*வணக்கம் வருகைக்கு நன்றி*

Mar 20, 2016

இதுவும் பெண்ணியம்

சினிமா சம்பந்தப்பட்ட இணையதள
எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம்.

தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் வாக்குவாதங்களில்  வலைதளங்களில் எழுதிட்டாங்க என்று ஒரு வார்த்தை சொல்வதை சமீப காலத்தில் கேட்க முடிகின்றது.

சமூகத்தின் நேர் நின்று உடனடியாக போராட சென்றுவிட போவதில்லை.அன்றாட நிகழ்வுகள்,கருத்துக்கள்  எண்ணங்கள்,விருப்ப வெறுப்புகள் அல்லது எதோ ஒரு துறை பற்றி பகிர்கின்றோம். பேரிடர் காலங்காலில் உதவிய கரங்களுக்கிடையே இணையம் மற்றும் இணையத் தொடர்பாளிகளின் கரங்கள் ஒன்றுபட்டு ஆங்காங்கே உதவியதைக் கண்டோம்.

எழுத்து வடிவில்  நம் கருத்தை பதிய வைத்தலில்  மற்றவர்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம்.மோசமான கருத்துக்கள், படங்கள் கண்முன்னே குவிந்து கிடந்தாலும் பதியப்படும் கருத்துக்களில் ஆண் பெண் பேதமில்லை என்றாலும் பழி விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிவு சில  பெண்களுக்கு மட்டுமே உள்ளது.
 
அம்மாஞ்சிகள் பதிந்த கருத்துக்களையோ படங்களையோ நீக்கிவிட வற்புறுத்தினால் அதுவும்
சமூகக் களத்தில் போராடித்  தீர்வு கொண்டு வர முடியாதவர்கள் என்றாலும் ஆதிக்கவாதிகள் எனில் வீண் வம்பு எதற்கென்று கேட்டுத்தான் ஆக வேண்டிய நிலை பேர் பெற்ற பெண்களுக்கு உள்ளதை தெரிவிக்கின்றேன்.

அல்லது கண்டும் காணாமலே ஒதுங்கிருத்தலே உத்தமம் ஆகக்கடவதாகின்றது.

மாற்று கருத்துக்களை எதிர்க்க பெண்மையை அவமதிக்கும் வார்த்தைகளை உபயோகித்து இன்பம் காணும்  ஆண் பெண்களும் உலவுவதில் யார் மேல் குறை சொல்ல,...

doubt**மீடியாஸ் என்றால் அதில் வலைதளங்களும் அதில் பதியப்படும் கருத்துக்களும் அடங்குமா?



Mar 15, 2016

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை தொடர் பதிவிட ,என்னை எழுதத் தூண்டும் அன்பில் அழைத்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றிகள்.தாமதத்திற்கு வருந்துகின்றேன்.

பயணங்கள் பல விதம்தான்.பதின்ம வயதின் பேருந்து பயண அனுபவம் பற்றி 5 பகுதிகள் எழுதியுள்ளேன்.பயணிக்க விரும்பாதோர் வெகு சிலராக இருக்கலாம்.எவ்வித பயணங்களாக இருந்தாலும் சுகமாகவோ அல்லது வேதனையாகவோ ஒரு அனுபவம் அமைந்துவிடும்.சூழ்நிலைகளைப் பொருத்தும் கால மாற்றத்திலும் அந்த அனுபவங்கள் மனதில் பதிந்து போகும் அல்லது மறந்துபோகும்.

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான்உங்கள் முதல் ரயில்பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

               சிறு வயதில் உள்ளூர் ரயில் நிலயத்திற்கு எனது அப்பாவுடன் ரயில் பார்க்கச் செல்வேன். சப்தமுடன்  கண்ணுக்கெட்டிய வரை தொடர் வண்டியாய் செல்லும் ரயிலை பார்த்து ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.ஆனால் ரயிலில் பயணிக்க விரும்பியும் வாய்ப்புகள் இல்லை.9 ஆம் வயதில் ஒரு சிறிய விபத்தில் எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திருவெரும்பூரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் எதோ ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டேன்.

குணமாகி வீடு திரும்பகையில் மற்ற வாகனங்களில் செல்ல பலர் ஆலோசனை சொன்னாலும் ,கேக்காமல் என் விருப்பத்திற்காகவே என் அப்பா ரயிலில் செல்ல ஏற்பாடு செய்தார்..அதுவே என் முதல் ரயில் பயணம். மறக்கவே முடியாதது.

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

               இதுவரை பல்வேறு சூழ்நிலைகளில் குடும்பத்தார் அல்லது நட்புகளுடன்  பயணித்திருந்தாலும் , கல்லூரிக்கு  முதன் முதலாக தனியாக பேருந்தில் சென்றதுதான் எனக்கு மறக்க முடியாத மகிழ்ச்சி.ஏனெனில் பெற்றோர் துணையின்றி பயணித்த அந்த முதல் நாள் எதோ பெரும் சாதனை புரிந்துவிட்டதாகவும், சாதனை செய்ய ரதத்தில் செல்வதாகவும் எண்ணினேன். ( என்ன சாதனை புரிந்தீர்கள் என்று கேக்கப்பிடாது )

3. எப்படிப்  பயணிக்கப் பிடிக்கும்?  

குடும்பத்தாரோ அல்லது நட்புடனோ பயணிக்க வேண்டும்.வேடிக்கைப் பார்த்துக்கொண்டேவும் ஏதேனும் பேசிக்கொண்டேவும் பயணிக்க வேண்டும்.நம்மை சகித்துக்கொண்டு நட்புடன்  அல்லது அமைதி காக்கும் சக பயணி வேண்டும்.பிடித்த ஸ்நாக்ஸ் அல்லது இனிப்புகள் அவ்வப்போது சாப்டுக்கொண்டே பயணித்தலும் பிடிக்கும்.


4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

4.மெல்லிசைப் பாடல்கள் கேட்க விருப்பம்.பயணிக்கும் போது கேட்ட சில பாடல்கள் பிறகு வரும் நாட்களில் விருப்பப் பாடல்களாகவும் அமைந்துவிடுகின்றது என்பதையும் சொல்லியாக வேண்டும்.


5. விருப்பமான பயண நேரம்?
அடை மழை இல்லாத மற்ற அனைத்து கால நேரத்திலும் பயணிக்க விருப்பம்தான்.


6. விருப்பமான பயணத்துணை?
.
என்னை சகித்துக்கொள்ளும் என் கணவர் மற்றும் என் பிள்ளைகள்தான் விருப்பத் துணை.

 7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

.பயணத்தில் படிக்க விரும்பமாட்டேன்.

.8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? 8
 அப்படி எதுவும் இல்லை.

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

.கேட்பதோடு சரி.

10. கனவுப் பயணம் ஏதாவது? 

அப்படிஎதுவும் இல்லை.தற்சமயம் செல்லும் பயணங்கள் நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே கனவாக உள்ளது..


                                                                                                                     *நன்றிகள்*.


Mar 8, 2016

மகளிர் தின வருத்தங்கள்

எனென்னவோ தினங்கள்  கொண்டாடப்பட்டாலும் மகளிர் தினம் கொண்டாடும் அளவிற்கு  பெண்களின் நிலை இல்லை  என்றால் எதிர்ப்புகளும் வாக்கு வாதங்களும் உருவெடுக்கும்.எனக்கு தினம் தினம் மகளிர் தினம் வேண்டும்.இல்லாததை அல்லது இருப்பது போன்ற மாயத்தை வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடி வாழ்த்து சொல்கிற நிர்பந்தத்தை தவிர்க்க வேண்டும்.

இராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்தது தெரியாமல் ஒரு மாதமாக இணையத்தில் உளவியிருக்கின்றோமே ....இது ஒன்றே சாட்சி,இணையத்தில் பேர் பெற்ற பெண்மணியே  பாதுகாப்பு என்ற பெயரில் தனக்கென வைத்த வேலியினால் மற்ற பதிவர்கள் நெருக்கமின்றி தனது காலம் முடித்து சென்றுவிட்டார்.

அவர் follower இல்லாத வலைப்பூ இருக்காது என்று நினைக்கின்றேன்.தன் வயோதிக காலத்திலும் பல தகவல்களை பகிர்ந்த அவருக்கு பதிவுலகம் எதாவது செய்ய வேண்டும்.வேதனையை பகிர்வதைத் தவிர நான் ஒன்றும் செய்ய போவதில்லை.