கடந்த ஞாயிற்றுக் கிழைமை அன்று காலை பதினொன்று மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் விசு அவர்களின் மக்கள் அரங்கம் ஒளிபரப்பானது.அன்று இடம்பெற்ற மாவட்டம் காஞ்சிபுரம்.பொதுவாக இந்த மக்கள் அரங்கத்தின் பேச்சுக்களும்,கருத்துக்களும் தரமானதாகவே இருக்கும்.விசு சார் அவர்களும் அவருடைய ட்ரசட்லிருந்து பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார்,என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.
கடந்த சில வாரங்களாக காஞ்சிபுர பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை ஜீரோவிளிருந்து ஒன்று ,இரண்டு என்று எண்களை தலைப்பாகக் கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.ரெண்டுங்கெட்டான் என்ற தலைப்பில் கூட ஒருவர் பேசினார்.
காஞ்சிபுரத்து மாணவர் ஒருவர் பேசியது பார்த்தோரை நிச்சியம் கலங்க வைத்திருக்கும். நிலவொளி பள்ளிகள் என்று பள்ளிக்கூடங்கள் உள்ளதாகவும்,அதில் அடிப்படை எழுத்தறிவும், படிப்பறிவும் சொல்லிக் கொடுக்கப்பட்டு ,ஐந்தாம்,எட்டாம் ,பத்தாம்,பன்னிரெண்டாம் வகுப்புகள் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை கல்விச் செல்வங்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்று அந்த மாணவர் சொன்னார்.
இதில் குறிப்பான விசியம் என்னவென்றால் நிலவொளி பள்ளிகளுக்கு பெயர்க் காரணம் என்னவென்றால் நடைமுறையில் உள்ள பகல் நேர பள்ளிகளில் படிக்க முடியாத மாணவர்கள்,குடும்ப வருமானத்திற்காக பகலில் வேலைக்கு போகும் அனால் எப்படியாவது படிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பணி நேரத்திற்கு பிறகு மாலையில் மட்டுமே நடைபெறும் இந்த பள்ளிகளில் சேர்ந்து படித்து தேர்வு எழுதுகிறார்கலாம்.
நாற்பது நிலவொளி பள்ளிகள் நடைபெற்றதாம்.ஆனால் அதை தொடர்ந்து நடத்துவதற்கு இடர்பாடுகள் வந்ததால் தற்பொழுது இரண்டு நிலவொளி பள்ளிகள் மட்டுமே உள்ளதாம்.அந்த மாணவன் தற்பொழுது ஒரு கல்லூரியில் படிப்பதாகவும்,தன் கல்வித் தாகத்திற்கு உதவிய அத்தகைய பள்ளிகள் தொடர்ந்து நடைபெற போராட்டங்கள் நடத்தியதாகவும்,தொடர்ந்து போராடுவேன்,என்றும் தன்னைப் போன்ற மாணவர்கள் பயன் பெற வேண்டுமென்றும் சொன்னார்.
வேதனையானது என்னெவென்றால் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் சப்தமில்லாமல் மற்றொன்றும் நடைபெறுகிறதாம்.என்னவெனில் பிள்ளைகளை அடகு வைப்பது.வறுமை காரணமாகவும்,பணத் தேவைகளுக்காகவும் தங்களது பிள்ளைகளை நேசுவுத் தொழில் நடைபெறும் ஆலைகள்,நிறுவனங்களில் அடகுவைத்து எவ்வளவு பணம் பெற்றார்களோ அந்த கடன் அடையும் வரை பிள்ளைகள் அங்கு வருடக் கணக்கில் கூட வேலை செய்ய வேண்டுமாம்.
அந்த மாணவனும் தன் சகோதிரியின் திருமணத்திற்காக முப்பதாயிரம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டதாகவும் இடையே தன் தந்தை இறந்து விட்டதாகவும் வேலை பார்த்து தானே மீண்டு வந்ததாராம். அந்த மாணவரின் தீர்க்கமான பேச்சும் பார்வையும் அவரின் மன உறுதியும் பார்ப்போரை கலங்க வைத்தது.
ஏதாவது தொண்டு நிறுவனங்கள்,உதவும் கரங்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று .இந்த பதிவை தான் உதவியாய் வெளியிடுகிறேன்.இத்தகைய மாணவர்களின் கல்விப் பசிக்கு உதவுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
14 comments:
படிக்கும் போதே மனம் கலங்குகிறது ஆச்சி
கட்டாயம் தங்களின் இந்த பதிவு, இது சம்பந்தமான
விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
மூன்றாவது பாராவில் ஆரம்பத்தில் ஏதோ வார்த்தை விடுபட்டுள்ளது
போலுள்ளது,சரி செய்து விடவும்
இந்த பதிவு எல்லாரையும் சென்றடைய வேண்டிய பதிவு,
ஆதலால் எல்லாருடைய பதிவிலும் சென்று இது பற்றி பின்னூட்டம் போட்டு விடவும்.
அப்பொழுதுதான் அனைவரையும் இது சென்றடையும்.
இது என் யோசனைதான்,மற்றபடி உங்கள் விருப்பம் போல் செய்யலாம்.
பகிர்வுக்கு நன்றி
ராஜி அவர்களுக்கு நன்றி,சரி செய்து விட்டேன்.சிலருக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன்.(பின்னூட்டமிட பயமா இருக்கு )
பின்னூட்டத்தில் அவர்கள் பதிவை பற்றி கருத்து தெரிவித்து விட்டு,
see...
http://aatchi.blogspot.com/2011/02/blog-post.html
என்று டைப் செய்து விடலாம்.இதில் தவறொன்றுமில்லை,
இருந்தாலும் தங்களுக்கு தயக்கமில்லாவிடில் செய்யவும்.
படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொருவரும் உதவி செய்ய முன் வர வேண்டும். அடகு வைக்கும் விஷயத்தை படிக்கும் போதே நெஞ்சு கொதிக்கிறது.
அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அந்தப் பையனின் பேச்சு மிகவும் உருக்கமாகவும், நம் கண்களில் நீர் வரவழைப்பதாகவும் இருந்தது. பதிவு செய்து, நிகழ்ச்சியைப் பார்க்க வாய்ப்பில்லாத பலரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நினைத்த உங்கள் முயற்சிக்கும், திருமதி ராஜி அவர்களின் ஆலோசனைக்கும், என் மனமார்ந்த பாராட்டுக்கள். [இளமையில் வறுமை போல ஒரு கொடுமை கிடையாது என்பதை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.]
நன்றி ராஜி,செயல் படுத்துகிறேன்.
தங்கள் மன கருத்துக்களை தெரிவித்த ஆதி & வை.கோபால கிர்ஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றிகள்,அத்தகைய பிள்ளைகளுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்
கலங்க வைத்தப் பதிவு . எனக்கு தெரிந்த கூகிள் குழுமங்களுக்கு இதை அனுப்புகிறேன்.
எல்.கே அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்டமைக்கு நன்றி.
மேற்படி அந்த மாணவர் தான் படித்து குறிப்பிட்ட அரசாங்க பதிவிக்கு போக வேண்டுமெனவும்,அனைத்து பகுதிகளிலும் படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் பள்ளிக்கு சென்று படிக்க முடியாதவர்களுக்காக இந்த அடிப்படை கல்விக்கான நிலவொளி பள்ளியை அனைத்து பகுதிகளிலும் துவுங்குவேன் எனவும் குறிப்பிட்டார்.அந்த நிகழ்ச்சியை பார்ப்பவருக்கு கண் கலங்கியிருக்குமே தவிர அந்த மாணவர் கண்ணீர் இல்லாத கலக்கமான பார்வையுடன் பேசியது துன்பத்தில் இருகிப்போனத்தை காமித்தது.
YES ,I THIS POST SHOULD REACH EVERY ONE.I THINK RAAJI IS RIGHT.
YOUR WAY OF WRITING IS VERY NICE.
welcome angelin
& thanks with pleasure.
குறிப்பு ஒன்று: இன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பு செய்த மக்கள் அரங்கத்தின் தொடர்ச்சியில் அந்த மாணவரின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார்,எங்கிருக்கிறார் என தெரியவில்லையென்று தெரிவிக்கப்பட்டது ,இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சி வரும் 13 ஆம் தேதியும் ஒளிபரப்பாகும்
nan than antha manavan saravanan
சரவணன் தம்பிக்கு
உண்மையில் தங்கள் அளவுக்கு இந்த பதிவு சென்றடைந்ததில் மகிழ்ச்சி என்றாலும்,தங்களின் அந்த துன்பமான நிலைமை வேறு யாருக்கும் வராமல்&நிலவொளி பள்ளிகள் தொடர்ந்து நல்ல முறையில் இயங்கினால் மிக மகிழ்ச்சி அடைவோம்.தங்களுக்கும் தங்களைப் போன்றோர்க்கும் உறுதுணையாக,உதவ, உதவக் கூடியவர்கள் வருவார்கள் என நம்புகிறேன். ஆனால் தங்களின் முயற்சியும்,முன்னேற்றமும் அனைவரும் முன் உதாரணமாக எடுத்துக்க வேண்டியது.
Post a Comment