*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 13, 2011

புராணக் கதை - 2011

கண்ணையா(கிருஷ்னர்) நிறைய சீப்(செம்மறி ஆடு) வச்சிருந்தாராம்.
 பீகாக் வச்சிருக்க முருகர் வந்து கண்ணையாகிட்ட உம்பேரு என்னானு கேட்டாராம்.எம்பேரு கண்ணையா னு சொன்னாராம்,எம்பேரு முருகர் னு சொன்னாராம்.

ஹை! நிறைய சீப் வச்சிருக்கியே அவங்க பேர்லாம் என்னனு கேட்டாராம் முருகர்.
இது பேரு முன்னா.இது பேரு முன்னி.இது பேரு ஜீகி...அப்பின்னு(அப்படின்னு) சொன்னாராம்.

கண்ணையா... உங்க அம்மா அப்பா எங்கனு கேட்டாராம் முருகர்.
எங்க அம்மா அப்பாவ காணும்னு சொன்னாராம் கண்ணையா.

முருகர் ஜாது(மேஜிக்)செய்து கண்ணையா அம்மா அப்பாவ அழைச்சுட்டு வந்துட்டாராம்.கண்ணையா முருகருக்கு தூ தோ பகுத் அச்சா பச்சி ஹே(நீ ரொம்ப நல்ல பிள்ளை) பகுத்(ரொம்ப/நிறைய) தேங்ஸ் - அப்பின்னு சொல்லிட்டாராம்.

பீகாக்ல ஏறி முருகர் க்ளவுடுக்கு (வானம்)போய்ட்டாராம்.ஹனுமான் பெரிய வாலுடன் சுத்தி,சுத்தி வந்தாராம்.டைகர் வந்து ஹனுமான் வால கடிச்சிட்டாம்.கண்ணையா,கண்ணையா,முருகா,முருகா அப்பின்னு ஹனுமான் கத்தினாராம்.

கண்ணையாவும்,முருகரும் அடிச்சிடுவாங்கன்னு டைகர் ஓடியே போய்ட்டாம்.

அவ்ளதான் கதை முடிஞ்சிட்டு.

பொறுமையா இந்த கதைய நான்  ம்...ம்...னு கேட்டதில் ஹே..ஹ்ஹே..ஹே..என்று கதை சொல்லி முடித்துவிட்ட சந்தோசத்தில் சிரிப்பை முழுசா சிரிக்க முடியாதளவிற்கு (எல்.கே.ஜி. படிக்கும்) என் மகளுக்கு தூக்கம் கண்களை கட்டியது.மம்ம(நம்ம) இன்னொரு கத சொல்லுவோம்னு சொன்னவளை இந்த கதையே சூப்பரா இருக்கு,நான் ஒரு கத சொறேன்னு  சொல்லி தட்டிக் கொடுத்து தூங்கவச்சிட்டு இந்த கதைய ஒரு பதிவாக்கிட்டேன்.

இதுவரை மகள் பார்த்த தொலைக்காட்சி புராணக் கதைகள்,கார்ட்டூன் புராணம் மற்றும் நாங்கள் அவ்வப்போது சொல்லிய புராணக் கதைகளின் கலவையில் அவளுக்கு தோன்றிய கற்பனையாக இருக்கலாம். 

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 1 to 2
இண்ட்லியும் 1 to 2

படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

அமிர்தாக்குட்டி பிற்காலத்தில் மிகச் சிறந்த கதாசிரியராக வருவாள் என்று எனக்குத் தோன்றுகிறது.

கதைசொல்லு என்று உங்களைத் தொந்தரவு செய்யாமல் அவளே இந்தச் சின்ன வயதில் உங்களுக்குக் கதை சொல்வது மிகவும் சிறப்பு தான்.

சமத்துக்குட்டி தான். வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

கவிஞன் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கிறான்னு சொல்லுவாங்க. ஒரு இளம் கதாசிரியை பிறந்ததோடு, அருமையாக உருவாகிக்கொண்டும் இருக்கிறாள். அவளுக்கு என் அன்பும் ஆசிகளும்.

தெம்மாங்குப் பாட்டு....!! said...

அழகுப் பதிவு ஆச்சி! செம்மை..!!

எனதுப் வலைப் பதிவை கதம்ப ரோஜாக்களில் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி..!!

தங்களைப் போலவே நானும் வட இந்தியாவில் கண்ட சில விசயங்களைப் பார்த்து தமிழ்நாடு எவ்வளவோ மேலானது என்று நினைக்கிறேன். அதைப் பற்றி ஒருப் பதிவும் எழுத வேண்டும் என எண்ணம்.

வெங்கட் நாகராஜ் said...

அட குட்டிம்மா கதை நல்லா சொல்றாங்களே... :) வாழ்த்துகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்
நான் ஒரு கதை சொல்லனும்.பதிலுக்கு மகள் ஒரு கதை சொல்லனும்.எப்படி முடிக்கிறதுனு தெரியாமா கதை நீண்டுகொண்டே போவதை பார்த்து சிரிப்புதான் வரும்.

உங்களுடைய சிறிய கதைகள் 2,3 கூட சொல்லியிருக்கேன்.

வாழ்த்திற்கும்,வருகைக்கும் நன்றி சார்.


@கீதா
தங்கள் அன்பையும் ஆசியையும் தெரிவித்துவிட்டேன்.வருங்காலம் எப்படி என்று தெரியவில்லை.ஏனெனில் குழந்தைகளின் வளர்ச்சியும் சூழ்நிலைகளும் மாறிக்கொண்டே போகுதே.

வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@தெம்மாங்குப் பாட்டு
வாங்க,வருகைக்கு நன்றி.தொடர்ந்து எழுதுங்க.


@வெங்கட் நாகராஜ்
இந்த கதை எதோ பரவாயில்லை.லாஜிக்கே இல்லாமல் தோன்றியதை சொல்லிகொண்டே போவாள்.வாய் வலிக்கும்போது நாங்க கதை சொல்லனும்.

மிக்க நன்றிங்க.

kaialavuman said...

ஓஹோ, இது copy-paste பதிவா?

kaialavuman said...

குழந்தையின், கற்பனைத்திறன் வளர வாழ்த்துகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வேங்கட சீனிவாசன்
வாங்க,மகளின் கதையை காப்பி செய்துள்ளேன்.தங்களின் வாழ்த்திற்கு நன்றிகள்.

ADHI VENKAT said...

செல்ல குட்டி அழகா கதை சொல்லியிருக்கிறாளே...:)))

எங்க வீட்டிலும் ஷிவ்ஜி (சிவன்), பார்வதி மாதா, கணேஷா கதைகள் அரங்கேற்றம் ஆகும்.

ரோஷ்ணி கூட பேச ஆரம்பிச்சா நான் ஸ்டாப்பா போய்க் கொண்டே இருக்கும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ ஆதி

வாங்க,வாங்க
வலைச்சர ஆசிரியரான பிசியிலும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.

வந்திருக்கும் பின்னுட்டங்களை மகளிடம் சொல்லவும் அவளுக்கு ஒரே சந்தோசம்.

சிவகுமாரன் said...

அட அட அட .
சொர்க்கம் கைகளில் வந்த தருணமல்லவா அது.
மழலைக்கு என் முத்தங்கள்.

சிவகுமாரன் said...

அட அட அட .
சொர்க்கம் கைகளில் வந்த தருணமல்லவா அது.
மழலைக்கு என் முத்தங்கள்.

raji said...

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
தாய் எட்டடி பாய்ந்த்தா பொண்ணு பதினாறு என்ன இன்னும் உயரம் போவாளாக்கும் பாத்துட்டே இருங்க!

ஆச்சி ஸ்ரீதர் said...

@சிவகுமாரன்

வாங்க,நன்றிகள்.சொல்லிவிட்டேன் .

@ராஜி

ஆஹா!அப்டிலாம் இல்லங்க.