*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 14, 2012

காதலன் தன் காதலிக்கு எழுதியது

வாடிய வார்த்தைகளில் கலங்கிப்போகிறேன்
வதங்கிப்போகிறேன்,வினையை என் சொல்வேன்
விரைந்து வர துடிக்கின்றேன்
வினை விரட்டிவர வெளிரிச் சிரிக்கின்றேன்!

சில்லென்ற மழைத்துளி தெளித்து
சிலிர்த்து எழும் ரோஜா முகையைப்போல
தினம்தினம் உன் உன் விழிகள் பார்த்து
உயிர்த்தெழுந்தது ஒரு காலம்!

செவ்விதழ் தேன் உறை கனி மேலே
சிரித்து நிற்கும் விளக்கினது ஒளிதெரித்து
வெட்கத்தில் குவிந்தும்,விரிந்தும்
முத்துக்களை தெரித்தும் என்னுயிரை
வெண்டாடி,திண்டாடி கால்பந்தாய் உதைத்திருந்தாய்!

மஞ்சள் முகம் வெட்கமேறி,மஞ்சள் வானம்
சிவந்தபோதெல்லாம் உன் மழை மேகக்
கண்களிலிருந்து என் உயிர்த்துளி அருவியாய்
முகிழ்த்தபோதெல்லாம் என்னுயிர் உருகி
ஒன்றுமில்லாமல் ஆனேனடி!

சிறு மழை சிரிப்பினிலே,சிறு மலரிதழ்
சுழிப்பினிலே உந்தன் பனி முகம் தோன்றுதடி
துடித்த மனம் ஏங்கித்தான் போனதடி
மொட்டுக்கள சிரித்தது போன்ற மலர்ந்த உன் முகத்தை
பார்த்தேனென்றால் சக்தி முழுவதும் பெறுவேனடி!

முகையாய் ,முழுமையாய் நிறைந்தவளே !
எத்தனை பிறவி அலைந்தேனோ!
எங்கெல்லாம் திரிந்தேனோ!
என்ன தவம் செய்தேனோ!
என்னவளை கண்டுகொள்ள!

வெறுமையில் உழல்கிறேன்,என் முன்னே
நீ என்றால் எல்லையில்லா உற்சாகம்!
நிறை அன்பின் வடிவாய் என்னுள் வளமோடு
நலமோடு வளர்கின்றாய்!வலி தரும் விருந்தே!
என் இதயத் தொட்டிலில் உறங்குபவளே!

நம் சுவாசம் இணையப்போவது எப்போது?


இந்த கவிதை நான் எழுதவில்லை.எழுதியவர் தன் பெயரை குறிப்பிட  மறுத்துள்ளார்.எனவே கவிதையை மட்டும் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

9 comments:

வல்லிசிம்ஹன் said...

அச்சோ எத்தனை அருமை இந்தக் கவிதை.!!!

எழுத்துக்கு எழுத்து
வலியும் காதலும்
துள்ளிக் குதிக்கிறதே.
பகிர்வுக்கு மிகவும் நன்றிமா திருமதி.

இராஜராஜேஸ்வரி said...

நிறை அன்பின் வடிவாய்
என்னுள் வளமோடு
நலமோடு வளர்கின்றாய்!
வலி தரும் விருந்தே!/

அருமையான வரிகள் !

RAMA RAVI (RAMVI) said...

பிரமாதமாக இருக்கு கவிதை,ஆச்சி.

//சில்லென்ற மழைத்துளி தெளித்துசிலிர்த்து எழும் ரோஜா முகையைப்போலதினம்தினம் உன் உன் விழிகள் பார்த்துஉயிர்த்தெழுந்தது ஒரு காலம்!//

மிகவும் அழகான வரிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த கவிதை நான் எழுதவில்லை.எழுதியவர் தன் பெயரை குறிப்பிட மறுத்துள்ளார்.எனவே கவிதையை மட்டும் பகிர்ந்துகொண்டுள்ளேன்.//

நம்புகிறேன். பகிர்வுக்கு ந்ன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து ரசித்த அனைவருக்கும் நன்றிகள்.கோபாலகிருஷ்ணன் சார்
சமயம் பாத்துகிட்டே இருந்தீங்க போலருக்கே.......

ADHI VENKAT said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.....

Angel said...

//இந்த கவிதை நான் எழுதவில்லை.எழுதியவர் தன் பெயரை குறிப்பிட மறுத்துள்ளார்.எனவே கவிதையை மட்டும் பகிர்ந்துகொண்டுள்ளேன்.//

ஓகே ஓகே ஓகே .
கவிதை நடை வரிகள் எல்லாமே அருமை
எழுதி(யதை) பகிர்ந்தமைக்கு நன்றி .

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை...

எழுதியவர் யாராக இருந்தாலும் பாராட்டுகள்... :)

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி

@ஏஞ்சலின்

@வெங்கட் நாகராஜ்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.அனைவரது கருத்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளேன்