பேருந்தில் நடத்துனர் மீதி பணம் தரவேண்டுமெனில் நமக்கும் நடத்துனருக்கும் பார்வையிலும்,மனதிலும் பனிப்போர் நடக்கும்.தில்லியில் சில தனியார் பேருந்துகளில் டிக்கெட்டுக்கு பணம் வசூலிக்கிறாங்க,ஆனால் டிக்கெட் கொடுக்கமாட்றாங்க.கேட்டால் தருவோம்ங்கிறாங்க பிறகு அவ்ளவுதான் நம் ஸ்டாப்பிங் வந்துவிடும். மீதி பணமாக இருந்தாலும்அல்லது அலட்சியப் படுத்தப்டுகிறோம்.நின்னு கேட்டு வாங்கலாம்.டிக்கெட்டுதான போயிட்டுபோகுதுனு வந்துட வேண்டியதாக இருக்கு.ஆனால் இப்படியான பேருந்துகளில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சில்லரை ரெடியாக வைத்திருந்து மீதத்தை உடனே தந்துவிடுகிறார் நடத்துனர் .25 ரூபாய் டிக்கெட்டாக இருந்தாலும் டிக்கெட் தருவதில்லை.
தமிழகத்தில் நான் பார்த்தவரை நமக்குத் தேவையான ஸ்டாப்பிங்களின் வழியாக பேருந்து செல்லுமா என விசாரித்து செல்லுவோம்.நடத்துனரும் ஆம் இல்லை என்று பதில் சொல்லுவார்.ஸ்டாப்பிங்குகள் இல்லாத பட்சத்தில் பக்கத்து ஸ்டாப்பிங்கில் இறங்கினால் எளிதில் செல்லலாம் என்ற பட்சத்தில் மட்டுமே வேறு ஸ்டாப்பிங்குகளில் இறக்கிவிடப்படுவோம்.
தில்லியில் ஹிந்தி தெரியாதவர்கள் பேருந்துகள் மூலம் எங்காவது செல்பவர்கள்,ஹிந்தி தெரிந்திருந்தாலும் முற்றிலும் வழி தெரியாதவர்கள் பேருந்துகளில் விசாரிக்க செல்லும்போது உள்ளூர் பேருந்து நடத்துனர்கள் ம்....போகும்,ஏறுனு சொல்லி செல்ல வேண்டிய இடத்திற்கு பக்கத்தில் இறக்கிவிட்டு இன்னும் தில்லியை நன்றாக சுற்றிப்பார்க்க வைக்கிறார்கள்.
இதே போன்ற மக்களிடம் பொதுவாக ஆட்டோகாரர்களும் ,ரிக்ஷாகாரர்களும் அடுத்த தெருவிற்கு செல்வதற்கு வேறு நாலாபக்கம் சுற்றிவிட்டு பிறகு வந்து இறக்கிவிடுவதும்,அதிக பணம் வசுலிப்பதும் நடைபெறுகிறது.இது பொதுவாக அனைத்து இடங்களிலும் நடக்கலாம்.
ரிக்ஷா சவாரி அதிகம் வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.ஆட்டோ போகாத இடங்களுக்கும் ரிக்ஷாவில் போக முடியும்.என்னைப் பொருத்தவரை ரிக்ஷா சவாரி பாவமான செயலாகத் தெரியும்.தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே ரிக்ஷாவில் செல்லுவேன்.அரை கி,மீ அல்லது ஒரு கி,மீக்கு ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள் ரிக்ஷாகாரர்கள்.ஆனால் பலர் குறைந்தபட்சம் பத்து ரூபாய் வாங்குகிறார்கள்.செல்லும் தூரத்தைக்கொண்டும் பணம் கேட்பார்கள்.
இந்த காலத்தில் சின்ன குழந்தைக்கு கூட குறைந்தது பத்து ரூபாய்க்கு எதாவது வாங்கிக் கொடுத்தால்தான் கொஞ்சமாவது மதிப்புள்ளது போல தோன்றுகிறது.இந்நிலையில் அஞ்சுக்கும் பத்துக்கும் நமது முழு எடையையும் சுமந்து பெடல் மிதித்து செல்லும் தொழிலாளியிடம் பேரம் பேசுபவர்களை பார்க்கும்போது மனம் சங்கடப்படுகிறது.அதே நேரம் குறைந்த தூரத்திற்கு ரெண்டு மடங்கு வசூலிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு ரிக்ஷாவில் பருமனான இரண்டு பெண்களை ஏற்றிவந்த ரிக்ஷாகாரர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த காரில் மோதிவிடாமல் திருப்ப முயன்றபோது தடுமாறி ரிக்ஷா அந்த காரின் மேலே மோதி பயணித்த பெண்கள் உட்பட கவிழுந்துவிட்டனர்.அருகிலிருந்தோர் கூடி உதவ முற்படுகையில் காரில் வந்த நபரும் இறங்கி வந்தார்.அவர் என்ன செய்தார் தெரியுமா?ரிக்ஷாகாரரை பளார்னு அரைந்தார்.தன் கார் கண்ணாடி சேதமாகிவிட்டதற்கு அந்த ரிக்ஷாவை விற்றால் கூட ஈடுகட்ட முடியாதென்று கூச்சலிட்டார்.யாரும் காரில் வந்த நபரை கட்டுப்படுத்தவில்லை.அந்த ரிக்ஷாகாரர் மீண்டும்,மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.வழியில் வந்த மற்ற ரிக்ஷாகாரர்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
மற்றொன்று:
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கண்ணாடி டீப்பாயை மட்டும் ஏற்றிவந்தார் ரிக்ஷாகாரர். சாலையின் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது அந்த டீப்பாய் சரிந்து விழுந்து மேல்தட்டு பகுதி சுக்குநூறாக உடைந்தது.அவ்ர் தவித்ததை நேரில் பார்த்தவர்கள் மட்டுமே உணரமுடியும்.அக்கம்பக்கத்தில் போகிற வாகனங்களை எப்படி அவர் நிறுத்த முடியும்.எல்லா வாகனங்களும் சாரை சாரையாக செல்லுகிறது.இவரால் ரிக்ஷாவை சற்றுகூட திருப்பமுடியவில்லை.நான் என்ன பன்னுவேன்,என்ன பதில் சொல்லுவேனு அவர் புலம்பியதை என்னவென்று சொல்ல...
அன்னா ஹசேரா அவர்களின் வெற்றி தோல்வியிலாம் ஒரு பக்கம் இருக்கட்டும்,இத்தனை நாள் போராட்டத்தில் பொது இடங்களில் கலவரம்,பொது மக்களுக்கு உயிர்சேதம் இல்லாமல் நடந்தவரை நல்லது.ஆனால் இப்போது போராட்டம் என்றால் உண்ணாவிரதம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்கலாம்னு கத்துகொடுத்துவிட்டார்.கலவரம் இல்லா போராட்டங்கள் சிறந்ததுதான்.தொலைக்காட்சி சீரீயல்களில் கூட உண்ணாவிரதம் இருக்கப்போறேன்னு காட்சிகள் அமைப்பு வருகிறது.
ஒரு குட்டி சந்தோஷம்
விடுமுறைக்கு சென்றுவந்த என் மகள் ஹிந்தி பேசுவதை மறந்துவிட்டாள்.விடுமுறை முடிந்து வந்த போது ஹிந்தி பேசினால் புரிந்துகொண்டாள்.ஆனால் பதில் சொல்ல கஷ்டபட்டாள்.இந்நிலையில் பள்ளி வேன் டிரைவரை பையா என அழைக்க மறந்து அண்ணா என்று கூப்பிட டிரைவரும் காதில் வாங்கவில்லை போல.பிறகு பையா என்று அழைத்தாலும் சக பிள்ளைகளும் அண்ணா அண்ணா என்று கேலி செய்துள்ளனர்.சக பிள்ளைகளின் பெற்றோர் வரை இந்த அண்ணா என்ற வார்த்தை தெரிந்து் ரெண்டு அம்மாக்கள் என்னை விசாரித்தார்கள்,அண்ணா அண்ணானு உங்க பொண்ணு சொல்லிச்சாமே என்று.பையாவின் அர்த்தம்தான் அண்ணா என்று சொன்னேன்.ஆனாலும் மனதிற்குள் சின்ன ஆதங்கம் இருந்தது.என்னவெனில் அண்ணன் என்று தமிழில் சொல்லும்போதே எவ்வளவு இனிமையாக இருக்கும்.இப்படி விளக்கம் கொடுக்குறோமேனு நினைச்சேன்.
தற்போது சில நாட்களாக வட மாநிலம் முழுவதும் எல்லோராலும் அதிகமாக உச்சரித்ததும், கோஷங்கள் முழங்கியதும் அன்னா,அன்னா(ஹஷேரா) என்றுதான்.(கொஞ்சம் ஓவரா இருக்கோ....?)
கோகுலாஷ்டமியன்று எங்க காலணியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் அன்னா ஹசேராவாக வேடமிட்டு அவரின் வசனங்கள் பேசி அதிக கைதட்டல்களைப் பெற்றான்.இனி மாறுவேடப் போட்டிகளில் மாணவர்கள் மனதில் அன்னா ஹசேராவும் இடம்பெறுவார் .

14 comments:
நாட்டில் தம்மை சுற்றி நடக்கும் எத்தனையோ காட்சிகளை, மக்கள் சர்வசாதரணமாக எடுத்துப் போய் கொண்டு இருக்கும் வேளையில் - நீங்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து - கரிசனையுடன் இங்கே கூறி இருக்கிறீர்களே. நாட்டு நடப்பை குறித்து , அதிகம் சிந்திக்க வைக்கும் பதிவு.
ரிக்ஷாவும் நமது இந்தியாவின் பாரம்பரிய அடையாளத்தில் ஒன்றுதான், பிழைப்புக்கு வழி இல்லாத ஏழைகள்தானே இன்றும் ரிக்ஷாவை ஓட்டி கொண்டிருக்கிறார்கள், முடிந்தவரை நீங்களும் அதில் பயணித்து அவர்களின் வறுமையை போக்க உங்களாம் முடிந்ததை செய்யலாமே அக்கா, தேவையில்லாமல் எவ்வளவோ பணத்தை சினிமா, கேளிக்கை விசயங்களில் செலவிடுகிறோம் உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன், உங்கள் மகளுக்கு தமிழ் கண்டிப்பாக கற்றுக் கொடுங்கள் மற்றவர் பேசுவதை பற்றி கவலைபட வேண்டாம், என்னதான் ஹிந்தி பேசினாலும் தமிழர் என்றே சொல்லுவார்கள், நமது தாய்மொழியை நாம் விட்டுக்கொடுக்ககூடாது, அன்னைமொழியை காப்போம், அனைத்து மொழியையும் படிப்போம், இது நம்ம கேப்டன் சொன்னதுங்க :-)))
)))) voted 4 to 5 in Indli
vgk
nice Anna matter padikkum Pothu enathu mahan sonna oru vdayam ninaivukku varuhirathu
BBC oliparappil anna haasare in unnaviratham pattri seithi poikondirunthathu grade 8 padikkum mahan sonnar intha hasare avarkali unna hasaare enru alaikalaame enru
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு.
இங்கு எல்லாவற்றுக்கும் ரிக்ஷாகாரனைத் தான் அடிப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் ரிக்ஷாவின் முன் தன் பெண் கவனமின்றி விழுந்து விட்டதற்காக ரிக்ஷாகாரரை கன்னத்திலே பளார்னு அடித்தார்.
@சித்ரா
நம்மைச் சுற்றி நிகழும் பலவற்றில் மனதில் தாக்கம் ஏற்படுத்துபவைகளை பதிவிடுகிறேன்.தட்டிக் கேட்டு ரூல்ஸ் பேசமுடியாவிட்டாலும்,நிகழ்வதை எழுதியாவது வைப்போம் என்ற கரிசனம்தான் சகோதரி.
@சுரேஷ்
//தேவையில்லாமல் எவ்வளவோ பணத்தை சினிமா, கேளிக்கை விசயங்களில் செலவிடுகிறோம் உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன்//
சொல்வதையும் சொல்லிட்டு ”உங்களை சொல்லவில்லை”னு வேற ஒரு டின்ச். நீங்கள் சொல்வது சரிதான்.ஆனாலும் ரிக்ஷா மிதிப்பவர்களை பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கும்.
தமிழை எப்படி விட்டுகொடுக்க முடியும்.என் மகள் இரண்டு மொழியும் பேசுவாள்.
@alkn
ம்..அப்படியும் சொல்லலாம்.வருகைக்கு நன்றி.
@கோபாலகிருஷ்ணன் சார்
வருகைக்கும்,வாக்குபதிவை தெரிவித்தமைக்கும் நன்றி.
@ரெத்னவேல் சார்
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி
@ஆதி
வருகைக்கும்,சாட்சியாக கருத்திட்டமைக்கும் நன்றி.
//தற்போது சில நாட்களாக வட மாநிலம் முழுவதும் எல்லோராலும் அதிகமாக உச்சரித்ததும், கோஷங்கள் முழங்கியதும் அன்னா,அன்னா(ஹஷேரா) என்றுதான்.(கொஞ்சம் ஓவரா இருக்கோ....?)//
அது (அண்ணா ) மூணு சுழி "ணா"ஆச்சி .
நானும் ஊரில் இருந்து வந்து விட்டேன் .
நானும் டெல்லியில் இருந்திருக்கிறேன் பத்து வருஷங்கள்.நீங்கள் சொல்வது அத்தனையும் கண் முன்னே தெரிகிறது.மொத்தத்தில் டெல்லி ரிக்க்ஷகாரர்கள் ஏமாத்துவதில்லை.மற்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம்
தவறு யார் மேல் இருந்தாலும் அடி வாங்குவது எப்போதுமே ரிக்ஷா செலுத்தும் பாவப்பட்ட ஜன்மம் தான்...
ரிக்ஷா செலுத்துபவர்களில் பெரும்பாலானோர் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள்...
@ஏஞ்சலின்
வாங்க,வாங்க,,,
ஊர் பயணம் நல்லபடியாக இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.
எனது வரவேற்புகள்!!
//அது (அண்ணா ) மூணு சுழி "ணா"//
நானும் பிழையில்லாமலே எழுதியிருக்கிறேன்.எப்படியோ
உச்சரிப்பு அண்ணாதானே.
@கே.பார்த்தசாரதி
.அப்போதிலிருந்து இப்படிதான் நடந்துகொண்டிருக்கிறதா...
முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.
@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி.
ரிக்சா.. ரிக்சா.. வாழ்த்துக்கள்..
@கோவி
வருக!
ரிக்சா என்று எழுதியிருக்க வேண்டும்.
சுட்டிகாட்டியமைக்கும்,வாழ்த்திற்கும்
உங்கள் கவிதைகள் போலவே கருத்திட்டமைக்கும் நன்றி.
Post a Comment