*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 11, 2011

தில்லி முருகன் (மலை மந்திர்)


                                                
இந்த கோவில்  தமிழகத்தில்  அமைந்துள்ள எதோ ஒரு  கோவில் அல்ல.தலை நகர் தில்லியில் ராமகிருஷ்ண  புரத்தில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகன் கோவில்.மெயின் ரோட்டில் மலை(குன்றென சொல்லலாம்) மீது  கோவில் அமைந்துள்ளதால் மலை மந்திர் என்கிறார்கள்.ஹிந்தியில் மந்திர் என்றால் கோவில் என்று அர்த்தம்.அழகான கோவில்,கோவிலுக்குள் வந்தால் நாம் வட இந்தியாவில்தான் இருக்கிறோம்னு நம்பவே முடியாது.தமிழகத்தில் நம்மூர் கோவிலுக்குள் வந்துவிட்டதாகவே திருப்தி இருக்கும்.தமிழ் எழுத்துக்கள்,அர்ச்சனை கடை,மல்லிகை கனகாம்பரம் பூக்கள்,நம்மூர் குங்குமம்,கற்பூரம்,விபூதி,கோவிலை சார்ந்தவர் அனைவரும் தமிழ் பேசுபவர்கள்(தமிழகத்தை சார்ந்தவர்கள்).அர்ச்சகரும் நம்மிடம் தமிழில் பேசுவதும் கூடுதல் திருப்தி. 

 நம்மூர் கோவில் அமைப்பை போலவே லிங்க வடிவில் சிவ பெருமான்,அம்பாள்,கணபதி,நவ கிரகம்,கார்த்திகை மண்டபம்  உள்ளது.முருகன் மலை மீது ஆள் உயரத்திற்கு தனித்து நின்ற நிலையில்(வள்ளி தெய்வானை சமேதமாக இல்லை)  காட்சி தருகிறார்.முருகனை தரிசிக்க மலை மீது செல்ல படிக்கட்டு வசதி உள்ளது.முருகர் சன்னதிக்கு பிரகார அமைப்பும் உள்ளதால் பிரகாரத்தில் முருகனை சுற்றி வரும்போது துர்க்கை அம்மனையும் சண்டிகேசுவரரையும் தரிசிக்கலாம்.அந்த மலையின்  மீதிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை தில்லியின் அழகை (கட்டிடங்களையும்,லைட்டிங்களையும்,போக்குவரத்து நெரிசலையும்)ரசிக்கலாம். நம்மூர் போலவே கார்த்திகை,சஷ்டி,பிரோதஷம்,மற்ற சில முக்கிய நாட்களிலும் பூஜை,அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகிறது.தினமும் கால பூஜைகளும் நடை பெறுகிறது.வேத வகுப்புகளும் நடைபெறுவதாக சொன்னார்கள்.கோவிலுக்குள் மயிலும் சுற்றிக் கொண்டுள்ளது.கோவிலின் தல வரலாறு தமிழில் சுவற்றில்  எழுதப்பட்டுள்ளது.(கல்வெட்டாக).

தில்லி isbt யிலேர்ந்து ராம கிருஷ்ண புரத்திற்கு பஸ் வசதி உள்ளது.வசதியை பொறுத்து எதில் வந்தாலும் மலை மந்திறேன்று விசாரித்தால் வழி கிடைக்கும்.வட இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டுமில்லாமல்,வட இந்தியர்களும் கார்த்திக் பகவானை (முருகனை)தரிசிக்க வருகிறார்கள்.மூளைக்கு மூளை வித்தியாசமான பூக்கள்  கிடைத்தாலும்,நம்மூர் போல மல்லிகைப் பூ கிடைப்பது அரிது. நம்மூரில் தொடுப்பது போல இங்கு மட்டும்தான் பூ மாலைகளை பாக்கலாம்.வட இந்திய பெண்கள்   தலையில் பூ வைப்பதில் ஆர்வமில்லாதவர்கள் ,இங்கு வரும் தென்னகப் பெண்கள் விரும்பியும் /அர்ச்சகர் அர்ச்சித்து கொடுக்கும் பூவை  தலையில் வைத்திருப்பதை வட இந்தியர்கள் வித்தியாசமாக பார்ப்பதையும்  உணரலாம். 

தில்லியில்   நம்மூர் கோவில்களை காணுவது அரிது,வட இந்தியர்களின் கோவில் மற்றும் கடவுள் சிலை அமைப்புகளை பார்க்கும்போது நம்ம மனதில் பக்தி தோன்றாது,வேடிக்கை பார்க்கத்தான் தோன்றும்,விபூதி,குங்குமம் கிடையாது,குங்குமம் கூட ஏதாவது காளி மாதா, துர்க்கா தேவி  கோவிலில் கிடைக்கும். செந்தூரம்தான்  கொடுக்கப்படும்.அர்ச்சனை  கிடையாது.அபிசேகம் சில கோவில்களில் செய்தாலும் நம்மூர் அபிசேகம் மாதிரிலாம் பாக்க முடியாது.தேங்காயை உடைத்து வழிபடமாட்டார்கள்.முழு தேங்காயை வைத்து சிலர் தேங்காயின் மீது சின்ன  அழகான அலங்கரிக்கப்பட்ட ,கடவுளின் பெயர் எழுதப்பட்ட சிவப்பு நிற வஸ்த்திரத்தை தேங்காயின் மீது  சுற்றி   வைத்து வழிபடுவார்கள். கோவில் அமைப்புகளும்,வழிபாட்டு முறைகளும் முற்றிலும் மாறுபட்டாலும் கடவுள் இருக்கிறார்னு நம்புபவர்கள் அவரவர்க்கு தெரிந்த வழியில் வழிபடுவது வேற்றுமையில் ஒற்றுமைதான். 

மூன்று கி மீ தொலைவில் முனிர்கா என்ற இடம் உள்ளது.இங்கு தமிழில் பெயர் பலகை கொண்ட பிரபல மளிகை கடை உள்ளது.தென்னக பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.அருகே தென்னக உணவகம், தென்னக குறுந்ததகடு கடையும் உள்ளது.அருகே நம்மூரில் எளிதாக கிடைக்கும் முருங்கைக் கீரை ,முருங்கைக் காய்,வாழைத்தண்டு,மணத்தக்காளி கீரை,கருவப்பிள்ளை போன்றவைகள் சீசனுக்கு தகுந்தார் போல தில்லி விலைக்கு விற்கப்படும் .

6 comments:

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. நானும் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன். நாம் பூ வைப்பதை வட இந்தியர்கள் வித்தியாசமாகத் தான் பார்ப்பார்கள். ஆனாலும் நான் பூ வைத்துக் கொள்வேன். எங்கள் ஏரியாவில் வார சந்தையிலேயே வாழைத்தண்டு, கறிவேப்பிலை, வாழைப்பூ, போன்றவை கிடைக்கும். அதுபோல் நம்மூர் மளிகைப் பொருட்கள் போன்றவையும் கேரளக் கடைகளிலும், தமிழ்க் கடைகளிலும் கிடைக்கும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிங்க.

Chemmal said...

hi friend, you have excellent narration skills. i feel proud to have such a skilled person near me. please contact me on phone for detailed comment.

Angel said...

fantastic post.
niraya vishayangal therindhu konden .
nanum oru roja poovai en magal thalayil vaithu vitteen.ellarum ennai oru maadhiri paarthargal.
(vaithdhu england il)

ஆச்சி ஸ்ரீதர் said...

என்னுடைய மூன்று பதிவிற்கும் கருத்து தெரிவித்த angelin அவர்களுக்கு நன்றி.தங்களின் profile பாத்து அசந்து விட்டேன். எல்லா புகழும் என்னை அறிமுக படுத்தியவருக்கு உரித்தாகட்டும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வலைச்சரத்தில் லாஸ்ட் லிங்க் தேர் ஆர் நோ வோர்ட்ஸ் என்று தெரிவித்தமைக்கு நன்றி