*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 25, 2011

இந்திய எல்லைக்கு போகலாம் வாங்க

                           அனைவரும் அருகில் நடக்கும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள முடியலைனாலும் இன்று நம் இந்தியா குடியரசு பெற்ற நாள்னு ஒரு நிமிடம் நினைத்தால் கூட போதும்.மாணவர்கள் பள்ளியிலும்,கல்லூரியிலும், அலுவலகத்தார்கள் தங்கள் அலுவலகத்திலும்,கட்சிகள் சார்ந்தவர்கள் அங்கங்கே மற்ற  சில இடங்களிலும்,குறிப்பாக மாநில தலைமையகம்,மாவட்ட ஆட்சியர் இப்படி பல இடங்களில் குடியரசு தினமோ,சுதந்திர தினமோ தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுவோம்.நேரில் பார்ப்போம் அல்லது தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.சில இடங்களில் தினமும் தேசியக்கொடி பறப்பதை பார்த்திருப்போம்.


                            தினமும்             தேசியக்கொடி       ஏற்றி  இறக்கி  நம்ம  நாட்டுக்  கொடி  மட்டுமில்லங்க  நம்ம நண்பர் பாக்கிஸ்தான் நாட்டுக் கொடியோடு  ஏற்றி இறக்கி தோழமை  பரிமாறிக்கொள்வது எங்க தெரியுமா? நம்ம இந்திய எல்லையிலதாங்க.நம்ம இந்தியா பாகிஸ்தான் எல்லை வாகா  பார்டரில்தான், நம்ம பஞ்சாப் மாநிலத்திலங்க,
எனக்கு ஒரு முறை அந்த காட்சிகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.நம் நாட்டுக்கான  சுதந்திர போராட்டங்களை நேரில் பாக்காட்டாலும்,கலந்து கொள்ளாவிட்டாலும்,   (பல தலைவர்கள் பாடு பட்டு வாங்கி கொடுத்துட்டு நம்மள
 அனுபவிக்க வச்சுட்டு போய்ட்டாங்க,அந்த குடியரசையும்,சுதந்தரத்தையும் நாம எப்படி உபோயோகிக்கிறோம்ங்கிறது வேற  விசியம்)    அந்த வாகா பார்டரில் நான் பார்த்த காட்சிகள் நாட்டுப்பற்று இல்லாத எந்த மனிதனையும் ஒரு நிமிடம் இது நமது இந்தியா,நான் இந்தியன் என்று உணர்ச்சிப்பூர்வமா நினைக்க வைத்துவிடும்.

பரைடு நடக்கிறது,இரு நாட்டு கொடிகள் பெருக்கல் குறிகள் போல வர செய்து பரிமாறிக்கொள்வதும்,இரு நாட்டு முக்கிய கமாண்டர்கள்  (மன்னிக்கவும் அவருக்கு பேர் என்னனு தெரியல)ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி எல்லை மாறுவதும் அப்பப்பா!அந்த நிமிடங்களை என்னனு சொல்லுவது.

இந்த காட்சிகளை காண தினமும் எங்கெங்கிருந்தோ மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டு வந்தாலும் அந்த நேரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர்.நாமும் சுற்றுலா செல்வது போலத்தானே இவ்ளோ தூரத்துக்கு  போய் பாக்க முடிகிறது,வட இந்தியா சுற்றுலா வருபவர்கள் பலர் இங்கும் வருகின்றனர்.பல பள்ளிக்கூட பேருந்துகள் மாணவர்களுடன் வந்திருந்ததையும்,பள்ளி மாணவர்கள் பொது மக்களுடனில்லாமல் தனியாக உக்கார வைக்கப் படுவதை கவனித்தேன்,விருப்பப் படுபவர்களுக்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நமது தேசியக் கொடியை கையில் பிடித்துக் கொண்டு நம் எல்லை வரை போக அனுமதி வழங்கப் படுகிறது.அங்கு நின்று டான்ஸ் ஆடுபவர்களை  பாக்கும் போது  மட்டும் இந்த இடத்தில் இது அவசியம்தானா என்ற கேள்வி எழுந்தாலும் சரி போகட்டும் இந்திய எல்லையில் ஆடுகிறோம்னு சந்தொஷப்படுரவங்களை என்ன செய்ய முடியும்.


நம்ம இந்த பக்கம் இருப்பது போல எல்லைக்கு அந்த பக்கம் பாகிஸ்தான் மக்கள்.அந்த நேரம்(நிகழ்ச்சி) முடிந்தவுடன் அந்த இடத்தை விட்டு வர மனசில்ல, அதுக்கு மேல அங்கிருக்க அனுமதி இல்ல,வெளியில் வரும்போது சில தமிழ் முகங்களையும் பார்த்தேன்,கிட்ட போய் எங்கிருந்து வறீங்கன்னு விசாரிச்சேன்.காஞ்சிபுரம்,விருத்தாச்சலம்நும்,எதோ ஒரு கம்பெனி பேரு சொன்னாங்க,எம்ப்ளாயிஸ்  டூர் வந்துருக்கொம்னாங்க,அத்தனை முகமிருந்தாலும் நம்மூரு முகத்தை கண்டுபிடித்ததிலும்,தமிழில் பேசிக் கொண்டதிலும் தனி சந்தோஷம்தான்.

ஒரு முறையாவது பார்க்கனும்.இப்போ இந்த வீடியோ க்ளிப்பை பாருங்க.










நம்மூர் பக்கம் பள்ளிகளில் சுதந்திர,குடியரசு தினத்தன்றுதான் கொடியேற்றி இனிப்பு வழங்கி ஞாபக விழாவாக கொண்டாடுவோம்.தலை நகர் தில்லியில் செங்கோட்டையில் அந்த தினத்தன்று தான் கொடி ஏற்றும் விழா நடந்தாலும்,எங்கள் சுற்று வட்டார பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் முதல் நாளே கொடி ஏற்றம் நடை பெற்று சுதந்திர,குடியரசு தினத்தன்று முழு விடுமுறை விடப்படுகிறது .(பிள்ளைகளை கடத்திடுவாங்களோ,பாம் போற்றுவாங்கலோனு தற்காப்பு விடுமுறையோ)மற்ற பகுதிகளில் எப்படின்னு தெரியல.



வந்தே   மாதரம். 

6 comments:

raji said...

இதுவரை நான் அறியாத புது தகவல்கள்.வீடியோக்களும் புதுமையாக இருந்தது
பகிர்வுக்கு நன்றி

எனது வலையில் நினைவாஞ்சலி பதிவில் கலந்து கொள்ள
எண்ணினால் கலந்து கொள்ளலாம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது தங்கள் வீடியோ பதிவு மூலம் காணும் வாய்ப்பு கிட்டியது. பதிவுக்கு நன்றி !

சிவகுமாரன் said...

இந்த பக்கம் நம்ம கடல் எல்லையிலேயும் பரேடு நடக்குதுங்க தினமும். வந்து பாருங்க என் வலைப்பக்கம்

ஆச்சி ஸ்ரீதர் said...

ராஜி & வை. கோபாலகிர்ஷ்ணன் சார் அவர்களின்
கருத்திற்கு நன்றி
வருகை தந்த சிவகுமாரன் அவர்களுக்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. நானும் இதை ஏற்கனவே தோழியின் சுற்றுலா வீடியோவில் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் நாட்டுப்பற்று ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு.
தில்லியில் குடியரசு தினத்தன்று ”இந்தியா கேட்” அருகே தான் கொடியேற்றுவார்கள். சுதந்திர தினத்துக்கு தான் ”செங்கோட்டையில்.”

ஆச்சி ஸ்ரீதர் said...

கருத்திற்கு நன்றி ஆதி,
சரிதான்.நான் தனித்து சொல்லாமல் விட்டு விட்டேன்.ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்க,2006ல் முதன் முதலாக இந்தியா கேட்,மற்றும் சுற்று வட்டாரங்களை காமிக்க அழைத்து வந்த கணவரிடம் இது இந்தியா கேட் என்றால் பக்கத்துலதான் பாகிஸ்தான் இருக்கானு கேட்ட ஆளு நான். பக்கத்துலதான் இருக்கு ஆனால் அந்த இந்தியா கேட் வேறன்னு வாகா பார்டர் பற்றி விளக்கினார்.2009 ல் பஞ்சாப்கு போகும் வாய்ப்பு கிடைத்ததில் அந்த அந்த கேட்டையும் பார்த்து நெகிழ்ந்து போனேன்.