ஒற்றுமைக்கு போராட கட்சிகள் வேண்டாம்,
கொள்கைகள் கொண்ட தலைவன் வேண்டாம்,
சாதி,மத,மொழி பேதமில்லை,
இந்தியன் என்ற உணர்வு
ஊற்றெடுக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை,
ஒற்றுமையில் வேற்றுமை இல்லை
வெற்றியில் சந்தோஷ்ப்படுவதில் ஆச்சர்யமில்லை
தோல்வியென்றாலும் சிறியவர் முதல்
பெரியவர் வரை ஒரே துக்கம்
அது
கிரிக்கெட்
கிரிக்கெட் நடைபெறும் மைதானத்திற்கு சென்று பார்க்கனும்னு அவசியமில்லை,நாம் விளையாட கூட வேண்டாம்,க்ரிக்கெட் விளையாட்டு முறைகளை தெரிந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தாலே போதும்.மைதானத்தில் பார்ப்பதைவிட அருகேவும்,துல்லியமாகவும் பார்க்கலாம்.( யாருக்குமே தெரியாத ரொம்ப புது விசயம்னு சொல்ல வந்துட்டியானு கேட்கப்பிடாது).
தொலைக்காட்சியில் பார்த்துதான் நிறைய பேர் கத்துக்கிட்டாங்க.
சரி இதெல்லாம் தெரிந்த விசியம்தான்.
சிலவற்றை கேளுங்க:
எனக்குத் தெரிந்த ஒருவர் தான் டீ.வியில் மேச் பார்த்தால் இந்தியா தோற்றுப் போய்டும்னு. வெற்றியோ தோல்வியோ மேச் முடிந்த பிறகு ரிசல்ட் தெரிந்து கொள்கிறேன் என்பார்.
சிலருக்கு சிலருடன் அமர்ந்து மேச் பார்த்தால் இந்தியா தோற்று போய்டும்னு பயம்,சந்தேகம்.
பலருக்கு இந்தியா ஜெயித்து விட்டால் இமாலய சந்தோஷம்,தோல்வியடைந்தால் அதேயளவு துக்கம்.
சிறு வயதில் எங்க மாமா ஒருத்தர் இந்தியா விளையாடும்போது வீட்டில் டீ,வீ யில் கிரிக்கெட் மேச் பார்ப்பார்.அவர் பார்த்தால் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க,என்கிட்ட காசு கொடுத்து பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று இந்தியா ஜெயிக்கனும்னு சாமி பேருக்கு அர்ச்சனை செய்திட்டு வர சொல்லுவார்.பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போய் விளக்கு போடச் சொல்வார்.இந்தியா தோல்வியடைந்தால் எனக்கு திட்டு வேற விழும்.கோவிலுக்கு போகும்போது அசகுணமா யாராவது தென்பட்டாங்களானும் கேப்பார். சில வருடங்களுக்குப் பின் எனக்கு பதில் கோவிலுக்கு போக வேற ஆள நியமிச்சிட்டாரு.(ராசி சரியில்லைனுதான்)
பார்த்த/பாக்கத மேச்சுகளை டிவிடி/சிடி யில் போட்டு பார்ப்பது சிலருக்கு பழக்கமாம், கேள்விப்பட்டேன்.
இந்தியாவின் வெற்றி / தோல்விக்கு நாட்டுப்பற்றுக் கொண்டு பெட்டுக் கட்டுவது, அதாவது பந்தையம் அதாவது வெற்றி என்றால் நான் அத செய்வேன்,தோல்வி என்றால் நீ இத செய்.
இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும்,நேற்று நடந்த மேச்சில் இந்தியா ஜெயிச்சாதான் வாங்கி வச்சிருக்க பட்டாசை வெடிக்கனும்னு அப்பா,அம்மா சொல்லிவிட்டதால் கிரிக்கெட் என்றால் மட்டையால் பந்தை அடிக்கனும் என்பதை மட்டுமே தெரிந்த, மட்டை உயரம் கூட இல்லாத,பக்கத்து வீட்டு வாண்டு இந்தியா ஜெயிக்கனும்,பட்டாசு வெடிக்கனும்னு தவம் கிடந்தது,அது ஆசை நிறைவேறிட்டுங்க.
இனி வர ரெண்டாம் தேதி பாத்திடுவோம்.

13 comments:
ஆமாம். ஆமாம், நீங்க சொல்லுவது எல்லாமே கரெக்ட் தான். இந்திய ஒருமைப்பாடே டி.வி யில் கிரிக்கெட் பார்ப்பதில் தான் இன்று நம்மிடையே உள்ளது. இந்தியா ஜெய்க்கப்போவது கடைசி 2 பந்துகள் வீசப்படுவதற்கு முன்பே உறுதியாகிவிட்டது. அதனால் அப்போதே பட்டாஸ் சத்தம் தொடங்கி திருச்சியில் எங்கள் தெருவில் அது ஓய அரை மணி நேரம் ஆனது. அவ்வளவு ஒரு மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் எல்லோரும். பகிர்வுக்கு நன்றிகள். இந்தியா எப்படியாவது உலகக்கோப்பையை வெல்லட்டும். சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ஓய்வுபெறுவதற்குள் அது மேலும் ஒரு உலக சாதனையாக அமையட்டும். வாழ்க பாரதம்!
அன்புடன் vgk
ஒற்றுமைக்கு போராட கட்சிகள் வேண்டாம்,
கொள்கைகள் கொண்ட தலைவன் வேண்டாம்,
சாதி,மத,மொழி பேதமில்லை,
இந்தியன் என்ற உணர்வு
ஊற்றெடுக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை,
ஒற்றுமையில் வேற்றுமை இல்லை
வெற்றியில் சந்தோஷ்ப்படுவதில் ஆச்சர்யமில்லை
தோல்வியென்றாலும் சிறியவர் முதல்
பெரியவர் வரை ஒரே துக்கம்
உண்மையிலும் உணமை
என்னதான் கிரிக்கெட் மக்களின் நேரத்தை விழுங்கினாலும், எத்தனையோ பிரச்ச்னைகிடையில் நாட்டு மக்களை ஒற்றுமை படுத்தும் ஒரு விசயமாக இருப்பதில் மகிழ்ச்சியே, ஒரே ஒரு குறை என்னவென்றால் கிரிக்கெட் மட்டுமே பிரதானமாக இருப்பதாம் மற்ற விளையாட்டுகளையும், வீரர்களையும் ஊக்குவிக்க யாரும் இருப்பதில்லை, இந்த கிரிக்கெட் ஆட்டத்திற்கு பிரதமர்கள் வந்தது போல, மற்ற விளையாட்டிற்கும் பிரதமர்கள் வந்து ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, எது எப்படியோ இந்தியா கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள், ஜெய் ஹோ...
i agree with all the concepts that was shared. i wish India to win the world cup and bring laurels to the country... thank you cricketers ..
especially SACHIN the god of Cricket
@கோபலகிருஷ்ணன் சார்
நன்றி.
இந்தியா வெற்றி பெற வேண்டும் அனைவரின் எதிர்பார்ப்பும் இதுதான்.
@லெஷ்மிம்மா
மகிழ்கிறேன்,நன்றி.
@சுரேஷ்
நன்றி
விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பமும் உங்கள் விருப்பம்தான்.
@herman from callezee
welcome & thank u
we hope win the world cup
நல்லா சொல்லியிருக்கீங்க!கோயில் அர்ச்சனை வரைக்கும் ரசிகர்கள் இருப்பதும் தோற்றால் உங்களுக்கு அர்ச்சனை விழுவதும் ஆச்சரியம்தான்:)
//இந்தியா ஜெய்க்கப்போவது கடைசி 2 பந்துகள் வீசப்படுவதற்கு முன்பே உறுதியாகிவிட்டது.//
வேலைக்கு போகாம ப்ங்க் பண்ணிட்டு இந்தியா ஜெயிச்சா இன்றைக்கு சைனீஷ் ஸ்பெசல் என்று சொல்லி 2 பந்து வீசப்படுவதற்கு முன்பே நண்பர் எஸ்கேப்:)
மேட்ச் பிக்சிங்க் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கிரிக்கெட் இவ்வளவு நாட்களில் இன்னும் களைகட்டியிருக்கும்.
@இரவு வானம்
முதலில் மத்த விளையாட்டுகளில் சாதிக்க சொல்லுங்க. சும்மா வாய்லசொல்லக் கூடாது சார் . ஜெயிக்கிற குதிரை மேலதான் காசு கட்டுவாங்க, அந்த மாதிரி தெரிஞ்ச வீரர்களுக்குதன் விளம்பர வருவாய் கிடைக்கும்
You written very nicely. It reminded our national punch line, "Unity in diversity" Thanks for sharing!
நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களுமே உண்மை தான். என் மாமாவும் அப்படித்தான். ஜெயிக்க வேண்டும் என அர்ச்சனை. தோற்றால் திட்டு. நமக்குள்ளும் ஒற்றுமை தான்.
இந்தியா வெல்லட்டும்.
@ராஜ நடராஜன்
வருகைக்கு நன்றி.இன்னும் சொல்லாமல் விட்டது
சிலர் மேச் முடிந்த பிறகுதான் சாப்பிடுவாங்க,
லேட்டா வர கணவன் மேச் பாக்க மட்டும் வீட்டுக்கு சீக்கரமா வருவது.
சீரியல் பாக்க விடாம மேச் பார்ப்பது,இப்படி எத்தனையோ
@எல்.கே
விடுங்க சார்,எத்தன சாமி அருள் புரிந்தாலும் இருந்தாலும் சில சாமி மட்டும் மக்களிடையே பிரபலாமிகிடுது
உ.ம்:. திருப்பதி பகவான்
அப்படிதான் இந்த கிரிக்கெட்டும்
@பிரணவம் ரவிகுமார்
நன்றி.நாளை தெரிந்துவிடும்.
@ஆதி
அட,அடுத்த ஒற்றுமை நமக்குள்.
ம்.ம்..
இந்தியா வெற்றிபெறட்டும்.
இது ஒரு ஆச்சர்யமான உண்மை...
@கே.ஆர்.பி செந்தில்
இந்தியா வென்றுவிட்டது.
மகிழ்ச்சியில் நன்றி
Post a Comment