*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 20, 2011

வாழ்வியல் கதைகள் 20/5/2011

(1)   ஒரு சாது முப்பது வருடங்களாக இமாலயத்தில் தியானத்தில் இருந்தார்.முப்பது வருடங்களில் தன் ஆன்மாவின் அகங்காரம் முற்றிலும் அழிந்து அமைதியாகிவிட்டதாக,முக்தியடைந்து விட்டதாகத் தோன்றியது.அவரை சந்திக்க வந்த சீடர்களில் ஒருவன் மலை அடிவாரத்தில் திருவிழா நடைபெறுவதால் பங்குபெற அழைத்தான்.
அழைப்பை ஏற்று திருவிழாவிற்கு சென்ற சாதுவின் காலை கூட்ட      நெரிசலில் மனிதன் ஒருவன் மிதித்துவிட்டான்.மிதித்த வேகத்திற்கு அந்த சாதுவிற்கு சுல்லென்று கோபம்,வலி தலைக்கேறியது.சாது தன் நிலை கண்டு வியப்படைந்தார்.முப்பது வருட இமாலய வாழ்நாளில் காண முடியாதது,இன்று ஒரு மனிதன் கால் பட்டதால்  நிதர்சனம் ஆயிற்று.
(2)
சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனுக்கு வெகுநாட்களாக தமது எல்லையில் வாழும் சந்நியாசி ஒருவரை தனது அரண்மனைக்கு அழைத்து விருந்து உபசரிக்க ஆசைப்பட்டார்.சந்நியாசி ஒருவரை தரிசித்து,வணங்கிதாங்கள் இங்கு வெகுநாட்களாக வாழ்கிறீர்கள்,தியானம்,தவம் செய்கிறீர்கள் என்பதை அறிவேன்.தாங்கள் எனது அரண்மனையில்  தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்என்றார்.அதற்கு சந்நியாசி மறுப்பேதும் இல்லாமல் சரி வா போகலாம்,உன் விருப்பம்படியே தங்குகிறேன் என உடனே சம்மதம் தெரிவித்தார்.

அரசனுக்கு ஆச்சர்யம்.இவர் என்ன சந்நியாசி?கேட்டவுடன் சம்மதித்துவிட்டாரே!இவர் உண்மையான சந்நியாசிதானா என்ற சந்தேகம் எழுந்தது.பற்றற்றவனுக்கு அரண்மனை தேவயில்லையென சந்நியாசி வாதிடவில்லையே என்ற குழப்பத்துடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அரண்மனையில் சந்நியாசிக்கு அரசனுக்கு நிகரான மரியாதை,ஆடை ,அலங்காரம்,உணவு ,உபச்சாரம் வழங்கப்பட்டது.சந்நியாசி அனைத்தையும் எற்றுக் கொண்டார்.வயிர் நிரம்ப உண்டார்,அரச ஆடைகள்,அணிகலன்களை அணிந்துகொண்டார்,ஆடம்பர படுக்கையில் உறங்கினார்.பல நாட்கள் சென்றது.அரசனுக்கு சந்தேகம் அதிகரித்தது.இத்தனை நாள் அரண்மனையிலே இருக்கிறாரே,மீண்டும் தனது பழைய நிலைக்கு,இடத்திற்கு செல்ல சந்நியாசிக்கு விருப்பமில்லையா?அரண்மனை வாசியாகிவிட்டாரே?என தன் சந்தேகத்தை சந்நியாசியிடமே கேட்டுவிட முடிவு செய்தான் அரசன்.

சந்நியாசியிடம் சென்றுஐயா எனக்கு ஒரு சந்தேகம்என்றான் அரசன்.என்னை அழைத்த முதல் நாளே உனக்கு சந்தேகம்  வந்துவிட்டது. ஆயினும் கேள்  என்றார் சந்நியாசி.நீங்கள் எப்படிப்பட்ட சந்நியாசி? என்பதே என் சந்தேகம் என்றான் அரசன்.பதில் வேண்டுமாயின் என்னுடன் வா என்று அரசனை அழைத்துச் சென்றார் சந்நியாசி.அரண்மனையிலிருந்து வெகுதூரம் சென்றும் சந்நியாசி பதில் சொல்லவில்லை.ஊர் எல்லை வந்தவுடன் எங்கு அழைத்துச் செல்கிறீகள் என்றான் அரசன்.உன் கேள்விக்கு பதில் சொல்லத்தான்,மேலும் என்னுடன் நட என்று வெகு தூரம் அழைத்துச் சென்றுவிட்டார் சந்நியாசி.பொழுதும் போய்விட்டது.

அரசன் மீண்டும் சந்நியாசியை நிறுத்தி பொழுதே போய்விட்டது,எங்கே போகிறீர்கள்,என் கேள்விக்கு பதிலும் சொல்லவில்லயே என்றான்.இனி நான் திரும்ப போவதில்லை என்பதே என் பதில்,தொடர்ந்து செல்லப் போகிறேன் விரும்பினால் என்னுடன் வா, என்றார் சந்நியாசி.அரசன் அதிர்ச்சியடைந்து,என்னால் வர முடியாது,என் நாடு,மக்கள்,என் குடும்பம்,அரசாட்சி உள்ளது.அனைத்தையும் விட்டு என்னால் எப்படி வர இயலும் என்றார்.
உன் கேள்விக்கு பதில் கண்டுகொள்ள முடிந்தால் உணர்ந்துகொள்,நான் தொடர்ந்து செல்லப் போகிறேன்,எனக்கு என்னுடையது என்று எதுவும் இல்லை,எனக்கு சொந்தமானது எதுவும் இல்லை.இத்தனை நாள் உன் அரண்மனையில் நான் இருந்தேனே தவிர எனக்குள் உன் அரண்மனை  இல்லை என்றார் சந்நியாசி.

சந்நியாசியின் காலில் விழுந்து, என் பிரேமை விலகியது,என் வாழ்நாள் முழுவதும் பச்சாதாபம் ஏற்படும்,எனவே என்னுடன் வந்து அருள்புரியுங்கள் என்றான் அரசன்.மீண்டும் வர தயார்,ஆனால் மீண்டும் உனக்கு சந்தேகம் தோன்றும்.எனக்கு ஒரு பேதமும் இல்லை.உன்னிடம் கருணை கொண்ட அனுதாபம் என்னை நேராகச் செல்லப் பணிக்கிறது என்று பதிலளித்து சந்நியாசி தன் வழியில் சென்றார்.
*********************************************************************************************************************

May 19, 2011

ஆங்கிலம் கற்க,டீவியில் சமையல் குறிப்பு பாருங்க

சன்,ஜெயா,மெகா அலைவரிசைகளில் சமீபமாக நான் பார்த்த சமையல் கலை நிகழ்ச்சியில் அவர்கள் செய்து காமித்த பாதார்த்தங்களை கற்றுக்கொண்டதை விட ஓரளவு ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.நம்பிக்கை இல்லைனா நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
உதாரணத்திற்கு ஒரு ரெசிப்பி

ட்ஃப்ரண்டான  தக்காளி தொக்கு எப்படி செய்றதுனு பாக்கப் போறோம்.
நாலு தக்காளி டிஃப்ரண்டான டேஸ்ட்டுக்காக தேவையானளவு ஆயில், ஆனியன்,இஞ்சி,பூண்டு,மஞ்சள் தூள்,தனியா தூள்,கரம் மசலா,கொகோநட் பேஸ்ட்,சில்லி பவுடர்,தேவையானளவு சால்ட்.

இப்போ மசாலாவை ரெடி பண்ணிடுவோம்.

அல்ரெடி கட் பண்ணி வச்சுருக்க  கொகோநட்டை  மிக்சியில போட்டு நல்லா அரச்சு பேஸ்ட் பண்ணிக்கனும்.

நெக்ஸ்ட் கொஞ்சம் பூண்டு,இஞ்ஜியை மிக்ஸில அரச்ச பேஸ்ட்.

ஜிஞ்சர்,கார்லிக் பேஸ்ட் இப்போ கடைகளிலும் அவைளபிள்.

லிட்டில் அமெளண்ட் இருந்தால் போதும். இது சிம்பிளான டிஷ்தான்.டென் மினிட்ஸ்ல ரெடிபண்ணிடலாம்.

ஸ்டவ ஆன் பண்ணி கடாய வச்சாச்சு,நீங்க நார்மல் பேன்(pan)கூட செய்யலாம்.
கடாய் சூடாயிடுச்சு,இப்போ ரெண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் போட்டுகங்க.

ம்..ஆயிலும் சூடாயிடுச்சு,அல்ரெடி சாப் செஞ்சு வச்சுருக்கிற ஆனியன போட்டு பொன்நிறமா ஃப்ரை பண்ணுங்க,தென் கொஞ்சம் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் போட்டுகங்க,பச்ச ஸ்மல் போகிறவரைக்கும் ஃப்ரை பண்ணுங்க.

இப்போ தக்காளிய கட் பண்ணி போடுங்க.
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,
ஆஃப் ஸ்பூன் தனியா தூள்,
ஆஃப் ஸ்பூன் கரம்  மசாலா
ஒரு ஸ்பூன் சில்லி பவுடர் போட்டுகங்க.

தேவையான் அளவு சால்ட் போட்டுகங்க.எதை மறந்தாலும் உப்பு போட மறந்துடாதீங்க.
ஃபைவ் மினிட் நல்லா ஃப்ரை பண்ணுங்க,லைட்டா வாட்டர் கூட சேத்துக்கலாம். 

ம்,,ரெடியாகிடுச்சு,இப்போ அரச்சு வச்சுருக்கிற தேங்காய் விழுதையும் (கொகோநட் பேஸ்ட்னு சொல்ல மறந்துடாங்கப்பா) மிக்ஸ் பண்ணி டு மினிட் சிம்ல(ஃபோன் சிம் ல இல்ல) வச்சுடுங்க.
ம்..ரெடியாய்டுச்சு,ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க.

இனி சர்வ் பண்ணவேண்டியதுதான்.

அல்ரெடி வச்சிருந்த ச்சாப்ப்டு ஆனியன்,ஸ்லைஸ்டு தக்காளியை இந்த டிஷ் மேல வச்சு டெக்கரேட் செய்து கொடுத்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.கொரியண்டர் லீஃப் கூட ஆட் பண்ணிக்கலாம்.

இட்லி,தோசை,சப்பாத்திக்கு இதை சைடிஷா சாப்பிடலாம்.
கமண்ட்ரி கொடுத்துகிட்டு கூடவே சாப்பிட்டு பாக்க ஒருத்தவங்க நிப்பாங்களே

அவங்க :  வாவ் ஒண்டர்ஃபுல் டிஷ்ங்க,எக்ஸலண்ட்.
என்னங்க நீங்களும் இந்த டிஷை ட்ரை பன்வீங்கனு நினைக்கிறேன்.செஞ்சு பாத்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.ஸ்டில் தென் bye,bye. ஃப்ரம் x
{மைண்டு வாய்ஸ்: நகருங்க புராண்டிட போறாங்க, bye சொல்றாங்களா}

ப்ரோகிராம் முடிஞ்சுட்டு.அவங்க பேசும் ஆங்கில வார்த்தைகளை கத்துக்கொள்ள உங்க வீட்ல டீவி சேனல் வந்தா மட்டும் பத்தாது காதும் கண்ணும் நல்லா வேலை பன்னனும்.அப்பதான் அவங்க எதை கடாயில போடுறாங்க அதுக்கு பேர் என்ன சொல்றாங்கனு விளங்கும்.

                                    இப்படிக்கு
                     செந்தமிழ் வராட்டாலும்
                நடைமுறை தமிழை எதிர்பாக்கும்  சங்கம்.

May 17, 2011

என்ன கொடுமை - ஏடிஎம் ல நடக்குது

ஏடிஎம் ல் பணம் எடுக்கும்போது பல அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்.இங்கே என்னென்ன கொடுமை நடக்குதுனு பார்ப்போமா?சும்மா தமாசுக்குதான்.


 இவர் தன் பணத்தை எடுக்க வந்திருக்கிறாரா?அடுத்தவங்க பணத்தை எடுக்க வந்திருக்கிறாரா?அல்லது பணத்தை எடுத்துகிட்டு  ரசிதுகளை மட்டும் அங்கயே போட்டு விட்டு போயிடுறாங்களே,அதைதான் மூட்டை நிறையா வச்சிருக்கிறாரோ!



இவர் மனைவி பணம் எடுக்கிறத மத்தவங்க பாத்துடக் கூடதாம். நாம் பணம் எடுக்கும்போது அடுத்தவங்க பாக்கக் கூடாதுதான் அதுக்குனு இப்படியா?

இது என்ன கோலம்?.அய்யோ பாவம்!யாரிடம் எதுக்கு அடி வாங்கினாரோ தெரியல.


இந்த அநியாயம் எங்கெயாவது உண்டா?கொடுமை கொடுமை என கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சாடுதாம்.



பெரியவங்களுடன் வராமல் இந்த வாண்டுகள் கஷ்டப்படுதே!


                                    ம்..இது என்ன டெப்பாசிட்?ரசிதுகளுக்கா?

                                         
                                            
              
                   இவ்ளோ உயரத்தில் எப்படிங்க பணத்தை எடுக்கிறது?ரொம்ப கஷ்டம்.

 
                        அதுக்குனு  இப்படி தரமட்டத்தில் இருந்தாலும் கஷ்டம்தான்!!!

                         பணம் வராட்டாலும் இப்படி கேம்ஸ் இருந்துச்சுனா கொஞச  நேரம்       விளையாடிவிட்டு  வரலாம்  குளுகுளு  ஏசியில்.


ரசிது காகிதம் கொட்டி கிடப்பது போல பணம் வந்து குவிந்திருந்தால் எப்படி இருக்கும்.இதென்ன கண்ணாடிலாம் மாட்டி வச்சுருக்காங்க.பழுதடைந்த ஏடிஎம் ல்  இப்ப கண்ணாடி வியாபரம் நடக்குது போலருக்கே!

May 16, 2011

பிரகதி மைதானம் - தில்லி


தலைநகர் தில்லியின் முக்கிய இடங்களில் பிரகதி மைதானமும் ஒன்று.72,000 சதுர பரப்பளவு கொண்டது.வருடம் முழுவதும் உலகலாவிய மற்றும் தேசிய கண்காட்சி நடக்கும் இடம் இந்த பிரகதி மைதானம்.இந்திய ட்ரேட் ப்ரோமசன் ஆர்கனைசேசன்(ITPO) இதனை செயல்படுத்தி வருகிறது.

இந்த மைதானத்தில் 18 முக்கிய ஹால்கள் உள்ளன.கன்ஃபிரன்ஸ் ஹால் வசதி,உணவகம்,தியேட்டர் உள்ளது.கல்வி,புத்தகம்,மருத்துவம்,விவசாயம்,தொழில் துறைகள்,மின்னணுவியல்,வாகனங்கள்,வாகனங்களின் உதிரிப் பாகங்கள்,அனைத்து வித இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள்,டைல்ஸ்,பொம்மைகள்,நகைகள் போன்ற 70 வகையான கண்காட்சிகள் வருடத்தில் நடைபெறுகிறது.மெட்ரோ வசதியும் உண்டு.கண்காட்சி நேரத்தில் சிறப்பு இரயில் வசதிகளும் உண்டு.பாதுகாப்பு படைகளுக்கான கண்காட்சி ஹாலுக்கு வருடம் முழுவதும் பார்வைக்கு அனுமதி உண்டு.. இதில் குறிப்பிடத்தக்கது இண்டர்நேஸ்னல் ட்ரேட் ஃபேர்.இந்த ட்ரேட் ஃபேரில் மட்டுமே அனைத்து மக்களுக்கும் நுழைவு வசதி உண்டு.


இண்டர்நேஸ்னல் ட்ரெட் ஃபேர் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது.2006ஆம் ஆண்டு ட்ரெட் ஃபேர் பார்க்க பிரகதி மைதானத்திற்கு சென்றிருந்தோம் .மக்கள் கூட்டம் அலை மோதியது.ஆனாலும் அனைவரையும் கண்காணித்து,வரிசைப்படுத்தி நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது.நுழைவுச் சீட்டின் விலை அப்போது ஐம்பது ரூபாய்.
மாநிலங்களுக்கு தனித்தனியே ஹால்கள் இருந்தன
.
உள்ளே அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், இசை,விவசாயம்,கல்வி,தொழில்,உணவு போன்றவைகளின் சிறப்பம்சங்கள் காட்சிக்கு உள்ளது.அந்தந்த மாநிலத்தின்,விளை பொருட்கள்,ஆடைகள் மற்ற சிலவும் விற்பனைக்கும் இருந்தது.அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை உடுத்திய ஆண்களும் பெண்களும் வரும் மக்களுக்கு விளக்கங்கள் கொடுத்தும்,மற்ற பகுதிகளுக்கு செல்ல வழிகாட்டியாகவும் இருந்தனர்.அங்காங்கே வழிகாட்டும் வரைபடங்களும் இருந்தன.

    



ஒவ்வொரு                            மாநிலங்கள்      உள்ள             ஹாலுக்கு செல்லும் போதும், சுற்றிப் பார்த்து விட்டு
வெளிவரும்போது உண்மையிலே
அந்த மாநிலத்திற்கு நேரில் சென்று பார்த்துவிட்டு வருவது போலவே இருந்தது.
கேரளா, ராஜஸ்தான், நாகலாந்து, ஹிமாச்சல் பிரதேஷ்,ஒரிசா போன்ற மாநிலங்களை பார்க்க கண்கள் கோடி வேண்டும் என்பது போல இருந்தது.இந்த மாநிலங்களின் இயற்கை வளங்களும்,கலை நுணுக்கங்களும் அங்கிருந்து வர மனம் வரவேயில்லை.அந்தந்த மாநிலங்களின் நுழைவாயிலில் அந்த மாநிலத்தின் பாரம்பரிய இசையும்,நடனமும் பார்க்க முடிந்தது.கூடவே வெளியேறும் வாசலில் ஒரு நோட்டும் இருந்தது.அதில் நாம் எங்கிருந்து வருகிறோம்,உள்ளே சென்று பார்த்ததில் பிடித்தவைகள் என்ன?,பார்த்ததில் திருப்தி அடைந்தோமா?,என பின்னூட்டம் இடலாம்.

எதோ கண்காட்சி என்று பார்க்கச் சென்றோம்.தனித்தனி மாநிலங்களாக இடம் பெற்றுள்ளதை அறிந்து தமிழ்நாடு எங்கிருக்கிறது என்று ஆவலாக தேடினோம்.தமிழ்நாட்டை கண்டுபிடித்ததில் தமிழ்நாட்டிற்கே செல்வது போன்ற சந்தோசத்தில் சென்றோம்.நுழைவாயிலில் மேள நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார்கள்..மற்ற மாநிலங்களில் மக்கள் கூட்டம் இருந்தது போல தமிழ்நாட்டிற்குள் இல்லை.அரசியல் தலைவர்களின் படங்களும்,சிறு குறிப்புகளும் இருந்தது.மெரினா கடற்கரையின் விர்சுவல் காட்சி இருந்தது.விவசாயம்,நெசவு,மின் உற்பத்தி பற்றி இருந்தாலும் மற்ற மாநிலங்களை விட மிக எளிமையாகாவே இருந்தது. 
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><>       தமிழ்நாடு
மகளிர் குழுக்களால் சுய வேலை வாய்ப்பாக செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு இருந்தன.கோவில்கள்,காட்டன்,பட்டு புடவைகள் முக்கிய பங்கு வகித்தது.தமிழக உணவு கிடைக்கும் இடத்தில்தான் கூட்டம் இருந்தது.

அடுத்ததாக பாண்டிச்சேரி மாநிலமும் இருந்தது.இங்கு தமிழ்நாட்டை விட அதிக கூட்டம் இருந்தது.கைவினைப் பொருட்களும் அதிகம் இருந்தது.
சைனா பசாரும் இருந்தது.பல தொழில் நிறுவனங்கள் பற்றிய விபரங்களும் காட்சிக்கு இருந்தது.அறுவடை இயந்திரங்கள்,எம்ப்ராய்டரி இயந்திரங்கள்,பிஸ்கட் எப்படி தயாரிக்கிறார்கள், இப்படி பல வகைப்பட்ட இயந்திரங்களும் அதற்கான செய்முறை விளக்கங்களும் இருந்தன.தற்பொழுது புதிதாக சந்தைக்கு வந்துள்ள அனைத்து துறையிலும் எலக்ட்ரிகல்,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பொருட்களும் இடம் பெற்றிருந்தது.
மொத்தத்தில் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் கூட இத்தனையும் ஒரே இடத்தில் பார்த்திருக்க இயலாது என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினோம்.
காலை பத்து மணிக்கு உள்ளே சென்றதிலிருந்து இரவு ஏழு மணி வரை சாப்பிட்ட நேரம் தவிர உக்காராமல் சுற்றிப் பார்த்துக் கொண்டே இருந்ததில் மனம் நிறைந்தாலும் பார்க்காமல் விடுபட்ட இடஙகளும் இருந்தது.நேரம் போனதே தெரியவில்லை.கால் வலியும் எடுத்துக் கொண்டது.




                                                                                                                                                                                                                                                                    கடந்த 13 ஆம் தேதி      வெளியிட்ட       இந்த பதிவும்,வந்த    பின்னூட்டங்களும் காணாமல் போனதால் மீண்டும் வெளியிட்டுள்ளேன்.