*வணக்கம் வருகைக்கு நன்றி*

Aug 12, 2011

ஊர் பயண நினைவுகளில் சில

வணக்கம் .

மீண்டும் வருகை தந்துள்ளேன் அனைவருக்கும் எனது விசாரிப்புகள்.

எனது பெற்றோர் மற்றும் மாமியார் வசிப்பது ஊராட்சி கிராமமாகும். சில வருடங்களுக்கு முன்பே மாணவன் முதல் கடைநிலை மனிதன் வரை செல்ஃபோன் உபயோகித்ததை பார்த்திருந்தாலும் செல்ஃபோன் கையில் இருந்தாலும் இந்த நம்பரை போட்டு குடுப்பா என்றவர்களும்,தவறிய அழைப்பை பார்க்கத் தெரியாதவர்களும் தற்போது அடுத்தவர் உதவியின்றி செல்ஃபோனை உபயோகித்ததும்,தானே சென்று ரீசார்ச் செய்துகொள்வதும்,தான் உபயோகிக்கும் சிம் கார்டில் என்னென்ன ஆஃபர் இருக்கிறது பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வதும்,தொலைபேசி இல்லாத வீட்டில் கூட செல்ஃபோன் இருப்பதை விட, ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் இரண்டு செல்ஃபோன் வந்துவிட்டது முன்னேற்றங்களில் ஒன்றாக கருதினேன்.

வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றித் திரிபவர்கள் குறைந்துவிட்டனர்.பணம் சம்பாதிக்கும்,சேர்க்கும் ஆர்வமும் அதற்கான வழிகளிலும் ஈடுபாடு அதிகமாக காணப்பட்டது.பள்ளி சீருடை பெண்களுக்கு பாவாடை தாவணியிலிருந்து சுடிதாராக மாறியிருந்தது.பாட புத்தகங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஊடகங்களை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
விடலைப்பருவத்தினர் வழக்கம்போல காணப்பட்டனர்.

வாழ்க்கையின் அனுபவம் பெற துவங்கும் வயது,
பெரியோர் சொல்வதை ஏற்க சிரமப்படும் வயது.
உலகத்தில் தாம் மட்டுமே வலம் வந்து

 மேகத்தில் மிதக்கும் பருவம்.

 ஆண் பெண் நட்பு அதிகமாக தென்பட்டது.ரசித்து,மெய் மறந்து காதலிப்பது போன்ற பாவனையில் உண்மை காதலின் பெருமையும்,பொருமையும் இல்லாத காதல்கள் மலர காத்திருக்காமல் வழி தெரியாமல் வெடித்து சிதறிக்கொண்டிருக்கிறது.மெய் காதல்  எங்காவது துளித்திருக்கும்.அந்த காதல் வாழட்டும் பல்லாண்டு. ஆனால் முன்பைவிட படிப்பிற்காகவும்,வேலை பார்க்கவும் வசிக்கும் ஊரைவிட்டு வெகுதூரம் அனுப்பவும்,செல்லவும் தயக்கங்கள் குறைந்திருந்தது.

குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும்.

தமிழகம் வந்த சில நாட்களில் ஒரு நாள் ஷேர் ஆட்டோவில் சென்றபோது ஒரு ஸ்டாப்பிங்கில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஏற முயன்றவர் கணவருடன் உக்காந்திருந்த என்னை மாறி உக்கார சொன்னார்.பரவாயில்ல உக்காருங்க கொஞ்ச தூரம்தானேனு நான் சொல்லியும் அந்த பெண் கேக்கவில்லை.பிறகு என் கணவர் மாறி உக்காந்துகொண்டார்.ஐந்து நிமிட பயணத்திற்கு ஆண் பக்கத்தில் உக்கார மறுத்த அந்த பெண்ணின் முகத்தில் தோன்றிய சில வினாடி தயக்கம் லேசான வெட்கம் எனக்கு வியப்பாக இருந்தது.(அப்பாடா என் கணவர் பக்கத்தில் அந்த பெண் அமரவில்லை என்பதனில் லேசான பொசசிவ்னஸ் சந்தோஷமும் பட்டுக்கொண்டேன்...ஹி,ஹி..) 
மக்கள் கூட்டம் அதிகமான மற்றொரு பேருந்து பயணத்தில் உக்கார சீட் இல்லாமல் நின்றவாறு பயணித்தோம்.எங்கள் அருகில் குழந்தையுடன் ஒரு பெண்ணும் நின்றே பயணித்தார்.சிறிது தூரத்தில் இரு ஆண்கள் அமர்ந்திருந்த பக்கத்து சீட்டில் ஒருவர் எழுந்து செல்ல ஒரு இடம் கிடைத்தநிலையில் அந்த பெண் தன் குழந்தையை நடுவில் உக்காரவைத்து சளெகரியமில்லாமல் ஓரமாக அமர்ந்துகொண்டார்.  2011 லயும் இப்படிபட்ட பெண்களும் இருக்காங்க.   

சில இடங்களும்,சூழ்நிலைகளும் எதுவுமே மாறவில்லையே என்பதாக இருந்தது.பல சூழ்நிலைகளும் இடங்களும் அடேங்கப்பா இவ்வளவு மாற்றமாயென வியக்கவைத்தது.காலமாற்றங்களிலும் விங்ஞான மற்றும் நாகரீக ,வளர்ச்சியிலும் மாற்றங்கள் இருந்ததே தவிர இந்த வலையில் வாழும் எனக்கான சொந்தபந்தங்கள்,நட்புகள்,சுற்றத்தாரின் குணத்திலும்(நல்ல/கெட்ட) இயல்பிலும் மாற்றங்கள் இருப்பதாக உணரவில்லை.சிறு பிள்ளைகளாக இருந்தவர்கள் வளந்திருப்பதை பார்க்கும்போது கண் மூடி திறப்பதற்குள் நிகழ்ந்தது போல இருந்தது. சிலரின் மரணம் வேதனையளித்தது. கால சக்கரத்தின் சுழ்ற்சியில் அனைத்து பந்தங்களின் பிணைப்பும் தளர்கிறது. அன்பும்,மனசாட்சியும் உள்ளவர்கள் மட்டுமே பிணைப்புக் கயிறாகவும் பந்தங்களோடு நிலைத்து  வாழவும் முடிகிறது.
                                             ****************************************
ஒரு  தமாசு

தன் வயிற்றில் கரு உருவாகி குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட ஆண் ஒருவர் கடவுளிடம் ,கடும் தவமிருந்து வரம் பெற்றானாம்.
அவன் வயிற்றில் குழந்தை உருவாகிவிட்டது.மருத்துவரிடம் பரிசோதனை செய்துவந்தான்,மருத்துவர் எல்லாம் சரியாக உள்ளது,மருந்துகளை சாப்பிடுங்கள்,ரெஸ்ட் எடுங்க,கனமான பொருள்களை தூக்காதீங்க,மாடிப்படி ஏறி இறங்காதீங்க என்று அறிவுரை கூறினார்.
இதே அறிவுரை 3,5 ஆம் மாதங்களிலும் தொடர்ந்தது.

7ஆம் மாதம் பரிசோதனைக்கு வந்தவரிடமும் மருத்துவர் அதே அறிவுரையை சொல்ல அந்த ஆள் டென்சனாகி “டாகடர் எப்பதான் டாகடர் என்னை படி வழியா போகலாம்னு சொல்வீங்க  எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல,என் குழந்தைக்கு எதும் ஆகிடக்கூடாது, தினமும் பைப் லைன்ல ஏறி தாவி போறது ரொம்ப கஷ்டமா இருக்கு,நான் மூனாவது மாடியில் குடியிருக்கேன்,ல்ஃப்ட் வசதியும் இல்ல என்றாராம்.

16 comments:

Chitra said...

பள்ளி சீருடை பெண்களுக்கு பாவாடை தாவணியிலிருந்து சுடிதாராக மாறியிருந்தது.


.... ரொம்ப நாட்கள் கழித்து ஊருக்கு சென்று இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. :-)

Chitra said...

அந்த ஜோக், ரொம்ப நல்லா இருக்குது. ஹா,ஹா,ஹா,ஹா....

நல்லபடியாக ஊரு பயணங்கள் முடிந்து பதிவுலகம் திரும்பி வந்து இருக்கிறீர்கள். வரவேற்கிறோம்!

ஆச்சி ஸ்ரீதர் said...

@சித்ரா
//நல்லபடியாக ஊரு பயணங்கள் முடிந்து பதிவுலகம் திரும்பி வந்து இருக்கிறீர்கள். வரவேற்கிறோம்! //

மிக்க நன்றி.

//பள்ளி சீருடை பெண்களுக்கு பாவாடை தாவணியிலிருந்து சுடிதாராக மாறியிருந்தது.//

எங்க ஊர் பள்ளியில் கடந்த வருடம் வரை பாவாடை தாவணிதாங்க.

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வரவேற்புகள்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

கோவை நேரம் said...

வாங்க ....வாங்க ...ரொம்ப லேட் ஆக வந்தாலும் மொபைல் , பிரண்ட்ஷிப் இதெல்லாம் பார்த்து ... லேட்டஸ்ட் ஆக சொல்லி இருக்கிறீர்கள்

வெங்கட் நாகராஜ் said...

பதிவுலகில் திரும்பவும் ஒரு வரவேற்பு....

பல விஷயங்கள் பற்றி சொல்லியது நன்றாக இருக்கிறது.

ஒரு சில விஷயங்களில் அளவுக்கதிகமான மாற்றமும் சில விஷயங்களில் மாற்றமே இல்லாமல் இருப்பதாகத்தான் தெரிகிறது நமது தமிழகத்தின் பல கிராமங்கள்....

தொடர்ந்து உங்கள் பயண நினைவுகளில் இருந்து பல பதிவுகள் எதிர்பார்த்து இருக்கிறோம்.

Unknown said...

வாங்க மேடம் ரொம்ப நாள் ஆச்சு, எப்படி இருக்கீங்க, ஒரு முழுமையான பயண கட்டுரையை உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கூர்ந்து கவனிச்சு எழுதி இருக்கீங்க.. ..
பகிர்ந்துகொள்ள நாங்கள் இருக்கோம் என்ன இப்படி சுருக்கமா ஒரு பதிவில். இன்னும் அனுபவங்களைச் சொல்லுங்க.. :)

எல் கே said...

வலைக்கு மீண்டும் வந்ததுக்கு நல்வரவு,. ஊர் நினைவுகள் என்றும் சுகம்

ADHI VENKAT said...

வாங்க ஆச்சி. ஊர் பயணமெல்லாம் எப்படி இருந்தது?
செல்போன் இல்லாத இடமே இல்லை.
கடைசி தமாசு நல்லா இருந்தது.

Senthil Kumar.T.N said...

aaha arputham
valthukal

Senthil Kumar.T.N said...

ayyo hah ha ha ha ha ah ah
thamasu thamasu

Senthil Kumar.T.N said...

ayyo hah ha ha ha ha ah ah
thamasu thamasu

Senthil Kumar.T.N said...

ayyo hah ha ha ha ha ah ah
thamasu thamasu

ஆச்சி ஸ்ரீதர் said...

இணையதள கோளாறு காரணமாக பதில் உடனே தர இயலவில்லை.

வருகை தந்து வரவேற்பு அளித்துள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.தங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீண்ட விடுமுறைக்குப்பின் மீண்டும்

வருக! வருக! வருக!

என வரவேற்கிறோம்.

அன்புடன் vgk