தலைநகர் தில்லியில் காண்பதற்கு அறிய பல இடங்கள் இருப்பதை பலரும் அறிந்திருந்தாலும்,புத்தப் பிரியர்களுக்கான ஒரு இடம் உள்ளது. ஞாயிறு தோறும் புத்தக சந்தை நடைபெறுகிறது தில்லியின் ஒரு பகுதியில்,அதுவும் செகண்ட் ஹேண்ட் புத்தகம்.அதாவது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட எவராலோ உபயகோப்படுத்தப்பட்டு மீண்டும் விற்பனைக்கு போடப்பட்ட புத்தகங்கள்.சில பகுதிகளில் பழைய புத்தகக் கடை இருக்கும் பார்த்திருப்போம்,அது போல ,மற்றும் இங்கு புதிதாக அச்சிட்ட புத்தகங்ள் இடம்பெறாது,ஆனால் அச்சில் பிழை,கிழிந்த போன்ற குறையுள்ள புதிய புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும்.ஒரு கடை ,இரண்டு கடை அல்ல,சந்தையாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக சாலையோரத்தில் அவரவர் கடை விரித்து வைத்திருப்பார்கள்,அந்த சந்தை (கண்காட்சியாக) நடைபெறும் இடம் தரியா கன்ஜ்.கிதாப் என்றால் ஹிந்தியில் புத்தகம் என்று பொருள்.கிதாப் மார்கெட் ஞாயிற்றுக் கிழமைகள் மட்டுமே.
இங்கு கிடைக்காத புத்தகங்கள் இல்லை,கிடைக்காத வகைகளும் இல்லை.சில புத்தக நிலையங்களில் கிடைக்காத புத்தகங்கள் கூட இங்கு கிடைக்கும்.நமக்குத் தேட முயற்சியும்,பொருமையும்,நேரமும்தான் வேண்டும். அந்தந்த புத்தகங்களின் பாதி விலையில் ஐந்து ரூபாய் விலையுள்ள புத்தகத்திலிருந்து ஆயிரம் ஆயிரம் ரூபாய்க்கு மேலும் விலையுள்ள புத்தகங்கள் கிடைக்கும்.விலைகள் பேரம் பேசியும் பெறலாம்.சில கடைகளில் ஒரே விலைதான் .குழந்தைகளுக்கான புத்தகம் முதல் விவசாயம்,தொழில்நுட்பம்,இலக்கியம்,கணினியல்,பொது அறிவு,நாவல்,வார இதழ்கள்,மாத இதழ்கள் போன்ற உலகில் எத்தனை பிரிவில் புத்தகங்கள் உள்ளதோ அத்தனையும் கிடைக்கும்.
ஆங்கில,ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றது.தமிழ் மொழியில் கிடைப்பது மிக அரிது.உருது,ஜெர்மனி,இத்தாலியன் மொழி புத்தகங்களும் கிடைக்கின்றன.சில கடை விரிப்பாளர்கள் குறிப்பிட்ட வகை புத்தகங்களையும்,குறிப்பிட்ட பதிவகத்தாரின் புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்கிறார்கள்.பல புத்தகப் பிரியர்களும், புத்தகப் புழுக்காளானவர்களும்,மாணவர்களும்,வருகிறார்கள்.சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் இந்த புத்தக சந்தை இடம் பெற்றுள்ளது. இந்த பகுதியில் பல பதிவகங்களும்,மொத்த விலை புத்தக நிலையங்களும் அதிகம்.
தரியா என்றால் நதி எனவும்,கன்ஜ் என்றால் சந்தை எனவும் சொல்லப்படுகிறது.இங்கே அருகில் யமுனை நதி செல்கிறது.இந்த தரியா கன்ஜ் பழைய தில்லி எனப்படும் சாஜஹான்பாத் பகுதியில்,நேதாஜி சுபாஷ் சாலை அல்லது அசாப் அலி சாலை பக்கம் என விசாரித்து வரலாம்.இந்த சந்தை ஐம்பது வருடங்களை கடந்து விட்டதாம். படங்கள் இணையத்திலிருந்து பெறப்பட்டவைகள்.
24 comments:
தில்லியில் இருப்பவர்களுக்கு உபயோகமான தகவல்
எனக்கும் பழைய புத்தக கடையில் புத்தகங்கள் வாங்குவது மிக பிடிக்கும், ஆனா கதை புத்தகம் மட்டுமே வாங்குவேன் :-)
நல்ல பதிவு.
நல்ல செய்தி.
வாழ்த்துக்கள்.
Ok
nice.is he sridhar in the photo?make use of it.go with ur family,itbecome a useful time spending with ur family & also papa learn to know about book readings.take care......
நல்ல தகவல் சகோ. நான் பலமுறை சென்று புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன். என்ன ஒரே குறை தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை :( ஆங்கில புத்தகங்களும் Pirated Version தான் கிடைக்கும்.
நல்ல பகிர்வு.
எல்.கே அவர்களுக்கு நன்றி,
தில்லிக்கு புதிதாய் செல்பவர்களுக்கும் ஒரு சின்ன விபரமாக இருக்கும்.
நன்றிங்க சுரேஷ்,
ரத்னவேல் அவர்களுக்கு,முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.
பிரியமுடன் பிரபு அவர்களுக்கு நன்றி,
முதல் வருகைக்கும்.
வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி
ஆதி அவர்களுக்கும் நன்றி.
THANK U @ GKP PILAY
சாலையோர புத்தக சந்தை பற்றி நல்ல உபயோகமானதொரு தகவலும் பதிவும். பாராட்டுக்கள்.
சமயத்தில் இது போன்ற இடங்களில் ஒரு சில அபூர்வமான புத்தகங்களும் கிடைக்கக்கூடும். தாங்கள் சொல்வது போல தேட நமக்குப் பொறுமை வேண்டும்.
நல்லதொரு பகிர்வு .சில சமயங்களில் அறிய புத்தகங்கள் கூட இப்படிப்பட்ட இடங்களில் கிடைக்கும்.
encyclopedia போன்ற நூல்களை வாங்கி வைத்தால் குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கும்
வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி.
ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி.
(அட தமிழ்!)
&தாங்கள் இருவரும் சொல்வதும் சரியே!
இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி .
பழைய புத்தக கடை னு சாதரணமா நினைக்க கூடாதுன்னு நினைச்சிருக்கேன் ஆச்சி...குப்பை மாதிரி ஒன்னோட ஒன்ன கலந்து இருக்கும் நிறைய பொக்கிஷ புத்தகங்கள்அதில் இருப்பதை பார்த்து இருக்கேன்...நல்ல பகிர்வு...
நல்லதொரு தகவல் பதிவு.
பகிர்வுக்கு நன்றி
நல்லதொரு தகவல் பதிவு.
பகிர்வுக்கு நன்றி
நான் தமிழ் font install செஞ்சுட்டேன் .
எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு
வாழ்த்துக்கள்.
நல்ல முன்னேற்றம்..
@ஆனந்தி,
@ராஜி,
@வி,என்.எஸ்.உதயசந்திரன்
ஆகியோருக்கு எனது நன்றிகள்,
நல்லது,தமிழில் தொடருங்கள் ஏஞ்சலின்
கே.ஆர்.பி.செந்தில் அவர்களுக்கு
நன்றி குருவே.
போகனும்ன்னு நினைச்சிக்கிட்டே இருக்கின்ற இடம்.. இன்னும் நேரம் வரலை போல :))
@ MUTHTHU LAKSHMI வருகைக்கு நன்றி,இனி நீங்க தரியா கன்ஜ்க்கு போகும் போது இந்த பதிவு நினைவுடன் செல்வீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆச்சி, நேற்று தரியா கஞ்ச் வழியா போயிட்டு இருந்தப்போ உங்க பதிவில் கூறிய இடம் இது தானா? என்று கணவரிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன்.
நன்றி ஆதி
Post a Comment