*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 25, 2012

கரடி பொம்மை செய்வோமா?...


நாம் உபயோகிக்கும் சாக்ஸில் அழகான கரடி பொம்மை செய்யலாம்.எனக்கு மெயிலில் வந்த இந்த செய்முறை படங்களை பகிர்கின்றேன்.இறுதியில் அட்டகாசமான ரசிக்கும்படியான வீடியோ கிளிப்பிங் ஒன்றும் உள்ளது.அது என்னவென்று கட்டாயம் பாருங்கள்.


.

.
குழந்தைகள், பெரியவர்கள் அணியும் சாக்சில் செய்யலாம்.படங்களை பார்த்தால் செய்முறைகள் புரியும் என்று நினைக்கிறேன். 


                                                                    அவ்ளவுதான்.
                                              நானும் இன்னும் செய்து பார்க்கவில்லை.

மெகா டீ.வீ  அலைவரிசையில் தினமும் காலை 11 டு 12 மணிக்கு பெண்கள்.காம் என்ற நிகழ்ச்சியில் 11.45 டு 12 மணிக்கு கைத்தொழில் பகுதியில் வீட்டிலிருந்து எளிமையான கைத்தொழில்,கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுத்தருவார்கள்.அதில் இந்த கரடி பொம்மை செய்ய கற்றுக் கொடுத்தனர்.இரண்டு வருடங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியிலிருந்து பார்த்து நான் செய்த கரடி பொம்மை.உல்லன் நூலினால் செய்யப்பட்டது,எல்லாம் கட்டிங்,ஒட்டிங்தான்.லேமினேட் செய்து ஃப்ரேமில் செமிக்கிகளை ஒட்டியுள்ளேன்.
                                                                

இந்த வீடியோ கிளிப்பிங்கையும் ரசிக்கலாமே>....


26 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் கரடி விட்டுள்ள பதிவு மிக அருமை. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீலக்கரடி சிகப்புக்கரடி இரண்டுமே நல்ல அழகாக செய்யப்பட்டுள்ளன.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வீடியோ கிளிப்பிங்கையும் கண்டு களித்தேன். தஞ்சை ஓவியங்கள் + பெயிண்டிங்ஸ் வெகு அருமை.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அப்புறம் முக்கியமானதொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே.

இப்போ கொஞ்சம் ஃப்ரீ டயம் இருக்கும் போதே நிறைய கரடி பொம்மைகள் செய்து வச்சிக்கோங்க.

இந்த வருஷக்கடைசியிலிருந்து, அடுத்த வருஷக்கடைசி வரை தேவைப்படுமே!

அன்பான வாழ்த்துகள். ;)))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 2 ; இன்ட்லி: 2

வை.கோபாலகிருஷ்ணன் said...

யுடான்ஸ் : 56
(அதெப்படி அதற்குள் 56 ?)

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்,வாக்கிற்கும் நன்றிகள்.


கரடி பொம்மைய ஏதாவது சொன்னால் ப்ராண்டிடும்.

//(அதெப்படி அதற்குள் 56 ?)//


எனக்கு எப்படி சரி செய்வதுன்னு தெரியல சார்,நான் இதுவரை வாங்கிய உடான்ஸ் வாக்குகள் அனைத்தும் ஆடாகிக்கொண்டே வருகிறது.யாராவது சொலுயுசன் சொல்லுங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கரடி பொம்மைய ஏதாவது சொன்னால் ப்ராண்டிடும்.//

அடடா!

அதுவேறு தனியாகப் பிராண்டிருமா?
OK OK முன்னெச்சரிக்கைத் தகவல் கொடுத்ததற்கு நன்றிகள். ;)))))

Anonymous said...

அழகான பதிவு தோழி.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி அம்மா.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
ஹா,ஹா,....

@ஸ்ரவாணி
மிக்க நன்றி.

@ரெத்னவேல்
மிக்க நன்றி சார்.

பால கணேஷ் said...

கிர்ர்ர்ர்.... எனக்கு கரடி பொம்மை வேணாம்... யானை பொம்மைதான் வேணும்... யானை பொம்மைதான் வேணும்!

ADHI VENKAT said...

கரடி பொம்மை செய்முறையும், காணொளியும், நீங்க செய்த கரடியும் என எல்லாமே பிரமாதம்.

சாந்தி மாரியப்பன் said...

சாக்ஸில் செஞ்ச கரடி அழகாத்தான் இருக்கு ..

இராஜராஜேஸ்வரி said...

கரடி அருமை.. பயனுள்ள பகிர்வுகள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்

உங்க பேருக்கும்,யானைக்கும் உள்ள தொடர்பினால் உங்களுக்கு யானையை பிடிச்சு போய் யானை பொம்மை கேக்றீங்க போலருக்கு,ஒரு யனையே வாங்கி அனுப்பிவச்சுடுறேன்.

@ஆதி

மிக்க நன்றி,நான் செய்த கரடி முறைக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்.

@அமைதிச்சாரல்
மிக்க நன்றி,செய்து பார்க்கனும்.இப்படி அழகான ஃபினிசிங் வருமான்னு தெரியல.

@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றிகள்.

கீதமஞ்சரி said...

சாக்ஸில் இப்படி அழகான கரடி பொம்மை செய்யமுடியுமென்று நினைச்சுக் கூடப் பார்க்கவில்லை. எவ்வளவு அழகா இருக்கு. எளிமையான செய்முறையில் கற்றுத்தந்ததற்கு நன்றி ஆச்சி. கூடிய விரைவில் ஒன்று செய்து பார்க்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதமஞ்சரி
நன்றி,தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்.செய்துபார்த்து சொல்லுங்கள்.

raji said...

சூப்பர்.அப்படியே ஒரு கிலுகிலுப்பை செஞ்சு பழகிக்கறீங்களா? தேவைப்படுமே!

கரடி காணொளி இரண்டுமே நல்லாருக்கு.

Angel said...

சாக்ஸ் கரடி செய்முறை ஈசியா இருக்கு ,நீங்க செய்ததும் ரொம்ப அழகா இருக்கு .காணோளியும் அருமை

Angel said...

கரடி முறைக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்.//

அந்த கண்கள் பிளாஸ்டிக்கா இல்ல பேப்பரா?
இரண்டு கருப்பு அல்லது பிரவுன் நிற பெரிய சைஸ் பட்டனை அல்லது வட்ட வடிவ அட்டை பேப்பரை ஒட்டி பாருங்க அப்ப சிரிக்கிற மாதிரியே இருக்கும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கரடி பொம்மை செய்யக் கற்றுக் கொடுக்கும் இந்த ஆச்சியிடம் நல்லா தொழில் கத்துக்கலாம்.//

ஆச்சியில்
ஆரம்பித்து
அனைத்து
அறிமுகங்களுக்கும்
அன்பான
பாராட்டுக்கள்.//

வலைச்சரத்தில் இன்று 4.3.2012 மீண்டும் அறிமுகம் ஆனதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@தென்காசித் தமிழ் பைங்கிளி

மிக்க நன்றி.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

பாராட்டிற்கு நன்றி சார்

@கூகுள் சிறி.காம்

நன்றிகள்

சிவகுமாரன் said...

கரடி பொம்மை நல்லாருக்கு. ( நமக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது)
விடியோ ஜோர்

ஆச்சி ஸ்ரீதர் said...

@சிவகுமாரன்
வாங்க,அப்படி நினைத்திட வேண்டாம்,உங்கள் கவிதைகளைக் கண்டு நாங்கள் பிரமிக்கிறோமே,

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு