*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 11, 2011

ஜப்பானில் பேரழிவு

சக மனிதர்களுடனும்                        
வாழ் நாட்களுடனும்
இன்பங்களுக்கும்
துன்பங்களுக்கும்
போராடிக் கொண்டிருக்கும்
மனிதர்களுடன்
சில வினாடி
நிலநடுக்கமாய்,
சில நிமிட
சுனாமியாய்                                                                
வந்து போகும்
இயற்கை அரக்கியே!                             
 எத்தனை மரணங்கள்,
பரிதவிப்புகள்,அலறல்கள்.
மீதம் மனிதம்
மீண்டு எழும்.
அடுத்து உன் கோரத்
தாண்டவம் எங்கோ?
அங்கும் வந்து உதவும்.
அளிப்பதில் வல்லவலாய்
இருக்கும் நீ
அழிக்கும் ஆற்றலை
விட்டுவிடு !     
உப்புத் தண்ணீருடன்
மனிதனை விழுங்குவதில்
என்ன சுகம் கண்டாய்?
நீ மீண்டும் உமிழ்வது
உப்புத் தண்ணீரல்ல     
எங்களின் இரத்தக்
     கண்ணீர்!!!
மனிதம் செய்த பாவமென்ன?

9 comments:

அமுதா கிருஷ்ணா said...

எத்தனை குழந்தைகள் பரிதவிக்க போகின்றனவோ? அவர்களை நினைத்தால் தான் மிக கஷ்டமாய் இருக்கிறது.

தமிழ்வாசி - Prakash said...

சுனாமி அழிவு....மனம் கலங்குகிறது...


எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

வெங்கட் நாகராஜ் said...

இந்த அழிவினைப் பார்க்கவே மனம் கலங்குகிறது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

டி.வி.யில் தொடர்ந்து பார்த்தது மனதை என்னவோ செய்கிறது.

நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில், நாம் இருக்கும் வரை, ஒருவொருக்கொருவர் நல்லது செய்வோம், உதவிகள் செய்வோம், அன்புடன் இருப்போம்!

raji said...

என்ன முன்னேறியும் இயற்கையின் முன் ஒன்றும் செய்ய இயலாதவர்களாகத்தான்
இருக்க வேண்டியதாகின்றது:-(

Anonymous said...

மனிதம் ஒரு பாவமும் செய்யவில்லை. மனிதன் தான் பாவம் செய்துள்ளான். அதற்காக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை விடவும், எச்சரிக்கையாக இருக்கவும், துன்பபடுவோருக்கும் ஆதரவாய் இருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இயறகை சக்திகளை எதிர்த்துப் போரிடுவதைத் தவிர்த்து இயற்கையோடு வாழ முனைய வேண்டும் ....

thirumathi bs sridhar said...

இயலாமையின்
வெளிப்பாடுதான் இந்த பதிவு.
யாரையும் வேதனைப் படுத்த அல்ல ,
சுனாமியின் போது நாகையில்
கண்ணெதிரே பல உயிர்கள்
தவித்ததை,உறவுகளை,உடமைகளை
இழந்த தப்பித்த உயிர்களின் வாழ்க்கை திசை
மாறிப் போனதை பார்த்த ரணம்
ஆயுள் வரை அழியாது.
கோபாலகிருஷ்ணன் சார் சொன்னது போல

"நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில், நாம் இருக்கும் வரை, ஒருவொருக்கொருவர் நல்லது செய்வோம், உதவிகள் செய்வோம், அன்புடன் இருப்போம்!"

ஜெய்லானி said...

வீடியோவை பார்த்ததுமே பழைய நினைவுகள் வந்து விட்டது :-(

எல் கே said...

ஆச்சி கண நேர பரிதவிப்பில் எழுந்தது இந்தக் கவிதை

இயற்கை அரக்கி அல்ல. சாது மிரண்டால் என்ன ஆகும் என்று சிறு உதாரணம் காட்டி இருக்கிறாள் இயற்கை அன்னை. இனியாவது இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ பழகுவோம்