*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 21, 2013

ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தை பார்ப்போம் வாங்க

கடந்த ஞாயிற்று கிழமை (17/3/2013)எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு நாள் சுற்றுப் பயணமாக தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகல் கார்டன்,ஜவர்ஹர் லால் நேரு மீயுசியம்(தீன் மூர்த்தி பவன்),இந்திரா காந்தி மீயுசியம்,இந்தியா கேட் மற்றும் கரோல் பக் வணிக வளாகம் சென்று வந்தோம்.

முகல் கார்டன்

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை குறிப்பிட்ட  நாட்களில் பொது மக்களுக்கு ஜானாதிபதி மாளிகையின் தோட்டமான முகல் கார்டன் பார்க்க இலவச அனுமதி அளிக்கப்படுகின்றது.2006 ஆம் ஆண்டு முகல் கார்டன் சென்றுள்ளேன்,பிறகு இந்த முறை சென்றபோது எதுவுமே மாறலையே என்று நினைக்கத் தோன்றியது.கழிப்பறைகள் கட்டப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது மட்டும் மாற்றமாக தெரிந்தது.ஏனெனில் 2006 ல் சென்றபோது குடியரசு மாளிகையின் தோட்டத்திற்கு வந்த மக்களுக்கே இவ்வளவு கேவலமான கழிப்பறை வசிதியா என்று நினைக்க வைத்தது.ஏற்கனவே பார்த்ததாலோ என்னவோ பூக்களைக் கண்டு  முதல் முறை அடைந்த குதுகலம் இல்லை.சென்ற முறை பார்த்த கனகாம்பரமும் தும்பை பூவும் கண்ணில் தென்படவில்லை.இங்கு புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை.


தீன் மூர்த்தி பவன்(ஜவஹர் லால் நேரு மீயுசியம்)

இங்கு நுழைந்த போது ஐ!!!!!! நேரு மாமாவின் வீட்டிற்கு போகிறோம் என்ற குதுகலம் உள்ளே சென்று அனைத்தையும் பார்த்தபோது இனம் புரியாத துக்கமாக மாறியது.வாழ்க்கை வரலாற்று நினைவிடமும்,புகைப்படங்களும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.இப்போது உள்ள அரசியல் தலைவர்களின் நிலையை நினைத்து நொந்து கொள்ளவும் வைத்தது.தேசத்திற்காக பாடுபட்ட எத்தனையோ பேர் மக்கள் மற்றும் அரசாங்கத்தால்  அடையாளம் தெரியாமல் பாதுகாக்கப் படாமல் போய்விட்டனரே என்றும் நினைக்க வைத்தது.

 பிரிட்டிஸ் ஆட்சியில் பிரிட்டானிய படைத்தளபதி வாழ்ந்த இந்தக் கட்டிடம், பின்னர் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் வசிப்பிடமாக இருந்தது. நேரு இறந்ததின் பின்னர் இக் கட்டிடம் தேசிய நினைவுச் சின்னம் ஆக்கப்பட்டுள்ளது .அழகான தோட்டம்,ஏகப்பட்ட அறைகள்,முக்கிய ஓவ்வொரு அறைக்கும் இரு வழிகள்,நூலகம்  மற்றும் நேரு அவர்களுக்கு கிடைத்த விலை மதிப்பற்ற பரிசுப் பொருட்கள் பிரமிப்பை ஏற்படுத்தியது.அலுவலக அறைகள் கண்ணாடிக் கதவால் அடைக்கப்பட்டு உள்ளே அனுமதியின்றி காட்சிக்கு மட்டும் இருந்தது,சிறிய விற்பனை நிலையமும் இருந்தது.

கோளரங்கமும் உள்ளது.1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி  ஜவகர்லால் நேருவின் மகள்  இந்திரா காந்தி அவர்கள் அதனைத் திறந்து வைத்தாராம் .காட்சி நேரம் எங்களுக்கு ஒத்து வராததால் கோளரங்க காட்சிக்கு செல்லவில்லை.இந்தியாவின் முதல் விண்வெளிவீரரான ராகேஷ் சர்மா பயணம் செய்த விண்கலமான சோயுஸ் டி 10 இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் புகைப்படங்கள் எடுக்க அனுமதித்தனர்.எதை படம் பிடிப்பது,விடுவது என்ற மலைப்பும் எல்லாத்தையும் படம் பிடித்து என்ன செய்ய போகிறோமென்ற நினைவில் மனம் கவர்ந்த படங்களை கிளிக்கினேன்.

அடுத்து சப்தர்ஜங் சாலையில் அமைந்துள்ள இந்திராகாந்தி மியுசியத்திற்கு சென்றோம்.அவர் வாழ்ந்த இடம் காட்சிக்கு விடப்பட்டுள்ளது.இந்திரா அவர்கள் கொல்லப்பட்ட முதல் நாள் நடந்து வந்த காலடித் தடம்,எழுதிய கடிதங்கள்,அவரின் இளமை மற்றும் அரசியல் வாழ்க்கையின் புகைப்படங்கள்,தனது கணவர் ,மகன்கள் ,பேரப்பிள்ளைகளுடன் படங்களும் ராஜீவ் காந்தி உபயோகித்த பொருட்களும் படங்களும் ,குண்டுவெடிப்பில் இறந்த ராஜீவின்  மிஞ்சிய ஆடை காலணிகள் காட்சிக்கு உள்ளது.

 இணைப்பை கிளிக்கி படங்களை பார்க்கவும்   
**************************************************







தற்சமயம் பல பிரச்சனைகளுடன் காங்கிரஸ் இருந்தாலும் இந்த மியுசியங்களின் காட்சிக்கு உள்ளவைகள் எப்படியிருந்த குடும்பம் என இனம் புரியாத துக்கத்தை ஏற்படுத்தியது.நான் இங்கு தந்திருக்கும் படங்களும் விடியோக்களும் மிகவும் குறைவானதுதான்,ஆனால் அனைத்தும் நானே  எடுத்தது.

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

பலமுறை சென்று வந்த இடங்கள்.

தீன் மூர்த்தி பவன் - அங்கே இருக்கும் ரோஜாக்கள் எத்தனை அழகு!

கோளரங்கத்தில் காட்சி பார்த்திருக்கிறேன் - குழந்தைகள் ரசிக்க முடியும்!

படங்களையும், காணொளியையும் இணைத்தது நன்று.

இராஜராஜேஸ்வரி said...

எப்படியிருந்த குடும்பம் என இனம் புரியாத துக்கத்தை ஏற்படுத்தியது.

நாங்கள் சென்று பார்வையிட்டபோதும் நினைவுகள் வருத்தத்தை ஏற்படுத்தின..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அடுத்து சப்தர்ஜங் சாலையில் அமைந்துள்ள இந்திராகாந்தி மியுசியத்திற்கு சென்றோம்.அவர் வாழ்ந்த இடம் காட்சிக்கு விடப்பட்டுள்ளது.இந்திரா அவர்கள் கொல்லப்பட்ட முதல் நாள் நடந்து வந்த காலடித் தடம்,எழுதிய கடிதங்கள்,அவரின் இளமை மற்றும் அரசியல் வாழ்க்கையின் புகைப்படங்கள்,தனது கணவர், மகன்கள் ,பேரப்பிள்ளைகளுடன் படங்களும் //

நானும் இங்கு சென்று வந்துள்ளேன்.

எப்படியிருந்த குடும்பம் என நினைவுகள் வருத்தத்தை ஏற்படுத்தின.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

செல்லாத இடங்கள்...

படங்களுக்கும் காணொளிக்கும் நன்றி...

பூ விழி said...

சுற்றுலா சென்ற போது நானும் கண்டு இருகிறேன் மனிதினில் நினைவுகளை மீண்டும் கொடுத்தது

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்

ADHI VENKAT said...

சென்று வந்த இடங்கள். முகல் கார்டனை இந்த முறை பார்க்க முடியாமல் போனதில் வருத்தம்...

கோளரங்கத்தில் காட்சிகள் பார்த்ததில்லை. நேரம் ஒத்து வரவில்லை..