நம் தேசியப் பறவை மயில் என்று நம் அனைவருக்கும் தெரியும்.அழகான பறவை,இனம் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய பறவை.
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.
திணை:
(இராச்சியம்) விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Galliformes
குடும்பம்: Pavoninidae
பேரினம்: Pavo
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது தமிழ் புத்தகத்தில் மயில் பற்றின பாடம் ஒன்று இருந்தது.வகுப்பில் அநேகம் பேருக்கு பிடித்த பாடம் என்று நினைக்கிறன், இணையதளத்தில் எதார்த்தமாக கண்ணில் பட்டதை, நம் மக்கள் சிலர் மயில் கோலமிட்டுருப்பதை சின்ன கோர்வையாக தந்துள்ளேன். கோல மயில்கள் இங்கே சென்று பார்க்கவும்.
கடைசி இரண்டு மயில்கள்,பதிவின் வலதுபுறம் உள்ள வெள்ளை நிற மயில் வித்தியாசமான அதிசியமானதாய்க் கருதுகிறேன்.பள்ளிக் காலங்களில் புத்தகப் பக்கங்களில் மயில் இறகை வைத்திருந்தால்,குட்டிப் போடும்னு ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு மயில் இறகுகளை சேகரித்த ஞாபகம் வருகிறது.இந்த மூட நம்பிக்கையை துவங்கியது யாரோ ?. இந்த காலத்து பிள்ளைகள் நடைமுறை உண்மைகளை சொன்னால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறார்கள்.
சில கோவில்களிலும்,சில விலங்கியல் பூங்காக்களிலும் மயில்கள் இருந்தால் ஆசையாகப் போய் பார்ப்போம்.சில கிராமங்களில் மயில்கள் அதிகம் காணப்படும் . அங்குள்ள மக்கள் மயில்களை கோழி போவது போல சாதாரணமாகப் பார்ப்பதும் ஆச்சர்யம்தான்.
இங்குள்ள இரண்டு வீடியோ கிளிப்பிங்குகளை பார்த்து மகிழுங்கள்.
இங்கே கிளிக் செய்து தோகை மயில் ஒய்யாரத்தை பாருங்கள்
12 comments:
மயிலின் அழகினைக்கண்டேன். அது தோகை விரித்தாடியது கண்டேன். அதன் நீண்ட அழகிய கழுத்து, உருண்ட கண்கள், அற்புதக் கொண்டை என ஒவ்வொன்றும் மிக அருமை. நிஜமாகவே மயில் நம் அருகே வந்து சிலிர்த்து விரித்து ஆடியது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அழகிய மயிலைக் காட்டிய உங்களின் அழகிய ரசனைக்கு என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். முதல் வோட் என்னுடையது.....ஆஹா!
மயல் அருமையான பகிர்வு...வாழ்த்துக்கள்
மயில் ஆடும் அழகே அழகு ஆச்சு.
மயில் ஆடும் அழகு கண்கொள்ளாக் காட்சி. தில்லியின் இந்தர்புரி பகுதியில் இருக்கும் ரிட்ஜ் ஏரியாவில் முன்பெல்லாம் நிறைய மயில்கள் இருக்கும் காலையில் பார்த்தால் அழகாய் ஆடிக்கொண்டிருக்கும்! இப்போதெல்லாம் காணப்படுவதில்லை – வறுத்து சாப்பிட்டு விட்டார்கள் போல!! நல்ல பகிர்வுக்கு நன்றி.
கோல மயில், மயில் கோலம் அனைத்தும் அழகு.
பதிவும் மயிலும் போட்டி போடுது ஆச்சி
நிறையதகவல்கள் ஆச்சி..
எங்க வீட்டுக்கு பக்கத்துல நிறையமயில்கள் இருக்கின்றது.. அதிகாலையில் அதனைப் பார்க்கலாம்..
இங்கும் சில அரபிகள் வீட்டில இருக்கு . அதுப்போல மான்களும் இருக்கு . பார்க்க பார்க்க நேரம் போவதே தெரியாது அவ்வளவு அழகு :-)
ஆஹா ! அற்புதமான படங்களும் தகவல்களும்,
if time permits visit engalcreations.blogspot.com
வருகை தந்து மயில்களை ரசித்து கருத்திட்ட
@வை.கோபலகிருஷ்ணன் சார்
@மதுரை சரவணன்
@எல்.கே அவர்கள்
@வெங்கட் நாகராஜ்
@ராஜி
@முத்துலெஷ்மி
@ஜெய்லானி
@ஏஞ்சலின்
ஆகியோர் அனைவருக்கும் எனது நன்றிகள்.
நல்ல பகிர்வு. கோலமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ என பாடத் தோன்றுகிறது. மயில் இறகை புத்தகத்தில் குட்டி போடும் என வளர்த்திருக்கிறேன். மயில் கோலங்களும் அழகு. காணொளிகளும் அற்புதம்.
அழகு ம்யிலின் எழில் கோலம் கவர்ந்தது
@ஆதி
நன்றி.
@இராஜராஜேஸ்வரி
நன்றி
Post a Comment