*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 15, 2011

கள்வர்களின் மனசாட்சியை களவாடியது யார்

களவுகள் நடைபெறுவதை செய்தித் தாள்,தொலைக்காட்சி,நமது சுற்று வட்டாரத்தில் பார்த்திருப்போம்,பாதிக்கப்பட்டிருப்போம்.சமீபமாக எங்கள் பகுதியில் நடந்த களவுகள்.

களவு 1

ஒருவர்  ATM கு முதல் நபராக சென்றுள்ளார்,தான் கார்டை போட்டு பணம் எடுத்து விட்டு நகரும் போது இரண்டாம் நபருடன் மோதியதில் கீழே விழுந்த ATM கார்டை இரண்டாம் நபர் முதல் நபருக்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.தேங்க்ஸ்,நோ தேங்க்ஸ் சொல்லிவிட்டு நகர்ந்தாயிற்று.முதலாம் நபர் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு  குடும்பத்தினருடன் தொலை தூர கோவில் ஒன்றுக்கு  செல்ல ஏற்கனவே தயாரான நிலையில் மீதியிருந்த பணத்துடன் சென்றுவிட்டார்.அங்கு சென்று  சில செலவுகளுக்கு பின் அங்குள்ள  ATM ல் தன் கார்டை போட்டதில் ஜீரோ பேலன்ஸ் காட்டியது.அதிர்ச்சியடைந்தவர் நாற்ப்பாதாயிரம் +வைத்திருந்தோமே எப்படி ஜீரோ பேலன்ஸ் வந்ததென்று யோசித்துக்கொண்டே தன் கார்டை பாக்கும்போதுதான் கவனிக்கிறார் தன்னிடம் உள்ளது தனது ATM கார்டல்ல.எப்படி மாறியது?

கடைசியாக தனது சொந்த ஊரில் ATMலிருந்து பணம் எடுத்துவிட்டு நகரும்போது இரண்டாம் நபருடன் மோதல் நடந்ததே அவர் செய்த லீலை என்று புரிந்தாகிவிட்டது.தனக்கு பின் நின்றவர் தனது பின் (ரகசிய) நம்பரை கவனித்தும் இருந்திருக்கிறார்.மோதியதில் விழுந்த கார்டை மாற்றி கொடுக்கப்பட்டதை கவனிக்காமல் வாங்கியதின் விளைவுதான்.பிறகு நண்பர்களின்  உதவி பெற்று ஊர் திரும்பினார்.காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது,செய்தித்தாளில் பணம் பறிகொடுத்தவர் புகைப்படம்  வந்ததே தவிர,இன்று வரை பணம் வந்தபாடில்லை.

களவு 2

ஒருவர் ATM லிருந்து ஏழாயிரம் பணம் எடுத்து பர்சில் வைத்துக்கொண்டு ரெண்டு கடைகள் தாண்டுவதற்குள் பின் பாக்கெட்டில் வைக்கப்பட்ட பர்ஸ் களவாடப்பட்டது.

களவு 3

மார்க்கெட்டுக்கு சென்ற பெண்ணிடம் பணக்கட்டைக் காட்டி,இதை வைத்துக்கொண்டு உன் நகைகளைக் கொடு என்று சொன்ன ஒருவரிடம் தான் போட்டிருந்த தங்கத் தோடு,மோதிரத்தைக் கழட்டிக்  கொடுத்துவிட்டு,மேலும் கீழும் ஒரிஜினல் பணம் நடுவில் வெள்ளை காகிதங்களுடன் வீட்டிற்கு வந்த பெண் தனக்கு என்ன நடந்ததென்று ஒன்றும் புரியவில்ல்லை என்றார்,அங்கு நடந்தது என்ன மெஸ்மரிசம்,ஹிப்னாட்டிசம்னு தெரியல,காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீஸ்காரர்கள் என்ன மாயாஜால வித்தை தெரிந்தவரா,இதையெல்லாம் கண்டு பிடிக்க,எனவே இதுவரை நகைகள் வரவில்லை.

களவு 4

வழியில் நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணிடம் ஒருவர் அட்ரஸ் விசாரிக்க ஒரு துண்டு காகிதத்தை காமித்தவர் விசாரிப்பு நடந்தவுடன் அந்த பெண் தனது நகைகளை தானே கழற்றி கொடுத்து விட்டார்.அவருக்கும் தான் ஏன் அப்படி செய்தோம்னு புரியவில்லையாம்.

களவு  5

விடியற்காலையில் கணவர் வாக்கிங் சென்றுவிட வாசல் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த மனைவியிடம் ஒரு இளம் வயது பெண் “ஆண்ட்டி இதோ பாருங்கள் டிரஸ்ஸை மாற்றிப்  போட்டு வந்துவிட்டேன்,உங்க வீட்டிற்குள் சென்று மாற்றி விடுகிறேன் பஸ்ஸிற்கு நேரம் ஆகிவிட்டது ஆண்ட்டி,அனுமதியுங்கள் ப்ளீஸ் என்றவரின் சுடிதார்    உள்புறத்தை,வெளிப்புறமாக அணிந்திருப்பதைக் கண்டு அனுமதித்த பெண்ணிற்கு நேர்ந்தது என்ன தெரியுமா?

உள்ளே சென்ற பெண் தன் பையில் வைத்திருந்த கயிற்றால் அனுமத்திதவரை கட்டிப்போட்டு விட்டு வெளியில் சிக்னல் கொடுத்தவுடன் வந்த ஆண்கள் ,அந்த இளம் பெண், வீட்டிலிருந்த பணம்,நகைகள்  முடிந்த வரை வீட்டில் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

9/3/2011 அன்று நடந்த களவு

என்ன கேள்விப்பட்டாலும் கணவருக்கு தொல்லைக் கொடுக்காமல் வீட்டுக்கான வெளி வேலைகளை தானே செய்து கொல்லும் துணிச்சலேன்று நினைத்து அலட்சியமாக வெளியில் சென்ற பெண்ணுக்கு நல்ல பாடம்.
காய்கள் வாங்கிவிட்டு குழந்தையின் பள்ளிக்கு மாதாந்திரப் பணம் கட்ட சென்ற பெண் இடைப்பட்ட கடையில் சில பொருட்கள் வாங்க, மறதியாக பக்கத்தில் வைத்துவிட்ட பர்ஸ், பொருட்கள் செலக்ட் செய்து கடைக்காரருக்கு பணம் கொடுக்க முற்படுகையில் பர்ஸ் இல்லை.பர்சில் பணம்,குழந்தையின் பள்ளிக் கட்டணக் கார்ட்,வீட்டு சாவி,செல்போன் இருந்தது.இரண்டு நிமிடம் இருக்கலாம் சுதாரித்த பெண் கடைக்காரரின்,செல்போனில் தனது நம்பருக்கு டையல் செய்தால் ஸ்விட்ச் ஆப் என வருகிறது,கடைக்காரரின் போனிலே கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,வீட்டிற்கு அழைத்துப் போகப்பட்டார்.
ரூ1200   பணம் களவு போனதை விட வருத்தம் அந்த பர்சும்,செல்போனும் அந்த பெண்ணின் அம்மா உபயோகித்தது,அம்மாவின் நினைவாக இருந்தது கைவிட்டு சென்றதுதான்.

கணவரால் அறிவுரை கலந்த அர்ச்சனை நடந்து,கிளப்பிவிடுறதுக்குனே ரெண்டு பேர் இருப்பாங்களே அவர்களால் போலிஸ் ஸ்டேசனுக்கு இதுவரை போகாத தம்பதியர்கள்  சகிதமாக கம்ளைன்ட் கொடுக்க போலிஸ் ஸ்டேசனுக்கு அழைச்சிட்டு போனவர் என்ன சொல்லி அழைச்சிட்டு போனார் தெரியுமா?பள்ளி கட்டினக் கார்டில் அட்ரெஸ் உள்ளது,மொபைளில் உள்ள நம்பர்களில் ஏதாவது மிரட்டல் வரலாம்,அட்ரசில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுக்கலாம்,என்ற சந்தேகத்தில்  ஸ்டேசன்  சென்று நடந்ததை சொன்னால், உங்க பர்ஸ், ஒரு டன் வெய்ட் இருந்ததா?ஏன் கையில் வச்சுக்காம பக்கத்தில் வச்சிங்கனு போலிஸ் கேட்டார்,பிறகு நம்பர் பிளாக் செய்ய மட்டும்தான் உதவ முடியும்,யாராவது கையிலிருந்ததை பிடுங்கிட்டு போனால்கூட சீரியசான விசியமாகக் கருதலாம்,இது உங்க மிஸ்டேக்.போலிஸ் என்ன செய்ய முடியும்னு கேள்வி கேட்டார் போலிஸ்.

நியாயமான கேள்விதான் .நாற்ப்பதாயிரம் பணம் போனவரே சும்மா இருக்கும்போது இவர்கள் போனது தப்புதான்.வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்நுழைந்தாகிவிட்டது.நல்ல மனது உடையவர்களாயிருந்தால் அதே அட்ரஸ்,நம்பரைக் கொண்டு உடையவரிடம் சேர்த்திருக்கலாம்,ரெண்டு நிமிடத்தில் சிவிட்ச் ஆப் செய்தவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள் அல்லதான்.கடைசியாக பர்சை தொலைத்த பெண் உங்களுக்கு கொஞ்சம் பரிச்சியமான பெண்தான்,இந்த பதிவு எழுதும் அச்சிதான்.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இக்காலத்திற்கு ஏற்ற அருமையானதொரு பதிவு தான்.

இதைப்படிக்கும் அனைவரும் உஷாராக இருப்பதற்கு இது போன்ற சம்பவங்கள் மிகவும் உதவியாகவே இருக்கும்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

எல் கே said...

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ஆச்சி.

Pranavam Ravikumar said...

பதிவு அசத்தலாக இருக்கிறது!

raji said...

கூடுமானவரையில் கவனமாக இருப்பதே நல்லது

எனக்கு பரிச்சயமான அந்த தோழிக்கு எனது அனுதாபங்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு

தங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி

எல்.கே அவர்களுக்கு

நீங்க பின்னூட்டமிட்ட படியே ரீரைட் செய்துவிட்டேன்.நன்றி.

@பிரணவம் ரவிக்குமார்

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஆனால் வேதனையான விசியமல்லவா சொல்லியிருக்கேன்,கவனம் தேவை .


ராஜி அவர்களுக்கு நன்றி.
திருத்திவிட்டேன்.

Unknown said...

பயபுள்ளைங்க இவ்வளவு சின்ன அமவுண்டை திருட எவ்வளவு கஷ்டப்படுது பாருங்க! அவனவன் லட்சம் கோடிக்கு மேல் அடிச்சுட்டு சொகுசா இருக்கான்..

Unknown said...

என்ன மேடம் இவ்வளவு கவனக்குறைவாவா இருக்குறது? சரி சரி ஆனது ஆச்சு, அத நினைச்சி பீல் பண்ணாம இனிமே கேர்புல்லா இருங்க, மத்தபடி திருடரவன் திருடிட்டுதான் இருப்பான், அதுக்கு ஒரு காரணமும் சொல்வான், நாமதான் ஜாக்கிரதையா இருக்கனும்...

Angel said...

ஆச்சி அந்த கடைசி அப்பாவி நீங்கதான்னு பாதி பதிவு படிக்கும்போதே
கண்டுபிடிச்சிட்டேன்.
கள்வர்களுக்கு ஏது மனசாட்சி .
எங்கள் உறவினர் ஒருவர் ஹோஸ்பிடலில் இருந்தார் .ஆறு மணிக்கு மேல்
visitors not allowed எனவே மனைவி வீட்டுக்கு போய்ட்டாங்க .இவர் கையில் ஒரு மொபைல் போன் இருந்தது .ஒரு மனிதர் அவரிடம் சென்று "அண்ணா
ஆஸ்பத்திரியில் மொபைல் வச்சிருக்க கூடாது அக்கா கிட்ட கொடுத்திடறேன்
என்று சொல்லி அந்த வயதான patient கிட்ட இருந்து மொபைல திருடியிருக்கு "
என்னத்த சொல்ல

ஆச்சி ஸ்ரீதர் said...

@கே.ஆர்.பி.செந்தில்

இது உள்ளூர் திருட்டு அது உலக திருட்டுங்க,நன்றிங்க.

@சுரேஷ்
தங்கள் பின்னூட்டம் மனதிற்கு ஆறுதல் தருகிறது.நன்றிங்க.

@ஏஞ்சலின்,

நான்தானு கண்டுபிச்சிடின்களா,ஓகே.இந்த மாதிரி கள்வர்கள் ஓவர் பிரில்லியண்டுங்க,அம்மா கைப்பட்ட phoneனு அம்மா என்கூட இருக்குற மாதிரியே வச்சிருந்தேன்,இனி அவைகள் இல்லாமல் அம்மா இருக்கிற மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான் .நன்றிங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் வலைப்பூவின் இரு பக்கங்களிலும் பலவித சிறப்பான படங்களைக் கொண்டு வந்து அசத்தியுள்ளீர்கள்.

எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கணும் போலத் தோன்றுகிறது அந்த வலதுபுறம் மேலே காட்டியுள்ள கஷ்குமுஷ்காக கண்ணடித்து, கழுத்தை அசைக்கும் குட்டிப்பயலை.

அள்ளித்தூக்கிச்சென்று கொஞ்சி மகிழ ஆசையாக உள்ளது.

கீழே உள்ள 6 பயல்களும் செய்யும் குறும்புகளும் அழகோ அழகு தான்.

பட்டு ரோஜாப்பூ பளிச்சிடுகிறது. அதன் கீழே அசையும் நீர் தடாகம் அருமை. அதில் அந்தப்பூவின் நிழல் எவ்வளவு அருமையாக உள்ளது பாருங்கள்.

மிக்க நன்றியும், பாராட்டுக்களும்.

படைப்புகள் வெளியீடு செய்யும் பகுதிதான் சற்று மங்கலாக உள்ளது. படிப்பதற்கு ஆர்வமாக பளிச்சென்று இல்லாமல் சற்று சிரமமாக உள்ளது.

Background colour வெள்ளை அல்லது மஞ்சளாக மாற்றினால் நல்லாயிருக்குமோ பாருங்கள்.

ADHI VENKAT said...

எங்கள் ஏரியாவிலும் விலாசம் விசாரிப்பது போல் கேட்டு ஆட்களை கடத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். நாம் மிகவும் கவனமாக இருத்தல் நலம். ATM களில் பணம் எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு என் அனுதாபங்கள்.

SEO Tricks 2011 said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

ஜெய்லானி said...

என்ன கொடுமைங்க இது . இதுல பாதி நம்ம தப்புதான் என்ன செய்யுறது எதுவுவே நடந்த பின்னாலேயே வருத்தப்பட வேண்டி இருக்கு