உன் முகத்தைப் பார்க்கும்
ஆவலில் மாதங்கள் மட்டுமல்ல
நொடிகளும் பஞ்சுகளாய்
பறந்தது.சுமந்த உணர்வுகளை
என் வயிற்றிலிருந்து மடிக்கு
வந்தவுடன் அனைத்தையும்
எழுத்தாக்கிட நினைத்த நான்
மணற் கேணியானேன்.
விழித்திருக்கும் வினாடிகளை
வீணடிக்காத உந்தன் செல்ல
முயற்சிகளின் அழகை சேகரிப்பதில்
தோற்றுப்போகிறேன்.
உனக்கு நிகரான உதாரணங்களை
வார்த்தைகளை எங்கே தேடுவேன்,
பார்ப்பதும் ,சிரிப்பதும்,சினுங்குவதும்
உறங்குவதும்,நெளிவதும்,துள்ளு வதும்
நான் பெற்ற கவிதையே நீதானே!
எனது குழந்தைப் பருவமும்
எனது தாயிடத்தில் இப்படித்தான்
இருந்திருக்குமென்று எண்ணுகையில்
திளைப்பினிலே குழந்தைக்கு
இணையாகின்றேன். .
இணையாகின்றேன். .
16 comments:
உனக்கு நிகரான உதாரணங்களை
வார்த்தைகளை எங்கே தேடுவேன்,//
நிச்சயமாக கடினம் தான்
ஆயினும் தங்கள் படைப்பு அதில்
வெற்றி பெற்று விட்டது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
tha,ma 2
கவிதை அருமை.....கவிதைக்கு கிழே இட்ட படம் சிரிக்க வைத்தன....
நான் தாயுமானவன் இல்லை, தந்தையுமானவன் இல்லை. உங்களின் அந்த மெல்லுணர்வை உணராத போதும், உங்கள் கவி மூலம் கற்பனையின் உணர முற்படுகின்றேன்.
Wow!!!! Great !!!!
கவிதை நல்லா இருக்குங்க ஆச்சி....
//எனது குழந்தைப் பருவமும்
எனது தாயிடத்தில் இப்படித்தான்
இருந்திருக்குமென்று எண்ணுகையில்
திளைப்பினிலே குழந்தைக்கு
இணையாகின்றேன். .//
Exactly !
Excellent Feeling in all the Lines ;)
All the Best .....
வாவ்.. அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் குழந்தை பருவம்...குழந்தை பருவம் தான்...
வாவ்! அழகா வந்திருக்கு கவிதை....
//பார்ப்பதும் ,சிரிப்பதும்,சினுங்குவதும்
உறங்குவதும்,நெளிவதும்,துள்ளுவதும்
நான் பெற்ற கவிதையே நீதானே!//
மழலையைக் கவிதையில் வடித்திருக்கிறீர்கள்!
அருமை!
http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
http://thiruvarangaththilirunthu.blogspot.in/
@ரமணி சார்
தங்கள் வருகையும் கருத்துப்பகிர்வும் ஊக்கமளிக்கிறது,மிக்க நன்றிகள் சார்.
@அவர்கள் உண்மைகள்
மிக்க நன்றிகள்.சிரித்து மகிழ்ந்ததில் மகிழ்ச்சி .
@இக்பால் செல்வன்
மிக்க நன்றிகள்.//நான் தாயுமானவன் இல்லை, தந்தையுமானவன் இல்லை.//விரைவில் தாயும்,தந்தையுமாக வாழ்த்துகள்.
@ராஜி
மிகவும் மகிழ்ச்சி .நன்றிகள்.
@வெங்கட் நாகராஜ்
நன்றி,நன்றி,
@வை.கோபாலகிருஷ்ணன் சார்
நேற்றைய ஸ்பெசல் நாளில் தங்களின் வாழ்த்தில் மகிழ்கின்றேன்.நன்றிகள் சார்.
@சுப்பு ரமணி
ஆமாம்.வருகைக்கும்,கருத்துப்பதிவிற்கும் நன்றிகள்.
@கோவை 2தில்லி.
மகிழ்ச்சி,நன்றிகள் ஆதி,
@ரஞ்சனி மேடம்
தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றிகள் மேடம்.
ஆச்சிம்மா !!! கவிதை சூப்பர்..
///விழித்திருக்கும் வினாடிகளை வீணடிக்காத உந்தன் செல்ல முயற்சிகளின் அழகை சேகரிப்பதில் ///
அருமையான அழகான வினாடிகள் அவை ..அழகிய கவிதையாகியிருக்கீங்க .
(.கணினி ப்ராப்லமால் வர தமதமாகிடுசி )
மிக்க நன்றி ஏஞ்சலின்.தங்கள் சவுகரியப்படி வருகை தாருங்கள்.
பார்ப்பதும் ,சிரிப்பதும்,சினுங்குவதும்
உறங்குவதும்,நெளிவதும்,துள்ளுவதும்
நான் பெற்ற கவிதையே நீதானே!
அழகாகச் சொன்னீர்கள்.
வருகை தந்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் முனைவரே
உனக்கு நிகரான உதாரணங்களை
வார்த்தைகளை எங்கே தேடுவேன்,
பார்ப்பதும் ,சிரிப்பதும்,சினுங்குவதும்
உறங்குவதும்,நெளிவதும்,துள்ளுவதும்
நான் பெற்ற கவிதையே நீதானே!
கொஞ்சவைக்கும் கவிதைக்குழந்தை !
Post a Comment