*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 7, 2012

நிரந்திரமில்லா வாழ்க்கை

வாழ்க்கை என்னும் நிரந்திரமில்லா பயணத்தில் நாம் சந்திப்பது பலவகை.நினைவும் உணர்வும் இல்லையெனில் மனிதனும் இல்லை வாழ்வு என்ற வார்த்தைக்கு அர்த்தமும் இல்லை என்றே கருதுகிறேன்.கடந்த சில நாட்களில் நடந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

உடல் நிலை குணமின்றி இருந்த பதிவர் ஏஞ்சலின் அவர்களின் அம்மா இறந்துவிட்டதாக மெயில் அனுப்பியிருந்தார்கள்.துக்கத்தை பகிர்ந்துகொள்ள ஏஞ்சலின் அனுமதிப்பார்கள் என்றெண்ணி தெரிவிக்கிறேன்.முகம் தெரியாமல் பழகினாலும் ஒரு உயிரின் இழப்பு அதுவும் அன்னையின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.அன்னையின் ஆத்மா சாந்தி அடையவும்,ஏஞ்சலின் அவர்கள் மன தைர்யமும் ஆறுதலும் அடைய பிராத்திப்போம்.


என் மகள் எல்.கே.ஜி படிக்கிறாள்.குளிர் கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து காய்ச்சல்,ஜலதோசம்,கால் வலி இப்படி ஒன்று மாற்றி ஒன்று எதாவது தொந்தரவு இருந்துகொண்டே இருந்தது.பள்ளி டைரியில் எழுதி அனுப்பி ஆசிரியைக்கும் தெரிவித்துக்கொண்டிருந்தோம்.ஆசிரியையும் பார்த்துக்கொள்வதாக எழுதி அனுப்புவார்.சில நாட்கள் நன்றாக இருந்தாள்.பிப்ரவரி 29 லிருந்து முழு ஆண்டுத் தேர்வு துவங்கியது.மார்ச் 1 ஆம் தேதி என் மகளுக்கு பிறந்த நாள்.


சிறு வயதில் எனக்கு பிறந்தநாளென்றால் புது உடை,சாக்லேட் அல்லது வேறு எதாவது இனிப்பு வாங்கித் தருவார்.தெருவில் பழகியவர் வீட்டுக்கு மட்டும் கொடுப்போம்.வீட்டில் சாமி படம் முன் உள்ள திருநீரு,குங்குமம் இட்டுவிடுவார்கள்.கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்வோம் அவ்ளவுதான்.பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது கல்லூரி சென்றபின்தான்.கணவருக்கும் இப்படித்தான் பிறந்த நாள் கொண்டாடி பழக்கமில்லை.பெற்றெடுக்கும் சிரமம்,குழந்தை வளர்ப்பை அனுபவித்த பின் என் அம்மாவிற்கு என் பிறந்த நாளன்று “அம்மா ஹேப்பி பெத்த டே” என்பேன்.”போம்மா போ” என்று என் அம்மா லேசான சிரிப்புடன் சொன்னதை போனில் கேட்டிருக்கிறேன்.ஊருக்கு போகும்போது எதற்காகவாது என் அம்மா சற்று மனம் வருந்தியிருக்கும் நேரத்தில் “அம்மா ஹேப்பி பெத்த டே” என்று சொன்னால் பளிச்சுன்னு சிரிச்சுடுவாங்க.அப்போதைய வருத்தமும் விலகி ரிலாக்சா பேச ஆரமிப்பாங்க.என்ன செய்ய என் மகள் பிறந்தபோது என்னை தன் கண்களில் வைத்து கவனிச்சாங்க,என் மகளின் 3 பிறந்த நாட்களன்றும் எங்களுடன் இருக்க முடியவில்லை.நான்கவது பிறந்த நாளில் என் அம்மா உலகத்திலே இல்லை.இப்போ என் மகளின் 5 வது பிறந்த நாள்.


எங்கள் குடியிருப்பு பகுதியில் தற்போழுது ஆறு வருடங்களாக பார்க்கிறேன்,வீட்டில் வேறு என்ன விசேசங்களுக்கு அழைக்கிறார்களோ இல்லையோ பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு அழைத்துவிடுகிறார்கள்.பெரியவர்களை அழைக்கிறார்களோ இல்லையோ உங்கள் குழந்தையை அனுப்பிவையுங்கள் என்பார்கள்.இங்கு வந்து இன்னமும் நான் பார்க்காத கேள்விப்படாதது, ஒரு வீட்டில் உள்ள இளம் வயது பெண் எப்போது பருவம் அடைந்தாள்,பருவம் வந்தால் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது.நம்மூரில் பருவம் வந்தால் ஊரைக் கூட்டாவிட்டாலும் உறவுகளைக் கூட்டி சடங்கு செய்வார்களே!.இங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது.ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடப்பதும்,ஆண்ட்டி நாளைக்கு எனக்கு பர்த்டே உங்க பெண்ணை அனுப்பிவைங்க என்று அந்த பெண்ணே அழைப்பதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.


இப்படி பலரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட பிள்ளைகள் விளையாட்டில் பிறந்த நாள் கொண்டாடுவதும்,வேறு விளையாட்டில் இருக்கும்போதோ,பள்ளியிலோ சண்டை வந்தாலும் (என்றோ வரப்போகும் பிறந்த நாளுக்கு) “ஏய் நீ என் பர்த்டேக்கு வரக்கூடாது,நான் உன்னை அழைக்கமாட்டேன் ”என் பர்த்டேக்கு உன்னை கூப்பிடமாட்டேன்,ஆனா இவளை /இவனை கூப்பிடுவேன்னு வெறுப்பேற்றுவதும் நடக்கிறது.இப்படிபட்ட மனநிலை உருவானதற்கு யாரை என்ன சொல்றதுன்னு  தெரியவில்லை.


பலரின் பிறந்த நாளுக்கு சென்றுவந்த என் மகளுக்கும் தனக்கும் இது போல எல்லோரும் வரனும்னு ஆசை வந்து தனது நட்பு வட்டத்தாரை அழைக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தாள்.கடந்த வருடங்களில் வீட்டில் மட்டும்,நன்கு பழகியவர்களை மட்டும் அழைத்ததுண்டு. எங்களுக்கு இதில் விருப்பமில்லை,பழக்கமும்  இல்லை என்றாலும் அவளின் ஆசைக்காக சிலரை மட்டும் அழைத்து சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தோம்.இனிதே முடிந்தது.மறுநாள் மார்ச் 2 அன்று  விடியற்காலையிலிருந்து மகளுக்கு உடல் நிலை சரியில்லை.அன்று இங்கிலிஸ் ஓரல் எக்சாம் இருந்தது,லீவ் போட முடியாதே என்று அரை க்ளாஸ் பாலை குடிக்கவச்சு பள்ளிக்கு அனுப்பிவிட்டேன்.உடல் நிலை சரியில்லாததை டைரியிலும் எழுதி அனுப்பியிருந்தேன்.எப்படி திரும்பி வருகிறாளோ என்ற நினைப்புத்தான் இருந்தது.பத்தரை மணிக்கெல்லாம் பள்ளியிலிருந்து போன் வந்துவிட்டது “உங்கள் மகளுக்கு காய்ச்சல் வந்துள்ளது,வாமிட் செய்துவிட்டாள்,உடனே வந்து அழைத்துச் செல்லுங்கள் ”என்று.நான் வருவதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகிவிடும்.இன்றைய தேர்வை முடித்துவிடுங்கள் நான் வந்ததும் அனுப்பிவிடுங்கள் என்றேன்.கணவருக்கும் தெரிவித்துவிட்டு அப்படியே ஆட்டோவில் சென்றேன்.


பள்ளிக்கு போய் பார்த்தால் என் மகள் மிகவும் பலகீனமாக இருந்தாள்,இவளின் நிலையில் அடுத்த நாளுக்கான கணித ஓரலையும் முடித்துவிட்டதாக ஆசிரியை சொன்னார்.அதற்கு அடுத்த நாள் ரைம்ஸ்தான்,இரண்டு ரைம்ஸ் காம்படீசன்களிலும் கலந்துகொண்டிருக்கிறாள்,A+ கிரேடில் இருப்பதால் நம்பிக்கை உள்ளது,எனவே உடல் நிலை சரியானால் அனுப்புங்கள் இல்லையெனில் 9ஆம் தேதி நடைபெற உள்ள ரிட்டன் எக்சாமிற்கு அனுப்பினால் போதும் என்றார்கள்.அப்பா இது போதும்னு நினைத்து நன்றி சொல்லி பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பட்டலுக்கு  குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.அட்மிட் செய்யுங்கள் ஒரு பாட்டில் சலைன் ஏற்றனும்னு சொல்லிவிட்டார்.கையில் நரம்பு கண்டுபிடித்து ஊசி ஏற்றுவதற்குள் பட்ட பாடு !!!பார்க்கவே கொடுமையாக இருந்தது.கணவரும் வந்து சேர்ந்தார்.தொண்டையும் வலிப்பதாக அழுதாள்,இன்ஃபெக்சந்தான்னு டாக்டர் சொன்னார். 


அன்றைய தினம் ஹாஸ்பிட்டலிலே சென்றது.அன்று இரவு டிஸ்சார்ஜ் ஆனாலும் கையில் இருந்த ஊசிப்பட்டையை கழற்றிவிடவில்லை.3 நாட்களுக்கு தொடர்ந்து காலை மாலை ஊசி மருந்து ஏற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார் டாக்டர்.இனி பிறந்த நாள் கொண்டாடுவியான்னு ஆயிரம் முறை மனசாட்சி கேட்டது.வீட்டிற்கு வந்ததும் விசயம் தெரிந்த பலரில் சிலர் கேட்டது “என்னை நீ பர்த்டேக்கு கூப்பிடலைல்ல,இப்ப உன்ன பாக்க வச்சுட்ட பாத்தியா”.இந்த மனிதர்களை என்ன சொல்றது,இதான் காலக்கொடுமை.ட்ரீட்மெண்ட்டில் குணமாகிவிட்டாள் மகள்.


பூமாதேவியின் ஆட்டம்


மார்ச் 5 ஆம் தேதி மதியம் லேட்டாகத்தான் சமையல் செய்யத் துவங்கினேன்,தரையில் அமர்ந்து காய் வெட்டிக்கொண்டிருந்தேன்,என் மகளும் பக்கத்து வீட்டு பையனும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எனக்கு தலை சுற்றி மயக்கம் வருவதாகவே உணர்ந்தேன்,பஸ்ஸில் போவது போலவே இருந்தது,சிலிண்டர்,பிரிட்ஜ்லாம் கட,கடன்னு ஆடுவதை உணர்ந்துதான் பூகம்பம் வந்துள்ளதை உணரமுடிந்தது.அடுப்படியிலிருந்து எழுந்து நடந்து வர முடியவில்லை,விளையாடும் பிள்ளைகளை வெளியில் போங்கன்னு சொல்லிக்கொண்டே ஓடி வருகிறேன்,தண்ணிருக்குள் நடப்பது போலவே இருக்கிறது,பிள்ளைகள் நாற்காலி,டீ.வீ ஆடுவதையும்,நான் உலருவதையும் வேடிக்கை பார்க்கிறார்கள்,தாழிட்ட கதவை திறந்தும்,வெளியில் காற்றில் கதவு இழுப்பது போல இருந்தது,ஸ்ட்ரெயின் பண்ணிதான் கதவை திறக்க முடிந்தது.அப்போது வந்த நிலநடுக்கமும் நின்று போனது.


ஒரே பதட்டம்,வெளியில் மக்களின் பதட்டமான பேச்சுக்கள்,காய் வெட்டின கத்தியுடன் பிள்ளைகளை பிடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.தேர்வுக்கு போன பிள்ளை என்னாச்சோன்னு ஒரு தாயின் அலறல்,என் மகளுடன் விளையாடிய சிறுவனின் தாய் தனது கைக் குழந்தையுடன் ஓடி வந்து என்னிடமிருந்த அவனை இழுத்து அனைத்துப் பதறியது,இதோடு எத்தனை முறை நிலநடுக்கம் வந்துவிட்டது,என்றாவது ஒரு நாள் ஒரு நொடியில் இடிந்து விழுந்தால் என்ன செய்ய முடியும்னு ஒருவருக்கொருவர் பேசியது இன்னமும் நடுங்க வைக்கிறது.


10 வினாடிகள் நிலநடுக்கம் இருந்ததாகவும் எங்கள் ஊரை மையமாகக் கொண்டுதான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,வேறு எங்குவரை இந்த அதிர்வு உணரப்பட்டது என்பதையும் டீவியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம். 


இது நிரந்திரமில்லா வாழ்க்கைதானே....


நடப்பது நடக்கட்டும் என்று இன்று ஹோலி பூஜைக்கு ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள்.நாளை கலர் தூவி விளையாடும் ஹோலி விளையாட்டு.நம்மூர் தீபாவளி பரபரப்பு போல இங்கு ஹோலி,ஹோலி என்று  மக்கள் மகிழ்ச்சியாகவும்,ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமும் இருந்தாலும் பூமாதேவியின் அதிர்வும் மனதில் ஒலித்த வண்ணமாகவே உள்ளது. 

24 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு டைரி படித்தது போல் இருக்கிறது...

நல்லது கெட்டதுகளில் இரண்டும் கலந்து வருவதே வாழ்க்கை...

முடிவுக்காக எப்போது வேண்டுமானாலும் நாம் காத்திருக்க வேண்டும்.../

////
பதிவர் ஏஞ்சலின் அவர்களின் அம்மா இறந்துவிட்டதாக மெயில்அனுப்பிருந்தார்கள்..
//////

என்னுடை ஆழ்ந்த அனுதாபங்களை நான் பகிர்ந்துக் கொள்கிறேன்...


தங்க்ள பிள்கைக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்..


நிலநடுக்கத்தை செய்திகளில் கண்டோம்..
தெரியமாக இருங்கள்....

Avargal Unmaigal said...

உங்களை போலத்தான் நாங்களும் பிறந்தநாள் நாங்கள் கொண்டாடுபதில்லை . எனது மகளின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்து கார்டு அனுப்பிய என் அம்மா பிறந்த நாள் அன்று போனில் வாழ்த்து கூறிவிட்டு நல்ல நிலையில் இருந்த என் அம்மா அடுத்த நாளில் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டார். அதனால் முதல் பிறந்த நாளை கொண்டாட இயலவில்லை நண்பர்களுக்காக அவளின் மூன்றாவது பிறந்தனாளை கொண்டாடினோம் அதன் பிறகு நாங்கள் கொண்டாடுவதில்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கவிதை வீதி செளந்தர்

தங்களின் அனுதாபங்களுக்கும்,ஆறுதலான கருத்திற்கும்,வாழ்த்திற்கும் நன்றிகள்.

@அவர்கள் உண்மைகள்

//அடுத்த நாளில் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டார்//

வருந்துகிறேன்.நம்மை வாழ வைத்திட்டு, பார்த்து ரசிக்க முடியாமல் இப்படியான மரணம் வருவதுதான் தாங்க முடிவதில்லை.

வெங்கட் நாகராஜ் said...

அடடா... அம்ருதா குட்டிக்கு உடம்பு சரியில்லையா... அச்சச்சோ...

நிலநடுக்கம்... :( கஷ்டம் தான். அப்பப்ப ஒரு ஆட்டம் காமிச்சுட்டுதான் இருக்கு....

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருமதி. ஏஞ்சலின் அவர்களின் தாயார் மறைவு, கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. அவர்களுக்கும் தனியாக மெயில் அனுப்பியுள்ளேன். சென்னையில் தான் இன்னும் இருக்கிறார்கள்.

பிறந்த நாள் நேரத்தில் குழந்தை அம்ருதாவுக்கு இப்படியா உடல்நிலை பாதித்தது;( நான் அனுப்பிய வாழ்த்துகள் வந்தது என்றும் நன்றி என்றும் போனில் பேசியபோது கூட இது விஷயம் தாங்கள் சொல்லவே இல்லையே.

நிலநடுக்க விஷயம் எல்லோரையுமே நடுங்கத்தான் வைக்கிறது. நீங்களும் சொன்னீர்கள். திருமதி ஆதியும் சொன்னார்கள். டி.வி. நியூஸ் பேப்பர் நியூஸ் எல்லாவற்றிலும் பார்த்தோன். உங்கள் ஹரியானா அருகே தான் மையம் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். உடனே உங்கள் நினைவு தான் வந்தது. பயப்படாமல் தைர்யமாக இருங்கோ. கடவுள் காப்பாற்றுவார்.

அன்பான ஹோலி+மகளிர் தின நல் வாழ்த்துகள்.


[ நிரந்தரமில்லாத வாழ்க்கை என்பது
என்னவோ உண்மை தான். அடுத்த நிமிடம் யாருக்கு என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாதது தான். இருப்பினும் நல்லதே நடக்கும் என்று நினைப்போம்.நம்பிக்கை தானே வாழ்க்கை ]

கீதமஞ்சரி said...

வாழ்க்கையின் நிலையாமை பற்றிச் சொன்னதாகவே உணர்கிறேன். படித்து முடித்தபோது கண் பனித்துப்போனது. ஏஞ்சலின் தாயார் தவறிய நிகழ்வு மனத்தை வருத்துகிறது.அவருக்கு என் இரங்கல்களைத் தெரிவிக்கவும்.

மகள் நல்லபடியாக உடல்நிலை தேறி பழைய உற்சாகத்துக்குத் திரும்பியமை கண்டு மகிழ்ச்சி.

ஒரு தாயின் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் பிறந்தநாள் விழாவுக்குத் தன்னை அழைக்கவில்லை என்று பொருமும் மனிதர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களுடன்தான் நாம் வாழவேண்டியுள்ளது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வெங்கட் நாகராஜ்

அட!மகளின் பேரை நினைவு வைத்துள்ளிர்களே!இப்போது பரவாயில்லை.நன்றி.

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
உங்களிடம் பேசிய அன்று பிரச்சனை இல்லை,அடுத்த நாளிலிருந்துதான் உடல் நிலை சரியில்லை,//அன்பான ஹோலி+மகளிர் தின நல் வாழ்த்துகள்//..நல்லதே நினைப்போம்,நம்பிக்கையுடன் இருப்போம்.நன்றி சார்,

@கிதமஞ்சரி

//வாழ்க்கையின் நிலையாமை பற்றிச் சொன்னதாகவே உணர்கிறேன்//
//அவர்களுடன்தான் நாம் வாழவேண்டியுள்ளது.//

ஆமாங்க,வாழ்வே மாயம் என்பது எவ்வளவு பெரிய உண்மை.

//ஏஞ்சலின் தாயார் தவறிய நிகழ்வு மனத்தை வருத்துகிறது.அவருக்கு என் இரங்கல்களைத் தெரிவிக்கவும்.//
நிச்சயமாக.

Anonymous said...

சகோதரி ஏஞ்சலின் தாயார் மறைவு...

வருந்துகிறேன்...என் இரங்கல்களைத் தெரிவிக்கவும்...


பிறந்தநாள் வாழ்த்துகள் மகளுக்கு...

மகளிர் தின நல் வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

குழந்தைக்கு இனிய பிறந்த நாள் ஆசிகள்.இப்படி உடல் தாக்கம் வந்தால் அதுவும் குழந்தைக்கு என்றால் தாங்குவது மிகவும் சிரமம். பாவம் நீங்கள் பட்டிருக்கக்கூடிய அவஸ்தை வருத்தம் அளிக்கிறது .மீண்டு வந்தது பற்றி சந்தோஷம்.

மனித மனத்தை அளவிடவே முடியாது. அல்லாதவைகளை ஒதுக்கிவிடுங்கள்.
ஒரு வாரமாக தொலைக்காட்சி தினசரி பார்க்காத்தால்செய்தி தெரியவில்லை. தைரியமாக இருங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ரெவெரி

//சகோதரி ஏஞ்சலின் தாயார் மறைவு...

வருந்துகிறேன்...என் இரங்கல்களைத் தெரிவிக்கவும்...//

தெரிவிக்கிறேன்.

//பிறந்தநாள் வாழ்த்துகள் மகளுக்கு...

மகளிர் தின நல் வாழ்த்துகள்...//
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வல்லிசிம்ஹன்
தங்களின் அன்பான ஆறுதலான கருத்துக்களில் மனம் லேசாகிறது அம்மா.மிக்க நன்றி.

ADHI VENKAT said...

அம்ருதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உடல்நிலை தேறிவிட்டாளா....
இங்கு ரோஷ்ணிக்கும் சளி, லேசான ஜுரம், இருமல், தொண்டை வலி. இதோடு இன்றிலிருந்து பரீட்சை வேறு ஆரம்பம்.

ஏஞ்சலினின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இங்கு ரொம்ப ஜாஸ்தி தான். எங்களுக்கும் அது பழக்கமில்லை. ரோஷ்ணியின் விருப்பத்துக்காக அவளின் ஐந்தாவது பிறந்தநாளன்று நாங்க மூணு பேர்
மட்டும் சின்னதாக ஒரு கேக் வாங்கி வெட்டினோம்.

நிலநடுக்கத்தின் போது நான் பள்ளியிலிருந்து வரும் ரோஷ்ணிக்காக வெளியில் காத்திருந்தேன். கால்கள் நடுக்கம். நானும் மயக்கம் என்று யோசிப்பதற்குள் எல்லோரும் அலறிக் கொண்டு ஓடி வந்தார்கள். அந்த நடுக்கம் அன்று வெகு நேரம் வரை மனதை விட்டு நீங்கவில்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி
வாழ்த்திற்கு நன்றி.ஆண்டுத் தேர்வின் போது உடல் நலம் குன்றுவது வருத்தமாகவே உள்ளது.கவனித்துக்கொள்ளுங்கள் ரோஷ்ணியை.பரவாயில்லை நிலநடுக்கத்தின் போது வெளிப்புறத்தில் நின்றுள்ளிர்கள்.இருந்தாலும் நமது சொந்தங்கள் அருகில் இல்லாததும்,வேறு ஏதாவது நிகழ்ந்திருந்தாலும் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது.அன்று தப்பித்துள்ளோம் என நினைத்து ஆறுதல் அடைவோம்.

மதுரை சரவணன் said...

//பதிவர் ஏஞ்சலின் அவர்களின் அம்மா இறந்துவிட்டதாக மெயில்அனுப்பிருந்தார்கள்..
//////

என்னுடை ஆழ்ந்த அனுதாபங்களை நான் பகிர்ந்துக் கொள்கிறேன்...
thankal makalukku pirantha naal vaalththukal...

எல் கே said...

ஏஞ்சலின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். வாழ்க்கை நிரந்தரம் இல்லை. எதுவும் நிரந்தரம் இல்லை என்பதே நிரந்தரம்

ஆச்சி ஸ்ரீதர் said...

மதுரை சரவணன்
வாங்க,நிச்சயம் தெரிவிக்கிறேன்.

வாழ்த்திற்கும் நன்றிகள்.

@எல்.கே
வாங்க,சரியாக சொல்லிவிட்டீர்கள்.

பால கணேஷ் said...

ஏஞ்சலின் அவர்ளிடம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் சேர்ப்பித்து விடுங்கள். பிறந்தநாள் விஷயத்தில் அதை பெரிதாகக் கொண்டாடக் கூடாது என்ற கட்சிதான் நான். மகளின் உடல் நலம் தேறியதில் மகிழ்வும், ‘என்னை அழைக்கலேல்ல’ என்று சொன்ன இங்கிதம் தெரியாதவர்களின் மீது எரிச்சலும் ஏற்பட்டது. நிலநடுக்கம்... நான் இதுவரை அனுபவத்தில் உணராதது. உங்களைப் போன்றவர்கள் சொல்வதால் மனதளவில் உணர்வது! ரொம்ப கஷ்டமாக உணர்ந்திருப்பீர்கள் இல்லை... துணிவு கொள்ளுங்கள். (வேற வழி?)

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்

//ஏஞ்சலின் அவர்ளிடம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் சேர்ப்பித்து விடுங்கள்.//

நிச்சயமாக.

// நிலநடுக்கம்... நான் இதுவரை அனுபவத்தில் உணராதது.//

இந்த அனுபவம் வேண்டவே வேண்டாம் சார்.நாங்கள் பல முறை உணர்ந்திருந்தாலும் இந்த முறைதான் அதிக வினாடிகள் பயமுறுத்தி விட்டது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஸாதிகா
மிக்க நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

அன்னையின் ஆத்மா சாந்தி அடையவும்,ஏஞ்சலின் அவர்கள் மன தைர்யமும் ஆறுதலும் அடைய பிராத்திப்போம்.

இராஜராஜேஸ்வரி said...

மகள் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்..

இராஜராஜேஸ்வரி said...

நிரந்திரமில்லா வாழ்க்கை"

ஆடி அடங்கும் வாழ்க்கை !

கனமான பகிர்வுகள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கள் அனைத்திற்கும் அன்பான நன்றிகள்.