இந்த பதிவு பெண்கள் அனைவருக்கும் அல்ல. பொது மக்களில் ஒருவளாய் மனதில் தோன்றுவதை பதிய விரும்புகிறேன்.வயிற்றெரிச்சலுடனும் துவங்குகிறேன்.
சுதந்திரம் தருவதற்கு நமக்கான சுதந்திரத்தையும்,உரிமையையும் யாரும் பிடுங்கி வைத்துக்கொள்ளவில்லை,.நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும் நம் சக்திக்கும்,சமுதாய மரியாதைக்கும் உட்பட்டு இப்படித்தான் இருக்க வேண்டுமென சில நல்ல கட்டுப்பாடுகளும்,குணங்களும்,பழக்க வழக்கங்களும் தமக்குத்தானே தோன்றுமெனில்,வகுத்துக்கொள்ள முடியுமெனில் அவன் நிச்சயம் மனிதனாக இருப்பான்..ஆனால் உன் சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் வரை,உன்னை அடுத்தவர்கள் கேவலமாக நினைக்காதவரை எப்படி வேண்டுமானாலும் வாழ்வதும் நம் சுதந்திரம்தான். தற்போதைய சில பெண்களின் ஆடை நாகரீகம் பற்றியதுதான் இந்த பதிவு.
இரண்டு வயதிலிருந்து பத்து வயது பெண் குழந்தைகள் அரைக்கை சட்டை,அரை/முழுப்பாவாடை அணிந்து வந்தால் பார்க்க நன்றாகவே இருக்கும்.அதே குழந்தை 15 வயதுக்கு மேல் அரைப்பாவாடை அணிந்திருந்தால் அவளின் பெற்றோர்க்கு குழந்தையாகவே தெரியலாம்.மற்றவரின் கண்களுக்கு?...
அதே பெற்றோர் அழகாகதான் இருக்கிறது.இதை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டாம்,முழு உடையோ முக்கால் உடையோ அணிந்து செல் என்று சொல்பவர் சிறந்த பெற்றோர்.தனக்கே கூச்சம்,வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் பெற்றோர் இப்படி சொல்வதைக் கேட்டாவது எது அழகு,எது நாகரீகம் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்.யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை,என் இஷ்டம்தான் என்றால் அவர்களை ஒன்னும் சொல்ல முடியாது.
சட்டை அரைக்கையோ அரைப்பாவாடையோ ஆபாசாமில்லாமல் ஆடைகளை அணிய வேண்டும்.ஆபாசமான ஆடைகள் அணிவது என்ற வார்த்தையே பெண்களுக்குதான்.ஆண்கள் இந்த உடை அணிந்துள்ளதால் ஆபாசமாகத் தெரிகிறான் என்று யாருக்கும் இதுவரை தோன்றிருக்காது.
பாவடை தாவணி அழகுதான்.ஆனால் சுடிதாரில் இருக்கும் பாதுகாப்பு தாவணி அணிவதில் இல்லைதான்.பாவாடை தாவணி மலையேறிப்போய் இப்போ சுடிதாரையும் தாண்டி ஜீன்ஸ் அணியும் காலத்தில் இருக்கிறோம்.
எல்லோர்க்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற உணர்விருக்கும்.எதை அணிந்தாலும் பார்ப்பவர்கள் ‘ ட்ரசையும்,ஆளையும் பாரு’ என்றோ,சபலத்தை தூண்டுமளவிற்கோ ஆடை அணிய வேண்டாம்.உடுத்திருப்பதை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட வேண்டாம்,எதோ தெரியுதேனு பார்க்க வைக்க வேண்டாம். துப்பட்டா போடாத எல்லா பெண்களுமோ,கைப்பகுதி இல்லாமல் அணிந்திருக்கும் எல்லா பெண்களுமோ ஆபாசமாகத் தோன்றுவதில்லை.உடல் வாகைப் பொறுத்தும்,அணியும் உடையைப் பொறுத்தும் விகாரமும் ஆபாசமும் தெரிகிறது.
ஆடை குறைப்பு இல்லாமலும், அங்கங்களை உடை போர்த்தி கவர்ச்சியாக காட்டாமலும் ஒரு பெண்ணால் ஒரு ஆணை கவரமுடியும் .திருமணம் ஆகாத மற்றும் திருமணமான சில பெண்கள் மற்றவர்கள் பார்வையை ஈர்க்க அல்ல ஈர்க்க வைக்கவே அணிந்து கொள்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகமெனில் இப்படிப்பட்ட பெண்கள் யாரோ ஒரு பெற்றோர்க்கு மகளாகவோ,சகோதரியாகவோ,மனைவியாகவோதானே இருப்பார்கள்.அப்படியிருந்தும் பார்வைகள் சலனப்படுமளவிற்கு ஆடை அணிபவர்களை கேட்க ஆளில்லையா?அல்லது கேட்பார் யாருமில்லையா?அப்படியா சுதந்திரம் முத்திப்போய்விட்டது.அல்லது இதற்கு பேர்தான் தண்ணி தெளிச்சு விட்டாச்சு என்பதா?
ஏற இறங்க பார்க்க வைக்கும் ஒரு பெண்ணை அந்த நிமிடம் ஒரு ஆண் பார்க்கலாம்.இப்படி நம் மகளை யாரும் பார்த்துவிடக் கூடாதுனு ஒரு அப்பாவிற்கு தோன்றுமே,நம் சகோதரியை இப்படி யாரும் பார்க்க கூடாதுனு சகோதரனுக்கு தோன்றுமே,தன் மனைவியை மற்றவர் ரசிக்க கூடாதென்று கணவனுக்குத் தோன்றுமே!!!!காமிப்பவர்கள் மேல் குற்றமா?பார்ப்பவர்கள் மேல் குற்றமா?
வட மாநிலங்களில் கேக்கவே வேண்டாம்.
பெற்றோருடனும்,சகோதரனுடனும்,கணவனுடனும் சில பெண்கள் இல்லை முக்காவாசி பெண்கள் மிக மாடன் ட்ரஸ்களும்,இருக்கமான உடைகளும் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆணுக்கோ,பெண்ணுக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை.உன் பொண்ணுக்கு எந்த ட்ர்ஸ் வேணும்னாலும் போட்டு அழகுப்பாரு,உன் சகோதரியை எவன் பாத்தா எனக்கென்னா,உன் பொண்டாட்டி எப்படி இருந்தா எனக்கென்னா?என் பிள்ள கெட்டுடக்கூடாது,என் சகோதரன் மனது வீணாகிடக்கூடாது,என் கணவன் யாரையும் ரசித்திடக் கூடாது,என் பெற்றோர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிடக்கூடாதென்பது சராசரி பெண்களின் எண்ணமாகும்.
ஒரு நாட்டிற்கு பெருமை பல விதங்களில் கி்டைத்தாலும்,அதனுள் அந்நாட்டு பெண்களும் அவர்களுக்கான சுதந்திரமும் அடங்குமென்று எதிலோ படித்த நினைவாக உள்ளது.
சுதந்திரம் தருவதற்கு நமக்கான சுதந்திரத்தையும்,உரிமையையும் யாரும் பிடுங்கி வைத்துக்கொள்ளவில்லை,.நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும் நம் சக்திக்கும்,சமுதாய மரியாதைக்கும் உட்பட்டு இப்படித்தான் இருக்க வேண்டுமென சில நல்ல கட்டுப்பாடுகளும்,குணங்களும்,பழக்க வழக்கங்களும் தமக்குத்தானே தோன்றுமெனில்,வகுத்துக்கொள்ள முடியுமெனில் அவன் நிச்சயம் மனிதனாக இருப்பான்..ஆனால் உன் சுதந்திரம் அடுத்தவரை பாதிக்காமல் இருக்கும் வரை,உன்னை அடுத்தவர்கள் கேவலமாக நினைக்காதவரை எப்படி வேண்டுமானாலும் வாழ்வதும் நம் சுதந்திரம்தான்.
இரண்டு வயதிலிருந்து பத்து வயது பெண் குழந்தைகள் அரைக்கை சட்டை,அரை/முழுப்பாவாடை அணிந்து வந்தால் பார்க்க நன்றாகவே இருக்கும்.அதே குழந்தை 15 வயதுக்கு மேல் அரைப்பாவாடை அணிந்திருந்தால் அவளின் பெற்றோர்க்கு குழந்தையாகவே தெரியலாம்.மற்றவரின் கண்களுக்கு?...
அதே பெற்றோர் அழகாகதான் இருக்கிறது.இதை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டாம்,முழு உடையோ முக்கால் உடையோ அணிந்து செல் என்று சொல்பவர் சிறந்த பெற்றோர்.தனக்கே கூச்சம்,வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் பெற்றோர் இப்படி சொல்வதைக் கேட்டாவது எது அழகு,எது நாகரீகம் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்.யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை,என் இஷ்டம்தான் என்றால் அவர்களை ஒன்னும் சொல்ல முடியாது.
சட்டை அரைக்கையோ அரைப்பாவாடையோ ஆபாசாமில்லாமல் ஆடைகளை அணிய வேண்டும்.ஆபாசமான ஆடைகள் அணிவது என்ற வார்த்தையே பெண்களுக்குதான்.ஆண்கள் இந்த உடை அணிந்துள்ளதால் ஆபாசமாகத் தெரிகிறான் என்று யாருக்கும் இதுவரை தோன்றிருக்காது.
பாவடை தாவணி அழகுதான்.ஆனால் சுடிதாரில் இருக்கும் பாதுகாப்பு தாவணி அணிவதில் இல்லைதான்.பாவாடை தாவணி மலையேறிப்போய் இப்போ சுடிதாரையும் தாண்டி ஜீன்ஸ் அணியும் காலத்தில் இருக்கிறோம்.
எல்லோர்க்கும் தான் அழகாக இருக்க வேண்டுமென்ற உணர்விருக்கும்.எதை அணிந்தாலும் பார்ப்பவர்கள் ‘ ட்ரசையும்,ஆளையும் பாரு’ என்றோ,சபலத்தை தூண்டுமளவிற்கோ ஆடை அணிய வேண்டாம்.உடுத்திருப்பதை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட வேண்டாம்,எதோ தெரியுதேனு பார்க்க வைக்க வேண்டாம். துப்பட்டா போடாத எல்லா பெண்களுமோ,கைப்பகுதி இல்லாமல் அணிந்திருக்கும் எல்லா பெண்களுமோ ஆபாசமாகத் தோன்றுவதில்லை.உடல் வாகைப் பொறுத்தும்,அணியும் உடையைப் பொறுத்தும் விகாரமும் ஆபாசமும் தெரிகிறது.
ஆடை குறைப்பு இல்லாமலும், அங்கங்களை உடை போர்த்தி கவர்ச்சியாக காட்டாமலும் ஒரு பெண்ணால் ஒரு ஆணை கவரமுடியும் .திருமணம் ஆகாத மற்றும் திருமணமான சில பெண்கள் மற்றவர்கள் பார்வையை ஈர்க்க அல்ல ஈர்க்க வைக்கவே அணிந்து கொள்கிறார்கள்.எனக்கு என்ன சந்தேகமெனில் இப்படிப்பட்ட பெண்கள் யாரோ ஒரு பெற்றோர்க்கு மகளாகவோ,சகோதரியாகவோ,மனைவியாகவோதானே இருப்பார்கள்.அப்படியிருந்தும் பார்வைகள் சலனப்படுமளவிற்கு ஆடை அணிபவர்களை கேட்க ஆளில்லையா?அல்லது கேட்பார் யாருமில்லையா?அப்படியா சுதந்திரம் முத்திப்போய்விட்டது.அல்லது இதற்கு பேர்தான் தண்ணி தெளிச்சு விட்டாச்சு என்பதா?
ஏற இறங்க பார்க்க வைக்கும் ஒரு பெண்ணை அந்த நிமிடம் ஒரு ஆண் பார்க்கலாம்.இப்படி நம் மகளை யாரும் பார்த்துவிடக் கூடாதுனு ஒரு அப்பாவிற்கு தோன்றுமே,நம் சகோதரியை இப்படி யாரும் பார்க்க கூடாதுனு சகோதரனுக்கு தோன்றுமே,தன் மனைவியை மற்றவர் ரசிக்க கூடாதென்று கணவனுக்குத் தோன்றுமே!!!!காமிப்பவர்கள் மேல் குற்றமா?பார்ப்பவர்கள் மேல் குற்றமா?
வட மாநிலங்களில் கேக்கவே வேண்டாம்.
பெற்றோருடனும்,சகோதரனுடனும்,கணவனுடனும் சில பெண்கள் இல்லை முக்காவாசி பெண்கள் மிக மாடன் ட்ரஸ்களும்,இருக்கமான உடைகளும் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆணுக்கோ,பெண்ணுக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை.உன் பொண்ணுக்கு எந்த ட்ர்ஸ் வேணும்னாலும் போட்டு அழகுப்பாரு,உன் சகோதரியை எவன் பாத்தா எனக்கென்னா,உன் பொண்டாட்டி எப்படி இருந்தா எனக்கென்னா?என் பிள்ள கெட்டுடக்கூடாது,என் சகோதரன் மனது வீணாகிடக்கூடாது,என் கணவன் யாரையும் ரசித்திடக் கூடாது,என் பெற்றோர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிடக்கூடாதென்பது சராசரி பெண்களின் எண்ணமாகும்.
பஞ்சாமிர்த்த்தைப் பார்த்தவுடன் அறுவறுப்பு கொள்பவர் யாருமில்லை. பிடிக்காதவன் வேண்டுமானால் வாங்க மறுக்கலாம்.வழியில் போறவனை கூப்பிட்டு கொடுத்தால், பிடிக்காதவன் கையில் வாங்கி கீழே போடலாம்.பிடித்தவன்……..?
வெளிநாட்டு கலாச்சாரமே வேறு.இந்தியாவின் கலாச்சாரம்? இந்த ஆடை நாகரீகம் எதுவரை போகும்?
சமீபத்தில் ’துப்பட்டா போடாமல் இருப்பது ஏன்’ என்று ஒரு ஆண் பதிவரின் பதிவின் தலைப்பை பார்த்த்தும் அய்யய்யோ இப்படிப்பட்ட பெண்கள பத்தி ஆண் விமர்சிச்சு பதிவு எழுதி அதே போல கமண்ட்ஸ்களும் குவிந்து மானம் போகுமேனு நினைச்சு போய் பார்த்தேன்,நல்ல வேளை அதை தலைப்போடு நிறுத்திவிட்டு நல்ல கருத்துக்களை சொல்லியிருந்தார்.வேறு யாரும் இப்படிப்பட்ட பெண்கள் சம்மந்தமாக விமர்சித்திட வேண்டாமென எண்ணி இதை பதிந்துள்ளேன்.இந்த பதிவு சில பெண்களுக்காக இருந்தாலும்,யார் சொல்லியும் யாரும் கேட்கபோவதில்லை என்றாலும் பெண்ணுக்கு பெண் விட்டுகொடுக்க மனதில்லை.ஒரு நாட்டிற்கு பெருமை பல விதங்களில் கி்டைத்தாலும்,அதனுள் அந்நாட்டு பெண்களும் அவர்களுக்கான சுதந்திரமும் அடங்குமென்று எதிலோ படித்த நினைவாக உள்ளது.
27 comments:
sudhandhiram enbadhu namaku naame podum kattupadu
puriyavaitha tholamaiku nandri
valthukal
peumaiya eruku
வயதுப்பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நல்ல பதிவு.
ஆனால் இதை யாரும் கேட்கமாட்டார்கள். உடை விஷயத்தில் காத்தாட இருக்க அதிக சுதந்திரம் வேண்டும் என்றே சொல்லுவார்கள்.
இதைப்பற்றியெல்லாம் ஏதாவது அறிவுரைகள் கூறினால் நீங்கள் ஒரு பத்தாம் பஸலியாகவும், இன்றைய நவ நாகரீகப்பெண்களின் உடை சுதந்திரத்தில் தலையிடும் விரோதியாகவும் கருதப்படுவீர்கள்.
ஒருசிலராவது இதைப்படித்து தங்களைக் கொஞ்சமேனும் மாற்றிக்கொண்டால், உங்கள் எழுத்துக்கு அது வெற்றியாக அமையும்.
இல்லாவிட்டால் தலையெழுத்தே என்று விட்டு விடுங்கள். அவர்களே ஒரு நாள் feel செய்து தங்களை மாற்றிக்கொள்ளும் நிலை வரும்.
பதிவுக்கும், பகிர்வுக்கும், சமுதாய சிந்தனைக்கும் பாராட்டுக்கள்.
Voted 1 to 2 in Indli & TM.
aadai kuriththu .. penkalukku echcharikkai paduththum nalla pathivu...vaalththukkal
இதெல்லாம் சொன்னா நீங்க பிற்போக்குவாதினு சொல்லுவாங்க . நான் சொன்னா ஆணாதிக்கவாதின்னு சொல்லுவாங்க . நாம் வீட்டளவில் நம்ம கொள்கைகள் அவ்ளோதான்
ஏற இறங்க பார்க்க வைக்கும் ஒரு பெண்ணை அந்த நிமிடம் ஒரு ஆண் பார்க்கலாம்.இப்படி நம் மகளை யாரும் பார்த்துவிடக் கூடாதுனு ஒரு அப்பாவிற்கு தோன்றுமே,நம் சகோதரியை இப்படி யாரும் பார்க்க கூடாதுனு சகோதரனுக்கு தோன்றுமே,தன் மனைவியை மற்றவர் ரசிக்க கூடாதென்று கணவனுக்குத் தோன்றுமே!!!!காமிப்பவர்கள் மேல் குற்றமா?பார்ப்பவர்கள் மேல் குற்றமா?
......சரியாகத்தான் கேள்வி கேட்டு இருக்கீங்க. பெண்களுக்கு மட்டுமே விதிகள் இல்லை. ஆண்களுக்கு மட்டுமே சுதந்திரமும் இல்லை. மாற்றம் காணத் துடிக்கும் பெண்கள் மேல் குற்றமா? தங்கள் "பார்வையில்" மாற்றம் கொண்டு வராத ஆண்களின் மேல் குற்றமா?
ஆண்களை பொறுத்தவரையில் பெண்கள் மேல் இயல்பாகவே ஈர்ப்பு அதிகம், இன்னும் ஆடை குறைத்து கவர்ச்சி காட்டினால் ரசிக்கவே செய்வார்கள்,அந்த ரசனை பார்ப்பதோடு மட்டும் நின்றுவிட்டால் பிரச்சனை இல்லைதான், ஆனால் அதையும் தாண்டிவிட்டால்??? எனவே இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள போவது பெண்களே, எனவே யாருக்கு பாதிப்பு அதிகம் என உணர்ந்து கொள்பவர்கள் விருப்பம் போல உடை அணிந்து கொள்ளட்டும், இன்னும் நிறையவே சொல்ல விருப்பம் இருந்தாலும் ஆணாதிக்கவாதி என்ற பெயர் வந்துவிடும் என்பதால் விடு ஜூட்ட்ட்
@செந்தில் குமார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் சார்
//இதைப்பற்றியெல்லாம் ஏதாவது அறிவுரைகள் கூறினால் நீங்கள் ஒரு பத்தாம் பஸலியாகவும், இன்றைய நவ நாகரீகப்பெண்களின் உடை சுதந்திரத்தில் தலையிடும் விரோதியாகவும் கருதப்படுவீர்கள்//.
சரியா சொல்லீடீங்க.
கருத்திற்கு நன்றி.
@மதுரை சரவணன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@எல்.கே
//நாம் வீட்டளவில் நம்ம கொள்கைகள் அவ்ளோதான்//
ஆமாம் நம்ம்ளவிற்கு சரியாக இருப்போம்.அவ்ளதான் நாம செய்ய முடியும்.
@சித்ரா
நீங்களும் சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள்.இது அதிக விவாதத்திற்கு உரியதாகும்.
மாறத் துடிக்கும் பெண்களின் வளர்ச்சி கவர்ச்சி காமிப்பதை குறைத்தால் அவர்களுக்கு நல்லதை விட அரும்பு மீசை வளராத ஆண்பிள்ளைக்கு கூட கிளர்ச்சியை தூண்டாமல் இருந்தால் அதை விட நல்லது.
பெண்ணுக்கு பெண் பார்ப்பதற்கும்,அதே பெண்ணை ஆண் பார்ப்பதற்கும் குறைந்தது ஆறு வித்தியாசமாவது இருக்குமே.
இரவு வானம் சொல்லியிருப்பதையும் கருத்தில் சேர்க்கவும்.
@சுரேஷ்
நன்றி.ஆம் நஷ்டம் பெண்களுக்கே.இதை பத்து வருடத்திற்கு முன் விவாதித்திருந்தால் கூட பெண்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள்.காலம் மாறி போச்சு.இலவசமாக கண்களுக்கு விருந்து கிடைப்பதை யார்தான் வேணாம்னு சொல்லுவாங்க.
விருந்து கொடுப்பவர்கள் பாடு,என்ஜாய் செய்பவர்களின் பாடு .நமெக்கென்ன.நம்ம வேலைய பார்ப்போம்..
@ சித்ரா அக்கா,
ஆண்களின் (பார்வை முதல் மனசு வரை) மாற்றத்தால் தான் பெண்களுக்கு இவ்வளவு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
நல்ல பதிவு!
அவசியமான பகிர்வு ஆச்சி. யாரும் நாம் சொல்லி கேட்கப் போவதில்லை. இங்கு வெளியில் சென்றால் இவர்களின் உடைகளைப் பார்த்தால் கடும் கோபம் வரும்.
நாமும் அடுத்த தலைமுறையான நம் குழந்தைகளுக்கு நல்லவைகளை சொல்லிக் கொடுப்போம்.
டைட்டிலில் எனி எள்ளல்?
The concept of obscenity in dressing s a cultural fix. Exposing through plunging neck-line but covering all other parts of the body of a female, was a norm in Victorian England. U can c certain movies depicting that age. They did not consider the exposure of chest as obscene and vulgar. It was decent and sophisticated. But now, in modern Britain, it s different. Obscenity is not obscenity in certain places and for certain age groups' at the same time, in other palces, the obscenity s narrowed down to the minimum; so a woman walking in mini skirt wont raise any eyebrow.
Coming to ur own Tamil culture, movies r good ex. In the 40 to 50, the heroines covered their bodies in toto. The lovers didnt touch even their hands, and stood a good distance away from each other. In the 60s, the blouse begag to expose the stomach. In the 70s onwards, the old world distance narrowed. She is in his arms. Now, she s being kissed; and u can c a voluptious parts of her body. It s not obscene. No one objects.
So, Mrs Sundar, it is ur culture and the age that decide your values.
Since India still lives in the unchanged world so far as the bringing up of females are concerned, all that you have written is ok.
But no such assurance can be given to you for what will happens in future.
In a globalised world, everything changes and we can't put the clock back.
தேவையான பகிர்வு...
பண்பாட்டை
சீர்தூக்கிப் பார்க்கும் பதிவு.
@காந்தி பனங்கூர்
ஓஹோ !!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@ராபின்
நன்றிங்க
@ஆதி
நன்றி.
//இங்கு வெளியில் சென்றால் இவர்களின் உடைகளைப் பார்த்தால் கடும் கோபம் வரும்.நாமும் அடுத்த தலைமுறையான நம் குழந்தைகளுக்கு நல்லவைகளை சொல்லிக் கொடுப்போம்.//
என்ன பன்றது?.எல்.கே அவர்கள் சொல்வது போல நம்மால் முடிந்தது,நமக்குள் நல்லபடியாக நடந்துகொள்ள கற்று கொடுக்க வேண்டியதுதான்.
@சி.பி.செந்தில்குமார்
ஒன்றுமில்லை.இதோட விட்டீங்களே
@காவ்யா
எங்க ஊர்ல லோ நெக் போட்டுகிட்டு போகிறவங்களை வேடிக்கை பார்ப்போம் அல்லது.அவதூறு பேசுவோம்.ஆனால் ஒரு பொண்ணு பேருந்தில் போகும்போதோ,எதாவது வேலை செய்யும்போதோ உள்ளாடையோ அங்கங்களோ தெரியுமாயின் காணாததை கண்டவன் ரசிப்பான்,நமக்கெதுக்கு வம்புனு ஒருவன் கண்டுகாமல் போவான்,மனசாட்சி உள்ளவன் அவளின் மானம் காக்க விரும்பி சரிசெய்துகொள்ள நாசுக்காக தெரிவிப்பான்..ஆனால் வேணும்னு காட்றவங்களை ஒன்னும் சொல்றதுக்கில்லை. இதுதான் எங்க இந்தியா.
சினிமாவில் பல மாற்றங்கள் வந்தாலும் இந்தியாவில் அனைத்து குடும்பங்களும் எல்லா படங்களையும் குடும்பத்துடன் பார்ப்பதில்லை.அத்தகைய திரைப்படம் இங்குதான் எடுக்கப்படுகிறது,வெளியிடப்படுகிறது.அனைவரும் பார்க்கத் தயார்தான்.எத்தனை பெற்றோர் தன் பிள்ளைகளுடன் எல்லாக் காட்சிகளையும் காணத் தயார்?எத்தனை பிள்ளைகளும்,சகோதரனும் தயார்?
18 வயது ஆனவுடன் பிள்ளைகளை தனித்துவிட சட்டம் வந்தால் கூட இந்திய பெற்றோர்கள் ஏற்கமாட்டார்கள். இதுதான் பண்பாட்டில் ஒன்று.
வெளிநாட்டு கலாச்சாரத்தை குறை சொல்லவில்லை.அதை எங்க பெண்கள் மெல்ல மெல்ல ஏற்கவே தயாராகிறார்கள்.வழிகாட்ட சினிமாத்துறையும்,மீடியாவும் கை கொடுக்கிறது.இப்ப இருக்கும் தலைமுறை வெளிநாட்டுக்கு சமமாகவே வந்துவிடும்.ப்ராடு மைண்டு எல்லார்க்கும் எல்லாத்திலும் வந்துவிட்டால் இந்தி்யாவின் பழைய பண்பாடு காணாமல் போகிடும்.பண்பாட கட்டிகிட்டு என்னத்த கண்டோம்.
@வெங்கட் நாகராஜ்
நன்றிங்க.
@முனைவர் .இரா.குணசீலன்
புரிதலுக்கு நன்றிங்க
என் முந்தைய பின்னூட்டத்தின் நடுவில் தேவை இல்லாத சுட்டியை நீக்கி, மறு வெளியீடு.
1. சித்ரா சொன்னது: //தங்கள் "பார்வையில்" மாற்றம் கொண்டு வராத ஆண்களின் மேல் குற்றமா?// ஆண்களின் பார்வையில் மாற்றம் வந்தால் தான் சமச்சீர் என்கிறார், இதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. விவாதத்துக்கு உரிய கேள்வி என்று மட்டும் சொல்கிறீர்கள்.
2. நீங்கள் காவ்யா என்கிற பெண்ணுக்கு சொன்னது: //சினிமாவில் பல மாற்றங்கள் வந்தாலும் இந்தியாவில் அனைத்து குடும்பங்களும் எல்லா படங்களையும் குடும்பத்துடன் பார்ப்பதில்லை.அத்தகைய திரைப்படம் இங்குதான் எடுக்கப்படுகிறது,வெளியிடப்படுகிறது.அனைவரும் பார்க்கத் தயார்தான்.எத்தனை பெற்றோர் தன் பிள்ளைகளுடன் எல்லாக் காட்சிகளையும் காணத் தயார்?எத்தனை பிள்ளைகளும்,சகோதரனும் தயார்? //
குடும்பத்தோடு பார்ப்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன். யாரோ பார்க்கிறாங்க என்பதால் தானே படமே எடுக்கிறாங்க. இதுல, குடும்பத்தோட பாக்கிறாங்களா - விவாதத்தை சாமர்த்தியமா திசை திருப்பம்.
புரிதல் என்பது இருவழிப் பாதை. எனக்கு நீங்கள் சொல்வது புரிகிறது. அதனாலேயே [இந்தியாவில் உடையில்] பொத்தி கொண்டு போகிறேன். ஆனால், இந்த பதிவிலயும் உங்கள் மறுமொழிகளிலும் தெரிவது: என்னை நீங்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. அதனால், சொல்லி விட்டுப் போகிறேன். இதனால் உங்களுக்கு எந்த லௌகீக நஷ்டமும் இல்லை என்பதாலும் இருக்கலாம். ஒரு உயிரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பது குற்றம் இல்லை; ஆனால், அவர்களைப் பற்றிப் பேசி நம்மை நியாயப் படுத்திக் கொள்வது குற்றம். அவர்கள் வந்து தம் வழி விளக்கிச் சொன்னால், கிண்டல் சொல்வதும்.
கிண்டல் தொனியில் காட்டாக: //பண்பாட கட்டிகிட்டு என்னத்த கண்டோம்.//
//தலைப்பில் எள்ளல்...//
என்னைப் பொறுத்த வரை, இன்றைய இந்திய சராசரி பெண்களுக்கு உடல்/உடை தெளிவு வந்திருக்கு, காட்டிக்கிறாங்க; பெண்களை பார்ப்பதை பிறப்புரிமையா நினைக்கும் இந்திய சராசரி ஆண், பெண் தன்னைப் பார்க்கிற அளவு தம் உடல்/உடை மேல் கவனம் காட்டவில்லை, அதனால் தான் இந்த பிரச்னை.
என் கருத்து மேல பதில் சொல்லுங்க, என்னை பற்றி அல்ல. நீங்கள் என்னை போன்ற பெண்களின் உடல்/உடை பற்றி சொன்னதால் என்னை பற்றி சொல்ல வேண்டியதாச்சு.
மற்றவர்களை மதிக்கும் நாகரிகமடைந்தவர்கள் நிறைய இருக்கும்போது என்ன உடை போட்டுகொண்டு போகிறார்கள் என்பது முக்கியமில்லை. மேலை நாடுகளில் டூ பீஸ் மட்டுமே அணிந்து பெண்கள் செல்லும் பீச்களில் ஒரு கறபழிப்பு, ஒரு பலாத்காரம் கூட நடப்பதில்லை.
ஆனால் அதெல்லாம் தப்பு என்று சொல்லும் சர்ச்சுகளில்தான் பாதிரிகள் சிறுவர் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து ஆளாகிறார்கள்.
@கெக்கே பிக்குணி
தங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி.
ஆண்கள் பார்வையில் சமச்சீர் வருவதை,வந்து கொண்டிருப்பதைதான் அனைத்து பெண்களும் விரும்புகிறார்கள்.
யாரையும் கிண்டல் செய்யவில்லை,எதையும் நியாயப் படுத்தவும் இல்லை.அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தில் உள்ளது.
உதாரணங்களுக்கு இங்கே வந்திருக்கும் பின்னூட்டங்களில் புரிந்து கொள்ளலாம்.
பெரும்பான்மை குடும்பத்தைப் பற்றியே குறிப்பிட்டுள்ளென்.டிவியில் சில காட்சிகள் வந்தால் கூட பிள்ளைகளுடன் பார்க்க சங்கடப்பட்டு ச்னலை மாற்றும் குடும்பங்கள்தான் அதிகம்.காலப்போக்கில் இதுவும் மாறாலாம்.
நான் பதில் சொல்லுவதாலு சொல்லாவிட்டாலும் எதுவும் மாறப்போவதில்லை.யாரையும் என் சொல்படி மாற்ற எனக்கு எந்த உரிமையும் இல்லை.
பார்வைக்கு தீனீ போடுபவள் அதன் பின்விளைவுகளையும் சமாளிக்கும் துணிச்சல் இருந்தால் எந்த உடைகளையும் அணியலாம்.மேலும் விவாதிக்க விரும்பவில்லை.
@inbu shahir
வருகைக்கு நன்றி
மோகத்தை தூண்டியது கிடைக்காமால்,கிடைத்தவற்றை மேயும் மிருகங்கள்.
//பார்வைக்கு தீனீ போடுபவள்// அசிங்கமாக இருக்கிறது இப்படி படிப்பதற்கு. உங்களை என்ன பெயர் சொல்லி அழைத்தேன், இந்த கைமாறுக்கு?
சுதந்திரம் தருவதற்கு நமக்கான சுதந்திரத்தையும்,உரிமையையும் யாரும் பிடுங்கி வைத்துக்கொள்ளவில்லை,//
உண்மைதான்.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்காமல் காற்றில் பறக்கவிட்டு பின்னால வருந்துவதால் என்ன பயன்?
ஒழுங்கான உறுத்தாத ஆடைக்கலாச்சாரம் அவசியம்.
ஆதங்கம் பகிர்வு.
பெண்கள் இந்த உடைவிஷியம் பற்றி எழுதினீங்கலே அது 100 க்கு 100 பர்சண்ட் உண்மை/ நானும் முன்பு பதிவில்போட்டுள்ளேன்.
//ஏற இறங்க பார்க்க வைக்கும் ஒரு பெண்ணை அந்த நிமிடம் ஒரு ஆண் பார்க்கலாம்.இப்படி நம் மகளை யாரும் பார்த்துவிடக் கூடாதுனு ஒரு அப்பாவிற்கு தோன்றுமே,நம் சகோதரியை இப்படி யாரும் பார்க்க கூடாதுனு சகோதரனுக்கு தோன்றுமே,தன் மனைவியை மற்றவர் ரசிக்க கூடாதென்று கணவனுக்குத் தோன்றுமே!!!!காமிப்பவர்கள் மேல் குற்றமா?பார்ப்பவர்கள் மேல் குற்றமா?//
மிகச்சரியாக சொல்லி இருக்கீங்கள்.
.// என் பத்வில் ஈரானி அம்மா பபதிவில் கமெண்ட் போட்டதர்கு மிக நன்றி.
நாகபட்ணம் சைடு என்றீரிஅக்ள்.
பாங்கு சொல்லும் போது கேட்கும் ஆனால் அர்த்தம் புரியல என்றீர்கள்.
நீங்கள் விருபபட்டால் என் பதிவில் என்ன சொல்கிறார்கள் என்பதை தம்ழில் எடுத்து போடுகீறேன்.
@இராஜராஜேஸ்வரி
புரிதலான கருத்துரைக்கு நன்றி.
@ஜலீலா கமல்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.
ரமலான் வாழ்த்துகள்.
//நீங்கள் விருபபட்டால் என் பதிவில் என்ன சொல்கிறார்கள் என்பதை தம்ழில் எடுத்து போடுகீறேன்//
பராவாயில்லை மெனக்கெட வேண்டாம்.என்றாவது ஒரு பதிவாக போடுங்கள்.எல்லோரும் படித்து தெரிந்துகொள்கிறோம்.
Chitr, Kavya and Kekkeapikkunni have written very clear views.
Salute them.
And thanks to you for writing about the topic.
Men need to understand that they have to change, women need to accept , they can not be show-offs to tease men.
Post a Comment