒரு பெண்ணுக்கு அவள் நடத்தையால் கவுரவும்,நாக்குதான் ஒரு பெண்ணின் வாள் அது எப்போதும் துரு பிடிப்பதே இல்லை
                                                                                          -ஜப்பான்
ஆணை விட பெண்ணுக்கு பசி இரட்டிப்பு,புத்தி நான்கு மடங்கு,ஆசைகளோ எட்டு மடங்கு.
                                                                                    -இங்கலாந்து
நல்லவளாக இருப்பதை விட அழகியாக இருப்பதையே ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள்.
                                                                                  -ஜெர்மனி
மனைவியை தேர்ந்தெடுக்கும் போது கிழவனின் அனுபவமும் பார்வையும் வேண்டும் .
                                                                                   -அர்மேனியா
உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள்.உங்களுடைய ரகசியங்களை தாயிடம் மட்டுமே சொல்லுங்கள் .
                                                                                        -அயர்லாந்து
அழகிற்காக மட்டும் ஒரு பெண்ணை மணப்பவன்,அடித்திற்கும் பெயிண்டிற்காக மட்டும் ஒரு வீட்டை வாங்குபவன் ஆவான்.
                                                                                        -ஆப்ரிக்கா
பெண்ணிற்கு குணத்தைப் போல சிறந்த ஆபரணம் வேறில்லை,ஆனால் அவள் அதை அணிய வேண்டும்.
                                                                                         -டென்மார்க்     

7 comments:

raji said...

எல்லா நாட்டினரும் பெண்களை பற்றி பழமொழிகள் ஏற்படுத்தியது போல்
ஆண்களைப் பற்றி ஏதும் ஏற்படுத்தியுள்ளனரா?

ஆச்சி ஸ்ரீதர் said...

ராஜி அவர்களுக்கு நன்றி.தங்களது கேள்வியை நானும் எதிர் பார்த்தேன்.தெரிந்தால் சொல்லிடுவோம்.

Unknown said...

அருமை, அனைத்து பழமொழிகளும் அருமையாக உள்ளன, அப்படியே எல்லோருக்கும் பொருந்தும்படியான பழமொழிகளையும் போடுங்கள் ...

ஆச்சி ஸ்ரீதர் said...

@இரவு வானம் . முதன் முதலாக வருகை தந்ததில் மகிழ்ச்சி,தாங்கள் சொன்னது விரைவில் நிறைவேறும்

goma said...

பெண்ணைப் பற்றி இப்படிப் பேசி பேசியே அவளை விழித்தெழ விடாமல் ஒரு வட்டத்துக்குள் அடக்கி வைத்திருக்கின்றனர்
பொறுமையில் பூமா தேவி அனுசரித்துப் போவதில் ஏதோ ஒரு தேவி,...அடங்கிப் போவதில் இன்னொரு தேவி....போதாதா

GKP Pillay said...

as u & raji said :-
anonymously one said if man has a choice to choose means......
he will
choose a job in US,
want to live in UK,
lead foodstyle as Italians,
but always like to marry a INDIAN GIRL.....Take Care...

GKP Pillay said...
This comment has been removed by the author.