பெரிய கோவிலின் பக்கவாட்டில் என் வீடு.காலையில் 5 மணிக்கே கோவில் மணி ஓசை,அர்ச்சகரின் அன்றைய நாட்குறிப்புகள்,பிறகு தேசிகரின் பாடல்,பிறகு பக்திப்பாடல்கள் ஒலிக்கும்.
ஆனால் ka 3.45 மணிக்கே மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் பள்ளிவாசாலில் வாங்கு சொல்லும் அல்லாஹு அக்பர் அல்லாஹ் என்று ஒலிக்கும் கம்பீரம் தூக்கத்தை களைத்தாலும் அந்த தொழுகையின் சப்தத்தை கேட்டுக்கொண்டே உறங்கியிருக்கின்றேன்.மாலையிலும் வாங்கு சப்தம் கேக்கும்,பின்னே ஹிந்து கோவிலில் பாடல்கள் ஒலிக்கும்.
என் ஊர் காளியம்மன் கோவிலுக்குச் செல்ல இரு வழிகள் உண்டு.அந்த இரு வழிகளிலும் நிறம்ப,நிறம்ப முஸ்லீம் மக்களின் இல்லங்கள் இருக்கும்.ஒரு முஸ்லீம் தாத்தா காளியமன்,முருகன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து கால பூஜைகளில் கலந்துகொள்வார்.
என் பள்ளி நாட்களில் என்னுடன் சில முஸ்லீம் மாணவர்கள் படித்தார்கள்.சாந்து பொட்டில் டிசைன்,ஸ்டிக்கர் பொட்டில் கலர்ஸ்/டிசைன்ஸ் வைக்க ஆசை வந்த காலத்திற்கு முன்பு முஸ்லீம் பெண்கள் பொட்டு வைக்காமல் வருவது போலவே நானும் பொட்டு வைத்துக்கொள்ளாமல் செல்வேன்.அம்மா திட்டுவாங்க,எனவே பள்ளிக்குள் செல்லும்வரை பொட்டு வைத்துச் செல்வேன்,பிறகு அழித்துடுவேன்.
அவர்களைப் போலவே மின்னும் உடைகள் வாங்கி அணிந்ததுண்டு.படிப்பில் முதன் முதலில் எனக்கு போட்டிக்கு வந்ததும் முஸ்லீம் மாணவன்தான்.அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை அல்லாஹுனு சொல்வது போலவே நானும் சொல்வதுண்டு.நாளடைவில் அதையும் விட்டுவிட்டேன்.
மதுரை பாஷை போல சொன்னாக,வந்தாக,அந்த பிள்ள,இந்த பிள்ளனு பேசுவதை ரசித்துள்ளேன்,அது போல ,இது போல என்பதற்கு அது கணக்கா,இது கணக்கா என்று அவர்கள் உபயோகிப்பதை ரசித்துள்ளேன்.
சில முறை என் பக்கத்து வீட்டாருடன் வாரத்திற்கு ஒரு முறை நாகூர் தர்கா சென்றுள்ளேன்.அவர்களின் வழிபாட்டில் எனக்கு ஆர்வமில்லை என்றாலும் அந்த சூழல் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது.
பள்ளி முடிந்து பாலிடெக்னிக் படிக்கச் சென்றேன்.அங்கு எனக்கு கல்லூரி நிறுத்தமே ஒரு தர்கா வாசல்தான்.ஒரிரு முறை அந்த தர்காவிற்குள் சென்று வந்துள்ளேன்.பேருந்தில் முஸ்லீம் பெண்கள் வெள்ளை நிற,கருப்பு நிற புர்கா அணிந்து வருவதைப் பார்த்து “எப்பா எப்படித்தான் இவ்வளவு நேரம் போர்த்தி(அணிந்து) வர்றாங்களோனு ”வியந்ததுண்டு.பேருந்தில் பல சமயம் எனக்கு முஸ்லீம் பெண்கள்/பாட்டிகள் இடம் தந்ததுண்டு.பிரேக் போடும்போதோ /நகர்ந்து செல்லும்போதோ லேசாக உரசிவிட்டாலோ அம்மக்களிடம் நான் அதிகம் திட்டும் வாங்கியதுண்டு.
என் அப்பா உள்ளூரில் வேலை பார்க்கும்வரை ரம்ஜான் மாத நோம்பு கஞ்சியை அவ்வப்போது வாங்கி வருவார்.அதன் ருசியே தனிதான்.என் அப்பாவிற்கும் நெருங்கிய ஒரு முஸ்லீம் நண்பர் இருந்தார்.
என் திருமணத்திற்கு பிறகு தெரியவந்தது என் மாமியார் கடந்த 25 வருடங்களாக வருடத்திற்கு ஒருமுறை நாகூர் தர்காவிற்கு வந்து வழிபட்டு அன்று இரவு தர்காவிலே தங்கி மறுநாள் செல்வாராம்.தனது சுற்றாத்தாருடன் துவங்கிய இந்த வழிபாடு இன்றுவரை மாமியாருக்கு தொடர்கின்றது.
முஸ்லீம் மருத்துவமனையில் கிறிஸ்த்தவ கைனக்காலஜி சிசெரியன் செய்து எனக்கு முதல் குழந்தை பிறந்தது .இப்படியாக அனைத்து மதங்களும் வாழும் சூழலில் இஸ்லாமிய மதத்தினரின் நட்பு ,
உதவி இன்றுவரை தொடர்கிறது.

5 comments:
மதங்களின் இணைப்பாய் அருமையான மலரும் நினைவுகள்..!
பாராட்டுக்கள்..!
இனிய நினைவுகள்.....
எனக்கும் நினைவலைகள்.... இன்றைக்கு வரை தொடரும் நட்பு.....
மிகவும் அழகான நினைவலைகளுடன் எல்லாவற்றையும் ஓர் குழந்தைபோல பகிர்ந்து சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள் ஆச்சி
இனிய நல்வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் கோபு
நினைவுகள் என்றுமே சுகமானவை.
ஆயிரமாவது பதிவுக்கு
வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய
அன்பு நன்றிகள் ..!
Post a Comment