*வணக்கம் வருகைக்கு நன்றி*

Aug 18, 2011

நான் யார் தடுக்க?

1.எப்போதாவது ஒரு முறை திருமணம் செய்து கொள்வது நல்லது.

2.புத்திசாலியான ஒருவன் பெண்ணிடம் அவளை புரிந்துகொண்டதாக                 மட்டுமே சொல்வான்.முட்டாள் அதை நிருபிக்க முயல்வான்.

3.திருமணம் மூன்றும்களால் ஆனது.

முதல் ம் நிச்சியம்

இரண்டாவது ம் திருமணம்.

மூன்றாவது ம் துன்பம்

4.திருமணம் உலகத்தைச் சுழல வைப்பதாய் இருக்கலாம்.ஆனால் மூக்கின் மேல் விழும் குத்தும் அதைத் தரும்.

5.விவாகத்தை விவாகரத்திலிருந்து காப்பதற்கு ஒரே வழி திருமணத்தின் போதே தலை காட்டாமல் இருப்பதுதான்.

6.கடவுளின் முதல் தவறு ஆண்.இரண்டாம் தவறு பெண்.இரு தவறுகள் இணைந்து ஒரு சரியாக முடியாது.

7.பெண்ணிற்கு சுதந்திரமாக இருக்கவும்,வாழவும், ஆணை வேட்டையாடவும் உரிமை இருக்கிறது.நீ திருமணம் செய்ய விரும்பினால் நான் யார் தடுக்க?குதிக்கும் முன் யோசித்துக்கொள்.

ஓஷோ அவர்களின் பெண்ணின் பெருமை என்ற புத்தகத்தில் மேற்சொன்ன ஏழும் மர்பியின்  சூத்திரங்களென குறிப்பிடப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளேன்.
ஒரு சின்ன கதை
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தோழியை பார்க்க சென்ற பெண்ணுக்கு ஒரே ஆச்சர்யம்.ஏனெனில் தன் தோழியின் முகம் மாறியிருந்தது.
விசாரித்ததில், முக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இயற்கையாகவே நல்ல நிறம்,முகம்,உடல் வாகு கொண்டிருந்த அந்த பெண் தன் அழகில் திருப்தி இல்லாமல் மேலும் தன்னை அழகுபடுத்த தன் உதடு,மூக்கு,தாடை பகுதிகளை  மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறாளாம். முன்பைவிட இப்போது மிக அழகாகவே காட்சியளிக்கிறாள்.
இப்பவும் அவளுக்கு தன் அழகில் திருப்தி இல்லை என்றாளாம்.ஏன் ? இதற்கு மேல் எப்படியிருக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்ட தோழிக்கு பதில் என்ன சொன்னாளாம் தெரியுமா?
நான் இப்போது கூடுதல் அழகாகவே இருக்கிறேன்,ஆனால் என் புது முகம் என் பழைய உடலுக்கு பொருந்தவில்லையே என வருத்தப்படுகிறேன் என்றாளாம்.
கதையின் கரு என்னவென்று யூகித்திருப்பீர்களென நம்புகிறேன்.
(இதுவும் அதே புத்தகத்தில் படித்த கதை) 

8 comments:

Unknown said...

நல்ல கதை தோழா நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான விளக்கங்கள்,

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஓஷோ அவர்களின் பெண்ணின் பெருமை என்ற புத்தகத்தில் மேற்சொன்ன ஏழும் மர்பியின் சூத்திரங்களென குறிப்பிடப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளேன்.//

Too late. திருமணத்திற்கு முன்பே படித்திருக்க வேண்டும்.

முகமாற்ற அறுவை சிகிச்சை கதையும், செருப்புக்கு ஏற்றாற்போல காலை மாற்றுவது போல
ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது.

நல்ல பகிர்வுகள் தான். தமிழ்நாட்டின் வெப்பம் கடந்த 2 மாதங்களில் உங்களை மிகவும் தாக்கியுள்ளதாக உணர்கிறேன்.

என்னெல்லாமோ படித்து என்னெல்லாமோ எழுதுகிறீர்கள்.
”நான் யார் தடுக்க?”
தொடருங்கள். வாழ்த்துக்கள்.

voted 2 to 3 in Indli vgk

ஆமினா said...

அழகு விஷயத்தில் பெண்கள் எளிதில் திருப்தியடையமாட்டார்கள்-இதான் நீதியா?

எல் கே said...

ஹஹஹா :)

ADHI VENKAT said...

ஓஷோவின் கருத்துக்கள் நன்றாக இருக்கின்றன. 4வது கருத்து நல்லா இருக்கு.

மனதிருப்தி எதிலும் வேண்டும் என்பதற்காக கதை உள்ளது.

பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

Jaleela Kamal said...

இப்படி பட்ட ஆட்களை நீங்க தடுக்க வே முடியாது தான்..

வெங்கட் நாகராஜ் said...

:))))))