*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 11, 2012

இதெல்லாம் எந்த ஊர்ல?.......

குரங்கால மட்டும்தான் மனுசனாக முடியுமா?
நாங்களும் மனுசனாகி சாதிக்கிறோ...ம்...மா இல்லையான்னு பாருங்க!!!

இந்த உணவகம் அவசியம்தான்.வெள்ளத்தில் தத்தளிக்கும் எத்தன பேர் பசி்யைத் தீர்க்கும்.உணவக ஓனருக்கு வாழ்த்துகள்.

இதைத்தான் பகுமானம்னு மதுரைத் தமிழில் சொல்லுவாங்க.

என்னம்மா  யாரோடையாவது சண்டையா?இல்ல வீட்ல தூங்க இடமில்லையா?இல்ல எதாவது சாதனை முயற்சியா?

என்ன ஒரு பாதுகாப்பு!இனிமே கண் எரியுதுன்னு சொல்ல முடியாதுல்ல!

இந்த ஐடியா உங்களுக்கு வருமா?

என்ன ஒரு கண்டுபிடிப்பு.......இப்படி போறவங்களுக்குத்தான் இதன் அருமை தெரியும்.

நிச்சயம் செருப்பு காணாப்போகாதுங்க,ட்யூப்பை கட் செய்துட்டாங்கன்னா கம்பெனி பொறுப்பு கிடையாது.

தலையறுத்து பிரியாணி ஆக்கினாலும் அடங்கமாட்டோம்!

பக்கத்து வீட்லையுமா  ஃப்ரிஜ் இல்ல போலருக்கு,இிதை பக்கத்து வீட்ல எப்படி வைக்கிறது... 

எழுதினவன்  தப்பா?உக்காந்திருக்கிறவங்க தப்பா?

கடலுக்குள்ள   போகும்போது    தாகம்மா இ்ருந்தா  கடல் தண்ணியவா குடிக்க  முடியும். இல்ல உப்பு நீர்  எடுக்கப் போறாங்களா?...ஓ மிதக்கப்போறாங்களா?....
அந்த அம்மா பக்கத்துல இருக்கிற நாற்காலிக்கும் ஆள் வல்ல போலருக்கே!உங்க பேச்சை கேக்க வந்திருக்கிறவருக்கு அந்த நாற்காலியைக் கூட கொடுக்கமாட்டிங்களா?  


ஃபோட்டோ எடுக்கும்போது தொல்ல செஞ்சா இதான் தண்டனை.
.

எல்லோரும் அவங்க வேலைய பார்ப்பாங்களா?உங்களுக்கு ஓடி வந்து உதவி செய்வாங்களா?....இவ்ளோ நல்ல ஆட்டோ வச்சிருக்கிற உங்களுக்கே இந்த நிலமைன்னா...உங்களவிட கில்லாடி ஒருத்தரு ஜம்முன்னு போறார் பாருங்க, அடுத்த படத்த பாருங்கப்பா.

                                   

இதற்கு நிகர் எதுவுமில்லை.எதோ புதுசா கண்டுபிடிச்சிருக்காறோ!!

அடடா! ஒரே ஏர் கூலரிலிருந்து இரண்டு ரூமிற்கு காற்று போறது புரியுதா?என்ன ஒரு சிக்கனம்,கண்டுபிடிப்பு....

இதுக்கு என்ன காரணம்னு நீங்களே யோசிச்சுக்கோங்க!


நீங்க மட்டும் என்னை கடிச்சு சாப்பிடுறீங்களே!எனக்கு எவ்ளோ வலிக்கும்.இனி நான் உங்கள கடிச்சு வச்சித்தான் வலின்னா என்னான்னு புரியவைக்கப் போறேன்னு ஆப்பிள் சொல்லுது.


இதான் முட்டை கண்ணுல பார்ப்பதா?.நான் தான் வாட்டர் மேன்

19 comments:

ADHI VENKAT said...

படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. அதற்கேற்ற உங்க கமெண்ட்டும் சூப்பர்ர்ர்ர்ர்....

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி

வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி.

கீதமஞ்சரி said...

படங்கள் ஒரு பங்கு என்றால் உங்க கமெண்ட் இரண்டு பங்கு ரசிக்கவைத்தது. பிரமாதம். பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் எல்லாமே அருமை.அதற்கு உங்க கமெண்டுகளும் சூப்பர்..

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் எல்லாம் முன்பே மின்னஞ்சலில் பார்த்தது என்றாலும் உங்கள் சுவையான கருத்துடன் படிக்கும்போது இன்னும் ரசித்தேன்....

ஆச்சி ஸ்ரீதர் said...

@கீதமஞ்சரி

@ராம்வி

@வெங்கட் நாகராஜ்

வருகை தந்து ரசித்து கருத்திட்டமையில் மகிழ்கிறேன்.நன்றிகள்.

கோகுல் said...

ஹா ஹா.ஆமாங்க இதெல்லாம் எந்த ஊர்ல?

ஆச்சி ஸ்ரீதர் said...

@கோகுல்
வாங்க,நன்றி.தெரிந்தால் பதிவிலே சொல்லியிருப்பேனே.

பால கணேஷ் said...

இதுல நிறையப் படங்களை நான் முன்னமேயே பார்த்திருக்கேன். ஆனா... குடுத்திஙக பாரு கமெண்ட்ஸ்... சூப்பரப்பு! பல தடவை சிரிக்க வெச்சுட்டீங்கங்கோ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பார்த்தேன். ரசித்தேன். ஒரு சில படங்கள் மட்டும் ஏற்கனவே வேறொரு பதிவர் போட்டிருந்தார்.

ஆனாலும் உங்கள் கமெண்ட்ஸ் எல்லாமே சூப்பர்.

[மதுரைத் த்மிழ் பகுமாணம் பற்றி தனியே நீங்க எனக்கு மெயிலில் மேலும் விளக்கம் தர வேண்டும். சரியாகப் புரிந்துகொள்ள முடியாத சரியான ட்யூப் லைட் அல்லவா நான் ];)

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்
உங்க பின்னூட்டமும் என்ன சிரிக்க வைத்தது.நன்றி சார்.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
பகுமானம் என்றால் பெருமையடித்துகொள்வது,பீட்டர் விடுவது,இதுலாம் ஓவரு என்போமே அது,விளக்கம் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.

பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் நன்றி சார்.

சாந்தி மாரியப்பன் said...

படங்களெல்லாம் ஜூப்பரப்பு.. அதுவும் செருப்பை பாதுகாக்குற ஐடியா ஜூப்பரோ ஜூப்பர் :-)

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க அமைதிச்சாரல்
ரசித்தமைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

ரச்னை மிக்க அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி


வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி மேடம்.

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை அருமை
சிரித்தேன் இரசித்தேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க முனைவர் அவர்களே

சிரித்து இரசித்தமைக்கு நன்றி

சசிகலா said...

ஆமாங்க படமும் அதுக்கு நீங்க கொடுத்த விளக்கமும் சிரிப்பு தாங்க முடியலங்க அருமை .

ஆச்சி ஸ்ரீதர் said...

@சசிகலா

வாங்க,உங்கள் கருத்தில் மகிழ்கிறேன்