*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 29, 2011

பொற்கோவில்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் என்னும் பகுதியில் சீக்கியர்களின் நான்காம் குரு   ராம் தாஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது இந்த பொற்கோவில். இந்து முஸ்லிம் இடையே ஏற்பட்ட ஒற்றுமை இன்மையினால் வெறுப்புணர்வு கொண்ட குருநானக் என்பவர்  சீக்கிய மதத்தை  தோற்றுவித்துள்ளார்.
                                                                                                                                                                                         


பொற்கோவில் சீக்கியர்களின்       பெருமை      வாய்ந்த பழமையான   கோவில் ஆகும்.குருத்வார்/ ஹரிமந்திர்  சாஹிப் /தர்பார் சாஹிப்   எனவும்  அழைக்கப்படுகிறது.


டிசம்பர்  1585 முதல்  1604 வரை    ஐந்தாம் குரு அர்ஜன் தேவ் என்பவரால் இந்த கோவில் கட்டிடக்கலை நுணுக்கங்களால் கட்டப்பட்டதாகவும் ஆறாம் குருவிலிருந்து பத்தாம் குரு வரையிலான கால கட்டங்களில் குறிப்பாக இஸ்லாமியினர் ஆப்கானியர்கள் பல முறை தகர்த்ததாகவும் தகர்க்க முயன்றதாகவும், இந்த கோவில் பலமுறை வடிவ மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இந்து முஸ்லிம் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் குறிப்பாக சீக்கிய வழிபாட்டுத் தலமாக  தங்க கோபுரம்,எங்கும் மார்பில் கொண்டும் தற்போதுள்ள பொற்கோவிலாக 1767 ஆண்டுக்குப் பிறகுதான் முழுமை பெற்றுள்ளது..பத்து குரு மார்களுக்கும்  குருபானி இசை    முறையில்  பாடல்கள்,பூஜைகள் செய்யப்படுவதாகவும்,பத்து குரு மார்களின் அருள் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் மேல் விமானம் தென்னிந்திய கோவில் கட்டிக் கலைப்படியும்,இஸ்லாமியர்களின் தர்கா அமைப்பின்படியும் கட்டப்பட்டுள்ளது..

கோவிலை சுற்றி வரும்போது முஸ்லிம்  மக்கள் போல கட்டாயமாக தலைப் பகுதி மூடியிருக்க வேண்டும்,முக்காடு இட்டிருக்க வேண்டும்.குழந்தைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.ஆயத்தமாக கைக்குட்டை ஏதேனும் துப்பட்டா எடுத்துச் செல்ல வில்லையெனில் வாசல் பகுதியில் இதற்கென அகண்ட கைக்குட்டைகள் ஸ்கார்ப் போல விற்கப்படுகின்றன.வீட்டில் சாமி கும்பிட்டால் கூட முக்காடிட்டு வணங்கும் வட இந்தியர்களுக்கு இதில் வித்தியாசம் தெரியாது.பஞ்சாபி,சிங் இனத்தவருக்கும் வித்தியாசம் தெரியாது,இந்த இன ஆண்கள் தலையிலும் எப்போதும் என்ன அணிந்திருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.முஸ்லிம்களுக்கும் இந்த முறை பழக்கப்பட்டதே.நம்மாளுங்களுக்குத்தான் இது பெரிய சங்கடமாக எனக்குப்பட்டது.அந்த பிரகாரங்களில் வளம் வரும் கண்காணிப்பார்கள்/ஊழியர்கள்  சற்று தலை தெரிந்தாலும் முக்காடு இட்டுக் கொள்ளும்படி ஆணை இடுகின்றனர்.நம்ம தலையில ஐந்து நிமிடத்திற்கு மேல துப்பட்டா நிக்க மாட்டிங்கிது.(வட மாநிலத்தவர்களுக்கு சால்வை,துப்பட்டா,முந்தானை(பள்ளு)எப்போதும் ஆணி அடித்த மாதிரி நிற்கும். )

பிரசாதம்,பூஜைப்  பொருள் ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டது.நம் கொண்டுவந்த பொருட்களை வைப்பதற்கான இடமும்  உள்ளது.பிரகாரத்தில் ஒரே மாதிரியான கிண்ணத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.நாம் கிண்ணத்தை கொடுத்தவுடன் உடனே கழுவி துணியால் துடைத்து கவிழ்த்து வைக்கின்றனர்.இந்த கோவில் தெப்பம் போல நீருக்குள் அமைந்திருப்பது சரோவர் நதியில் என நினைக்கிறேன்.





இங்கு  அன்றாடம் நமது கோவில்களில் அன்னதானம் நடைபெறுவது போல அன்னதானம் நடைபெறுகிறது .கோதுமையை உணவாகக் கொண்ட மாநிலத்தில் சாதம் ,வடை,பாயசம் எப்படி கிடைக்கும்,ரொட்டி,சப்ஜி,பருப்பு கூட்டு,பாலக்  எனப்படும் கீரை  வகை,(பேருக்கு) சாதம்,  சப்ஜி,கீர் எனப்படும் (பாயசம்)இனிப்பு,அப்பளம் (பப்பட்) வழங்கப்படுகிறது. அன்லிமிட்டட் சாப்பாடுதான்.மீதம் வைக்காமல்,வேஸ்ட் செய்யாமல் சாப்பிட வேண்டும்.சிலர் இங்கு சாப்பிடுவதை சிறந்ததாகக் கருதுகின்றனர்,பிரஸ்டீஜ் பார்த்து சாப்பிடாமல் போவோரும் உண்டு. மிக சுத்தமாக செய்யப்பட்டு பரிமாறப்படுகிறது.ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் தரிசிக்க வருவதும், ஆயிரக்கணக்கானோருக்கு அன்னாதானமிடுவதும் எந்த தள்ளு முள்ளு பிரச்சனைகள் இல்லாமல்,அமைதியாக நடைபெறுகிறது. சில்வர் தட்டில்தான் சாப்பாடு.சாப்பிடும்போதும் முக்காடு இட்டிருக்க வேண்டும்.கடைசி ஒரு நபர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட காத்திருந்து சாப்பிட்ட இடத்தை மெஷின் கொண்டு துடைத்துவிட்டு அடுத்து காத்திருக்கும் மக்களை அனுமதிக்கின்றனர்.

    பொதுவாக வட இந்தியர்கள் வாட்ட சாட்டமாகத் தெரிவார்கள்,பஞ்சாபியர்களும் அப்படித்தான்.பல சாஸ்த்திர சம்பிரதாயங்களை பின்பற்றுகின்றனர்.சர்தார்ஜி ஜோக்குகள் எப்படி தோன்ற ஆரம்பித்தன என்பது தெரியவில்லை.ஆனால் புத்தியிலும்,வீரத்திலும் மிகச் சிறந்தவர்கள் பஞ்சாபியர்கள்.அபியும் நானும் திரைப்படத்தில் தலைவாசல் விஜய் சொல்வாரேடெல்லி சுற்றுப் பயணத்தின் போது சர்தார்ஜிகளை  கேலிசெய்த தென்னிந்தியர்களிடம் ஒரு ரூபாயை கையில் கொடுத்த சர்தார்ஜி கார் டிரைவர், தங்கள் பயணத்தில் எங்காவது சர்தார்ஜி/சிங் இன பிச்சைக்காரர்களை பார்த்தால் இந்த ஒரு ரூபாயை போடு என்றார்.வட இந்தியா முழுதும் சுற்று பயணத்தின்போது  டிரைவர் கூறியது போல ஒருவரைக் கூட பார்க்கவில்லைஎன்பார்.அது முற்றிலும் உண்மை.தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில்தான் சாமியார்களும்,சந்நியாசிகளும்,பிச்சைக்காரர்களும் அதிகம்.ஆனால் சிங்குகளின் (வாழ்க்கைமுறை) வழி தனி சிறப்பான வழி. பஞ்சாபி மொழி இந்திய ஆரிய மொழிக் குடும்ப மொழிகளுள் ஒன்றாகும்.பஞ்சாப் ஹரியானாவில் அரசு அலுவல் மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.சில நிமிட வீடியோ கிளிப்பிங்குகளை கீழே பார்க்கவும்.              
   
  
      




9 comments:

ப.கந்தசாமி said...

நல்ல தகவல்கள்.

சக்தி கல்வி மையம் said...

நேரில் போய் பார்த்தமாதிரியே இருக்கு உங்க பதிவு..

Angel said...

உண்மைதாங்க . அவர்கள் நல்ல உழைப்பாளிகள் .
இங்கே நகை கடை வைத்திருப்பவர் மனைவி mcdonalds இல்
evening cleaner ஆக வேலை செய்கிறார்.இப்படி எவ்ளவோ பேர் .
பகிர்வுக்கு நன்றி .

துளசி கோபால் said...

அருமையான பதிவு. இனிய பாராட்டுகள்.

நேரம் கிடைச்சால் நம் பார்வையில் பொற்கோவில் அனுபவம் பாருங்க. கொஞ்சம் முன்னால் பின்னால்ன்னு நாலைஞ்சு பதிவுகளைப் பார்க்கணும்:-))))

http://thulasidhalam.blogspot.com/2010/09/5.html

ஆச்சி ஸ்ரீதர் said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

போன வருடம் ஏப்ரலில் போய் வந்தோம்.தண்ணீர் தரும் அந்த கிண்ணத்தினை சுத்தம் செய்வது பார்த்து அசந்து விட்டோம். சாம்பல் பூசி,பின் துடைத்து, கழுவி சுத்தமோ சுத்தம்.

ஆச்சி ஸ்ரீதர் said...

பொற்கோவில் பதிவிற்கு வருகை தந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட

@DRkandaswamyphd

@வேடந்தாங்கல் - கருன்

@ஏஞ்சலின்

@அமைதிச்சாரல்

@அமுதா கிருஷ்ணண்

ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

பொற்கோவில் பற்றிய விளக்கமான பதிவிற்கு துளசி கோபால் அவர்களின் பின்னூட்ட்த்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்குச் செல்லவும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவு மட்டும் என் டேஷ்போர்டில் டிஸ்ப்ளே ஆகாமல் போய்விட்டதால் உடனே பார்த்து, உடனே பின்னூட்டம் அளிக்க முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.

நல்லவேளையாக தங்கள் மெயில் பார்த்த பிறகு தான் இன்று இதைப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பொற்கோவில் பற்றிய படங்களும், விளக்கங்களும் ரொம்ப ரொம்ப நல்லாப்பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.

“அபியும் நானும்” படமும் சமீபத்தில் தான் கலைஞர் டி.வி. யில் இந்த மாதம் முதல் வாரத்தில் பார்த்தேன்.
தந்தை+மகள் உறவை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்! அது மட்டுமா சீக்கியர்கள் பற்றி பலவிஷயங்கள், அவர்களின் கடும் உழைப்பு, அன்பு, அறிவு, பாசம் etc.,
மிகவும் வியந்து போனேன்.

தாங்கள் சொல்லியதுபோலவே அவர்கள் சமூகத்தில் பிச்சைகாரர்களையே பார்க்க முடியாது என்பது எவ்வளவு பெரிய ஒரு பாராட்ட வேண்டிய விஷயம்!

மிக நல்லதொரு பதிவைத் தந்துள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அன்புடன் vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@கோபலகிருஷ்ணன் சார்

வருகை தந்து கருத்துக்களுடன் வாழ்த்தி பாராட்டியமைக்கு நன்றி சார்