*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 26, 2011

வாழ்வியல் கதைகள்

இன்று காலை ராஜ்  அலைவரிசையில் ஒரு பெரியவர் இந்தக் கதை சொன்னார். .

புகழிலும் செல்வத்திலும் வானுயர்ந்து , உலகமே தன் கையில் உள்ளதாக நினைத்த அரசன் ஒருவன் தனக்கு அடுத்து ஆட்சி புரிய வாரிசு இல்லாமல் இருந்தான்.வாரிசாக யாரை எப்படி தேர்ந்தெடுப்பதென யோசித்தவன் ஒரு அறிவிப்பு விடுத்தான்.தனது ஏழடுக்கு அரண்மனை ஒன்றில் ஆறு  அடுக்கிலும் இதுவரை தனக்குண்டான செல்வங்கள் அனைத்தையும் வைத்திருப்பதாகவும்,ஏழாவது அடுக்கில் அரசன் அமர்ந்திருப்பதாகவும்,  மக்கள் அனைவரும் வந்து தங்களுக்கு எவ்வளவு செல்வங்கள் வேண்டுமோ அத்தனையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் அறிவிப்பு .
செய்தி அறிந்த மக்கள் அனைவரும் அந்த அரண்மனைக்குச் சென்று திளைக்க திளைக்க பொற்காசுகளையும்,ஆபரணங்களையும்  அள்ளிச்சென்று கொண்டிருந்தனர். எல்லோரும் ஆனந்தமாக செல்வங்களுடன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதைக் கண்ட ஒருவன் முதல் முறை அரண்மனைக்குள் சென்றான்.மக்கள் இந்த மாடியில் என்ன உள்ளது,அந்த மாடியில் என்ன உள்ளது,என்று பார்த்து பார்த்து பொற்காசுகள்,தங்க,வைர ஆபரணங்கள்,ரெத்தின கற்கள் இப்படி எல்லாவற்றையும் சங்கடமின்றி அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்தவன்,மக்களுக்கு  அனுமதி தந்து, இப்படியொரு அறிவிப்புவிடக் காரணமென்ன ?இதனால் அரசனுக்கு என்ன பயன் ? என்று யோசித்தவன், இந்த கேள்விகளுக்கு இந்த பேராசை கொண்ட மக்களிடம் நிச்சயம் பதில் கிடைக்காது என்றெண்ணி அறிவிப்புவிடுத்த அரசனிடமே கேட்டுவிடுவோமென்று ஏழாவது மாடிக்குச்சென்று அங்கு தனியே அமர்ந்திருந்த அரசனைப் பார்த்து “அரசே இந்த அறிவிப்பு ஏன்?,எதற்கு ?,இதனால் மக்களுக்கு பயனிருக்கலாம் உங்களுக்கு என்ன பயன்?" என்று   கேட்டானாம்.
.ஆறாம் அடுக்கு வரை வந்தும்,தனக்கு வேண்டிய செல்வங்ககளையெல்லாம் வாரிச்சென்ற நாட்டு மக்கள்,நன்றி சொல்லக்  கூட என்னை வந்து பார்க்க வரவில்லை,மரியாதை நிமித்தமாகவும் வரவில்லை என்று கேட்டவனின் தோல்களை கம்பீரமாக அன்பாகத் தட்டிய அரசன்,நீதான் என் வாரிசு,எனக்கடுத்து ஆட்சி புரிய தகுதி உடையோனை தேர்ந்தெடுக்கவே இந்த அறிவிப்பு.இப்படிப்பட்ட மக்களை,நாட்டை  ஆட்சி புரிய தேவையான சம யோசித புத்தி உள்ள ஒருவனை  முழுமனதாக என் வாரிசாக தேர்ந்தெடுத்துவிட்டேன்.,என்று பெரு நிம்மதி கொண்டானாம்.

புத்தகத்தில் படித்த கதை:

சந்நியாசியிடம் சென்ற ஏழை ஒருவன் அய்யா என் உயிரைத் தவிர வேறெந்த சொத்தும் என்னிடம் இல்லை,நான் வாழ்க்கையில் சகல வசதிகளுடன் வாழ வழி சொல்லுங்கள் என்றானாம்.
சந்நியாசி அந்த மனிதனிடம் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன் உன் கைகளை வெட்டி என்னிடம் கொடு என்றார்.அந்த மனிதன் பயந்து என்னால் என் கைகளை ஐந்தாயிரம் ரூபாய்க்காக இழக்க முடியாது என்றானாம்.
சரி,பதினைந்தாயிரம் ரூபாய் தருகிறேன் உன் கால்களை வெட்டி என்னிடம் கொடுத்துவிடு என்றார்.அதற்கும் அவன் ஒற்றுக் கொள்ளவில்லை.
சரி,ஐம்பாதாயிரம் தருகிறேன்,உன் கண்களைக் கொடு என்றார் சந்நியாசி ,அதற்கு அந்த மனிதன் ஒரு லட்சம் கொடுத்தாலும் முடியாது என்றான்.
பத்து  லட்சம் தருகிறேன் உன்  உயிரைக் கொடு எனக் கேட்டார் சந்நியாசி.அந்த மனிதன் முடியவே முடியாது என்றானாம்.
சந்நியாசி அந்த மனிதனிடம் உயிரைத் தவிர எந்த சொத்தும் இல்லையென சொன்ன நீ,இவ்வளவு பெரிய தொகைக்  கிடைத்தாலும் இழக்க  விரும்பாத விலை மதிப்பற்ற அங்கங்களைக் கொண்டிருக்கும் நீ ஏழை இல்லை.உழைத்து முன்னேறு என்று ஆசி கூறி அனுப்பினார்.           

14 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல்கதை படித்து விட்டேன். அருமையாக இருந்தது.

மீண்டும் வருகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டாவது கதையும் அருமை.

இது கேட்டகதைதான் என்றாலும், நினைவூட்டியதற்கு நன்றிகள்.

ஆம். நம் அவயவங்கள் யாவும் மிகவும் நேர்த்தியாக, பயன்படுத்த வசதியாகப் படைக்கப்பட்டுள்ளன. நாம் அவற்றை சரியான முறையில் உபயோகித்தால் நாமே கோடிகோடியாக பொருள் ஈட்ட முடியும். எவ்வளவு கோடி கொடுத்தாலும், அந்த உடல் உறுப்புக்களில் ஒரு சிறிய சுண்டி விரலைக்கூட இழக்கக்கூடாது.

பதிவுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Angel said...

இரண்டுமே அற்புதமான கருத்துள்ள கதைகள்
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஆச்சி

raji said...

கருத்து நிறைந்த கதைகள்.
பகிர்விற்கு நன்றி

ம.தி.சுதா said...

புத்தகக் கதையையும் ஏற்றாற் போல பகிர்ந்திருக்கீங்களே அருமை அருமை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

நினைவூட்டிப் பகிர்ந்துகொணதிற்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

நல்லபகிர்வு. கோடி கோடியா கொட்டிக்கொடுத்தாலும் நம் ஆரோக்யமும்,உடல் உறுதி உள்ளத்தூய்மையை விலைக்கு வாங்கவேமுடியாதுதான்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து, கதைகளை படித்து ரசித்து,தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட

@வை.கோபலகிருஷ்ணன் சார்,

@அன்புடன் அருணா

@ஏஞ்சலின்

@ராஜி

@ம.தி.சுதா

@இராஜராஜேஸ்வரி

@லெஷ்மிம்மா

ஆகியோர் அனைவருக்கும் எனது நன்றிகள்.

சிவகுமாரன் said...

இரண்டு கதைகளும் அருமை . இரண்டாவது கதை ஏற்கனவே படித்திருந்தாலும் , எப்போது படித்தாலும் தன்னம்பிக்கை தருவது
பகிர்வுக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான வாழ்வியல் கதைகள்... இது போல படித்து ரெம்ப நாள் ஆச்சுங்க... பகிர்ந்து கொண்டதற்கு ரெம்ப நன்றிங்க

ப.கந்தசாமி said...

மன்னிக்க வேண்டுகிறேன்

//கேட்டவனின் தோல்களை கம்பீரமாக அன்பாகத் தட்டிய அரசன்//

ஆச்சி ஸ்ரீதர் said...

@சிவகுமாரன்

நன்றி.

@அப்பாவி தங்கமணி

முதல் வருகைக்கும்,நட்பு வட்டத்தில் இணைந்தமைக்கும் நன்றி.

@DRPkandaswamiphd

நன்றி,அனால் தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.மன்னிக்கவும்.

மனோ சாமிநாதன் said...

நல்ல வாழ்வியல் கதைகளைப் பகிர்ந்தத‌ற்கு இனிய நன்றி!!

ஆச்சி ஸ்ரீதர் said...

@மனோ சாமிநாதன்

தங்கள் முதல் வருகைக்கும்,இனிய நன்றிக்கும் நன்றிகள்.