*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jul 1, 2013

நிகழ்ந்தபவைகளும்,நிகழுபவைகளும்@1/7/13

உள்ளாடை தெரியக் கூடாதென்று ”சிம்மிஸ்” என்று ஒரு பனியன் டைப் உள்ளாடையை அணிந்து அதற்குமேல் சுடிதார் அணிவதுண்டு.

இப்போ இங்க பல பெண்கள் இந்த இரண்டாம் சிம்மிஸ் அணிந்திருப்பதை தோல்பட்டை முழுவதும் காமிக்கும்படி மூன்றாம் சிம்மிஸ் அணிந்து வலம் வருகின்றார்கள்.அந்த உடையில் சிலருக்கு வயிற்றுப் பகுதி தெரியும் அளவிற்கு கட்டிங் உள்ளது.சிலருக்கு இரண்டாம் சிம்மிஸ் வயிற்றை மறைத்துள்ளது.இந்த உடைக்கு பெயர் என்னனு தெரியாததால் இந்த விளக்கம்.

சிறு வயதில் தமிழகத்தில் நான் பிரபலமான கோவிலுக்கு பக்கத்தில் குடியிருந்தேன்,பக்கத்தில் நாகூர்,வேளாங்கன்னி உண்டு.அதனால் தினம் தினம் சுற்றுலா பயணிகளை பார்த்ததுண்டு.அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுலா மக்களையும் பே,பே னு பார்த்ததுண்டு.ஏனெனில் வெளிநாட்டவர் அதிக கலராகவும் அரைகுறை ஆடையுடன் வருவார்கள்.

இப்போது இந்திய மெட்ரொ பெண்களை ,ஆடை கலாச்சாரத்தில் வெளிநாட்டவர் வியந்து பே,பே னு பார்த்தாலும் ஆச்சர்யமில்லை.


தில்லியின் நவ நாகரீக இளம் பெண்கள் சிலர் உடுத்தியிருந்த  ஆடையின் முன்பக்கத்தில் எழுதியிருந்த சில வாசகங்கள் .

"facebook
lets tweet"

"have a cup of milk"

"u cant forget this"

"fuck french connection"(இதற்கு என்ன அர்த்தம்)

வெளிநாட்டவரை வியந்து பார்ப்போமே தவிர முகம் சுளிப்பு வந்ததில்லை,முக்கால் ஜீன்ஸ்,ஸ்லீவ்லஸ் டாப்ஸ் அட்டாச்டு மினி பாட்டாம்(பேர் தெரியல)சகஜாமாயிட்டு.

ஆடை அணிவது அவரவர் சுதந்திரம்.இவைகளை பார்த்துப் பார்த்து கண்கள் பூர்த்து போனால்தான் பார்ப்பவர் பார்வையில் மாற்றம் வரும்.

இதெல்லாம் அணிந்து ஆண் நண்பருடன் போகும் ஜோடிகள் அதுபாட்டுக்குதான் போகுதுங்க.தன் கேள் ஃபிரண்டை எவன் எவனோ எங்கெங்கயோ பாக்குறானுங்களுனு கவல இல்லாம அவன் வேலைய மட்டும் பாத்துகிட்டு அந்யோந்யமா போறான் பாருங்க (கொஞ்சல்,உரசல்)அங்க வெளிப்படுது அவனவன் பெருந்தன்மை.

இன்றுவரை வெளிநாட்டவர்கள் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொள்வதை நான் பார்த்ததில்லை,அந்நிய மோகம் கொண்டவர்கள் அல்லது தன் காதலி/கேள் ஃப்ரண்ட்ஸ்களுடன் பல பொது இடங்களில் நம் நாட்டு ஜோடிகள் பலர் அநாகரீகமாக நடந்துகொள்கின்றனரே!

பார்த்ததை சொன்னேன்,எப்படி இப்படி சொல்லப்போச்சுனு கேள்வி கேட்டால் தெரிந்ததை சொல்றேன்!



சம்பந்தமில்லாம என்ன இந்த போட்டோனு பாக்றிங்களா?ஹரியானாவில்  ஒரு நாள் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது ஓட்டுநரின் சாவகாசம்தான் இது

  இது ஹரியானாவின் ஒரு bsnl அலுவலகத்தின் செக்கியுரிட்டி அமரும் நாற்காலி,ஒரு நேரம் கம்பி போட்டு கட்டிருக்கும்.இப்போ கேபிள் போட்டு கட்டிருக்கு.2008 லேர்ந்து இப்படித்தான் சீரியாஸா இருக்கு.



16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றைய இளம் பெண்கள் அணியும் பல்வேறு உடைகள், அவர்களின் நாகரீகம், வெளிநாட்டுப்பெண்களின் கலர் என ஒரே கலக்கலாக பலவிஷயங்களை8 எழுதியுள்ளீர்கள். படிக்கவே சந்தோஷ்மாக் உள்ளது. முழுவதும் படிச்சுட்டு வரேன்.

>>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதெல்லாம் அணிந்து ஆண் நண்பருடன் போகும் ஜோடிகள் அதுபாட்டுக்குதான் போகுதுங்க.தன் கேள் ஃபிரண்டை எவன் எவனோ எங்கெங்கயோ பாக்குறேனுங்களுனு கவல இல்லாம அவன் வேலைய மட்டும் பாத்துகிட்டு அந்யோந்யமா போறான் பாருங்க (கொஞ்சல்,உரசல்)அங்க வெளிப்படுது அவனவன் பெருந்தன்மை.//

ஆஹா, அதுபாட்டுக்குத்தான் போனாலும், நீங்க இவற்றையெல்லாம் கூர்ந்து க்வனித்து, பெருந்த்ன்மையாகத்தான் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

இளமை ஊஞ்ச்லாடும் போது இதெல்லாம் சகஜம் தானே. ஒன்னும் கண்டுக்காதீங்கோ. டென்ஷன் ஆகாதீங்கோ. அப்புறம் உடம்புக்கு ஆகாதூஊஊஊ.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Avargal Unmaigal said...

இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து உடம்பு அதிகபடியாக தெரியும்படி வருபவர்களை அதிகம் பார்ப்பதால் என்னவோ அது கவர்ச்சியாக எனக்கு தெரிவதில்லை, ஆனால் உடலை மறைத்து அழகாக சேலை கட்டி வருபவர்களை பார்க்கும் போதுதான் செக்ஸியாக இருக்கிறது எனக்கு...இப்படி எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா இல்லை எல்லா ஆண்களுக்கும் இப்படிதான் தோன்றுகிறதா?

ஆச்சி ஸ்ரீதர் said...

வை.கோபாலகிருஷ்ணன் சார்

உங்கள் குறும்புத்தனம் எட்டிப்பார்க்குது சார்.எனக்கு எதுக்கு டென்சன்,நம்பதான் இப்படி பாக்குறோமா அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி பாக்கிறார்கள் என்ற ஆராய்ச்சிதான்

அவர்கள் உண்மைகள்

//இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து உடம்பு அதிகபடியாக தெரியும்படி வருபவர்களை அதிகம் பார்ப்பதால் என்னவோ அது கவர்ச்சியாக எனக்கு தெரிவதில்லை, //
பதிலை நீங்களே சொல்லிட்டிங்க,அக்கரைக்கு இக்கரை பச்சைதான்.

பால கணேஷ் said...

நவநாகரீகப் பெண்களைக் குறை சொல்லிப் பயனில்லை. அவர்கள் அணியும் நாகரீக உடைகளை விட சில சமயங்களில் அதைக் பிறர் கவனிக்க வைக்க அவர்கள் செய்யும் அட்ராசிட்டிதான் அதி்கமாக இருக்குது. மதுரைத் தமிழனைப்போல சேலை கட்டிய பெண்களுக்கே என் ஓட்டு! பாவம் அந்த பி.எஸ்.என்எல். செக்யூரிட்டி... இந்த சேரை பொறுத்துக்கிட்டு இருக்கறதுக்காகவே அவருக்கு தனி அலவன்ஸ் தரணும்!

ADHI VENKAT said...

இன்றைய நாகரீக பெண்களை தில்லியில் இருந்த வரை பார்த்து அலுத்து போச்சு...அவர்கள் திருந்தப் போவதில்லை. இங்கே இன்னும் அந்தளவு வரவில்லை. முக்கியமாக ஜீன்ஸ் கலாச்சாரம் இல்லை...:))

நல்லாத் தான் கிளிக்கியிருக்கீங்க...:))

”தளிர் சுரேஷ்” said...

நன்றாய் சொன்னீர்கள்! மேலை நாகரீகத்தின் தாக்கம் அதிகரித்துவிட்டது என்று தோன்றுகிறது!

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்... டிரெஸ் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை!

படங்கள் - நன்று.

Ranjani Narayanan said...

நமக்குதான் அவர்களைப் பார்க்க கூச்சமாக இருக்கும். வேறு பக்கம் பார்ப்போம். அவர்கள் don't care!

கலியபெருமாள் புதுச்சேரி said...

நம்முடைய இந்த ஆதங்கத்தையும் கொஞ்ச நாட்களில் மூடநம்பிக்கை என்று கூறிவிடுவார்கள்.

புதியவன் பக்கம் said...

முனிர்கா பகுதிகளில் வடகிழக்கு மாநிலப் பெண்கள் குமட்டச் செய்கிறார்கள். மேற்கு தில்லி, வடமேற்கு தில்லிப் பகுதியில் பஞ்சாபிப் பெண்கள் குமட்ட வைக்கிறார்கள். மெட்ரோவிலோ... மாநில வித்தியாசமில்லாமல் பொது இடம் என்ற லஜ்ஜையின்றி அசிங்கப்படுத்துகிறார்கள். இதுதான் தில்லியின் நாகரிகம்.

Unknown said...

எந்த மாதிரியும் உடை அணியலாம் எங்களுக்கு சுதந்திரம் இருக்கும்பாங்க.. எல்லாத்துக்கு ஒரு எல்லை இருக்கு... எப்படியும் உடை அலங்காரம் பண்ணிட்டு கண்ணாடியில் பார்த்துவிட்டு தானே வருகிறார்கள்... உடை வாங்கும் போதும் அதில் உள்ள வார்த்தைக்களுக்கு அர்த்தம் தெரிந்து தானே வாங்குகிறார்கள்... இப்படில்லாம் பண்ணிட்டு அப்புறம் குத்துதே.. குடையுதேன்னா..

அம்பாளடியாள் said...

வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் .முடிந்தால் அவசியம் வாருங்கள் இங்கே
http://blogintamil.blogspot.ch/2013/07/3_25.html

திண்டுக்கல் தனபாலன் said...

விசிட் : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்பதிவு : http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html

தொடர வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....

http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html

நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்.