*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 19, 2011

ஆங்கிலம் கற்க,டீவியில் சமையல் குறிப்பு பாருங்க

சன்,ஜெயா,மெகா அலைவரிசைகளில் சமீபமாக நான் பார்த்த சமையல் கலை நிகழ்ச்சியில் அவர்கள் செய்து காமித்த பாதார்த்தங்களை கற்றுக்கொண்டதை விட ஓரளவு ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.நம்பிக்கை இல்லைனா நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
உதாரணத்திற்கு ஒரு ரெசிப்பி

ட்ஃப்ரண்டான  தக்காளி தொக்கு எப்படி செய்றதுனு பாக்கப் போறோம்.
நாலு தக்காளி டிஃப்ரண்டான டேஸ்ட்டுக்காக தேவையானளவு ஆயில், ஆனியன்,இஞ்சி,பூண்டு,மஞ்சள் தூள்,தனியா தூள்,கரம் மசலா,கொகோநட் பேஸ்ட்,சில்லி பவுடர்,தேவையானளவு சால்ட்.

இப்போ மசாலாவை ரெடி பண்ணிடுவோம்.

அல்ரெடி கட் பண்ணி வச்சுருக்க  கொகோநட்டை  மிக்சியில போட்டு நல்லா அரச்சு பேஸ்ட் பண்ணிக்கனும்.

நெக்ஸ்ட் கொஞ்சம் பூண்டு,இஞ்ஜியை மிக்ஸில அரச்ச பேஸ்ட்.

ஜிஞ்சர்,கார்லிக் பேஸ்ட் இப்போ கடைகளிலும் அவைளபிள்.

லிட்டில் அமெளண்ட் இருந்தால் போதும். இது சிம்பிளான டிஷ்தான்.டென் மினிட்ஸ்ல ரெடிபண்ணிடலாம்.

ஸ்டவ ஆன் பண்ணி கடாய வச்சாச்சு,நீங்க நார்மல் பேன்(pan)கூட செய்யலாம்.
கடாய் சூடாயிடுச்சு,இப்போ ரெண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் போட்டுகங்க.

ம்..ஆயிலும் சூடாயிடுச்சு,அல்ரெடி சாப் செஞ்சு வச்சுருக்கிற ஆனியன போட்டு பொன்நிறமா ஃப்ரை பண்ணுங்க,தென் கொஞ்சம் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் போட்டுகங்க,பச்ச ஸ்மல் போகிறவரைக்கும் ஃப்ரை பண்ணுங்க.

இப்போ தக்காளிய கட் பண்ணி போடுங்க.
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,
ஆஃப் ஸ்பூன் தனியா தூள்,
ஆஃப் ஸ்பூன் கரம்  மசாலா
ஒரு ஸ்பூன் சில்லி பவுடர் போட்டுகங்க.

தேவையான் அளவு சால்ட் போட்டுகங்க.எதை மறந்தாலும் உப்பு போட மறந்துடாதீங்க.
ஃபைவ் மினிட் நல்லா ஃப்ரை பண்ணுங்க,லைட்டா வாட்டர் கூட சேத்துக்கலாம். 

ம்,,ரெடியாகிடுச்சு,இப்போ அரச்சு வச்சுருக்கிற தேங்காய் விழுதையும் (கொகோநட் பேஸ்ட்னு சொல்ல மறந்துடாங்கப்பா) மிக்ஸ் பண்ணி டு மினிட் சிம்ல(ஃபோன் சிம் ல இல்ல) வச்சுடுங்க.
ம்..ரெடியாய்டுச்சு,ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க.

இனி சர்வ் பண்ணவேண்டியதுதான்.

அல்ரெடி வச்சிருந்த ச்சாப்ப்டு ஆனியன்,ஸ்லைஸ்டு தக்காளியை இந்த டிஷ் மேல வச்சு டெக்கரேட் செய்து கொடுத்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.கொரியண்டர் லீஃப் கூட ஆட் பண்ணிக்கலாம்.

இட்லி,தோசை,சப்பாத்திக்கு இதை சைடிஷா சாப்பிடலாம்.
கமண்ட்ரி கொடுத்துகிட்டு கூடவே சாப்பிட்டு பாக்க ஒருத்தவங்க நிப்பாங்களே

அவங்க :  வாவ் ஒண்டர்ஃபுல் டிஷ்ங்க,எக்ஸலண்ட்.
என்னங்க நீங்களும் இந்த டிஷை ட்ரை பன்வீங்கனு நினைக்கிறேன்.செஞ்சு பாத்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.ஸ்டில் தென் bye,bye. ஃப்ரம் x
{மைண்டு வாய்ஸ்: நகருங்க புராண்டிட போறாங்க, bye சொல்றாங்களா}

ப்ரோகிராம் முடிஞ்சுட்டு.அவங்க பேசும் ஆங்கில வார்த்தைகளை கத்துக்கொள்ள உங்க வீட்ல டீவி சேனல் வந்தா மட்டும் பத்தாது காதும் கண்ணும் நல்லா வேலை பன்னனும்.அப்பதான் அவங்க எதை கடாயில போடுறாங்க அதுக்கு பேர் என்ன சொல்றாங்கனு விளங்கும்.

                                    இப்படிக்கு
                     செந்தமிழ் வராட்டாலும்
                நடைமுறை தமிழை எதிர்பாக்கும்  சங்கம்.

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் கிடைத்து அதிலும் 1 to 2 வோட்டுப்போட்டாச்சு.

என் இன்றைய குட்டியூண்டுக்கதையை படிச்சீங்களா?

இராஜராஜேஸ்வரி said...

செந்தமிழ் வராட்டாலும்
நடைமுறை தமிழை எதிர்பாக்கும் சங்கம்.//
அனைவரின் எதிர்பார்ப்பும் கூடதான். அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.
எங்க வீட்டுக்கு வந்திருந்தால் நிச்சயம் பிடித்தவைகளை செய்து பசியாற்றியிருப்பேன்(ருசிக்கு நான் பொறுப்பில்லை).

இப்ப கூரியர்ல லன்ச் அனுப்பயிருக்கேன் பெற்றுக் கொள்ளவும்.
நன்றி.

@இராஜராஜேஸ்வரி
சரிதான்.வருகைக்கு நன்றி.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு ஆச்சி. இப்போதெல்லாம் டீ.வியில் தமிழே திண்டாட்டமாத்தான் இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

கலக்கலான பகிர்வு. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் ஒரு வேளை ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் ஆனா சமையல்? அது எனக்கு “Doubt” தான் :)
பாருங்க, இப்படி ஒரு தக்காளி சட்னி பகிர்ந்து பசியைக் கிளப்பி விட்டுட்டீங்க. வை. கோ சார் வேற பசி மயக்கத்துல ஒரே கருத்து மூணு தடவ ”பேஸ்ட்” பண்ணிடார். :)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

டீ.வி.அதிகம் பார்க்காததால் உங்கள் இந்தப்பதிவின் மூலம் ஆங்கிலமும் கற்க முடிந்தது, ட்ஃப்ரண்டான தக்காளி தொக்கு எப்படி செய்றதுனு தெரிஞ்சுக்கவும் முடிந்தது.

வோட்டுப்போடவும் முடிந்தது.

ஆனால் வயிற்றைப்பசிக்குதுன்னு தட்டை அலம்பிக்கிட்டு உட்கார்ந்தால் என் வீட்டில் இன்னும் சமையலே ஆன பாடில்லை.

பசிவந்தால் பத்தும் பறந்திடும் அல்லவா? பறந்து உங்க வீட்டிக்கு வந்துடலாமான்னு தோனிச்சு.

பிறகு ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு, ஹோட்டலுக்குப்போய் கர்க்க சாப்பிட்டு வந்தேன்.

என் பசியைக்கிளப்பி விட்ட நீங்க தான் இதற்கு பொறுப்பேற்கணும்.

Voted 2 to 3 in INDLI
May 19, 2011 1:46 PM

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்
என்னாச்சு சார்...........?

@ஆதி
@வெங்கட் நாகராஜ்
வாங்க,வாங்க இருவருக்கும் நன்றிகள்.நானும் ஒரு நாள்கூட டீவியில சொன்னது போல செய்ததில்லை.ருசி வரவிடுவதில்லை.
சமையலையும் ஆங்கிலத்தையும் சேர்த்து சொல்லித்தரும் உபயோகமான நிகழ்ச்சி் இது ஒன்றுதான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வை. கோ சார் வேற பசி மயக்கத்துல ஒரே கருத்து மூணு தடவ ”பேஸ்ட்” பண்ணிடார். :)))))//

வெங்கட் சுட்டிக்காட்டியதால் மூன்றில் இரண்டு நீக்கப்பட்டன. மற்ற ஒன்றே ஒன்று கடைசிக்குப்போய் விட்டது.

Chitra said...

செந்தமிழ் வராட்டாலும்
நடைமுறை தமிழை எதிர்பாக்கும் சங்கம்.


...... கலக்கல் பதிவுங்க..... சரியா சொல்லி இருக்கீங்க....

Angel said...

முழுசா தமிழ்ல பேசணும் இல்லேன்னா ஆங்கிலத்தில் பேசணும் .
என்னத்தை சொல்ல .
அது சரி தக்காளி தொக்கு எப்படி வந்தது என்று சொல்லவே இல்லையே .

கீதமஞ்சரி said...

தமிழை அரிந்து, அரைத்து, வதக்கி, பொரித்து நோகடிச்சிட்டாங்க. வானொலி, தொலைக்காட்சிகளில்தான் தமிழ்க்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. இதில் அரைகுறை ஆங்கிலத்தின் துணை வேறு. உங்கள் ஆதங்கத்தை அழகாகப் பிரதிபலிக்கிறது இந்தப் பதிவு.