- எழுத்தியல் புகலை
- லிகதக் கலை
- கணிதக் கலை
- வேதம் (முதல் நூல் )
- புராண இதிகாசம் (பூர்வ கதை)
- வியாகரணம்(இலக்கணம்)
- ஜோதிடக் கலை (வான நூல்)
- தரும சாஸ்திரம்
- நீதி சாஸ்திரம்
- யோக சாஸ்திரம்
- மந்திர சாஸ்திரம்
- சகுண சாஸ்திரம்
- சிற்ப சாஸ்திரம்
- வைத்திய சாஸ்திரம்
- உருவ சாஸ்திரம்(உடல் கூறு)
- சப்தப் பிரம்மம் (ஒலிக்குறி நூல்)
- காவியம் (காப்பியம்)
- அலங்காரம்(அணி இலக்கணம்)
- மதுர பாஷணம்(சொல்வன்மை)
- நாடகம் (கூத்து)
- நிருத்தம் (நடன நூல்)
- வீணை (மதுர காண நூல்)
- வேணுகானம் (புல்லாங்குழல் நூல்)
- மிருதங்கம்
- தாளம்(உப இசை நூல்)
- அஸ்திர பயிற்சி(வில் வித்தை )
- கனக பரீட்சை (பொன் மற்று காணும் நூல்)
- ரத பரீட்சை (மகரத-அதிரத சாஸ்திரம்)
- கஜ பரீட்சை (யானை தேர்வு நூல் )
- அஸ்வ பரீட்சை (குதிரை தேர்வு நூல்)
- ரத்ன பரீட்சை (நவரத்ன தேர்வு)
- பூமி பரீட்சை (மண்வள தேர்வு)
- சங்கிராம இலக்கணம் (போர்முறை நூல்)
- மல்யுத்தி (மர்பிடி)
- ஆகர்ஷணம்(அணுகுதல்)
- உச்சாடணம்(அகற்றல்)
- வித்வேஷணம் (பகை மூட்டல்)
- மதன சாஸ்திரம்(கொக்கோகம்)
- மோஹனம்(மயங்குதல்)
- வசீகரணம் (வசியம் )
- இரசவாதம் (உலோகத்தை தங்கமாக்குதல்)
- காந்தருவ வாதம் (கந்தர்வர்களைப் பற்றி ரகசியம்)
- பைபீல வாதம்(விலங்கு மொழி அறிவு)
- கவுத்து வாதம்(துயரத்தை இன்பமாக்குதல்)
- தாது வாதம் (நாடி நூல்)
- காரூடம் (மந்திரத்தினால் விஷமாற்றுதல்)
- நஷ்டப் பிரசனம் (ஜோதிடத்தினால் இழப்பு சொல்லுதல்)
- முஷ்ட சாஸ்திரம் (ஜோதிடத்தினால் மறைந்து சொல்லுதல்)
- ஆகாய பிரவேசம் (விண்ணில் பறத்தல்)
- அதிருசியம் (தன்னை மறைத்தல்)
- இந்திர ஜாலம் (ஜால வித்தை )
- பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாயுதல்)
- ஆகாய கமனம்(வானில் மறைந்து உலாவுதல்)
- மகேந்திர ஜாலம்
- அக்கினிசதம்பனம்(நெருப்பைக் கட்டுதல்)
- ஜலஸ்தம்பனம் (நீர் மேல் நடத்தல்)
- வாயு ஸ்தம்பனம் (காற்று பிடித்தல்)
- திருஷ்டி ஸ்தம்பணம்(கண் கட்டுதல்)
- வாக்கு ஸ்தம்பணம்(வாயை கட்டுதல்)
- சுக்கில ஸ்தம்பலம் (இந்திரியம் கட்டுதல்)
- கன்னஸ்தம்பணம் (மறைந்ததை மறைத்தல்)
- கட்கஸ்தம்பலம் (வாள் சுழற்சி)
- அவஸ்தைப் பிரயோகம் (ஆன்மாவை அடக்குதல்)
- கீதம் (இசைக்கலை)
இந்த 64 கலைகளும் இந்த நூலில் உள்ளதென்று சொல்ல என்னிடம் ஆதாரமில்லை.சிறு வயதில் எதோ ஒரு புத்தகத்தை பார்த்து லக்ஸ்மி நரசிம்மர் ஸ்தோத்திரம் எழுதும்போது ,அதில் இந்த 64 கலைகள் பதினெட்டு வகை சித்தர்களின் பெயர்கள் இப்படியாக இருந்தது. ஆர்வத்தில் ஒரு டைரியில் எழுதி வைத்தேன்.தற்பொழுது அந்த டைரி கிடைத்ததில் பக்கங்களை படித்தபோது சற்றே கலையவிருக்கும் மையில் தென்பட்டதை அழியாமல் பாதுகாக்க பதிவு செய்துள்ளேன்.(டைரியின் வருடமோ 1997). அந்த புத்தகத்தின் பெயர் விபரம் ஞாபகமில்லை,புத்தகமும் இல்லை.
12 comments:
நல்ல தகவல்
"word verification" எடுத்துடுங்க கமென்ட் போட கஷ்டமார்க்கு.அதனாலதான் உங்களுக்கு நிறைய கமென்ட் வரமாட்டேங்குது
அத எப்படி எடுக்கணும்னு கீழ சொல்லிருக்கேன்
செட்டிங்க்ஸ் போயி கமென்ட்ஸ் செலெக்ட் பண்ணுங்க
அதுல "ஷோ வேர்ட் வெரிஃபிகேஷன்"னு ஒண்ணு இருக்கும்,
அதுல 'நோ' செலக்ட் பண்ணுங்க,then click "save".thats all
பகிர்வுக்கு நன்றி.
வருகை தந்த ராஜி அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன படி செட்டிங்ஸ் மாற்றம் செய்துள்ளேன்.உதவிக்கு நன்றி.
கோவை2டெல்லி தோழிக்கும் நன்றி.
உங்க பதிவுல ஏன் followr coloumn இல்ல.அது இருந்தாதான
எல்லாரும் பின் தொடர்ந்து வந்து படிப்பாங்க,
நாம எழுதறத நாலு பேர் படிச்சாதான மற்றவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும்
நமக்கும் ஒரு மன திருப்தி கிடைக்கும்
ஆஹா..அருமை! இப்படியே, துரியனின் 99 சகோதர்கள் பெயரையும் வெளியிட்டால், நன்றியுடையவனாய் இருப்பேன்!துச்சலை நூறில் ஒன்றா தெரியவில்லை!கடைசி சகோதரன் விகர்ணன் என்று நினைக்கிறேன்!
ராஜி அவர்களுக்கு
நீங்கள் வினவியபடி இணைத்துள்ளேன் .நன்றிங்க.
"ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி அவர்களுக்கு
தாங்கள் வினவியதற்கு என்னிடம் பதில் இல்லை,ஆனால் சூர்ய நாராயண பகவான் ஏழு குதிரைகளுடன் ரதத்தில் காட்சி தருவதை பார்த்திருப்போம்,கேள்விபட்டிருப்போம் அந்த ஏழு குதிரைகளின் பெயர்களை அதே காணாமல் போன புத்தகத்தை பார்த்து எழுதி வைத்துருக்கிறேன்.
காயத்ரி - தினமணி
பிருகதி - கத்யை
உஷ்ணிக் - லோகபந்து
ஜகதி - சுரோத்தமை
த்ருஷ்டுப் - தாமநிதி
அனுஷ்டுப் -பத்மினி
பங்க்தீ - ஹரி
துரியனின் சகோதரர்கள் பெயரை என் பதிவில் போட்டிருக்கின்றேன்.
படித்துப் பார்க்கவும்
ஆச்சி மேடம்(திருமதி பி எஸ் ஸ்ரீதர் ரொம்ப லாங்காக டைப் செய்ய வேண்டியுள்ளது
தவறாக எண்ணவில்லையெனில் இப்ப்டி அழைத்துக் கொள்கிறேன்,
சங்கடமாக இருந்தால் முன்பு போலவே அழைக்கிறேன்)
அந்த நகைச்சுவை பதிவுக்கு கை தட்டல் உங்க பதிவுக்கு
வரதுதான் நியாயம்,ஏற்கனவே என் பதிவுல ஒரு கை தட்டல்
கேட்டாச்சு,அதை நீங்கதான் கேக்கணும்,
ஸோ ப்ளீஸ் உங்க பதிவுல போட்டு கை தட்டலை அள்ளவும்
உங்க காமெடி ட்ராக் ராஜி யின் ”பெத்து பேர் வச்சு” ல் போட்டிருந்தீங்களே அது ரொம்ப நல்லா இருந்தது. அதற்கு என் கைத்தட்டல். அங்கயும் சொல்லிட்டேன். உங்க பதிவுலயும் தெரிவித்து கொள்கிறேன்.
இதில் 25 வது கலையை பின்பற்றினால் பிழைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன் ஹா ஹா
Post a Comment