*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 19, 2011

மொழியும் உருவமும் அற்றவர் _ பகுதி இரண்டு

கோவில்கள் நிறைந்த ஊரில்தான் வளர்ந்தேன்,மசுதியும் சர்ச்சும்   உண்டு.அந்த காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் விரும்பிய  இடத்தில் கட்டப்படவில்லை,வான சாஸ்திரப்படியும்,கிரகங்களின் நற்பலன் அந்த குறிப்பிட்ட பகுதியில்  கிடைக்கும் தன்மை,அளவைப் பொருத்து கட்டப்பட்டது,வடிவமைக்கப்பட்டது . அதனால்தான்  இந்த கோவிலுக்கு இந்த நாளில் சென்றால் இன்ன நன்மை என்பது அந்த ஸ்தலத்திற்குச் செல்லும்போது  அங்கு  குவிக்கப்பட்டிருக்கும் கிரக சக்தி அலைகளை பெற்று வருகிறோம் என்பதுதான்.
அந்த அலை வீச்சுகளுக்கு  பாதிப்பு வரக்கூடாதுனுதான் கோவிலுக்குள்  செல்போன்  பேசினால் இந்த அலை வீச்சினால் கோவிலின் சக்திக்கு பாதிப்பு ஏற்படுமென  பேசத் தடை விதிக்கப்படுகிறது.அவ்விடத்தில்  நன்மைகளை மட்டுமே நினைக்கும் போதும் மன நிலை ஒன்று படும் போதும் நாம் எண்ணுவது நியாயமானதான பட்சத்தில் நடந்தேரும்.பலரும் பலவித பிரார்த்தனைகள்,அர்ப்பணிப்புகள்,செய்முறைகள், கோவில் திருவிழாக்கள் செய்வது தங்களை விளம்பர படுத்திக்கொள்ள அல்ல,தங்களின் பண வசதியை தெரிவிக்க அல்ல,மனம் ஒன்றி செய்யும்போது நமக்கு நாமே பாசிடிவ் சக்தியை பெறுகிறோம்..
கற்பூரம் ஏற்றல்,(தற்போது பல கோவில்களில் அனுமதி இல்லை)
அகர்பத்தி ஏற்றல்,
நல்லெண்ணெய் விளக்கு,
நெய் விளக்கு,
கலப்பு எண்ணை விளக்கு,
அர்ச்சனை,
மாவிளக்கு,
பூ மாலை,
 சாமிக்கு உகந்த பொங்கல்,சுண்டல்,கூழ் இத்யாதி செய்து படைத்து மற்றவருக்கும் கொடுப்பது,
சுமங்கலி தானம்,
அபிஷேகம் செய்வது,
வஸ்திரம் அற்பணிப்பு,
உபவாசம்,
(இதுவரை சாந்தம்,இனி அதிரடி)
அங்கப்பிரதர்ஷ்ணம்,
அலகு குத்துவது,
தீ மிதித்தல்,
மொட்டை அடிப்பது,
விரும்பும் எண்ணிக்கையில் சந்நிதானம் சுற்றுவது,
கையில் சூடம் ஏற்றுவது,
காவடி எடுப்பது,(நூறு வகை),
உயிர் பலி கொடுப்பது,
மண் சோறு சாப்பிடுவது,

இவை அனைத்தும் தங்களின் சூழ்நிலைக்கேற்ப,பண மற்றும் மன வசதியைப் பொறுத்து செய்யக்கூடியது.
இதெல்லாம் கோவிலுக்கு வந்து போவோர்கள் ,வாழ்வில் நன்மை வேண்டுபவர்கள் செய்வதேனில் இவர்களை விட அதிக நேரம் அதே கோவில் வாசலில் தவம்  கிடக்கிறார்களே பிச்சைகாரர்கள்,அவர்களுக்கு ஏன் அந்த நல்ல சக்தி கிடைக்கவில்லை ,கடவுளை நினைக்காமல்,கோவிலுக்கு வருபவர்கள் மேலே கண்ணாக இருப்பதாலா?அந்த சக்தி வட்டத்திற்குள் செல்லாததாலா? அல்லது பிச்சைக்காரனுக்கு சுக்கிர திசை வந்தால் நல்ல பிச்சை பாத்திரம் கிடைக்கிறதா?
நான் இதை செய்தால்
இது கிடைக்குமேன  
பேரம் பேசும், கடவுள்
 பணி,ஆன்மீகம்
வேண்டாம்.
தற்பெருமையும்,
கண்மூடித்தனமும்
 கடவுள் நம்பிக்கையில்
வேண்டாம்.
எனக்கு முதலில் பாதித்த சம்பவமாக நினைவிருப்பது
எங்கள் மட விளாகத்தில்  பட்டாச்சாரியார் குடும்பம் ஒன்று இருந்தது,காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை பூஜை  புனஸ்காரம்,சுத்தம், சாஸ்த்திர சம்பிரதாயம் எல்லாம் கடை பிடித்த குடும்பம்.துவைத்து காயும் ஆடைகள் அந்த வழியாக சென்றவர் மீது காற்று வாக்கில் பட்டு விட்டால், கொடியில் காய்ந்த ஆடை மீண்டும் தண்ணியில் நனைக்கப்பட்டு உலர்த்தப் படும்.அடுத்த வீட்டு பிராமினர் மீது பட்டாலும் அந்த காய்ந்த ஆடைக்கு மீண்டும் குளியல்தான்.
ஒரே நீர் குழாயில் குடி நீர் எடுப்போம்.அந்த குடும்பத்தினரின்  பாத்திரம் நீர்   நிறைந்து   வழிந்தோடினாலும்,மற்றவர் தொடக்கூடாது,தொட்டு தூக்கி விட்டால் ஒரு குடத்து நீரும் கீழே ஊற்றப்பட்டு,மீண்டும் தண்ணீர் பிடிக்கப்படும்.
பெருமாளுக்கும்,ஆஞ்சநேயருக்கும் சேவகம் செய்து காலத்தை கழித்த குடும்பத் தலைவருக்கு சர்க்கரை நோய் வந்தது,கட்டை விரல் எடுக்கப்பட்டது,உடல் நிலை மோசமானது,இரண்டு நாள் வரை இழுத்து பறித்து கிடந்தவரை பார்த்தபோது இத்தனை ஆச்சாரத்துடன்,கடவுளுக்கு சேவகம் செய்தவருக்கா இந்த நிலை ?பக்கத்தில் பாட்டியிடம் கேட்டபோது “அதிகப் பிரசங்கித்தனமாக பேசாதே,அந்த சேவகமும் செய்ததால்தான் பகவான் இத்தோடு விட்டார்”    என்ற பதில் வந்தது. 
அவர் இறந்தும் போனார்,ஆச்சாரங்கள் தொடர்ந்தது,பிள்ளைகளுக்கு திருமணம் ஆனது,பிள்ளைகள் ஆளுக்கொரு இடம் பெயர்ந்தனர்.அவரின் துணைவியார் மட்டும் தனித்திருக்க இன்று அவருக்கு தூரத்தில் உள்ள பிள்ளைகள் வந்து       உதுவதுக்கு முன் உதவுபவர்கள் அன்று ஆச்சாரம் பார்த்ததால் மனம் காயப்பட்டவர்களில் தற்போது மீதி உள்ளவரும்,இவர்களது பிள்ளைகளும்தான். .இப்போது அவர் சகவாசியாகி விட்டார்,அன்று இருந்த அதே கடவுள்தான் இன்றும் இருக்கிறார் ,இப்போ கடவுள் எங்கு இருக்கிறார்?யார் பக்கம் இருக்கிறார்?

என் தோழி ஒருவரின் தந்தை சொல்லியது:

இறை வழிபாடு என்பது உன் தலை மீது ஒரு கல் அதி வேகத்தில் விழப்போகிறது என்பது விதி எனில் இறை வழிபாட்டின் மூலம் அதி வேகமாக விழ இருக்கும் கல் மெதுவாக வந்து விழுமே தவிர,விழும் கல்லை தடுத்து நிறுத்த முடியாது.

12 comments:

Angel said...

"இறை வழிபாடு என்பது உன் தலை மீது ஒரு கல் அதி வேகத்தில் விழப்போகிறது என்பது விதி எனில் இறை வழிபாட்டின் மூலம் அதி வேகமாக விழ இருக்கும் கல் மெதுவாக வந்து விழுமே தவிர,விழும் கல்லை தடுத்து நிறுத்த முடியாது"
THIS IS FANTASTIC.

எல் கே said...

ஆச்சி, இதுல நெறைய விஷயம் இருக்கு. உங்க கர்மாப் படி என்ன நடக்குமோ அதை மாற்ற இயலவே இயலாது.

இன்னும் பெருசா போகும் இதை பத்தி விரிவா எழுதின எனவே நிறுத்திக்கிறேன்

ஆனந்தி.. said...

ஆச்சி...நீங்க உங்க லேபில் இல் ஆன்மிகம் னு மட்டும் குறிப்பிட்டு இருக்கீங்க..கூட இதையும் சேர்த்துக்கோங்க.."விழிப்புணர்வு" ..எஸ்..என்னை பொறுத்தவரை யோசிக்க செய்த விழிப்புணர்வு கட்டுரை இது...

Unknown said...

அருமையான பதிவு மேடம், இங்கு கடவுளுக்கும், பக்திக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், ஆனந்தி மேடம் சொன்னது போல இது விழிப்புணர்வு பதிவும் கூட...

ஆச்சி ஸ்ரீதர் said...

THANK U ANGELIN

எல்.கே அவர்களுக்கு நன்றி
ஆமாம் ,இது விவாதித்தால் தலைப்பு வெல்லுமா?விவாதிப்போர் வெல்லுவாரோ, கரு என்னமோ ஆழமானதுதான்.


வருகை தந்த ஆனந்தி அவர்களுக்கு நன்றி,
கடவுள் எங்கே என்று போடலாம்னு நினைத்தேன்,


நன்றி சுரேஷ்,தொடர்ந்து வருகை. தரவும்

எல் கே said...

விட்டுப்போன இன்னொரு விஷயம். கற்பூரம் இடையில் வந்தது. முன்பெல்லாம், நெய்தீபம் இல்லை எண்ணை தீபம்தான்

ஆரத்தி சாமான்கள் என்று ஒரு செட்டு உண்டு அதில் எல்லாமே தீபங்கள் தான். கற்பூரம் இல்லை

raji said...

இறையும் இறையுணர்வும் அவரவர்கள்
வாழ்வில் உணரும் விஷயமே.
மிகவும் சென்சிடிவ்வான சப்ஜெக்ட்தான் இது
நல்ல பதிவு

ஆச்சி ஸ்ரீதர் said...

அப்படியா?
சில பகுதிகளில் நெய் விளக்குனு சொல்லி டால்டா கலந்து ஏமாத்துறாங்க,கற்பூரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இன்னும் சன்னதியின் தூரத்தில் வைத்து ஏற்றுகிறார்கள். மீண்டும் வருகை தந்தமைக்கு எல்.கே அவர்களுக்கு நன்றி.


ராஜி, உங்களை காணாமல் மனது குறையாகவே இருந்தது.வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க வாங்க! ஆதி.நன்றி.

goma said...

நாம் ஏன் கடவுளிடம் வேண்ட வேண்டும் அவருக்குத் தெரியாதா நமக்கு என்ன வேணும் எப்போ தரணும் எப்படி தரணும்னு.....
கடவுளும் அம்மாவும் ஒண்ணு ,நாம
கேக்க வேண்டாம் ,அவங்களாவே தருவாங்க...

வை.கோபாலகிருஷ்ணன் said...

உடலிலும், உள்ளத்திலும், நாம் உபயோகிக்கும் துணிகள் முதலான அனைத்துப் பொருட்களிலும்,சுத்தம் சுகாதாரம் போன்றவைகளைத் தான் மடி, ஆச்சாரம், அனுஷ்டானம் என்ற மிகுந்த கட்டுப்பாடுகளுடன் போதித்து வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

உட்புகுந்து சென்றால் இவற்றிலெல்லாம் எவ்வளவோ ஆச்சர்யமான விஷயங்கள் அடங்கியுள்ளன.

இவை பற்றிய சந்தேகங்களுக்கு சங்கரா டி.வி யில் ஒரு பெரியவர் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார்.

மொத்தத்தில், இன்றைய சூழ்நிலையில், இவை எல்லாவற்றையும், அப்படியே கடை பிடிக்கவும் எல்லோராலும் இயலாது.

அவரவர் விருப்பப்படி சம்ப்ரதாயப்படி, முன்னோர்களின் வழிகாட்டுதல் படி ஓரளவுக்காவது கடைபிடிப்பதில் தவறேதும் இல்லை.

அவரவர்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விஷய்மாதலால், இதைப் பற்றி இத்துடன் விட்டு விடுவதே நல்லது.