*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 18, 2011

2020 ல் வல்லரசு ஆகுமா ?ம்ஹூம்

         
இவங்கசொல்றாங்க :                                                                      
  
  மேல் தட்டு மக்களில் பல பெண்கள் வேற எங்க போறாங்களோ இல்லையோ மகப்பேரு மருத்துவர்கிட்ட  போகாதவங்கள விரல் விட்டு எண்ணிடலாம்.அந்த சின்ன   கற்பப்பை  ஆயிரம் வகையில் மக்கர் பண்ணுது.அதுக்கலாம் செலவு பன்றதுக்கு எங்கள வசதியோட படைக்கலனோ என்னவோ  எங்களுக்கு   அந்த பையில் குறையில்லாம படைச்சுட்டான்.வாழ் நாட்களை முட்டி மோதி போராடி வாழ்க்கை நடத்தி பிள்ளைகளையும் வாடவிட்டு,அரவயிரும்,கால் வயிறும் நிரப்பி,அதுவும் பத்தலனா  பிள்ளைகளையும் வேலைக்கு அனுப்புறோம்.(எங்க பிள்ளைங்கதான் எங்களுக்கு எல்லாம்.) இது  1947 ல் இல்லை.இப்போதும் சில கிராமங்களிலும் ஊருக்கு உள்ளடங்கிய கிராம பகுதிகளிலும்,சில சாலையோரங்களிலும்  இவங்கள நாம பாக்கலாம்.

இவங்களில் சற்று முன்னேறியவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசாங்க    பள்ளிகூடத்துக்கு அனுப்புறாங்க,தங்கள் சக்திக்கு மேற்பட்ட காசு கேக்காத பள்ளிக்கூடத்துக்கு  மட்டுமல்ல,சோறு கட்டி கொடுக்க அவசியமில்லாத பள்ளிக்கூடத்துக்கும்,வகுப்பு வரைக்கும்தான்.
      
                             
இதுல ஒரு பிள்ள சொல்லுது எங்க வீட்ல ஆறு மாசத்துக்கு ஒரு நாளாவது ஒரு வேலைக்காவது எங்க அப்பாம்மா சொந்த சம்பாரிப்புல குடும்பத்தோடு உக்காந்து தனித் தனி இலை போட்டு சந்தோஷமா இத்தனையும் சமைச்சு சாப்பிடனம்னு ஆசையா இருக்குனு.

கிழே எல்லோரும் என்ன பாக்கறாங்கனு பாருங்க,இந்த கொடுமைய எங்க போய் சொல்றது?நாங்க இருக்கிற நாட்லதான் இவங்க எங்களைவிட புண்ணியம் செஞ்சு பிறந்திருக்காங்க போல

Heads of private schools scan the notice board for the room numbers where they can collect letters on the revised
fee structure from School Education Department officials, in Chennai on Tuesday. —
CHENNAI
இவங்க பிள்ளைங்க இப்படி படிக்குதுங்க,கொடுத்து வச்சவங்கதான்(பள்ளிக்கூடம்  நடத்துறவங்க)
இந்த பொங்கலுக்கு பட்டிமன்றம் கூட கல்வி சூழலில் பெரிதும்  சிரமப்படுவது பிள்ளைகளா,பெற்றோர்களானு மேல்தட்டு மக்களை பத்தியே பேசி பெற்றோர்களுக்கு ஆதரவா தீர்ப்பு சொன்னாங்களே தவிர எங்கள பத்தி யாரும் பேசலைங்க.எங்களுக்கு ஒரு பட்டிமன்றம் நடத்த சொல்லுங்கன்னு நல்ல உடை ஐந்தாவது வரை கூட படிக்க வைக்க வசதி இல்லாத ஏழை பெற்றோர் சொல்றாங்க. 

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்குற ஊர்ல கூட ரெண்டு ரூபாய்   ,மூன்று ரூபாய்க்கு  கட்டண கழிப்பறைகளில் வசூலிக்கிறாங்கங்றது எல்லோருக்கும் தெரியும்.கோதுமையே  உணவாக கொண்ட ஊர்ல பல முக்கிய நகரங்களில்  ஐந்து ரூபாய்  வசூலிக்கிறாங்க. 

2020  ல் வல்லரசாகனும்,வல்லரசாயிடும் கனவு காணுங்கள்னு  சொன்ன மதிப்பிற்குரியவரின் வாக்கு மேலே உள்ள ஏழைகளின் அடிப்படைத் தேவைகள் முக்கியமா கல்வி முன்னேற்றம்  ஒன்றுக்கொன்று   தொடர்புடைய தேவைகள் அதற்குண்டான அடிப்படை வசதிகள் அடித்தட்டு மக்களுக்கும் திட்டங்கள் போடுவதோடு இல்லாமல் செயல் படுத்தினால்தான அந்த பெரியவர் சொன்ன வாக்கு பலிக்கும்.கொள்ளையடிச்ச கோடிகள் திரும்ப இந்தியாவுக்கு கிடைச்சு ஆளுக்கு ஆயிர ரூபா தராங்களாம்.  அது 2020 லோ  அல்லது  20200 லோ அந்த பணம் எனக்கு வேணாம்னு  இவன்   ஓடுகிறான் போல...... 

   

இவங்கலாம் 2020 குள் நடுத்தர வகுப்பு அங்கத்தினராவது ஆனால்தான் வல்லரசு இல்லைனா ???................3 comments:

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.

ஆச்சி ஸ்ரீதர் said...

என் பிளாக்கை படிக்கவோ,கமெண்ட்ஸ் கொடுக்கவோ ஆளில்லாத குறைய நிறைவேத்தியதற்கு நன்றி தோழி.தொடர்ந்து வருகை தரவும் (யாரோ நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கே )

raji said...

உண்மை நிலையை உறைக்கும்படி உரைத்திருக்கிறீர்கள்.நல்ல பகிர்வு