*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 25, 2011

புத்தரும் அங்குலிமாலனும்

அங்குலிமாலன் ஒரு கொடியவன்.உலகிலேயே தான்தான் பலசாலி என்ற எண்ணமுடன் ஆயிரம் பேரைக்  கொன்று பலத்தை நிருபிக்க சபதம் கொண்டான்.தொளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர்களைக் கொன்று அனைவரது விரல்களையும் மாலையாக அணிந்தாகிவிட்டது.எண்ணிக்கை ஆயிரத்தை பூர்த்தி செய்ய இன்னும் ஒருவர்தான் மீதி.
அந்த ஒரு மனிதனை அங்குலிமாலன் தேடி வருவதை அறிந்த ஊர் மக்கள் அங்கும் இங்கும் பதுங்க, அந்த வழியாக புத்தர் செல்வதைக் கண்ட ஊரார் இந்த வழியில்   அங்குலிமாலன் ஆயிரமாவது மனிதனை கொல்ல வருகிறான்,தாங்கள் தயவு செய்து செல்லும் பாதையை  மாற்றிச் செல்லுங்கள் என்றார்களாம்.இறக்கப் போவது யார் என்று பாருங்கள் என்று சொல்லி புத்தர் தான் சென்ற  பாதையிலே சென்றாராம்.
அங்குலிமாலனும் புத்தரும் எதிர் எதிரே சந்தித்தனர். அங்குலிமாலன் புத்தரிடம் எச்சரித்தான்,நீ ஒரு பிட்சு, சந்நியாசி என்பதால் உயிர் பிழைக்க வாய்ப்பளிக்கிறேன்,அருகே வராதே திரும்பிச் செல்,நான் தயவு காட்ட மாட்டேன் என்று கோடரியுடன் முன் வந்தவனிடம் நானும் தயவு காட்ட மாட்டேன்,சந்நியாசி எப்படி திரும்பிச் செல்ல முடியும் என்ற புத்தரிடம் மரணத்தை நீயே வலிய வந்து ஏற்கிறாய் என்று புத்தரை கொல்ல முற்பட்டான்  அங்குலிமாலன்.
என்னைக் கொல்லும் முன் ஒரு சிறு வேலை செய்து விடு என்றாராம் புத்தர்.என்ன வேலை என்று கேட்ட  அங்குலிமாலனிடம்  எதிரே உள்ள மரத்திலிருந்து நான்கு இலைகளைப் பறி என்றாராம் புத்தர்.நான்கு இலை என்ன இந்தா நாலாயிரம் இலைகள் என கோடாரியால் ஒரு பெரிய கிளையையே வெட்டிச்  சாய்த்தான் அங்குலிமாலன்.
வெட்டிய கிளையையோ,விழுந்த ஒரு இலையையோ உன்னால் பழையபடி அதே மரத்தோடு இணைக்க முடியுமா என்றாராம் புத்தர்.ஒரு நிமிடம் யோசித்த  அங்குலிமாலன் இதை என்னால் செய்ய இயலாது என்றானாம்.பறிப்பதும்,வெட்டுவதும் குழந்தைகள் கூட செய்யும்,இணைக்க முடிந்தவன்தான் புருஷார்த்தம் கொண்டவன்.சக்தியுள்ளவன்,நீ மிகவும் பலமற்றவன்,பலமுள்ளவன்,சக்திசாலி  என்ற எண்ணத்தை விட்டுவிடு என்றார் புத்தர்.
ஒரு கணம் தீவிரமாக யோசித்த அங்குலிமாலன்,இலையை  மீண்டும் இணைக்க ஏதாவது வழி இருக்கிறதா?என்ற   அங்குலிமாலனிடம் அந்த வழியில்தான் நான் செல்கிறேன் என்றார் புன்னகையுடன்.
அழிப்பதை எந்த பலவீனனும் செய்ய முடியுமெனில்  நான் பலவீனன் அல்ல,நான் என்ன செய்ய வேண்டுமென்ற அங்குலிமாலனை என்னுடன் வா என அழைத்து  சென்றார் புத்தர்.புத்தருடன் சென்ற  அங்குலிமாலனை ஊர் மக்கள் கற்களால் அடித்து துன்புறுத்திய போதிலும் அவன் தான் தவறை உணர்ந்தவனாய் எதிர்க்கவும் இல்லை,கோபம் கொள்ளவும் இல்லை.தவறை உணர்ந்த நீ மனிதனாகி விட்டாய் என்றார் புத்தர்.
அங்குலிமாலன்  சாது ஆகிவிட்டதை கேள்விப்பட்ட பிரசெனஜித் என்பவர் புத்தரை சந்தித்து அங்குலிமாலன் எங்கே எப்படி உள்ளான் என்று கேட்ட போது இதோ என் அருகில் அமர்ந்திருக்கும் இந்த பிட்சுதான்  அங்குலிமாலன் என்றாராம்.
உலகில் எவரும் நல்லவரும் அல்ல,கெட்டவரும் அல்ல,சக்தியின் வடிவம் மட்டுமே பிரச்சனை.இந்த உடலில் மாபெரும் சக்திகள் உள்ளன.உடற்சக்தியை ஆக்கமுள்ள முறையில் உபயோகியுங்கள் என்கிறார் புத்தர்.    
 

14 comments:

VELU.G said...

நல்ல கருத்துள்ள கதை

raji said...

படித்திருக்கிறேன்
நல்ல பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பகிர்வு..

பின்புல நிறத்தை வெள்ளையாக மாற்றுங்களேன்..வாசிப்பவருக்கு வசதியாக..
நன்றி.

எல் கே said...

முழுவதும் நல்லவரும் இல்லை முழுவதும் கேட்டவரும் இல்லை

வை.கோபாலகிருஷ்ணன் said...

தெரிந்த கதையே என்றாலும் உங்கள் பதிவினில் படித்து Refresh செய்து கொள்ள முடிந்தது. நாம் நமது ஆற்றல் அனைத்தையும் ஆக்கபூர்வமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும், அழிவுக்குப் பயன் படுத்தலாகாது என்ற நல்ல கருத்தைக் கூறும் நல்லதொரு பதிவு.

Angel said...

பகிர்வுக்கு நன்றி. நல்ல கருத்துள்ள கதை.

சிவகுமாரன் said...

அங்குலிமாலன் கதை ஆச்சி வாயால் கேட்பது (படிப்பது) சுகம் தான்

Unknown said...

நல்ல சிந்தனையை ஊட்டும் அருமையான பதிவு, காலையிலேயே பிரெஷ்ஷாக உணர்கிறேன், நன்றி மேடம்.

ஜெய்லானி said...

சூழ்நிலையே ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றுது :-))

ஆச்சி ஸ்ரீதர் said...

@வேலு.ஜி
முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி.

@ராஜி
நன்றிங்க(ஏற்கனவே படிச்சிடீங்களா?)

@முத்துலட்சுமி
முதல் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி.நான் நினைத்தேன் ,நீங்க சொல்லீட்டீங்க.

@எல்.கே
நன்றிங்க.நீங்க சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
நன்றி,தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.

@ஏஞ்சலின்
நன்றிங்க.

@சிவகுமாரன்
நன்றி. வாங்க,கலியுக கவிஞரே !!!! .

@இரவு வானம்
நன்றி,எதோ என்னால் முடிந்தது.

@ஜெய்லானி
நன்றி.ஆமாம்,சூழ்நிலையும் காரணம்தான் .

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை பகிர்வு. பிறக்கும்போதே எவரும் கெட்டவராக பிறப்பது இல்லை! நல்ல பகிர்வுக்கு நன்றி!

ஆச்சி ஸ்ரீதர் said...

வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல கருத்துள்ள கதை. பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

ஷர்புதீன் said...

wishes. aachi!