.கம்ப்யூட்டர்,கம்ப்யூட்டர்......
அப்படின்னா தீவிரவாதி/வில்லன்/திருடனை படம் வரைந்து கண்டுபிடிப்பாங்களே சினிமாவில்,அதனால் நான் முதன் முதலில் கம்ப்யூட்டரை பார்த்தது சினிமாவில்தான்.எங்க ஊரு பிரபல ஜவுளி/மளிகைக் கடைகளில் கம்ப்யூட்டர் பில் போடுவதை பார்த்திருக்கின்றேன்.
டாக்டர்/நர்ஸ் உடை அணிந்துகொள்ளவே டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட நான்,பாலிடெக்னிக்கில் படித்தால் விரைவில் வேலை கிடைக்குமென்று 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிக்கில் சேர முற்படுகையில் எந்த துறையை தேர்ந்தெடுப்பதென்று தெரியவில்லை.தனியார் கணினி மையங்கள் பிரபலமாகத் துவங்கிய சமயம் அது.அப்பா சொன்னதால் எலக்ட்ரானிக்ஸ்&கம்னியுகேசனில் சேர்ந்தேன்.
கல்லூரியில் கணினி லேபை க்ராஸ் பன்னும்போது மனதை ஈர்க்கும் எதோ ஒன்று ஜில் அறையில் வரிசையாக நிற்பதாக உணர்வேன்.அதில் படித்து கற்க அப்படி என்ன இருக்கும்னு யோசித்திருக்கின்றேன்.முதலாம் ஆண்டு நிறைவடையும் நேரத்தில் அவைஸ் என்ற தனியார் கம்யூட்டர் நிறுவனம் கணினி கண்காட்சி வைத்திருந்தார்கள்.அனைத்து மாணவர்களுக்கும் இலவச அனுமதி.நானும் சென்றிருந்தேன்,அங்கு கணினி பற்றின ஏற்பட்ட மாய அதிர்ச்சி என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.
கண்காட்சியில் எங்களுக்கு காண்பிக்கப்பட்டது ms-word & basic launguage கோபால் லாங்வேஜும் இருந்தது என நினைக்கிறேன்.நமது பெயரை எழுதி ஸ்கிரீன் சேவரில் ஓடி ஆட விட்டதும்,font size,bold,underline இதெல்லாம் செய்து காமித்தபோது வாயை பிளந்துகொண்டு பார்க்காத குறையா பிரமித்தேன்.என் பேரை எழுத அன்றுதான் ரொம்ப கஷ்டபட்டேன்,ஏன்னா என் பேருக்கு ஸ்பெல்லிங் கீ போர்டில் தேடித்தேடி அழுத்துவதற்குள் கர்சர் ஒரு பக்கம் துள்ளுவதும்,ஒரு லெட்டருக்கு பக்கத்து லெட்டரையும் சேர்த்து அழுத்திவிட்டதும்,தவறான லெட்டரை நீக்க கஷ்டபட்டு கீ போர்டில் நீட்டிய ஆள்காட்டி விரலுடன் வலம் வந்ததும் பக்கத்தில் இருப்பவர் அசிங்கமா நினைச்சிடுவாங்கன்னு நெளிந்ததும் மறக்க முடியாது.
அடுத்துms paintword,ms dos,games வகை வகையா கலர் ,டிசைன்ஸ்,கம்ப்யூட்டரில் படம் வரைவது பவர் பாயிண்டில் விதவிதமா ஸ்லைட் ஷோ என்று எதோ மாய உலகிற்குள் கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்ட எபஃக்ட்.அந்த கண்காட்சியை விட்டு வர மனதே இல்லை.கம்ப்யூட்டர் கத்துக்கனும்னு என் வாழ்க்கையிலே முதல் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நாள் அது.
கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் basic languge ,ms dos வந்தது.ஆசையா கணினி லேபிற்குள் சென்ற எனக்கு மல்டிமீடியா,விஸ்வல் எஃபக்ட் எதுவும் இல்லாமல் ப்ரோக்ராம் கோடிங் எழுது,லாஜிக் கிரியேசன் என்று காய வைத்துட்டாங்க.எனக்கும் லாஜிக்கும் சம்மந்தமே இல்ல.......லைப்ரேரியில் பேசிக் லாங்வேஜ் புத்தகம்(பாலகுருசாமி அவர்கள் எழுதியதுனு நினைக்கிறேன்) எடுத்து அதில் ஒரு முக வடிவம் ரிசல்ட்டிற்கு ஒரு பக்கத்திற்கும் மேல் கோடிங்ஸ்களை காப்பி செய்து அவுட்புட் கொண்டுவந்ததை நானே ப்ரொக்ராம் கோடிங் கண்டுபிடிச்ச மாதிரி சந்தோசப்பட்டேன்.அப்போ ஸ்டோர் செய்ய ஃப்ளாப்பி ட்ரைவ்தான் இருந்தது.
ப்ரோக்ராமிங் கோடிங்ஸ்/லாஜிக் என்பது கசந்ததால் கணினி மீதான ஆர்வம் எனக்கு குறைந்துவிட்டது.மூன்றாம் ஆண்டில் எந்த கணினி சப்ஜக்ட்டும் கிடையாது.ஆனால் இறுதியாண்டில் அருகில் உள்ள இன்ஜினியரிங் காலேஜில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டேன்.அங்குதான் ,dvd,cd,net,mail பற்றி அறிந்தேன்.பிரமிப்பை உண்டாக்கினாலும் அய்யோ எப்பா ஷோவில் ஜாலியாதான் இருக்கும் நாம் ப்ரசண்ட் ஆகும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும்னு நானே ஒரு புல்ஸ்டாப் போட்டுகிட்டேன்.
ஒரு நாள் என் தோழி ஒருவருடன் இண்டெர்நெட் மையத்திற்கு சென்றபோது இணையம் மெயில்,சாட்டிங் என்பது கண்ணை கட்டி காட்டில் விட்டதாய் இருந்தது.கீபோர்டை பார்த்தாலே எரிச்சலாகியது.மானிட்டரில் வருவதை படிச்சு தெரிஞ்சுக்கனும்னு மெயிலை சுற்றிலும் உள்ள விளம்பரங்களையெல்லாம் படிச்சேன்.என் தோழி விரைவா டைப் பன்னுவா நான் டைப்புவதற்குள் ஸ்க்ரீன் சேவரே வந்துவிடும்.எப்பபாஆஆஆஆஆ கம்ப்யுட்டரும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்னு நினைச்சேன்.
இன்ஜினியரிங் படிக்க முயற்சித்தேன்,என் 82% க்கு சீட் கிடைக்கவில்லை.வருசத்துக்கு 65000 கட்டி மேனெஜ்மெண்ட்டில் படிக்கதான் முடியும் என்றனர்.அந்தளவுக்கு பண வசதி இல்லாததால் அடுத்து ஒரு பிரபல தனியார் கணினி மையத்தில் சேர்ந்தேன்.ms.dos,ms.office கற்க 8000 கட்டினேன் என்றால் உங்களால் நம்ப முடியுமா ?பட் அதுதான் உண்மை.
வகுப்பு பற்றின என்கொய்ரிக்கு போகும்போதே குளு குளு அறையில் உக்காரவைத்து சாப்பிட கேக் கொடுத்து என்னை கவிழ்த்துவிட்டார்கள்.மற்ற கணினி மையங்களில் கட்டணம் எவ்வளவென விசாரிப்போம் என்றார் அப்பா,விசாரித்ததில் இங்குதான் டபுள் கட்டணம் என்பது தெரியவந்தாலும் நான் பிடிவாதமாக கேக் கொடுத்த மையத்திலே சேர்ந்துகொண்டேன்.
கணினி முன் வீலிங் சேரில் அமர்ந்தபோது பெரிய கம்பேனிக்கு ஓனர் போல மனதில் துள்ளல்.அந்த செண்டரில் என்கொய்ரிக்கு வந்ததிலிருந்தே எனக்கு ஒரு டவுட்டு,இங்கிருப்பவர்களுக்கு குரல் சப்தம் குறைவாகவே இருந்ததுதான்.எனக்கு டிஜிட்டல் குரல்,நான் பேச ஆரமித்தாலே மெதுவா பேசுங்க,பி கொய்ட் னு ஃபேக்காலிட்டி சொல்லி சொல்லி என்னையும் பூனை மாதிரியே பேச வச்சாங்க.அதுதான் மேனரிசமாம்.
டைப்பிங் கற்கவில்லை.கல்லூரியில் கணினி லேபில் கீபோர்டுக்கு பல்விளக்க ஆள்காட்டி விரலை உபயோகிப்பது போல இங்கும் ஆரம்பித்தேன்.நாட்கள் கடக்க கீபோர்ட் என்னுடன் பழகியது.சுமாராக டைப்புவேன்.ms,office,ms dos கற்றதில் செமினார் க்ளாஸ் எடுத்ததில் என் மீது நம்பிக்கை கொண்ட அந்த கணினி மையம் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஃபேக்காலிட்டியாக வாய்ப்பு தந்தது.எனக்கு வேலை கிடைத்துவிட்டதென்று அன்று நான் மகிழ்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.(2000 ஆம் ஆண்டு)
தினமும் பள்ளிக்கு கணினி ஆசிரியராக ஒரு மணி நேரமும் கற்கவும் செல்வேன்.சம்பளம் இவ்வளவென்று சொல்லவில்லை,மாதம் 500 ரூபாயாவது கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்.குழந்தைகளுக்கு கணினி சொல்லித்தருவதும்,நானே தேர்வு வைத்து அதனை நான் கற்கும் மையத்திற்கு சப்மிட் பன்வதும் இனிமையான,புதுமையான அனுபவமாக இருந்தது.கணினி என்பதால் பள்ளி மாணவர்களும் மற்ற ஆசிரியர்களைவிட என்னை எதிர்பார்த்திருப்பதும்,நான் வந்ததும் குதுகுலமாவதும் மற்ற ஆசிரியர்களுக்கு என் மீது ஒரு பொறாமைப் பார்வையைத் தூண்டியது.
அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து அடுத்த 6 மாத கோர்ஸில் 9 ஆயிரத்திற்கு மேல் கட்டணத்துடன் இணைந்தேன்.அப்போதுதான் மேலும் பல மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன.கணினி நிறுவனம் எனக்கு ஒரு மாதமும் சம்பளம் தரவில்லை,கேட்டதற்கும் 6 மாதத்திற்கு சேர்த்து கொடுத்துவிடுகிறோம் என்றார்கள்.கணினி மையத்திலும் செய்வதறியாமல் யாரும் மறக்க முடியாதளவிற்கு தேவையில்லா பிரச்சனைகளை நானே இழுத்துக்கொண்டேன்.இத்தனைக்கும் ஆறுதலாக தேவதை வந்துவிட்டாள் என்னைத் தேடி என்பதாய் புது வரவாய் கணினி கற்க வந்த மாணவி இனிய தோழியாய் அமைந்தார்.இன்று வரை எங்கள் நட்பு தொடர்கின்றது(13 வருடங்கள் ஆகிறது,திருஸ்டி போடனும்).
எனக்கு ப்ரோக்ராமிங் நாலேட்ஜ் 50% கூட இல்லை.பட் அந்த பெண் c++ ல் வெளுத்துக்கட்டுவார்,நான் வேடிக்கைப் பார்த்துவிட்டு அவர் உழைப்பை
ரெண்டு பேரும் சேர்ந்து செய்ததாக காண்பித்துக்கொள்வோம்.ms-acsses ல் திருபார்கவி பிரைவேட் லிமிட்டட் என்ற பெயர் வைத்து இன்வைசிங் ப்ராஜக்ட் செய்தோம்.இன்னொரு ப்ராஜக்ட் என்ன செய்தோம்னு நினைவில்லை.ஆனால் முதல் 6 மாத கோர்சில் என்னுடன் படித்த மாணவர் ஒருவர் 2 கணினி வாங்கிப்போட்டு dtp ஜாப் துவங்கிவிட்டார்,இன்னொருவர் இண்டெர்நெட் மையமே துவங்கி இன்றுவரை நடத்தி வருகின்றார்.
எனக்கு பள்ளியில் 6 மாதம் முடிந்தவுடன் சம்பள செக் கவருடன் கொடுத்தார்கள்,கவரை பிரித்துப் பார்க்காமல் அம்மா அப்பவிடம் காண்பிக்க மகிழ்ச்சியில் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு ஓடாத குறையாக சென்றேன்.அம்மா அப்பாவும் பிரிக்காமல் சாமி படத்திற்கு கீழ் வைத்து பிரார்த்தனை செய்து பெருமிதமாக என்னிடம் கொடுத்தார்கள்.பிரித்துப் பார்த்தால் செளத்துப்போன புஸ்வானமா போயிட்டுப்பா.1000 rs only என்ற செக் தான் உள்ளே இருந்தது.அம்மா அப்பாவும் சரி விடும்மா என்றே சொன்னார்கள்.
6 மாதத்திற்கு 1000 ரூபாய்.நானும் மேற்கொண்டு அந்த நிறுவனத்தில் எதும் கேக்கவில்லை.எனக்கு செக் கொடுத்த பிறகு அந்த வேலைக்கும் வேறு நபரை நியமித்தார்கள்.என்னுடைய இரண்டாவது 6 மாத கோர்சை நானும் காப்பியடித்தே கழித்தேன்.அதற்குபின் கணினியைத் தொட்டதே இல்லை.
நான் சென்ற கணினி மையத்தின் நிறுவனர் சொன்ன ஒன்று எங்களால் மறக்க முடியாது. அது
என்ன செய்ய நினைத்தாலும் 1000 காரணம் சொல்லலாம்
எதை செய்யாட்டாலும் 1000 காரணம் சொல்லலாம் .
என்பதுதான்.
2009 ல் கணவர் வாங்கிய லேப்டாப்பில் தான் மறுபடியும் கணினி நட்பு தொடர்கின்றது.அப்போ என் மூத்த மகளுக்கு 2 வயது.அப்போதே அவள் எளிமையாக எளிமையாவற்றை கணினியில் கற்றுக் கொண்டாள்,31/2 வயதில் password டைப்பி விண்டோஸ் ஒப்பன் செய்து பெயிண்டிங்,கேம்ஸ் விளையாடுவாள்.
இப்போ என் இளைய மகளின் கணினி அனுபவத்தை பாருங்கள்.
நம்ம மதுரை தமிழர்(அவர்கள் உண்மைகள்) மற்றும் கோவை 2 தில்லி ஆதி அவர்கள் கணினி அனுபவங்கள் தொடர் பதிவிட அழைத்ததினில் இந்த பதிவினை சமர்ப்பித்து அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கின்றேன்
இதுவரை கணினி அனுபவங்களை பகிரவில்லையெனில் இனி தங்களது கணினி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

38 comments:
எவ்வளவு உழைத்தாலும் கூலி குறைவு எனும் போது சற்று எரிச்சல் வரும்.... 1000 ரூபா கம்மி தான்...
கணினி அனுபவம் அருமை..
உங்களின் மகளின் கையில்? லேப்டாப் பாவம்...
நம்ம பிள்ளைகள் கம்ப்யூட்டர்ல புகுந்து விளையாடும்போது நாமெல்லாம் வேஸ்ட்ன்னு தோணுது!!
தங்களது அனுபவங்களை மிக அழகாக, தெளிவாக, மறைக்காமல் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்
அன்புள்ள ஆச்சி,
வணக்கம். சூப்பரா எழுதியிருக்கீங்க.
அசத்திட்டீங்க
ஒவ்வொன்றா வந்து சொல்றேன்.
>>>>>
//என் தோழி விரைவா டைப் பன்னுவா நான் பார்வையற்றவரோட மோசமா டைப்புவதற்குள் ஸ்க்ரீன் சேவரே வந்துவிடும்.எப்பபாஆஆஆஆஆ கம்ப்யுட்டரும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்னு நினைச்சேன்.//
நீங்க நினைச்சீங்க .... அன்னிக்கு.
ஆனால் இன்னிக்கு .... அடேங்கப்பா
என்னையே தமிழ்மணத்தில் இணைச்சி அசத்திட்டீங்கோ.
ஆனால் நீங்க கட்டி வைத்த தமிழ்மணம் என்ற பெண்டாட்டியை நான் டைவர்ஸ் பண்ணிட்டேன்.
எனக்கு அவளுக்கும் ஒத்து வரவில்லை. ;(((((
கழட்டிக்கொண்டு ஓடிவிட்டது அந்தக்கழுதை.
தொலையட்டும் சனி என்று நானும் விட்டுவிட்டேன்.
>>>>>
//கணினி என்பதால் பள்ளி மாணவர்களும் மற்ற ஆசிரியர்களைவிட என்னை எதிர்பார்த்திருப்பதும்,நான் வந்ததும் குதுகுலமாவதும் மற்ற ஆசிரியர்களுக்கு என் மீது ஒரு பொறாமைப் பார்வையைத் தூண்டியது.//
இது சூப்பர். எனக்கே உங்கள் மேல் பொறாமை ஏற்பட்டுவிட்டது, சமீபத்தில்.
அதுபற்றி உங்களுக்கே தெரியுமே, ஆச்சி.
“சொல்லத்தான் நினைக்கிறேன்” ;)
>>>>>
//நான் சென்ற கணினி மையத்தின் நிறுவனர் சொன்ன ஒன்று எங்களால் மறக்க முடியாது. அது
என்ன செய்ய நினைத்தாலும் 1000 காரணம் சொல்லலாம்
எதை செய்யாட்டாலும் 1000 காரணம் சொல்லலாம் .
என்பதுதான்.//
உங்களால் மறக்க முடியாத. 1000 காரணங்கள் இருக்கு என்ற தைர்யத்தில் தான் நீங்க திருக்குறள் மாதிரி ஒண்ணே முக்கால் வரிகளில் எனக்குப் பின்னூட்டங்கள் தருகிறீர்கள், என நானும் இப்போது தான் புரிந்து கொண்டேன்.
வாழ்க! எப்படியோ வருகை தந்து ஏதாவது ஆச்சி வாயால் சொன்னாலே எனக்குத் திருப்தி தான்.
சமயத்தில் வருவதே இல்லையே ;(
இன்றைய சிறப்புப்பதிவுக்கு இன்னும் நீங்க வரவே இல்லை ... ஆச்சி, நினைவு இருக்கட்டும்.
>>>>>
//2009 ல் கணவர் வாங்கிய லேப்டாப்பில் தான் மறுபடியும் கணினி நட்பு தொடர்கின்றது. அப்போ என் மூத்த மகளுக்கு 2 வயது. அப்போதே அவள் எளிமையாக எளிமையாவற்றை கணினியில் கற்றுக் கொண்டாள்,31/2 வயதில் password டைப்பி விண்டோஸ் ஒப்பன் செய்து பெயிண்டிங்,கேம்ஸ் விளையாடுவாள்.
இப்போ என் இளைய மகளின் கணினி அனுபவத்தை பாருங்கள்.//
சிங்கக்குட்டியான ஆச்சிக்குப்பிறந்துள்ள குட்டிச்சிங்கங்களான [1] அம்ருதா + {2] யக்ஷயாஸ்ரீ இரண்டுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள், ஆச்சி.
அன்புடன் கோபு
விறுவிறுப்பான கணினி அனுபவங்கள் வியக்கவைக்கின்றன..
குழந்தைகளுக்கு இனிய வாழ்த்துகள்..!
சிறப்பான கணணி அனுபவம் வாழ்த்துக்கள் தோழி !
கணினி மீது அமர்ந்திருக்கும் சிறு பிள்ளையின் குறும்பினைக்
கண்டு மிகவும் ரசித்தேன் :)
உங்கள் இளைய பெண் ரொம்ப க்யூட்
சாமி முன்னால கவரை வைத்துவிட்டு கண்ணை மூடி சாமி கும்பிடும் போது அவருக்கு காணிகையாக நீங்கள் ஏதும் வைக்காததால் அவரு 9000 ரூபாயை லவட்டி இருப்பார்
என் அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிகவும் நன்றி டீச்சர்
Your article is quite natural. All the best and welcome back.
@தமிழ்வாசி பிரகாஷ்
//எவ்வளவு உழைத்தாலும் கூலி குறைவு எனும் போது சற்று எரிச்சல் வரும்.... 1000 ரூபா கம்மி தான்...//
ஆமாங்க ரொம்ப அநியாயம்.
வாயிறுந்தால்என் வீட்டு கணினி தினமும் கதறும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்
@ராஜி
இப்ப உள்ள பிள்ளைகள் மொபைல்.கம்ப்யூட்டர்லாம் அட்டகாசமா ஆப்ரேட் பன்னுதுங்க,இந்த வாய்ப்பு நமக்கு லேட்தான்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்
@viya pathy
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்
@வை கோபலகிருஷ்ணன் சார்
உங்களையும் சேர்த்து இன்னும் ரெண்டு பேருக்கு உதவி செய்றேன்னு சொதப்பி ஒரு வழியாக்கியதை என்னாலும் மறக்க முடியாது சார்,உங்க பதிவின் புகழ் திரட்டிகள் இல்லாமலே சிறக்கின்றதே சார்.
வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சார்
@இராஜராஜேஸ்வரி
வாழ்த்திற்கும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் மேடம்
@அம்பாள் அடியாள்
ரசித்தமைக்கும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்
@அவர்கள் உண்மைகள்
அந்த கடவுள் செய்தாலும் செய்திருப்பார்.
//என் அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிகவும் நன்றி டீச்சர்//
டீச்சரா????????ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..
இப்பதிவிற்கு வாய்ப்பு தந்தமைக்கும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
@ஆரோக்கிய ராஜ்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
(இனி அடுத்த பதிவிற்கு பல மாதங்கள் ஆகலாம்)
உங்க கணினி அனுபவங்கள் பிரமாதம். சம்பளம் வாங்காம வேலை செஞ்ச அனுபவம் எனக்கும் உண்டு...:))
குட்டிம்மா செம வாலா இருக்காளே....:))
நம்ம பசங்களோட கம்பேர் பண்ணும் போது நாம லேட் தான்...
கணினி அனுபவங்கள் சூப்பர்.லேட்டா வந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்.
அன்புள்ள ஆச்சி,
தங்கள் அன்புத்தந்தையின் அகால மரணச்செய்தி கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
;((((( மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ஆச்சி. ;(((((
மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
மேலும் மேலும் அவர் கஷ்டப்படாமல் ஏதோ இறைவன் கூட்டிக்கொண்டு விட்டார் என நினைத்துத்தான், மனதை ஆறுதல் படுத்திக்கொள்ளணும்.
எனினும் தங்கள் மனம் சமாதானம் அடைய நீண்ட நாட்கள் ஆகும்.
அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
மிகுந்த வருத்தத்துடன்,
VGK 29.10.2013
தந்தையின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் அம்மா...
உங்கள் தந்தை இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை கோபாலகிருஷ்ணன் சார் பதிவு மூலம் அறிந்தேன்.
தந்தையின் பிரிவு மிகவும் வருத்தமானது.
உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர்களூக்கும் இறைவன் ஆறுதலை தர வேண்டுகிறேன்.
காலம் தங்கள் இழப்பை மறக்கச் செய்யும் என எண்ணுகிறேன். ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வல்லமையைக் கடவுள் உங்களுக்கு அருளுவாராக.
riyaz ahamed has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
ஆச்சி அவர்களுக்கும்,
அவர்கள் குடும்பத்தாருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
கோமதி அரசு has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
திருமதி. ஆச்சி அவர்களின் அன்பு தந்தை இறைவனடி சேர்ந்து விட்டதை அறிந்து வருத்தம் அடைந்தேன்.
ஆச்சி அவர்களுக்கும்,
அவர்கள் குடும்பத்தாருக்கும்
இறைவன் ஆறுதலை தரப்பிராத்திக்கிறேன்.
கரந்தை ஜெயக்குமார் has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
ஆச்சி அவர்களின் தந்தையின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்..!
cheena (சீனா) has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
cheena (சீனா)October 29, 2013 at 8:25 AM
அன்பின் வை.கோ
திருமதி B.S.ஸ்ரீதர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும்
அன்னாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களையும் மின்னஞ்சலில் ஆச்சிக்கு அனுப்பி விட்டேன்.
நட்புடன் சீனா
Rukmani Seshasayee has left a new comment on the post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
ஆச்சிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரின் தந்தையார் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தந்தையை இழந்து தவிக்கும் தோழிக்கும் தங்கள் உறவினர்கள் அனைவருக்கும்
எனது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .இறந்தவரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம் தோழி .இந்தக் கவலையும் துக்கமும் இறைவன் அருளால் விரைவில் மறையவும் வேண்டுகிறோம் தோழி :(
கீத மஞ்சரி has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
ஆச்சி அவர்களின் இழப்பு என்றும் ஈடுசெய்யவியலாத இழப்பு.
காலம்தான் அவருக்கு ஆறுதல் அளிக்கவேண்டும்.
======
kovaikkavi (http://kovaikkavi.wordpress.com/) has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
ஆச்சி விடயம் கவலை தருவது. அவர் தந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
athira has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
ஆச்சி அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்.
Ranjani Narayanan has left a new comment on the post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":
ஆச்சி அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/4.html#comment-form
திருமதி. ஆச்சி என்கிற
பரமேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்:
ஆச்சி ஆச்சி
http://aatchi.blogspot.in/2013/04/blog-post.html
சற்றுமுன் நிகழ்ந்தது !
http://aatchi.blogspot.in/2012/12/blog-post.html
முப்பருவங்களும் உன் பிறப்பினிலே
http://aatchi.blogspot.in/2012/10/blog-post_19.html
மரண வாக்குமூலம்
http://aatchi.blogspot.in/2011/03/blog-post_15.html
கள்வர்களின் மனசாட்சியை களவாடியது யார்?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
Post a Comment