*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 13, 2012

வாழ்வியல் கதைகள்&படங்களும்@13/3/2012

தென்காசி சுவாமிநாதன் அவர்கள் சொன்னதாக Zதமிழ் அலைவரிசையில் ஒருத்தர் சொன்ன கதை:


*காந்தியடிகளின் மகன் தங்களது காரை (அந்த காலத்து நான்கு சக்கர வண்டி) சர்வீசுக்கு அனுப்பியிருந்தாராம்.இன்று கார் தயாராகியிருக்கும்,நானும் முக்கிய நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியுள்ளது காரை எடுத்து வா என்று மகனிடம் சொன்னாராம் காந்தியடிகள்.காரை எடுக்க சென்றவருக்கு மாலை வாருங்கள் என்று பதில் கிடைத்ததாம்.

மாலை வரை நேரத்தை போக்க காந்தியடிகளின் மகன் சினிமாவிற்கு போய்விட்டாராம்.வெகு நேரமாகியும் மகன் வராததால் கார் சர்வீசை தொடர்பு கொண்ட காந்தியடிகளுக்கு “தங்கள் மகனை மாலை வந்து எடுத்துச் செல்ல சொல்லியிருந்தேன்.காரும் தயாராகிவிட்டது,மாலைப் பொழுதும் போய்விட்டது.தங்கள் மகன் இன்னும் வரவில்லை” என்று பதில் வந்ததாம்.

வெகு நேரம் கழித்து காருடன் காந்தியடிகளின் மகன் வந்து சேர்ந்தாராம்.ஏன் இத்தனை தாமதம்,எங்கே சென்றிருந்தாயென கேட்ட காந்தியடிகளிடம் “தான் சினிமாவிற்கு சென்றதை மறைத்து, இப்போதுதான் வண்டி ரெடியானது,காத்திருந்து எடுத்து வர நேரமாகிவிட்டது அப்பா " என்றாராம்.


மகன் பொய் சொல்வதைக் கேட்ட காந்தியடிகள்,நான் வளர்த்த மகன்,என் கொள்கைகள் அறிந்த மகன்,தன்னிடமே உண்மை சொல்ல தைரியமில்லாமல் பொய் சொல்கிறான்,மறைக்கிறான்,தவறு உன் மீது இல்லை,வளர்த்த என் மீதுதான் தவறு,என் வளர்ப்பு  சரியில்லாமல்  போனதில்  வெட்கமடைகிறேன்,இதற்கான தண்டனையை நான்தான்  அனுபவிக்க வேண்டுமென தான்   செல்லவிருந்த  இடத்திற்கு  நடந்தே  சென்றாராம்.


அந்த சம்பவத்திலிருந்து காந்தியடிகளின் மகனும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டாராம்.




*பிரம்ம  குமாரிகள் குழுவில் ஒருவர் சொன்ன கதை.


திரைப்படம் என்றால்  பலருக்கும் தெரிந்திருப்பது, ஹீரோ,ஹீரோயின்,வில்லன் இருப்பார்கள்.வில்லனால் வரும் பிரச்சனைகளை ஹீரோ எதிர்த்து சமாளித்து வெற்றி பெறுவார் என்பதாக இருக்கலாம்.ஹீரோவால் பெறப்படும் வெற்றியும் கடைசியாக காண்பிக்கப்படலாம்.அத்தோடு திரைப்படமும் நிறைவுபெறலாம்.


ஒரு திரைப்படம் நிறைவுறும் சமயத்தில் கடைசிக் காட்சியில் வில்லனை ஹீரோ வெலுத்து எடுக்கிறார், திரைப்படத்தில் பார்ப்பவர்களும்,திரைப்படத்தை பார்ப்பவர்களும் ஆர்வமுடன் பார்க்கின்றனர்,குதூகலிக்கின்றனர்.ஹீரோ வெற்றி பெறுகிறான்.அடி வாங்கி துவண்டு விழுந்த வில்லனை போலீசும் இழுத்துச் செல்கிறது .படத்தில் மக்கள் ஹீரோவை தூக்கி   வைத்து  கொண்டாடுகின்றனர் ,திரைப்படம் நிறைவுற்றது. படத்தை பார்த்தவர்களும்   நெகிழ்வுடன் செல்கின்றனர்.


திரைப்படம் பற்றின எந்த ஒரு கருத்தும் தெரியாத ஒருவன் முதல் காட்சிகளை பார்க்காமல்  இந்த கடைசிக் காட்சியை பார்க்க நேரிடுகிறது.அவன் கருத்து எப்படிப்பட்டதாக இருக்கும்..." இவன் அடிக்கிறான்,அவன் அடி வாங்குறான்,மக்களில் தடுப்பார் யாருமில்லை.மாறாக மக்களும் மகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.திரைப்படத்தை பார்ப்பவர்களும் மகிழ்ச்சியாக  பார்க்கின்றனர்.அடிப்பவன் வில்லனாகவும்,அடி வாங்குபவன் அப்பாவியாகவும் இந்த அப்பாவி புரிந்துகொள்கின்றான்.கடைசியில் வந்த போலீசும் அடித்தவனை விட்டுவிட்டு அடி வாங்கியவனை இழுத்துச்செல்கிறதே" என்றும்  பிரம்மிக்கிறான்    .


இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது,மாய உலகில் என்ன நிகழ வேண்டுமோ அதுதான் நிகழ்கின்றது.நாம்   பார்த்து புரிந்துகொள்வதும், வாழ்வதும்,நமது அறியாமையையும் சிந்தனையையும் பொறுத்துள்ளது.


* குட்டி ஒட்டகம் தன் அம்மா ஒட்டகத்திடம் கேட்கிறது,


அம்மா நமக்கு ஏன் இந்த திமில்?


பாலைவனத்தில் உணவு, தண்ணீர் கிடைப்பது அரிது, கிடைக்கும் நீரை பல நாட்களுக்கு சேமித்து  வைக்கவே இந்த திமில் இயற்கையிலே நமக்கு வரமாக அமைந்துள்ளது.


கண் இமைகள் ஏன் இவ்வளவு நீளமாக உள்ளது?
மணற் புயல்களிலிருந்து காத்துக்கொள்ளவே!


நமது பாதம் ஏன் வீங்கி உப்பலாக உள்ளது?
பாலைவனங்களில் வேகமாக நடப்பதற்கு!


இத்தனையும் இருந்தும் நம்மை ஏன் இந்த மிருகக்காட்சி சாலையிலே வைத்துள்ளார்கள்?


இதற்கு என்ன பதில் சொல்லும் தாய் ஒட்டகம்?


இப்படித்தான் மனிதனிடம் இல்லாதது ஒன்றுமில்லை,முடியாதது ஒன்றுமில்லை,தேவையானவைகள் கிடைத்தாலும் பல சமயம் பயனற்றதாகிறது.நம் திறமைகளும்,வாழ்வும் எப்படியோ,எங்கோ,யாராலோ முடக்கப்படலாம்.


படங்களையும் பார்ப்போம் :








கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு ஆடுச்சாம்.

ஐயோ !பாவம்னு இரக்கப்பட்டா ஆறு மாச பாவம் நம்மள பிடிச்சுக்கும்மா!!

இடம்,பொருள் தெரிந்து சரியான நேரத்தில் சரியான வகையில் உதவனும்.

இதையும் மீறி,மனக் கஷ்டமோ,அசம்பாவிதமோ ஏற்பட்டால் "உன் குத்தமா?,என் குத்தமா?" ன்னு பாட வேண்டியதுதான். 


10 comments:

இராஜராஜேஸ்வரி said...

மாய உலகில் என்ன நிகழ வேண்டுமோ அதுதான் நிகழ்கின்றது.நாம் பார்த்து புரிந்துகொள்வதும், வாழ்வதும்,நமது அறியாமையையும் சிந்தனையையும் பொறுத்துள்ளது.


"வாழ்வியல் கதைகள்&படங்களும் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

அவர் தென்காசி சுவாமிநாதன் அல்ல.
ரேடியோக்களின் இன்று ஒரு தகவல் சொல்லி வந்த மிகப்பிரபலமான நகைச்சுவை பேச்சாளர் தென்கட்சி கோ. சுவாமிநாதன் அவர்களாகத்தான் இருக்கும்.

//இத்தனையும் இருந்தும் நம்மை ஏன் இந்த மிருகக்காட்சி சாலையிலே வைத்துள்ளார்கள்?//

குட்டி ஒட்டகம் கேட்டது மிக அருமையான நியாயமான கேள்வி தான்.

//மாய உலகில் என்ன நிகழ வேண்டுமோ அதுதான் நிகழ்கின்றது.நாம் பார்த்து புரிந்துகொள்வதும், வாழ்வதும்,நமது அறியாமையையும் சிந்தனையையும் பொறுத்துள்ளது.//

ஆமாம் ஆமாம். மிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்கள்.

வாழ்வியல் கதைகளும்,படங்களும் அருமைன்னு வேறு ஒருவரும் கூட சொல்லி விட்டார்.

அதனால் அதன்படி அது அருமையோ அருமை தான். ;)))))

பால கணேஷ் said...

அழகான கருத்துக்கள்! கடைசிப் படம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது! மிகமிக ரசித்த பதிவு! (Really I Mean) நற்பகிர்விற்கு மிக்க நன்றி!

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
//இன்று ஒரு தகவல் சொல்லி வந்த மிகப்பிரபலமான நகைச்சுவை பேச்சாளர் தென்கட்சி கோ. சுவாமிநாதன் அவர்களாகத்தான் இருக்கும்//.
ஆமாம் சார், அவர்தான்.
முதலில் தென்கச்சி என்று டைப்பினேன்,பிறகு சந்தேகம் வலுத்துவிட்டது.எனவே தென்காசி என்று எழுதிவிட்டேன்.

அனைத்தையும் ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@கணேஷ்

மிகவும் ரசித்து மகிழ்ந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்ற்கள் சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மேடம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தென்கச்சி கோ. சுவாமிநாதன் என்பதே சரி.

நானும் தவறுதலாக தென்கட்சி என்று எழுதிவிட்டேன்.

தென்கச்சி என்பது அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தின் பெயர்.

அவருடைய வாழ்க்கைச்சரித்திரம் நான் படித்துள்ளேன்.

மிகவும் சுவையாக அமைதியாக அருமையாக பேசக்கூடிய நகைச்சுவை ஆசாமி. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

அவர் சமீபத்தில் இறந்த செய்தி கேட்டு நான் அழுதே விட்டேன்.

ADHI VENKAT said...

கதையும், படங்களும்.... எல்லாமே நன்றாக இருந்தது.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு பிறகுதான் அவர் இறந்ததே எனக்குத் தெரியும்.எனக்கும் அவரைப் பிடிக்கும்.உண்மையில் வருந்துகிறேன்

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள்.